காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!

மதுரை
kannadasan program
kannadasan program

கவியரசு கண்ணதாசன் 94-வது பிறந்த நாளையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது
திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ. பாண்டி உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை நாகராஜன்,
வட்டாட்சியர் பாலாஜி, காரைக்குடி நகராட்சி ஆணையாளர்(பொ) ரெங்கராஜ் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கருப்பணராஜவேல் கவியரசு கண்ணதாசன்
புதல்வி விசாலாட்சி கண்ணதாசன், கவியரசு கண்ணதாசன் மன்றத்தலைவர் மரு.சுரேந்தர், செயலாளர் நாகப்பன்
மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.