மதுரை மாவட்டம் , சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்று அதிகாலை நடராஜர் , சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிசேகங்களை வரதராஜ பண்டிட் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
முன்னதாக கோயில் சன்னதி முன்பாக பசுமாடு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்தனர்.
இதையடுத்து நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும் , சோழவந்தான் எம்.வி.எம். வள்ளிமயில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
இதில் , தொழிலதிபர் எம். மணி , பிரதோசக் கமிட்டி பொருளாளர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத் தக்கார் ப. லதா, கணக்கர் சி. பூபதி , எழுத்தர் வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி: ரவிச்சந்திரன்



