கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் குவியல்கள்; விவசாயிகள் கவலை!

madurai paddy aquiring centre - 2026

சோழவந்தான்: இடைத்தரகர்கள் மூலம் வெளிமாவட்ட வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில்  நெல் அறுவடைக்கு முன்பாகவே நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வியாபாரிகள் நெல்லை வாங்குவதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் பருவமழை காலத்திலும் மற்ற நேரங்களில் கிணற்றுப்பாசனம் மூலம் நெல் நடவு நடைபெற்று இன்னும் சில நாட்களில் நெல் அறுவடை செய்ய தயாராக இருக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே அரசியல்வாதிகள் துணையுடன் அதிகாரிகள் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து வியாபாரிகளின் நெல்லை வரவழைத்து கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் ,அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் , இப்பகுதியில் விளையும் அட்சயா நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். 

நெல் அறுவடைக்கு முன்பாக கொள்முதல் நிலையம் அமைப்பதால், வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து உள்ளூர் விவசாயிகள் போல் நெல்லைபோட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் நெல்  அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் ஒரு மூடை நெல் 1400 க்கு வாங்கி மதுரை மார்க்கெட்டில் 1800க்கு விற்று அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் சில அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையுடன் இந்த செயலை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் தீரவிசாரித்து, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories