சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

sivakasi rain - 2026

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் சாரலாக துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக பெய்யத்துவங்கியது. பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால், சிவகாசி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சாய்ந்து விழுந்து இழுத்துச் செல்லப்பட்டது. மாரியம்மன் கோவில் பகுதி, புதுரோட்டு தெரு, ஜவுளிக்கடை வீதி, மணி நகர், பழைய நீதிமன்ற சாலை, தெற்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இரவு நீண்ட நேரம் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, பாறைப்பட்டி, மீனம்பட்டி, சுந்தர்ராஜபுரம், அனுப்பங்குளம், பேராபட்டி, அம்மன் நகர், திருத்தங்கல், செங்கமலப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்றிரவு கனமழை பெய்தது.

இதனால் இந்தப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. சிவகாசி பகுதியில் பெய்த கனமழை பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தந்தாலும், குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மதுரை மாவட்டத்தில், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories