
பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் அண்ணாமலை விடுதலை ஆன செய்தி வந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர்:
சென்னையில் பாஜக சார்பில் திமுக பேச்சாளர் சித்திக்கை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
மாலை 7 மணி வரை பாஜக தலைவர்களை போலீஸார் விடுதலை செய்யாததால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் அண்ணாமலை விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.