
மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் என். சுகி பிரமிளா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ. சாலி தளபதி உடனிருந்தார்.

தனித்தமிழுக்காக முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது பெயரை தூய தமிழில் முதலில் வைத்துக் கொண்ட தமிழர் சூரிய நாராயண சாஸ்திரியார். அவருடைய நினைவு நாளான இன்று பாஜக., மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், திருப்பரங்குன்றம் மண்டல் பாஜக., பொதுச் செயலாளர் குபேந்திரன் ஆகியோர் விளாச்சேரியில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.