அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜன 17இல் ..!

images 2022 12 20T113825.941 - 2026

தமிழர்கள் திருநாள் தை பொங்கல் பண்டிகை விழாக்களில் பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டு வரும் ஜன 17இல் நடைபெறும் என விழா குழு அறிவித்துள்ளது.

 பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ள அந்த ஊர் விழா கமிட்டியினர் போட்டியை நடத்த அனுமதி கோரியும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தும் நேற்று ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ம் தேதி நடக்கிறது. போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறோம்.

இதில், பார்வையாளர்களுக்கான கேலரிகளை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும், வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் குறித்தும் ஆலோசிப்போம். விழாவுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க உள்ளோம் என்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக நாளை மறுநாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. இந்த ‘நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக வரும்-22 ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை நந்தனத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கால்நடை துறை அலுவலர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories