

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து காவல்துறை நடவடிக்கைஎடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு வரும் பொங்கலுக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் கூடுதலாக தேங்காய் வழங்க வேண்டும் என வலயுறுத்தி பிஜேபி சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்பது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகாசி சாட்சியாபுரம் பேருந்து நிலையம் முன் திரண்ட பிஜே பின்னர் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பிஜேபியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் அனுமதியின்ற நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.





