செங்கோட்டையில் ‘தாயின் மடியில்’ அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துமனை மருத்துவா்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செங்கோட்டை அரசு மருத்துமனை வளாகத்தில் வைத்து தாயின் மடி அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துமனை மருத்துவா்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களான கவசஉடை, சானிடைசா், கையுறை, முககவசம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு மருத்துமனை மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜேஸ்கண்ணன் தலைமைதாங்கினார். சித்த மருத்துவர் டாக்டா் கலா ஆகியோர் முன்னிலைவகித்தனா். தாயின் மடி அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடா்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் கலந்து கொண்டு மருத்தவ அலுவலா் டாக்டா் ராஜேஸ்கண்ணனிடம் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் அருணாசலம், நிர்வாக குழு உறுப்பினா்கள் குருநாதன், ஆட்டோதுரை, ஐயப்பன், மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோர் கலந்து கொண்டனா்.