
சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்; 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்காக சங்கரன்கோவிலில் இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தனது நெசவு பட்டறையில் தொழில் செய்து கொண்டிருந்தபோது வலுக்கட்டாயப்படுத்தி பிடித்து இழுத்து தள்ளி காயப்படுத்தி கைது செய்த சங்கரன்கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் மாதவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்துமுன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர ஐய்யப்ப சேவா சங்கத் தலைவர் எம் எஸ்.மணி ஆகியோர் முன்னிலையில், இந்துமுன்னணி நிர்வாகிகள் கோட்டச்செயலாளர் ஆறுமுகசாமி மணிகண்டன், பால்ராஜ் , குளத்தூரான் , உலகநாதன் , பெரியகாசிபாண்டியன் , மாரியப்பன், கார்த்திகேயன் , மாணிக்கம் , சிவா ஆறுமுகம் , வழக்கறிஞர் ஈஸ்வரன், பாஜக நிர்வாகிகள் முப்பிடாதி விக்னேஷ், வீரக்குமார் , ராமச்சந்திரன் , ராஜதேவேந்திரன் , குருசாமி மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.