
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைப்பு. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா திவ்யா ஆகிய இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும் கார்த்திக் ஆனந்த் ஆகிய இருவர் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பதற்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஷோ நீதிமன்றத்திற்கு கார்த்திக் ,ஆனந்த் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையில் அழைத்து வந்தனர். திவ்யா ,சித்ரா ஆகிய இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திவ்யா ஆனந்த் கார்த்திக் ஆகிய மூவரின் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்துள்ள நிலையில் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் திவ்யா கார்த்திக் ஆக இருவரிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்வதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சித்ராவின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி!
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் ஜெயசுதா திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் சீதாலட்சுமி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (35).
இவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை நிறுவன மேற்பார்வையாளர் ஜெயசுதா அடிக்கடி திட்டுவாராம். இதனால் அவர் மனமுடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். காலை பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே கொண்டு வந்த சாணி பவுடரை மருத்துவமனையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.