பொங்கல், தீபாவளின்னா… தென் மாவட்டங்களுக்கு ஸ்பெஷல் ட்ரெய்ன் விடுங்கப்பா! தாங்க முடில..!

crowd in trains and buses - 2026

தீபாவளி லீவைத்தொடர்ந்து பொங்கல் லீவுக்கும்.. இதே நிலைதான்! சென்னைக்கு வர.. ரயில் நிலையங்களில் முண்டியடித்த கூட்டம்!

ஒவ்வொரு பண்டிகை விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சிரமப்படுவதும், அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்ப கஷ்டப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்த முறையும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர, மக்கள் ரயில் நிலையங்களில் முண்டியடித்து உள்ளனர்.

குறிப்பாக செங்கோட்டை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளும் ஏறியுள்ளதால், பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுவாக இதுபோன்ற பண்டிகை நாட்களில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், தாம்பரத்திலிருந்தும், எழும்பூரிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை ஜன.15ம் தேதி தொடங்கியது. ஆனால், ஜன.14ம் தேதியான போகி பண்டிகைக்கே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் ஜன.13ம் தேதி இரவும், ஜன.14ம் தேதி இரவும் புறப்பட்டு சென்றனர்.

இன்னும் சிலர் ஜன.9, 10 மற்றும் 11ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டனர். இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இப்படி இருக்கையில், இன்றுடன் விடுமுறை முடிவடைவதால் மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி உள்ளது.

செங்கோட்டை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டால்தான், அடுத்த நாள் காலை 4-6 மணிக்கு சென்னைக்கு வர முடியும். எனவே பயணிகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றன. சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாததால், பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ஏரியதால், முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட பொதிகை அதிவிரைவு ரயில் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக தாம்பரம் வரை சென்ற கொல்லமையில் சிலம்பு அதிவிரைவு ரயில் திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் புறப்பட்ட நெல்லை அதிவிரைவு ரயில் கன்னியாகுமரி சென்னை அதிவிரைவு ரயில் கொல்லம் திருவனந்தபுரம் நாகர்கோவில் சென்னை அதிவிரைவு ரயில் உட்பட அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்த பெட்டிகள் சாதாரண இயற்கைப் பெட்டிகள் உட்பட அனைத்து பெட்டிகளுமே எண்ணிக்கைக்கு அதிகமாக மூன்று மடங்கு பயணிகள் பயணித்தனர் ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டை ரயில் நிலையத்தில் பகல் 2 மணி முதல் பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது

இனிவரும் காலங்களில் பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக மேலும் கூடுதல் பயண வசதிகளை ரயில்வே துறையும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தித் தருவது அவசியம் ஆகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories