கீழப்பாவூரில் ஆலடி அருணா அற்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்

ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

பாவூர்சத்திரம் அடுத்துள்ள கீழப்பாவூரில் ஆலடி அருணா அறக்கட்டளை மற்றும் நலம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
முகாமிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தார்.  பேரூராட்சி துணை தலைவர் தங்கச்சாமி, பாவூர் நாவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சரும், திமுக மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கி வைத்தார். முகாமில் 16 க்கும் மேற்பட்ட புகழ் பெற்ற மருத்துவர்கள் மற்றும் 30 செவிலியர்கள்  பங்கேற்று பொது மருத்துவம் மற்றும் நீரழிவு நோய், டெங்கு பரிசோதனை கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர் . முகாமில் கண் பரிசோதனையில்  183 பேரும் ,பொது மருத்துவ பரிசோதனையில்  1219 பேரும் பயன் அடைந்தனர் இதே போல் முக்கூடலில் நடந்த முகாமில் சுமார்  750  பேர் பயன் அடைந்தனர் . இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா,  பொதுக்குழு உறுப்பினர் சிவன்பாண்டியன், திரவியம், பேரூர் அவை தலைவர் சிவன், நாராயணசிங்கம், பாண்டியன், மல்லிகா, முருகன், தனராஜ், ராஜதுரை, துரைசிங்கம், அருணாசலம், மலைச்சாமி, தமிழ்செல்வன், ராஜாமணி, கருவேலம், மாரியப்பன், வேல்சாமி, மணி என்ற இளைய பெருமாள், பூலாங்குளம் ஊராட்சி தலைவர் குணரத்தினம், வெற்றிசெல்வன், காளிமுத்து, அரசு என்ற அன்பரசு, பந்தல் பெரியசாமி உட்பட திமுகவினர் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்