Breaking News
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை!
குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்சா சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மாறிவிட்ட அரசியல் சூழல்! நல்ல வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினால் இனி முதல்வர் ஆகவே முடியாது: அரசியல் ஞானி விஜயகாந்த்!
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், காவிரிக்காக நடத்தப் பெறும் அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம், திமுக.,வின் அரசியல் நிலை என பல விஷயங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் விஜயகாந்த்.
பறக்கும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவனை தாவிப் பிடித்த காவலருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி!
இது குறித்துப் பேசிய ஐஜி பொன் மாணிக்கவேல், ''இளம்பெண் ஒருவர் இரவு 11 மணிக்கு மேல் தனியாக பயணித்துள்ளார். பெண்களுக்கான பெட்டி உள்ளது. ஆனால் அவர் ஆண், பெண் அனைவரும் பயணம் செய்யும் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார். நேரம் ஆக ஆக இளம்பெண் அசந்து தூங்கியதும், பெட்டியில் யாரும் இல்லாததை குற்றவாளி பயன்படுத்தியுள்ளார்'' என்று கூறினார்.
ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது: கமல்ஹாசன்
சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி...
எரிந்த நிலையில் கிடந்த பிரபல நடிகையின் சடலம்: கேரளத்தில் அதிர்ச்சி!
இந்நிலையில் கவிதா தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கவிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது.
மோடியைக் கொல்ல வேண்டும் என பேச்சு: மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்!
இந்த நிலையில், மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
தேர்தல் நெருங்கும் போது மய்யம் கொண்ட புயல் தானாகவே விலகும்!
இன்னமும் பொறுப்பாளர்கள் பெரிதாக நியமிக்கப் பட்டு முழு வீச்சில் எதுவும் செயல்படாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சிலர் இப்படி விலகி வருகின்றனர்.மக்கள் நீதி மய்யம் காணாமல் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியா? இல்ல… ஏழுமலை சாமியா? ராமதாஸின் கோபமும் கேள்வியும்!
எடப்பாடி பழனிசாமி என்ன ஏழுமலையானா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். இது அனாகரீகத்தின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், மக்கள் பணத்தை அரசுப் பணத்தை இப்படி வீணடிக்கக் கூடாது, இது அநாகரீகத்தின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்வானிக்கு குண்டு வெச்சோம்; இப்போ மோடியை கொல்ல போறோம்… எங்களை பத்தி போலீஸுக்கு நல்லா தெரியும்!
அத்வானிக்கு குண்டு வெச்சோம், இப்போ மோடியைக் கொல்லப் போறோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் பத்தி போலீசுக்கு நல்லாவே தெரியும்... - இப்படித்தான் ஒருவர் செல்போனில் தெனாவெட்டாக உண்மையை உளறியிருக்கிறார். சொல்லப் போனால், இந்து இயக்கங்கள் இதைத்தான் வெகு காலமாக சொல்லி வருகின்றன.
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன்
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா...
கமல் கட்சியில் இருந்து ராஜசேகரன் விலகிய நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் விலகல்?
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி...
ரயில் பயணச்சீட்டுகள் இனி தமிழில்! அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகமாகிறது!
ரயில் பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ஆங்கிலம் இந்தியில் இருந்த பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெறும். இது அனைத்து வகையான பயணச் சீட்டுகளிலும் அறிமுகம் செய்யப் படுகிறது.