
மாசி மகத்தை முன்னிட்டு, பிப்.27 சனிக்கிழமை, அன்பில் சுந்தரராஜப் பெருமாளும் உத்தமர்கோயில் புருஷோத்தம பெருமாளும் கொள்ளிடக் கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். காலையில் எழுந்தருளி, மாலைவரை கொள்ளிடக்கரையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
வைணவ மரபில் கொள்ளிடத்தை வடதிருக்காவேரி என்பது வழக்கம். வடதிருக்காவேரியில் எழுந்தருளிய அன்பில், உத்தமர்கோவில் பெருமான்களை சேவிக்க ஸ்ரீரங்கத்தில் இருந்து பெருமளவில் பக்தர்கள் திரண்டு வந்தனர்.



