
ஆவுடையார்கோயில்: ஆவுடையார் கோயில் அருகே திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது
ஆவுடையார்கோயில் அருகே திருப்புனவாசலில் மிக மிகப் பழமையான விருத்தபுரீஸ்வரர் கோயில் உள்ளது இக்கோவில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு சிவஸ்தலங்களில் மதுரைக்கு அடுத்த பெரிய சிவஸ்தலம் ஆகும்
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது தெப்ப திருவிழா 3 ந் தேதி நடைபெற உள்ளது
விழாவிற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை அழ. சுப. பழ. பொது குடும்பத்தினரும் செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தனர்
அபிஷேக அர்ச்சனைகளை விருத்தபுரீஸ்வர குருக்கள் ராமநாத குருக்கள் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புனவாசல் போலீசார் செய்தனர். காலையில் தொடங்கிய தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது காலையில் இரு விதிகளையும் மாலையில் இரு வீதிகளையும் தேர் உலா வந்தது