புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு பிரதிஷ்டை ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.
புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையில் சார்பில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது
ஆலயத்தின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் பூஜைகளை சுப்பிரமணி சிவாச்சாரியார், ரவி சிவாச்சாரியார், ஹரி சிவாச்சாரியார், திருக்கோகர்ணம் ஸ்ரீனிவாசன் சிவாச்சாரியார், கோகர்னேசர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தார்கள்.
சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட கலச நீரினை சிவாச்சாரிகள் மூன்று முறை ஆலயத்தை சுற்றி வந்து ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாவிஷ்ணுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்வில் மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெய்வக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய மாற்றுத்திறனாளிகளை, சிறுவர்களை வரவழைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சீருடை பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை குழந்தைகள் மூத்த மருத்துவர் ராமதாஸ், வழக்கறிஞர் சொக்கலிங்கம் மற்றும் கண்ணன், அருட்செல்வி, மருத்துவர்கள் மதியழகன், இந்திரா காந்தி, பிரதீப், பிரவீன், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி கழக மூத்த விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார், நிலவை பழனியப்பன், முருகேசன், அழகேசன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அனுமன் திருச்சபை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆன்மீக நெறியாளர் ஆனந்த் தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.
– செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை