மார்னிங்ஸ்டார் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா!
பள்ளி இணைச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் , தலைமையாசிரியை சித்ரா , ஆசிரியர் பொன்னுசாமி, பாஸ்கர் முன்னிலை வகிக்க மேலை பழநியப்பன் பள்ளிக்கு திருவள்ளுவர் சிலை வழங்கி உரையாற்றினார்
2.07.20 24 மாலை கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. அவை, மாணவர்களுக்கு வெற்றி இலக்கை , பண்பாட்டை , கலாட்சாரத்தை , மொழி நாட்டுப் பற்றை , ஒழுக்கத்தை பெரியோரை மதிக்க கற்றுக் கொடுக்கும் களங்களாக அமைந்தன.
காலப்போக்கில் காணாமல் போல இலக்கிய மன்ற கலாசாரத்தை இப்போது தொடங்குவதிலே மகிழ்வாக இருக்கிறது.
இன்றைய காலச்சூழல் மாணவர்கள் போதை ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது வான்புகழ் வள்ளுவம் மிக ஆழமாக தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்கிறார்.
எரிமுன்னர் வைத்தூறு எனச் சொன்ன வள்ளுவன் தீய பழக்கங்களை மாணவர்கள் பின்பற்றினால் அவனை தீயை விட விரைவாக அழித்து விடும் என்கிறார். வள்ளுவர் இப்பழக்கத்திற்கு “நட்பு” காரணம் ஆகிவிடக்கூடாது எனவேதான் நட்பு அதிகாரத்திற்கு 40 குறள் தந்தார். நட்பு
நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு.
எனவே பள்ளிப்பருவத்தில் வெற்றியின் இலக்கைக்காட்டும் இலக்கியங்களைக் கற்று, வழியொற்றி நல்ல ஒழுக்கமான மாணவர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.
மாணவர்களுக்கு வினாக்கள் கேட்டு வெள்ளிக் காசு, திருக்குறள் நூல்கள் பேனாக்களை அவர் பரிசாக வழங்கினார்.