தேசப்பிரிவினை; காந்தியின் விருப்பமும் நேருவின் ஆசையும்!

gandhi and nehru - 2026

காந்தி ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார்; நேரு அதிகாரத்தை அடைய பிரிவினைக்கு தயாரானார்!

— ராம் மாதவ்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில் எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது.

நாதுராம் கோட்சே காந்தியை கொன்றது தவறு. அது மட்டுமல்ல அதற்கு அவன் முன்வைத்த காரணங்களும் தவறு என்று நான் எழுதியிருந்தேன்.

1947 இல் இந்திய பிரிவினைக்கு காந்தி தான் காரணமென கோட்சே நினைத்தான். காந்தியை விட மிக அதிக காரணம் காங்கிரஸ் உயர்த்தி பிடிக்கும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களே என்று என் கட்டுரையில் வாதிட்டிருந்தேன்.
செய்தி தொடர்பாளரின் கட்டுரை காங்கிரஸ் கட்சியின் விரக்தியை காட்டுகிறது. ஆத்திரத்தில் அவர் சுழற்றிய சாட்டை அவரையே அடித்திருக்கிறது.

பிரிவினையை தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற துடித்தார் நேரு.

நேருவின் கபட வேடத்தை முதலில் அம்பலப்படுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். 1939 மார்ச்சில் அவர் எழுதிய வெளிப்படையான கடிதத்தில், நேருவின் தவறான அரசியல் நடவடிக்கைகளையும் கொள்கை தெளிவின்மையையும் கபட தன்மையையும் விமர்சித்திருந்தார். அதற்கு கடிதம் மூலம் பதிலளித்த நேரு, போஸ் சுட்டிக்காட்டிய தன்னுடைய குறைபாடுகளை ஒப்புக்கொண்டார். ஆனால் காந்தியுடன் தனக்குள்ள உறவு கெடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக வலியுறுத்தி இருந்தார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

காந்தியிடம் இருந்த விசுவாசம் கொள்கை சார்ந்தது அல்ல. மாறாக காங்கிரஸ் கட்சியில் தான் உயர்வதற்கு காந்தியின் ஆதரவு அவசியம் என்று நேரு நம்பியதை அந்த கடிதம் காட்டுகிறது.

1942 இல் வார்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ‘ ஜவஹர்லாலை என்னுடைய வாரிசாக கருத வேண்டும். நான் இப்போது செய்வதை நான் போன பிறகு அவர் தொடர்ந்து செய்வார். அப்போது என்னுடைய மொழியிலேயே அவர் பேசுவார்’, என்று காந்தி அறிவித்தார்.

ஆனால் வெகு விரைவிலேயே நேரு தன்னுடைய ஆதரவை விரும்புகிறாரே தவிர தன்னுடைய சிந்தனையை முன்னெடுக்க விரும்பவில்லை என்பதை காந்தி புரிந்து கொண்டார். இந்த பரிதாபத்தை 1945 இல் அவர்கள் இருவரிடையே நடந்த கருத்து, கடித பரிமாற்றத்தில் தெரிந்து கொள்ளலாம்.

காந்தி எழுதிய கடிதத்தில், இருவருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு ‘அடிப்படையானது’ என்றால் ‘பொதுமக்களுக்கு அது பற்றி தெரிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நேரு, காந்தியின் ஹிந்து ஸ்வராஜ்யா கருத்துக்கள் ‘நடைமுறைக்கு பொருந்தாது’ என்றும் அதை காங்கிரஸ் ‘என்றும் பரிசீலனை செய்யவில்லை’ என்பது மட்டுமல்ல ‘ஏற்றுக்கொள்ளவும் இல்லை’ என்று எழுதினார். இந்த விஷயத்தை விடுதலை பெற்ற பிறகு நாடே தீர்மானிக்க விட்டுவிடலாம், என்று அந்த கடிதத்தில் சொல்லி விவாதத்தை தவிர்த்து விட்டார்.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

நேருவின் நோக்கம் தெளிவாக இருந்தது. மக்கள் தன்னை காந்தியின் அரசியல் வாரிசாக நம்ப வேண்டும். அதேவேளையில் தான் அவரது கொள்கை வாரிசு அல்ல என்ற உண்மையை தெளிவு படுத்தாமல் மூடி மறைத்து விட்டார்.

பிறகு பிரிவினை சவால் வந்தது. அதை தவிர்க்க காந்தி உறுதி பூண்டார். ஆனால் நேருவும் மற்றவர்களும் அப்படியில்லை. 1946 கேபினட் மிஷன் திட்டம் போன்ற வாய்ப்புகள் வந்தன. அந்த திட்டத்தின்படி வட மேற்கில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகள், இந்து பெரும்பான்மை உள்ள பகுதிகள், வங்காளம் அஸ்ஸாம் பகுதிகள் என மூன்று பிரிவுகளாக மாகாணங்களை பிரிக்கலாம். மத்திய அரசிடம் இராணுவம், அயலுறவு , தொலைதொடர்பு என்ற துறைகள் மட்டும் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இது மத ரீதியான பிரிவினை என்று காந்தி எதிர்த்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு இதை ஏற்றுக் கொண்டது. தேசப் பிரிவினையை இது தவிர்க்கும் என்றது.

ஆனால் நேரு தன்னிச்சையாக செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில், ‘பலவீனமான மத்திய அரசை காங்கிரஸ் விரும்பவில்லை. அது மட்டும் அல்ல இது அணி பிரிப்பதாக உள்ளது’, என்றார். ஆரம்பத்தில் இருந்தே இந்த திட்டம் ஜின்னாவுக்கு பிடிக்கவில்லை. செய்தியாளர் கூட்டத்தில் நேரு சொன்னதையே சாக்கிட்டு ஜின்னா இந்த திட்டத்திலிருந்து விலகினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அதன் பிறகு ஜூன் 3 ம் தேதி திட்டம் என்ற பிரிவினை திட்டம் வந்தது. நேருவும் அவரது சகாக்களும் அவசர அவசரமாக அதை ஆதரித்தனர். அதனால் காந்தி தலையிட்டு அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

காந்தி நாட்டை பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்கும் நோக்கில் செயல்பட்டார். ஆனால் பிரிவினை ஏற்பட்டாலும் பரவாயில்லை பதவி அதிகாரம் வந்தால் போதும் என்ற நோக்கத்தில் நேரு செயல்பட்டார். இதைதான் நான் போன வாரம் எழுதிய கட்டுரையில் விளக்கியிருந்தேன்.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் : இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories