அயோத்தி சரயு நதிக் கரையில் 15.76 லட்சம் அகல்விளக்கு தீபங்கள் -கின்னஸ் சாதனை..

1781248 ayothi light 1 - 2026
1781249 ayothi light 2 - 2026

தீபாவளிப் பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக் கரையில் 15.76 லட்சம் அகல்விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமா் நரேந்திர மோடி, கடவுள் ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லைப் பிரதமா் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டினாா். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிப் பண்டிகையைப் பிரதமா் மோடி அயோத்தியில் கொண்டாடினாா்.

Deepotsav celebrations - 2026
500x300 1781246 ayothi light - 2026

அதையடுத்து சரயு நதிக்கரையில் நடைபெற்ற தீபோத்ஸவத்தில் மோடி பங்கேற்றாா். பிரதமர் நரேந்திர மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டன. 

19 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்று அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைத்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு ரசித்தனர். இந்த புதிய சாதனையை அடைய அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர். 

இதனைப் பதிவு செய்ய கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சான்றிதழை வழங்கினர். 

பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் தீபோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 6-வது ஆண்டாக தீப உற்சவ திருவிழாவை பிரதமர் மோடி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தது உலகில் அதிகளவில் பேசப்படுகிறது. சரயு நதிக்கரை படித்துறையில் மொத்தம் 15 லட்சத்து 76 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டது இரவில் ஜொலித்தது.அப்போது ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்ற முழக்கம் அயோத்தி முழுவதும் எதிரொலித்தது. அயோத்தியில் உள்ள அவத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இதில் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் இவ்வளவு விளக்கு ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், நேரில் பார்த்தனர்.

புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை அந்நிறுவன அதிகாரிகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீப உற்சவ திருவிழாவில் 9 லட்சத்து 41 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முதல்முறையாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1781247 ayothi light - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories