ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் கைதான இருவர் மீண்டும் சிறையில்

images 2023 02 28T172151.097 - 2026

திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் கைதான ஹரியாணா கொள்ளையர்கள் 2 பேரும், 7 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளனர்.விசாரணையில் கைதான இருவர் எந்த தகவலும் தரவில்லை எனவும் போலீசார் கேட்ட கேள்விக்கு தெரியாது இல்லை என்றே ஏழுநாளும் கைதானவர்கள் பதில் கூறியதாக தெரிகிறது.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஸ் வெல்டிங் இயந்திரம் மூலம், 4 ஏடிஎம் இயந்திரங்களின் குறிப்பிட்ட பகுதியை பெயர்த்தெடுத்து, ஹரியாணா மாநில கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலையில் கொள்ளையடித்த பணத்துடன் கர்நாடக மாநிலம் கோலார் சென்ற கொள்ளையர்கள், பின்னர் அங்கிருந்து ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் விமானம் மூலமாக பெங்களூரில் இருந்து ஹரியாணா சென்றனர்.

இதையறிந்து, ஹரியாணா மாநிலம் சென்ற தனிப்படையினர், முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை கடந்த பிப்ரவரி 17ம் தேதி கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும், 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கடந்த 22-ம் தேதி முதல் தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

ஏடிஎம் மைங்களுக்கு கொள்ளையர்களை அழைத்து சென்று, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து செய்து காண்பிக்க வைத்து, கேமராவில் பதிவு செய்தனர். இவை அனைத்தும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, 7 நாள் விசாரணை முடிந்து, திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை இன்று (28-ம் தேதி) ஆஜர்ப்படுத்தினர்.

இருவரது முகங்களும் கருப்பு துணியால் மூடப்பட்டிருந்தது. இருவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ் திரேட் கவியரசன் உத்தரவிட்டார். அதன்பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் மத்திய சிறையில் இருவரையும் மீண்டும் அடைத்தனர்.

953390 1 - 2026

திருவண்ணாமலை உட்கோட்ட காவல்துறையினர் 7 நாட்கள் நடத்திய விசாரணையில், முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. காவல் துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு, ‘நாங்கள் இல்லை, தெரியாது‘ என்ற பதிலை மட்டுமே கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே கிடைத்த தகவலின்பேரில் ‘நிஜாம்’ என்ற நபரின் பெயரை குறிப்பிடும்போது, அவர்களது செயலில் மாற்றம் இருந்துள்ளதை கவனித்த போலீசார் இதையடுத்து, நிஜாம் குறித்த அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர்.

அதேநேரத்தில், நிஜாம் யார் என்று தெரியாது என தொடர்ந்து கூறியுள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை தனிப்படையினர் கூறும்போது,
ஏடிஎம் கொள்ளைக்கு நிஜாம் என்ற பெயர் உள்ளவர் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது வழிகாட்டுதலின் பேரில், கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளையடித்த பணமும், அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோலாரில் தங்கியிருந்ததாக கூறப்படும் நிஜாம், தலை மறைவாக உள்ளார். அவரை பிடிக்க, கோலார் பகுதியில் ஒரு தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். நிஜாம் பிடிப்பட்டால், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் காணலாம். இதற்கிடையில், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட ஹரியாணா கொள்ளையர்களை பிடிக்க, அம்மாநிலத்துக்கு மற்றொரு தனிப்படையினர் சென்றுள்ளனர்.

கண்டெய்னர் லாரி மூலமாக ஹரியாணா மாநிலத்துக்கு கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்த நிலையில, மீதமுள்ள ரூ.70 லட்சத்தை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories