சந்திராயன் 3 விண்ணில் ஏவுவதற்கு தயார்..சிவன்

Published:

images 2023 03 05T064606.130 - 2026

விருதுநகரில் தனியார் பெண்கள் கல்லூரியில் 46வது பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு தன் குடும்பத்தோடு சென்று பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.

மேலும் விருதுநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தன்னுடைய குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் சிவனுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் வருகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்

தற்போது இஸ்ரோவில் நிறைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது அதில் முக்கியமான திட்டமாக விண்ணிற்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது எனவும் அந்த திட்டத்திற்க்கான சோதனைகள் தற்போது ‘நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்

மேலும் சந்திராயன் 3 விண்ணில் ஏவுவதற்கு தயாராகி கொண்டு இருக்கிறது என்றார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அதே போல் சூரியனை ஆராயக் கூடிய ஆதித்யா 1 விண்கலமும் தயாராகி கொண்டிருக்கிறது என்றார்.

மேலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவப்படுவதற்கான செலவு குறைவு என்பதால் அண்டை நாடுகளில் இருந்து நம்முடைய நாட்டில் விண்கலத்தை வானில் விடுகிறார்கள் என்றார். மேலும் நம்முடைய டெக்னாலஜியை பயன்படுத்தி மற்ற நாடுகள் அவர்களுடைய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ விருப்பப்படுகிறார்கள் என்றார்.

டிஜிட்டல் இந்தியா வந்தபிறகு இன்னும் அதிகமாக இருக்கிறது ஏனென்றால் டிஜிட்டல் இந்தியா ப்ரோகிராமிற்கும் அது மாதிரி மற்ற அட்வான்ஸ் ப்ரோகிராமிற்கும் செயற்கைகோள் தொழில்நுட்பம் முக்கியமாக தேவை இருக்கிறது என்றார். மேலும் டிஜிட்டல் இந்தியா வந்த பிறகு இஸ்ரோவின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றார்.

இஸ்ரோ மூலம் வணிக ரீதியாக மற்ற நாடுகளை சேர்ந்த செயற்கை கோளை இஸ்ரோ மூலம் ஏவுவதால் நம் நாட்டிற்கு அன்னிய செலவானி மூலம் அதிகமான வருமானம் வர வாய்ப்புகள் நிறையவே உள்ளது என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான நிலங்களை தமிழக அரசு வழங்கி விட்டது எனவும் மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என்றார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் என்பது மிகவும் முக்கியமானது எனவும் விரைவில் அதற்க்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்.

மேலும் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் இந்தியா மிகவும் வளர்ச்சி அடையும் என்றார்.

மேலும் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் சிறிய SSLV என்னும் ரக ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன என்றார். மேலும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகிலேயே ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வர அதிக வாய்ப்பு உள்ளதாக சிவன் தெரிவித்தார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் மேலும் குலசேகரப்பட்டினம் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக மாற வாய்ப்பு இருக்கிறது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img