இன்று புரட்டாசித் திருவாதிரை ! ஒரு மகானின் ஜென்ம தினம் ! பாரதிக்கு நிகராக தேச பக்திப் பாடல்கள் எழுதியவர் !
ஆளுமை , சமுதாயம், சமத்துவம் , தேசபக்தி , அரசியல் , ஆன்மிகம் , கவிதை என்று பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் !
தமிழகத்தில் ஹிந்து மறுமலர்ச்சிக்கு விதை மட்டுமல்ல , அதன் வளர்ச்சிக்கு இன்றும் காரணியாக இருந்து வருகிறார் !
திலகர் பெருமானால் பொது விழாவாக மாற்றப்பட்ட விநாயகர் சதுர்த்தித் திருவிழாவை தமிழகத்தில் பொது விழாவாகக் கொண்டாடத் தொடங்கிய பாரதியால் அதைத் தொடர முடியாமல் போனது . அதைத் தொடர்ச்கியாக , மக்கள் விழாவாக மாற்றிய வாழும் பாரதியின் பிறந்த நாள் இன்று !
வாழும் வாழ்க்கையில் இராமனாக , வழிகாட்டுவதில் கோபாலனாக நம்மை வழி நடத்தி வரும் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
இறைவனை பல்லாண்டு பாடி வாழ்த்தும் மரபின் அடிப்படையில் , இந்த மகானை வாழ்த்துவதில் வயதோ , ஞானமோ, தகுதியோ அவருக்கு இணையாக இருக்க வேண்டிய தேவையில்லை !
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரத்தாண்டு நல்ல உடல் நிலையுடன் வாழ வாழ்த்துகிறேன் ! இறைவனை வேண்டுகிறேன் !
விநாயகர் சிலைகளை உடைத்த தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக மாற்றி , தன் வாழ்நாளிலே அந்த வைபவத்தைப் பார்த்த மகானின் ஆசையான சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையும் அவர் காண வேண்டும் !
அவர் காட்டிய பாதையில் நாம் சென்று , சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தை அமைப்பதே அவருக்கு நாம் செய்யும் தொண்டாகும் !
வீரத்துறவியின் அறைகூவலை மனதில் சுமந்து , தொண்டு செய்வோம் ! பிறவிப்பயன் பெறுவோம் !
பேயறைந்தவன் போல் ஏனடா நிற்கிறாய்? பழியைத் துடைத்திட வந்திடடா
சூடம் கொளுத்திடு சூளுரை செய்திடு சூரத்தன மெல்லாம் காட்டி விடு
வெட்டுண்ட அங்கங்கள் இணைத்திடுவோம் இனி வெட்டுப்படாமலே காத்திடுவோம்
பிறமதம் சென்றவர் தாய்மதம் வந்திடப் பேரியக்கம் உருவாக்கிடுவோம்
இந்தக் கண்ணால் இதைக்காணவேண்டும் என இந்தக் கணமே துணிந்திடுவோம்
பித்துப் பிடித்தவன் போலிந்த வித்தினைப் பத்துத் திசையிலும் ஊன்றிடுவோம்




