தென்காசி: நெல்லை மாவட்டம், தென்காசியில் தனியார் மண்டபத்தில் சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி உண்ணாவிரம் மற்றும் பஜனையில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அக்.2 இன்று சபரிமலை பாரம்பரிய ஐதீகத்தை காத்திட வேண்டி ஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி, ஐயப்பா சேவா சங்கம் மற்றும் தென்காசி வட்டார ஐயப்ப பக்தர்கள் இனைந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தென்காசி ரயில்வே பீடர் ரோடு ஐெகநாத் அரங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், பக்தைகளும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதமும் பஐனை வழிபாடும் நடைபெற்று வருகிறது.




