திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க் கிழமை நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.




