சாதி கொடுமை… அம்மாவின் உடலை சைக்கிளில் சுமந்து சென்று… பரிதாபம்!

Published:

casteprob body taken - 2026

சாதிக் கொடுமை காரணமாக, இறந்துபோன தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது!

ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி சின்ஹானியா(45) கணவர் இறந்தவிட்ட நிலையில், தன் 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன்னர், தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி, தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது மகன் சரோஜ் முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டார். யாரும் உதவ முன்வரவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் எவரும் உதவ முன்வரவில்லை என்று கூறப் படுகிறது.

வேறு வழியின்றி சரோஜ் தனது அம்மாவின் உடலை சைக்கிளில் வைத்தார். பின்புற கெரியரில் இரண்டு கம்புகளை முட்டுக் கொடுத்து, அதன்மேல் மரக்கட்டையை வைத்து தாயின் உடலைக் கிடத்தினார். பின் தன் தலையில் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு நான்கைந்து கி.மீ நடந்தே சைக்கிளை உருட்டிச் சென்று, உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்.

அவர் செல்லும் வழியில் எதிர்ப்பட்டவர்கள் யார் இது என்று கேட்டபோது, குரல் உடைந்த நிலையில், ’என் அம்மா’ என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார் சரோஜ்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

பின்னர் எவர் உதவியும் இன்றி, தனி நபராக காட்டுக்குள் தாயின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியானதும், தகவலைப் படித்து பலரும் சோக மயமாகினர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img