jinnah gandhi - 2026

பிர்லா ஹவுஸ் பணியாளர்கள் QUARTERSலிருந்து சுமார் 300 அடி தூரத்தில்,கதவிலக்க எண் 9 ALBUQUERQUE சாலை வீட்டு பணியாளர்கள் QUARTERSஅமைந்திருந்தது.

அதில் ஒரு விடுதியில்,நானக் சந்த் என்பவர் தன் இளம் மனைவி சுலோச்சனாவோடு வசித்து வந்தார்.

அவர்களுடைய மூன்று வயது மகன் மொஹிந்தர் அடிக்கடி,பிர்லா ஹவுஸ் பணியாளர்கள் QUARTERS பணியாளர்களின் பிள்ளைகளோடு விளையாட அங்கு ஓடி போய் விடுவான்.

ஜனவரி மாதம் 20ந் தேதி மாலை,தன் மகனை தேடி அங்கு வந்த சுலோச்சனா,’யாரோ ஒரு நபர் ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு,தீப்பெட்டியிலிருந்து,தீக்குச்சியை எடுத்துக் கொளுத்துவதைப் பார்த்தார்.

‘’ நான் என் குழந்தையை அவசர அவசரமாக தூக்கிக் கொண்டேன்……அந்த வெடிகுண்டோடு சேர்ந்திருந்த திரிபோன்ற ஒரு பொருளிலிருந்து நெருப்புப்பொறிகள் வந்ததைப் பார்த்தேன் ‘’ என்று பின்னாளில் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

மதன்லால் பஹ்வா கூட சுலோச்சனாவை கவனித்து விட்டார்.குழந்தையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடும்படி அவரிடம் கூறினார்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

அங்கிருந்து மதன்லால் பஹ்வாவும் ஆப்தேயிடம் தெரிவிக்கக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றார்.

பின்னாளில் இது பற்றி மதன்லால் பஹ்வா கூறுகையில் ‘’ GUN COTTON SLAB எந்த கணத்திலும் வெடிக்கும் என்று ஆப்தேயிடம் கூறினேன்.எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார் ‘’.

தன்னுடைய முதல் நிலை வீரர்கள் திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும்,காந்தியின் இரு பக்கத்திலும் தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை ஆப்தே பார்த்தார்.

வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இருவரின் ரிவால்வர்களிலிருந்தும் காந்தியை நோக்கி குண்டுகள் பாயும் என எதிர்பார்த்து அவர்களையே பார்த்திருந்தார்.

அவர்கள் ரிவால்வர்களால் சுட்டவுடன்,இரண்டாம் நிலையில் செயலில் இறங்க கார்கரே,மதன்லால் பஹ்வா,கோபால் கோட்ஸே ;

பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவு ம் கூட கையெறி குண்டுகளை வீசுவார்கள்…..

வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.

ஆனால் ரிவால்வர்களால் யாரும் சுடவில்லை;

யாரும் வெடிகுண்டுகளும் வீசவில்லை.

ஷங்கர் கிஷ்டய்யாவையே கவனித்தப்படியிருந்த மதன்லால் பஹ்வா,அங்கிருந்து அவர் ஓடுவதைப் பார்த்தார்.அவரோடு கூட திகம்பர் பாட்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

மதன்லால் பஹ்வாவின் தோளில் தட்டி ஆப்தே கூறினார் :

‘’ திட்டம் தோல்வியடைந்து விட்டது ‘’.

மதன்லால் பஹ்வா அதற்கு முன்பு பிர்லா ஹவுஸிற்கு வந்ததில்லை.ஆகவே எங்கு போவதென்றே அவருக்குத் தெரியவில்லை.

வெளியே செல்ல வழியிருக்கும் என்று எண்ணி ஒரு திசையில் ஓடினார்.

பிர்லா ஹவுஸின் பிரம்மாண்டமான முகவாயில் அருகே வந்து சேர்ந்து விட்டார்.

உடனே இங்குமங்குமாய் புதருகளுக்கிடையேயும் ,ஒரு பாதையின் வழியாகவும் ஓடியவர்,பிர்லா ஹவுஸின் பிரதான நுழைவாயிலை தான் நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அங்கே சில போலீஸ்காரர்கள் மிகுந்த பதற்றத்துடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவர் கால்சட்டையில் ஒரு வெடிகுண்டு இருந்தபடியால்,தன்னை அவர்கள் சோதனை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உணர்ந்த அவர்,மீண்டும் வந்த வழியிலேயே திரும்ப ஓடினார்.

தான் எந்த வழியில் பிர்லா ஹவுஸிற்குள் நுழைந்தாரோ அந்த பணியாளர்கள் QUARTERS ன் நுழைவாயிலை பார்த்து விட்டார்.

ஆனால்….

அவர் வந்து நின்ற இடம்…

வெடிகுண்டு வைத்த இடத்திற்கு அருகே….

அங்கே அந்த பெண்மணி சுலோச்சனா தன் மகனோடு நின்று கொண்டிருந்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அவரோடு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவரும்,வேறு இரண்டு பேரும் இருந்தார்கள்.

மதன்லால் பஹ்வாவை கண்ட சுலோச்சனா ‘’ அந்த ஆள்தான் ‘’ என்று கத்தினார்.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending