
ஆப்தேயையும் மற்றவர்களையும் பிர்லா ஹவுஸிற்கு அழைத்து வந்த டாக்ஸி டிரைவர் சுர்ஜித் சிங் இதற்கு முன்பு காந்தியை பார்த்ததில்லை.
அன்றைய தினம் பிரார்த்தனக் கூட்டத்திற்கு காந்தியை ஒரு நாற்காலியில் அமர வைத்து தூக்கி வந்தனர்.
உண்ணாவிரதம் முடிந்த பிறகு அவர் முதல் முறையாக மக்கள் முன் தோன்றும் நிகழ்ச்சி அது.
நடக்க முடியாத அளவிற்கு அவர் பலவீனமாக இருந்தார்.
கூட்டத்திற்குள் செல்லாமல், வெளிபக்கமாகவே நின்றிருந்த சுர்ஜித் சிங் கீதை ஸ்லோகங்கள் கூறப்படுவதைக் கேட்டார்.
அதன் பிறகு காந்தி கூட்டத்தினரிடையே உரையாற்றினார்.
ஆனால் சுர்ஜித் சிங் காதில் விழுந்ததெல்லாம் வெறும் முணுமுணுப்பு மட்டுமே.
20 நிமிடங்கள் சென்றிருக்கலாம்.
கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் மைக் சரியில்லை என்று கூறினார்.
ஏமாற்றத்துடன், டாக்ஸியை நிறுத்தியிருந்த இடத்திற்கு சுர்ஜித் சிங் திரும்பினார்.
அப்போது அவர் ஒரு வெடிசத்தத்தை கேட்டார்.
இந்த வெடிசத்தத்தை அவர் கூட்டத்தில் இருக்கும் போது கேட்டாரா அல்லது டாக்ஸி இருக்கும் இடத்திற்கு திரும்பிய பிறகு கேட்டாரா என்று தெரியவில்லை.
கோபால் கோட்ஸே கூற்றின்படி( பின்னாளில் இது குறித்து அவர் நினைவுகூர்ந்தபோது ),வெடிசத்தம் கேட்ட சில நிமிடங்களுக்கு பிறகுதான், டாக்ஸி இருக்கும் இடத்திற்கு அவர் திரும்பி இருக்க வேண்டும்.
காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதிய டெண்டுல்கர் எழுதுகிறார் :
’ வெடிசத்தம் வெகு தூரத்திற்கு கேட்கும் அளவிற்கு இருந்தது ; ஆனால் ‘ காந்தி கலக்கமடையவில்லை.எதுவுமே நடக்காதது போல தன் உரையை தொடர்ந்தார்.
அவர் மீண்டும் பேசத் தொடங்கியதும் கூட்டமும் அமைதியடைந்தது.
கூட்டம் வழக்கமான வரிசைக்கிரமத்தில்,கோரஸ் இசை,காந்தியின் உரை,குரான்,பைபிளிலிருந்து வாசகங்கள் மற்றும் பகவத் கீதையிலிருந்து ஸ்லோகங்கள் என தொடர்ந்து இறுதியாக, ‘ அனைவருக்கும் ஞானம் அருளும்படி’ பிரார்த்திக்கும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது’.
இந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி அன்று மாலையில் பேசிய காந்தி மதன்லால் பஹ்வாவை புகழ்ந்து பேசினார்.
‘ அந்த சிறுவன் ( மதன்லால் பஹ்வா ) ஒரு பஹதூர் ( வீரன் ) ; ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட,தேசிய கதாநாயகன் ஆகிவிட்ட தீவிரவாதி பகத்சிங் போன்றவன் போன்றவன் ;
அவர் மேலும் கூறுகையில் ‘ BACHE HAIN,AHBI YEH SAMAJHTE NAHIN,MAROONGA TAB YAAD KARENGE,KE BOODHA THEEK KEHTA THA ‘ ( அவர்கள் குழந்தைகள் போன்றவர்கள்.அவர்களுக்கு புரியவில்லை.நான் போன பிறகு ( இறந்த பிறகு ),அந்த வயதானவன் சொல்லி வந்ததெல்லாம் உண்மையே ) என்று புரியும்.
இவையெல்லாம் டெண்டுல்கர் தன் ‘ காந்தி வரலாறு ‘ புத்தகத்தில் எழுதியுள்ளது.
ஷங்கர் கிஷ்டய்யாவும்,திகம்பர் பாட்கேயும் ஓடுவதைக் கண்ட கோபால் கோட்ஸே தானும் தப்பிவிட வேண்டுமென்றுதான் முதலில் எண்ணினார்.
அவர் காத்திருந்த டாக்ஸியை நெருங்கிய போது,பின்னால் இருக்கையில் ஒரு வெள்ளை துணி மூட்டையைக் கண்டார்.அதில் இருப்பது என்னவென்றும் அவருக்கு புரிந்து போய் விட்டது.டாக்ஸி டிரைவரும் அங்கில்லை.
‘ காந்தியை கொல்ல ஒரு கடைசி வாய்ப்பு ; நானே அதை செய்து முடித்து விடுகிறேன் ‘ என தீர்மானித்தார்.
ரிவால்வர்கள் இருந்த வெள்ளை மூட்டையை,தான் கையெறி குண்டை வைத்திருந்த பையிற்குள் போட்டுக் கொண்டு,பணியாளர்கள் QUARTERS நோக்கி ஓடினார்.
வெடிகுண்டு சத்தத்தை கேட்டு பலரும் பல திசைகளில் ஓடிக்கொண்டிருந்ததால்,கோபால் கோட்ஸேயை யாரும் கவனிக்கவில்லை.
மேலும் வெடிசத்தத்தை கேட்டவுடன்,பணியாளர்கள் QUARTERS ல் இருந்த அனைவரும் பயந்துபோய் போட்டது போட்டபடி,அறைகளின் கதவுகளையெல்லாம் கூட திறந்து போட்டுவிட்டு ஓடி போய் விட்டனர்.
கோபால் கோட்ஸே,சோட்டு ராமின் அறைக்குள் தைரியமாக நுழைந்தார்.
கதவை உள்புறமாக சாத்திக் கொண்டு,அதை அங்கிருந்த,பூட்டுவதற்காக வைத்திருந்த சங்கிலியால் பூட்டிக்கொண்டார்.
தன்னுடைய .38 ரிவால்வரை கையில் எடுத்தார்.
( தொடரும் )



