spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryஎன்ன செய்தார் உங்கள் எம்பி.,! திருப்பூர் எம்.பி., சத்யபாமா!

என்ன செய்தார் உங்கள் எம்பி.,! திருப்பூர் எம்.பி., சத்யபாமா!

- Advertisement -

என்ன செய்தார் உங்கள் எம்பி., உங்கள் எம்பி.,யின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?!

திருப்பூர் எம்.பி #சத்தியபாமாவின் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகள்… கூட்டத்தொடரில் பேசியவை.

1)நெசவுத் தொழில்: ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனை பாதுகாக்க பவானி ஜமக்காளத்தை ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்தல்.

விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்குதல்.

2)விவசாயம்/வேளாண்மை: வேளாண்மைக்காக செய்யப்படும் ஆழ்குழாய் கிணறு தோண்டும் மற்றும் துளையிடும் ரிக் (RIG) பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை GST வரியிலிருந்து விலக்கு அளித்தல்.

3)தொழில் வளர்ச்சி: சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தல்.

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிரத்யேகமான BASEL3 விதிமுறைகளுக்குப் பதிலாக உரிய திட்டத்தை வகுத்தல்.

முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கிளெய்ம்களை மேற்கொள்ள அனுமதித்தல்.

ஜிஎஸ்டி (GST) தொகையை திரும்பப்பெறும் விவரங்களை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதி.

4)பின்னலாடைத் துறை: ஜவுளித்துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டிய நிலுவைத்தொகை 8000 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்தல்.

சுற்றப்பட்ட நூலிழை உற்பத்தி குறித்து நூற்பாலைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுபாட்டை 40% சதவிகிதத்திலிருந்து 10% சதவிகிதமாகக் குறைத்தல்.

5)போக்குவரத்துத் துறை:

i)ரயில் போக்குவரத்து:- திருப்பூர் ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட வசதிகளை பயணிகளின் நலனுக்காக வழங்க வேண்டுதல்:
முழுவதும் வேயப்பட்ட கூரையுடன் கூடுதல் நடைமேடை.
முழுவதும் வேயப்பட்ட கூரையுடன் கூடுதல் நடைமேடை.
*கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்டர்.
*எல் இ டி திரை வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் வருவது மற்றும் செல்வது குறித்த டிஜிட்டல் வசதிகள்.
*மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் கார் வசதி.
*ரயில் பற்றிய தகவல்களை வழங்கும் உதவி மையம் மற்றும் தானியங்கி கியோஸ்க் வசதி.
*ரொக்கப்பண ஏடிம் வசதி.
*குடிநீர் வழங்கும் இயந்திரங்கள்.
*திருப்பூரில் கீழ்க்கண்ட ஏழு ரயில்வண்டிகள் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டி கோரிக்கை:
*ரயில் வண்டி எண்கள் 22877/22878 ஹெளரா-எர்ணாகுளம் அந்த்யோத்யா எக்ஸ்பிரஸ்.
*ரயில் வண்டி எண்கள் 22837/22838 ஹட்டியா-எர்ணாகுளம் ஏசி எக்ஸ்பிரஸ்.
*ரயில் வண்டி எண்கள் 12660/12659 ஷாலிமார் நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ்.
*ரயில் வண்டி எண்கள் 12623/12624 சென்னை திருவனந்தபுரம்- சென்னை மெயில்.
*ரயில் வண்டி எண்கள் 12697/12698 சென்னை திருவனந்தபுரம்- சென்னை மெயில் வாராந்திரி.
*ரயில் வண்டி எண்கள் 22207/22208 சென்னை திருவனந்தபுரம் -சென்னை சூப்பர் ஏசி.
*ரயில் வண்டி எண்கள் 12237/12258 யெஷ்வந்த்புர் கொச்சுவேலி – யெஷ்வந்த்புர் கரீப்ரத் எக்ஸ்பிரஸ்.

i)ஊத்துகுளி ரயில் நிலையத்தில், கீழ்கண்ட ரயில்கள் நின்று செல்லுதல் தொடர்பான கோரிக்கைகள்:
*PGTN-TPJ ரயில் வண்டி (எண் 56712).
*CBE-MAS பகல்நேர இண்டர் சிட்டி ரயில்வண்டி (எண்கள் 12680/12679).
*ரயில்வண்டி எண் 22637/22638.
*MTP-MAS இரவுநேர இண்டர் சிட்டி ரயில்வண்டி 12672/12671.
*CBE-MAS இரவுநேர இண்டர் சிட்டி ரயில்வண்டி 12674/12673.

*ii)ரயில் வண்டி (எண் 56320) CBE-NCJ இடையேயான பாசஞ்சர் வண்டி கோயம்புத்தூரில் புறப்படும் நேரம் காலை மணி ஏழு மணிக்கு மாற்றுதல் வேண்டும்.

*iii)நெய், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களுக்கு பிரசித்தி பெற்ற ஊத்துக்குளி ஒரு முக்கியமான வர்த்தக மையமாகும். ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் புக்கிங் அலுவலகம் தேவை என வேண்டுகோள்.

5) போக்குவரத்துத் துறை
ii)விமானப் போக்குவரத்து:-
*கோவை – திருப்பூர் மக்கள் பயன் பெறும் வகையில், கூடுதல் விமான சேவைகளை துவக்கவேண்டுதல்.
*கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குதல்.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கேள்விகள்:

1.காவல் துறையினருக்கான பயிற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப வசதிகள்.

2.ஊனமுற்றோருக்கான ஏற்றமிகு திட்டங்கள்.

3.விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

4.ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்கள், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளடக்கியும், உற்பத்தி மையம் தொடர்பான விவரங்கள்.

5.சென்னை-கோவை-சேலம்-ஈரோடு-திருப்பூர் புதிய சாலைப் போக்குவரத்து திட்டம்.

6.RGNIYD திட்டத்திற்கு நிதி ஒதுக்குதல்.

7.தமிழகத்தில் AYUSH திட்டத்திற்கான வளர்ச்சி நிதி.

8.பொதுத்துறை வங்கிகள் இணைப்பு.

9.நாட்டின் இயற்கை வளம்.

10.IGST வரி பாக்கி தொகை மாநிலத்திற்கு வழங்கல்.

11.சங்கச்சாவடிகளின் ஆண்டு வருமானம் குறித்து விவரம்.

12.சுற்றுலா மேம்பாடு.

13.கடல்சார் பொருள் ஏற்றுமதிக்கு ஊக்கம் அளித்தல்.

14.NLC யில் நிலம் கையகப்படுத்துபவர்களுக்கு ஆதரவுத் தொகை.

15.தகவல் தொழில் நுட்ப அபிவிருத்தி.

16.ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள்.

17.நீர் ஆதாரம் அதிகப்படுத்த, நிலத்தடி நீர் சேர்க்க, மழைநீர் சேகரிப்புக்கு நிதியுதவி.

18.தமிழகத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல்.

19.ரிஸர்வ் வங்கி உபரி நிதி அரசு தேவைக்களித்தல்.

20.சிறு குறு தொழிலுக்கு அரசு உதவி.

21.அரபு நாடு மட்டும் ஐப்பான் உடனான இந்திய வர்த்தக தொடர்பு.

22.அதிகமாகும் சீனாவிலிருந்து இறக்குமதி.

23.திருமணமான பெண்டிர் எதிர்கொள்ளும் பாலின கொடுமை.

24.தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை.

25.மேகதாது அணைப் பிரச்சனை தீர்வு.

26.நிகழ்கால வைப்பு நிதி குறைபாடு.

27.போலி கம்பெனிகள் மீது தடை.

28.சொட்டு நீர் பானம்.

29.கஜா புயல் பாதிப்புகள்.

30.மென்பொருள் துறை பயிற்சி.

31.கண்காணிப்பு கேமிரா பொருத்துதல்.

32.செயற்கை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe