நாக்பூரில் நடைபெற்ற தியாகராஜர், பாரதியார் விழா!

Reporters Diary லைஃப் ஸ்டைல்

nagpore music - 2026

மார்ச் 10 ஞாயிறு அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூரில் சுவாமி தியாகராஜர் விழாவும், பாரதியார் விழாவும், தென்னிந்திய சங்கத்தினால்கொண்டாடப்பட்டது.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியாகராஜர் கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறுவன் ஒருவன் பாடிய பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் மனதை மயக்கியது. கண்ணன் திருமலை, மகாகவி பாரதியாரைப் பற்றி கவிதை வாசித்தார்.

மராட்டிய மண்ணில் தெலுங்கும், தமிழும் அருமையாய் ஒலித்ததைக் கேட்டபோது நம் பாரதத் தாயின் மகிமையை பறைசாற்றுவதாய் அமைந்தது.

தென்னிந்திய சங்க உறுப்பினர்களின் முயற்சியால் நிகழ்ச்சி திறம்பட நடந்தேறியது.

– ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.