பணத்தை அவர்களே வைத்து… எடுத்து… எங்கள் மீது பழி போடுகிறார்கள்: துரைமுருகன்!

Published:

duraimurugan - 2026

சென்னை: தேர்தல் நேரத்தில் பழி சுமத்தி சோதனை என்ற பெயரில் எங்களை சிக்க வைக்க சூழ்ச்சி நடக்கிறது. பணத்தை அவர்களே வைத்துவிட்டு, எடுப்பதாக நாடகம் ஆடி, சிக்க வைக்கிறார்கள் என்று திமுக., பொருளாளர் துரைமுருகன்  கூறியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்… அரசியலில் எதிரும் புதிருமாக நின்று கருத்துப் போர் புரிய வேண்டும். ஆனால் மத்திய மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் எங்களை பழிவாங்க முயற்சிக்கின்றன.

கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனைகள், அவரது வெற்றியை சீர்குலைக்க நடக்கும் சதி. இது ஜனநாயகத்திற்கு புறம்பானது.

இதுவரை எங்கள் வீடு, கல்லுாரிகளில் நடந்த சோதனைகளில் ஏதும் கைப்பற்றப் பட வில்லை. ஆனால், எங்கள் இடங்களில் ஏதாவது பொருளை வைத்துவிட்டு, எங்கள் மீது பழி சுமத்தப் பார்க்கின்றனர்.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கருத்துப் போர் புரிவது தான் அரசியல். மாறாக பழிவாங்கி, அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

எங்களுக்கு வந்துள்ள தகவல்கள் படி, எங்களை சுற்றி கண்காணிப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது… என்று குற்றம் சாட்டியுள்ளார்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”74″ order=”desc”]

துரைமுருகன் தன் வீட்டில் கல்லூரியில் வருமான வரி சோதனை செய்து, தன்னை நெருக்குகிறார்கள் என்று சொல்லி, இதனால் எங்களுக்கு அனுதாப ஓட்டுகள் நிறைய வரும் என்று சொல்லிப் பார்த்தார்.

இப்போது விவகாரத்தை திசை திருப்ப, அவர்களே வைத்து அவர்களே எடுத்து பழி போடுவதாகக் கூறியுள்ளார்.

தொகுதி வாரியாக பணத்தைப் பிரித்து, கவர் போட்டு வைத்து, தளபதி பிரிண்ட் அடித்த சாக்கு மூட்டையில் பணத்தை வைக்கும் அளவுக்கு வருமான வரித்துறையில் பொழுது போகாத வேலை வெட்டி இல்லாத அதிகாரிகள் இருப்பதுபோல், துரைமுருகன் கூறியுள்ளதைக் கேட்டு மேலும் மேலும்  சிரிக்கிறார்கள் தமிழக மக்கள்.

கல்லூரி மூலம் எத்தனை கோடிகளை, அப்பாவி மாணவர்களிடம் அடித்துப் பிடித்து கறந்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதை கோடி கோடியாக ஐடி சோதனையில் அதிகாரிகள் காட்டியபோது சபித்ததும் இந்த மக்கள்தான்!

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

வெறும் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் இத்தனை கோடிகளை இவர்களால் அடித்து  பதுக்கி வைக்க முடிகிறதே என்று ஆச்சரியப் படுகிறார்கள் மக்கள். மத்திய அரசு இது போன்ற பதுக்கல்காரர்கள், கருப்புப் பண முதலைகளுக்காகத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையே எடுத்தது. ஆனால் துரைமுருகன் போன்ற திமுக.,வினர், உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் அரசியல் பண முதலைகள், எந்த வகையில் எல்லாம் ஏய்த்து தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றினர் என்பதையும் இந்தத் தமிழகம் கண்டுவிட்டது.

வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பேருந்துகள், பஸ் முதலாளிகள் மூலம், போக்குவரத்துக் கழகங்கள் மூலம் என்று எத்தனை முறைகேடுகளைச் செய்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கி தோல்வி அடையச் செய்தனர் என்பதையும் இந்த நாடு கண்டுவிட்டது.

இப்போது, துரை முருகன் சொல்வதையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்!


[poll id=”16″]


 

Related articles

Recent articles

spot_img