December 8, 2024, 12:13 PM
30.3 C
Chennai

தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!

தெற்காசிய அரசியல் சூழலை அறிந்த எவரும் சொல்வார்கள், இந்தியா எந்த நிலையை எடுக்கும் என்பதை! ஆனால் அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க எம்.பி., ஒருவர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட என்னைக் கேட்டுக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் விவகாரங்கள் எதையும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.

`தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை சிறிதளவேனும் தெரிந்திருக்கும் நபர் எவரைக் கேட்டாலும் தெளிவாகச் சொல்வார்கள்… இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பாது; மூன்றாம் நபரை இந்தியா ஆதரிக்காது என்று! எனவே, மோடி காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரை பரிந்துரைக்கவே மாட்டார். அதிபர் டிரம்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கூறியுள்ளார்!

ALSO READ:  திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று த