Home Blog Page 100

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

pm modi in bihar campaign - 2026

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின் இந்தியா துரித நடவடிகை எடுத்து வருகிறது., இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது…

The willpower of 140 crore Indians will now break the backbone of the masters of terrorism

நண்பர்களே, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று, ஜம்முகஷ்மீரத்தின் பஹல்காவிலே, தீவிரவாதிகள், அப்பாவி நாட்டுமக்களை, மிகக் கொடூரமான முறையிலே கொன்றார்கள்.  இதனால், மொத்த தேசமும் சோகத்தில் இருக்கிறது, கோடானுகோடி நாட்டுமக்கள் துக்கத்தில் இருக்கிறார்கள். 

பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தாரின் துக்கத்திலே, மொத்த தேசமும், அவர்களுக்குத் துணையாக நிற்கிறது.  எந்தக் குடும்ப உறுப்பினர்களின், சிகிச்சை இப்போது நடக்கிறதோ, அவர்கள் விரைவாக நலம்பெற வேண்டும், என்பதற்காகவும் அரசாங்கம், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

நண்பர்களே, இந்தத் தீவிரவாதத் தாக்குதலிலே, சிலர் தங்களுடைய மகனை இழந்திருக்கிறார்கள், சிலர் தங்கள் சகோதரனை இழந்திருக்கிறார்கள், சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்திருக்கிறார்கள்.  அவர்களிலே சிலர், வங்காள மொழி பேசுபவர்கள், சிலர் கன்னடம் பேசுபவர்கள், சிலர் மராட்டியர்கள், சிலர் ஒடியா பேசுபவர்கள், சிலர் குஜராத்திகள், ஒரு சிலரோ இந்த பிஹாரின் மைந்தர்கள்.  

இன்று இந்த அனைவரின் மரணத்தின் மீது, கர்கில் முதல் கன்னியாகுமாரி வரை, நம்முடைய துக்கம், ஒரே மாதிரியாக இருக்கிறது.  நம்முடைய ஆக்ரோஷம், ஒன்று போலவே இருக்கிறது.  இந்தத் தாக்குதல், வெறும், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது மட்டும் நடக்கவில்லை.  

தேசத்தின் எதிரிகள், பாரதத்தின் ஆன்மாவின் மீது, தாக்குதல் தொடுக்கும் குற்றத்தைப் புரிந்திருக்கின்றார்கள்.  நான் மிகவும் தெளிவான சொற்களில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், யாரெல்லாம், இந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றார்களோ, அந்தத் தீவிரவாதிகளுக்கும், இந்த சூழ்ச்சியைத் திட்டமிட்ட வஞ்சகர்களுக்கும், அவர்கள் கற்பனையைத் தாண்டி பெரிய, தண்டனை தரப்படும்.  தண்டனை கண்டிப்பாக கிடைத்தே தீரும்.  இப்போது தீவிரவாதிகளுடைய, தப்பிப் பிழைத்திருக்கும் நிலப்பகுதியையும், தரைமட்டமாக்கும் நேரம் வந்து விட்டது.  நூற்றி நாற்பது, 140 கோடி, பாரத நாட்டவரின், உறுதிப்பாடு, இப்போது தீவிரவாதிகளின் ஆதரவாளர்களின், முதுகெலும்பை உடைத்தே தீரும். 

India will identify, track, and punish every terrorist, their handlers, and their backers

நண்பர்களே, இன்று, பிஹாரின் இந்த மண்ணிலிருந்து, நான் உலகனைத்திற்கும் தெரிவிக்க விரும்புகிறேன், இந்தியா கண்டிப்பாக, ஒவ்வொரு தீவிரவாதியையும், அவர்களின், ஆதரவாளர்களையும், அடையாளம் கண்டு, தேடிப்பிடித்து தண்டனை கொடுக்கும்.   உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களைத் துரத்திப் பிடிப்போம்.   இந்தியாவின் ஊக்கத்தை எந்தத் தீவிரவாதத்தாலும் சாய்க்க முடியாது.  தீவிரவாதம் எக்காலத்திலும் தண்டனையிலிருந்து, தப்பிவிட முடியாது.  

நீதி கிடைப்பதற்கான அனைத்து வகையான, முயற்சிகளையும் நாங்கள் எடுத்தே தீருவோம்.  நாடு முழுவதும் இந்த நிலைப்பாட்டிலே, உறுதியாக இருக்கிறது.  மனிதம் மீதான, நம்பிக்கை உள்ள அனைவரும், எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.  நான் பன்னாட்டு மக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும், என்  நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  அவர்கள் இப்போது எங்களுக்கு, துணையாக இருந்தார்கள். – என்று குறிப்பிட்டுள்ளார்.

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs ராஜஸ்தான் – சின்னசாமி மைதானம், பெங்களூரு – 24.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (205/5, விராட் கோலி 70, தேவதத் படிக்கல் 50, பில் சால்ட் 26, டிம் டேவிட் 23, ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 20, சந்தீப் ஷர்மா 2/45, ஆர்ச்சர் 1/33, ஹசரங்கா 1/30) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (194/9, யசஶ்வீ ஜெய்ஸ்வால் 49, துருவ் ஜுரல் 47, நிதீஷ் ராணா 28, ரியன் பராக் 22, சூர்யவன்ஷி 16, ஹேசல்வுட் 4/33, க்ருணால் பாண்ட்யா 2/31, புவனேஷ் குமார் 1/50, ய்ஷ் டயால் 1/33) 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் நான்கு வீரர்கள் அணியின் ஸ்கோரை நன்கு கட்டமைத்தார்கள். பில் சால்ட் (23 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர்), விராட் கோலி (42 பந்துகளில் 70 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), தேவதத் படிக்கல் (27 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), டிம் டேவிட் (15 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கடைசியாக களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா (10 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்தெடுத்தார்கள். 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

          206 ரன் என்ற கடினமான் இலக்கை அடைய இரண்டாவதாக மட்டையாட வந்தது ராஜஸ்தான் அணி. இவர்கள் பூவா தலையா வென்று எதற்காக பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதே புரியவில்லை. சென்ற ஆட்டத்தில் சேஸ் செய்யும்போது கடைசி ஓவரில் ரன் எடுக்க முடியாமல் தோற்றுப் போனார்கள். இம்முறையும் அதுதான் நடந்தது. முதல் 14 ஓவர்கள் வரைக்கும் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் பெங்களூரு அணியின் ரன்ரேட்டைவிட அதிகமாக இருந்தது.

இங்கேயும் முதல் நாலு மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். யசஶ்வீ ஜெய்ஸ்வால் (19 பந்துகளில் 49 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), வைபவ் சூர்யவன்ஷி (12 பந்துகளில் 16 ரன், 2 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் வந்த நிதீஷ் ராணா (22 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ரியான் பாராக் (10 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (34 பந்துகளில் 47 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) என அனைவரும் சிறப்பாக ஆடினர்.

ஆனால் அதன் பின்னர் வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் (8 பந்துகளில் 11 ரன்), ஷுபம் துபே (7 பந்துகளில் 12 ரன்) இருவரும் இறுதி வரை ஆடி வெற்றியை அணிக்குத் தந்திருக்க வேண்டியவர்கள். அவர்கள் இருவரும் சுமாரான ஷாட்டுகளில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்தவர்கள் ஹேசல் வுட்டின் பந்துவீச்சில் திணறிப்போயினர்.

இதனால் 19ஆவது ஓவரில் இரண்டு விக்கட்டுகளும் 20ஆவது ஓவரில் 2 விக்கட்டுகளும் வீழ்ந்தன. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கட்டுகள் இழந்து 5 ரன்கள் மட்டுமே அவர்களால் சேர்க்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.

          பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு புள்ளிகள் பெற்றதால் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றது.

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

srivilliputhur andal malai to srirangam ranganathar - 2026

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்ட திருவிழாவின் போது பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கலப் பொருட்கள் இன்று ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது.திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ரெங்கநாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும். இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி நட்சத்திரம் ஏப்.,26ல் வருகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. அந்த தேரோட்டத்தின் போது ரெங்கநாதர், ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நம்பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள் தன்னை பெருமாளின் மனைவியாக நினைத்து மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூ மாலையை சூடிக் கொண்டார்.

ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மணம் புரிந்தார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம். அதைக் குறிக்கும் வகையில் ஆண்டாள் சந்நிதி உட்பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாளும் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது மலையப்ப சுவாமி, மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் ஆகியோர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம் அணிந்து எழுந்தருள்கின்றனர்.

அதன்படி ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் நேற்று ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக ஆண்டாளுக்கு கிளி, பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், சுதர்சன் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs மும்பை – ஹைதராபாத் – 23.04.2025

மீண்டும் ரோஹித் ஷர்மாவின் அதிரடி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (143/8, ஹென்றி கிளாசன் 71, அபினவ் மனோஹர் 43, அனிகேத் வர்மா 12, போல்ட் 4/26, தீபக் சாஹர் 2/12, புமரா 1/39, பாண்ட்யா 1/31) மும்பை இந்தியன்ஸ் அணி (146/3, ரோஹித் ஷர்மா 70, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 40, வில் ஜேக்ஸ் 22, ரியன் ரிக்கிள்டன் 11, உனக்தத் 1/25, ஈஷன் மலிங்கா 1/33, சீஷன் அன்சாரி 1/36) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன்), அபிஷேக் ஷர்மா (8 ரன்), இஷான் கிஷன் (1 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (2 ரன்) இன்று மும்பை அணியின் தொடக்க பந்துவீச்சாளர்கள் ட்ரண்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர் பந்துவீச்சில் விரைவில் பெவிலியன் திரும்பினர்.

4.1 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 13 ரன் எடுத்திருந்தது. அந்த நிலையில் இருந்து அந்த அணியை ஹென்றி கிளாசன் (44 பந்துகளில் 71 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்), அனிகேத் வர்மா (14 பந்துகளில் 12 ரன்) மற்றும் அபினவ் மனோஹருடன் (37 பந்துகளில் 43 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை 142 ரன்னுக்குக் கொண்டுவந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.

          வெற்றிக்கு 144 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் (8 பந்துகளில் 11 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா (46 பந்துகளில் 70 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தைப் போல இன்றும் வெளுத்து வாங்கினார். அவர் விளையாடும்போது மும்பை அணியின் வெற்றி பத்தாவது ஓவரிலேயே உறுதியாகிவிட்டது.

அவருடன் இணைந்து வில் ஜேக்ஸ் (19 பந்துகளில் 22 ரன்) மற்றும் சூரிய குமார் யாதவ் (19 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மும்பை அணிக்கு ஐந்தாவது வெற்றியைத் தேடித்தந்தனர். மும்பை அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 10 புள்ளைகள் பெற்றுள்ள பெங்களூரு, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகளைவிட ரன்ரேட் மும்பைக்கு அதிகம் உள்ளது.

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

image 2 - 2026

TN Raj bhavan condemns intentional media reports

rn ravi - 2026

TAMIL NADU RAJ BHAVAN, releases a PRESS NOTE, follows…

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central, State and Private universities in our state have appeared in recent days as if it is a power struggle between Raj Bhavan and the State Government. These reports are entirely erroneous and mischievous.

Annual conferences of leaders of higher educational institutions are carefully planned and organised in April every year since 2022 by the Hon’ble Governor of Tamil Nadu in which eminent leaders of academia and Industries. from Tamil Nadu and across the country participate and share their ideas and experiences with leaders of our higher educational institutions.

Participants to the conference deliberate over the emerging challenges and opportunities for our students and also the newly unfolding frontiers of science & technologies and devise ways and means to prepare their respective institutions to remain competitive and ahead of the changing curve to the benefit of our state and the students. Positive outcomes of these conferences are increasingly visible in measurable parameters.

Earlier our institutions specially the State Universities never interacted with each other and functioned largely in their respective silos to the disadvantage of our students and was detrimental to the growth of our institutions.

Preparations for each year conference begins several months in advance, meetings with the Vice-Chancellors and eminent experts of academia and industries are held to design the structure of the conference, select the topics and themes for deliberations and identify the eminent resource persons across the country who are then approached well in advance to ensure their participation. This year too the preparations for the conference began in January itself. Several meetings were held to make it more productive.

It is unfortunate that some ill informed media reports have given this well intentioned academic exercise with aim to achieving excellence in teaching, learning, innovation and enterprise a political twist, wrongly linked it with the recent Court judgment and tried to project it as a power struggle between the Raj Bhavan and the State Government. These are scandalous and far from truth.

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

rn ravi - 2026

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில், அதன் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

சமீப நாட்களில், மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் வருடாந்திர மாநாட்டை ஆளுநர் மாளிகை மற்றும் மாநில அரசுக்கு இடையிலான அதிகார மோதல் எனத் தவறாக காட்சிப்படுத்தும் சில தவறான ஊடக செய்திகள் பரப்பப்படுகிறது.

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

2022-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரால் உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் மாநாடு திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இதில், தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் தொழில்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டில் கல்வி நிறுவனங்களை முன்னேற்றும் புதிய சவால்கள், வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி விவாதிக்கப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக அவர்களது நிறுவனங்களை எப்படி போட்டித் திறன் வாய்ந்ததாக மாற்றலாம் என்பது குறித்தும் உரையாடல்கள் நடைபெறுகின்றன. இம்மாநாடுகளின் நேரடி பலன்கள், கணக்கீடு செய்யக்கூடிய அளவுகோள்களில் தற்போது தெளிவாக தெரிகிறது.

முன்னர், குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இல்லாமல் செயல்பட்டன. இது மாணவர்களுக்கு இழப்பாகவும், கல்வி வளர்ச்சிக்குப் பாதகமாகவும் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான திட்டமிடல் சில மாதங்கள் முன்னதாகவே தொடங்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்வி, தொழில்நுட்ப நிபுணர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநாட்டின் வடிவம், விவாதிக்கப்படும் தலைப்புகள் மற்றும் உரையாற்ற வேண்டிய நிபுணர்கள் குறித்து முடிவெடுக்கப் படுகின்றது. தொடர்பு கொண்டு அவர்களை பங்கேற்பதற்கான முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் ஜனவரி மாதமே தயாரிப்புகள் தொடங்கப் பட்டது. பல கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள மாநாடாக மாற்றப்பட்டுள்ளது.

கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நன்னெறி மற்றும் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டை, சில ஊடகங்கள் தவறாக விளக்கி, சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத் தக்கதாகும். இவை அனைத்தும் மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் இருக்கின்றது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

madurai vadippatti kariyappatti agri news - 2026

இயற்கை விவசாயம் – அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்: நபார்டு வங்கி பொதுமேலாளர் வழங்கினார்.

இயற்கை விவசாயம், அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப் பட்டது. விருதுநகர மாவட்டம், மல்லாங்கிணறில் இயங்கி வரும் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, நிறுவனச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தலைவர் செல்லம்மாள் முன்னிலை வகித்தார். விழாவில், நிறுவனத்தின 30-வது ஆண்டு ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப் பட்டது.

விழாவில், இயற்கை விவசாயம், அதிகமான மகசூல், மற்றும் சிறுதானிய உற்பத்தியில் சிறந்த விவசாயிகள் 30 பேருக்கு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர்கள் ராஜ சுரேஷ்வரன் , அனுஷா எலிசபெத் ஆகியோர் விருதுகள் வழங்கினார்கள்.

விழாவில், பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சமு நதி மேலாளர் சுரேஷ பாபு, பிரதான் அமைப்பு ஆதிநாராயணன, வலையங்குளம் சந்திரன், அமிர்தவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட மேலாளர் சிவக்குமார்  நன்றி கூறினார்.


நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்,
இளங்கலை (மேதமை) அறிவியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி க.கோமளவள்ளி கிராமப்புற விவசாயப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் டி.ஆண்டிபட்டி கிராமத்தில் நெல் சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த இனக் கவர்ச்சி பொறி வைப்பது குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

இந்த பொறி பூச்சி கொல்லிகள் வைப்பதற்கு ஒரு மாற்றாக உள்ளது.
பூச்சிகளை கண்காணிக்க, கட்டுப்படுத்த இது மிகவும் பயனுள்ளது எனக் கூறி நெல் வயலில் ஒரு ஹெக்டேர் அளவில் 12 பொறிகள் வைத்து தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம் என்று கூறி பொறி வைத்துகாட்டி
செயல் விளக்கமளித்தார்.


மேலக்கால் – வைகை ஆற்றில் துப்புரவு பணி; மரக்கன்றுகள் நடல்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம் இருந்த குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வீடுகள் பழனிவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

hindu
ohm

காஷ்மீரில் இந்துக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல், தேசத்தின் துக்க நாள் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் இந்திய இராணுவ உடையில் வந்து அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.

அதிலும் கொடுமையானது அவர்களின் மதத்தை கேட்டு, உடைகளை களைந்து உடல் உறுப்புகளை பார்த்து உறுதி செய்த பிறகு கொன்றுள்ளனர். மனைவி கண் முன்பே கணவனை கொன்றுள்ளனர். மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கூறியதற்கு, இதனை இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவிக்க வேண்டும் ஆகவே கொல்லாமல் விடுவதாக பயங்கவாதிகள் கூறியுள்ளனர்.

இந்த கொலை பாதக சம்பவம் ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் உலுக்கியுள்ளது. மத பயங்கரவாதம் எத்தகைய அபாயகரமானது என உலகத்திற்கு உணர்த்தியுள்ளது.

மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம் மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சலுகை. அதனை நீக்கி மாநிலத்தை மூன்று பிரிவாக பிரித்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டது. அங்கு அமைதி திரும்பியது. காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ ஆரம்பித்தனர்.

மேலும் அங்கு விவசாயம், சுற்றுலா மூலம் மக்கள் வளர்ச்சியின் அவசியத்தை உணரத் தொடங்கினர். மேலும் பாரதம் முழுவதிலிருந்தும், உலக மக்களும் காஷ்மீருக்கு சுற்றுலா வரத் துவங்கினர். இதனை பொறுக்க முடியாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த கோழைத்தனமான மத பயங்கரவாத கொடூரத்தை நடத்தியுள்ளனர்.

நமது நாட்டின் துரதிருஷ்டம் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுவதுமாக அச்சமின்றி வெளிவரும் முன்னரே தேர்தலை நடத்த நீதிமன்றம் தலையிட்டது. எதிர்க்கட்சிகளும் அங்கு அமைதி திரும்பும் முன் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தன.

குடியரசு தலைவர் ஆட்சி இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்து இருந்தால் இத்தகைய கொடூரம் நடந்து இருக்காது. ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக்கும் போக்குதான் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவுவதாக அமைகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

காஷ்மீர் மக்கள் இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். உண்மையில் இது நல்ல துவக்கம் என்றாலும் கண் எதிரே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை பார்த்து மீண்டும் அந்த மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பது நமது கவலை.

பாரதத்தின் காஷ்மீர் எல்லை பகுதியான புல்வாமாவில் இராணுவ உடையில் வந்து இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததுபோல இப்போதும் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்க இராணுவத்திற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் துணை நிற்போம்.

இப்போது தருகின்ற பதிலடி இனி எந்த காலத்திலும் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் எந்த பயங்கர செயலையும் செய்ய அஞ்சும் அளவு இருக்க வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் கூட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிக்க பாரததத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் இரக்கமற்ற கொடிய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நாம் நமது உறவினர்களை இழந்துள்ளோம். எனவே அருகில் உள்ள கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

டெல்லி திரில் வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (209/8, மிட்சல் மார்ஷ் 72, நிக்கோலஸ் பூரன் 75, டேவிட் மில்லர் 27, மிட்சல் ஸ்டார்க் 3/42, குல்தீப் யாதவ் 2/20, விப்ராஜ் நிகம் மற்றும் முகெஷ் குமார் தலா ஒரு விக்கட்) டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 211 ரன், அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்கமல் 66, விப்ராஜ் நிகம் 39, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அக்சர் படேல் 22, ஷர்துல் தாகூர், மணிமஆறன் சித்தார்த், திவேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கட்டுகள்) ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் அணித்தலைவர், ரிஷப் பந்த், தான் ஒருவேளை டாஸ் ஜெயித்திருந்தால் மட்டையாடியிருப்பேன் என்று சொன்னர்.

எனவே டெல்லி அணி, லக்னோ அணியை மட்டையாடச் சொன்னது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.

அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் எய்டன் மர்க்ரம் (13 பந்துகளில் 15 ரன்), மிட்சல் மார்ஷ் (36 பந்துகளில் 72 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) என அதிரடியாக விளையாடி, 15ஆவது ஓவரில் பூரன் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 169ஆக் இருந்தது.

13ஆவது ஓவரை ஸ்டப்ஸ் வீச வந்தபோது நிக்கோலஸ் பூரன் (0,6,6,6,6,4) நாலு சிக்சர், ஒரு போர் அடித்து தூல் கிளப்பினார்.

அதன் பிறகு வந்த வீரர்களால் இவர்களைப்போல ஆட முடியவில்லை. டேவிட் மில்லர் (19 பந்துகளில் 27 ரன்) மட்டும் ஏதோ சொல்லும்படி ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

210 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணி இரண்டு ஓவர்கள் முடிவதற்குள் மூன்று விக்கட்டுகளை இழந்தது. ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (1 ரன்), அபிஷேக் போரல் (பூஜ்யம் ரன்) சமீர் ரிஸ்வி (4 ரன்) என மூவரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

ட்யூபிளேசிஸ் (18 பந்துகளில் 29 ரன்) மற்றும் அக்சர் படேல் (11 பந்துகளில் 22 ரன்) இருவரும் டெல்லி அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆடினர். 12ஆவது ஓவரில் 102 ரன் மட்டுமே எடுத்திருந்த டெல்லி அணி, அதன் பின்னர் கியரை மாற்றி வேகமாக ரன் எடுக்கத் தொடங்கியது.

ஓவர் 13இல் 15 ரன், 14இல் 17 ரன், 15இல் 15 ரன், 16இல் 20 ரன், (17இல் 3 ரன்), 18இல் 17 ரன், 19இல் 16 ரன், 20இல் 7 ரன் என மொத்தம் 109 ரன் களை கடைசி 7 ஓவர்களில் டெல்லி அணி எடுத்தது.

ஸ்டப்ஸ் (22 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) விப்ராஜ் நிகம் (15 பந்துகளில் 39 ரன்) எடுத்தனர். இதனால் 19.3 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது

டெல்லி அணியின் மட்டையாளர், அஷுத்தோஷ் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

kashmir bahalkam terrorist attack - 2026

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித் தனமாக சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பஹல்காம் (காஷ்மீர்) பகுதியில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அடையாள அட்டை காட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர், அவர்கள் கால்சட்டை அகற்றுமாறு கூறி, முஸ்லிம்கள் அல்ல என்று உறுதி செய்யச் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகே அவர்கள் உயிர் பறிக்கப்பட்டது.

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம் பகுதியில் சுற்றுலா பயணிகள் குழுமியிருந்த போது, இன்று மதியம் 2:30 மணி அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் இ தொய்பாவின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்தச் சம்பவத்தில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். காயமடைந்தவர்களைக் கண்டு, உறவினர்கள் கதறி அழுதனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் உடனடி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், சௌதி அரேபியாவில் இருக்கும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலையும் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்குமாறும், அமித் ஷாவை சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமித் ஷா உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டி.ஜி.பி., உட்பட ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள், காணொளி வழியில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமருடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகர் கிளம்பி சென்றார். அங்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

இந்நிலையில், இந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இது கண்டனத்துக்குரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது. மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்தக் கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சௌதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்புவதாகவும், இன்றிரவு இரண்டு மணிக்கு தில்லி திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.