ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய போது தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் குடும்பத்துடன் சென்று அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவர்கள் இருவர் உயிருக்கு போராடிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிளஸ் ஒன் மாணவன் ஒருவார சிகிச்சைக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் தனது உயிரை காப்பாற்றிய சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்று நன்றியை தெரிவித்தார். நிலைய அலுவலர் நாகராஜன் முதலுதவி செய்த சரவணன் மற்றும் மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை, உசிலம்பட்டியில் ஆப்ரேசன் சிந்தூர் மூலம் நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவித்து, பாஜக மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் மூவர்ண கோடி பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர வைத்து நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பாஜக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து துவங்கிய இந்த பேரணியை பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்ட செயலாளர் தீபன் முத்தையா, தொழில் முனைவோர் பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் துவக்கி வைத்து மதுரை ரோடு, தேவர் சிலை வழியாக தேனி ரோடு முருகன் கோவிலில் நிறைவுற்றது.
இப்பேரணியில், பாரத தாய் மற்றும் நேதாஜி வேடமிட்டு பேரணியில் நடந்து வந்த இரு குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மதுரை மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு , பாரத பிரதமருக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து கோசங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழகம் காவி நாடு அல்ல திராவிட நாடு என வழக்கம் போல பிரிவினையை தூண்டி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்! ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தைப் போற்றுகின்ற மாநிலம் தமிழகம்! என்று இந்து முன்னணிஅமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று (17/05/2025) நடந்த “மத யானை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இது காவி நாடு அல்ல திராவிட நாடு என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தினுடைய ஆன்ம பலமே ஆன்மீக பலம் தான் என்பதை முதல்வர் அவர்கள் உணராமல் இவ்வாறு பேசியிருக்கிறார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழகம். அப்படிப்பட்ட திருக்குறள் ஆன்மீகத்தை தான் பறைசாற்றுகிறது.
திராவிட நாடு என்பது ஒரு மாயை தானே தவிர அது உண்மையல்ல. திமுக ஆரம்ப காலம் முதலே திராவிடம் என்ற மாயையை கையில் எடுத்து தமிழகத்தில் நாத்திகம் என்ற பெயரில் இந்து விரோதம் தான் பேசி வருகிறது. இந்து மத இதிகாசங்களையும் இந்து மத கடவுள்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் பேசியதும் தி.மு.க தலைவர்களே.
தேர்தல் நேரத்தில் மொழி பிரிவினையைப் பேசி தமிழகத்தில் தேசிய சிந்தனையை எதிர்க்கும் நோக்கோடு செயல்பட்ட கட்சி திமுக. காவியை எதிர்ப்பதாக சொல்லி திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார் முதல்வர்.
காவி என்பதை ஒரு கட்சியினுடைய அடையாளமாக ஸ்டாலின் அவர்கள் பார்க்கிறார். ஆனால் காவி என்பது தியாகத்தின் அடையாளம். சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் என வாய் கிழிய பேசும் திமுகவினர் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் ஆன்மீகம் தான் போதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழகத்தில் தான் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி இன்னும் பலவிதமான பக்தி இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறது.
பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன. ஆன்மீகத்தோடு பின்னிப்பிணைந்த கலாச்சாரமும் பண்பாடும் தமிழகத்தில் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் அறியாத திராவிட மாடல் அரசு ஆன்மீகப் பெரியோர்களான ஔவை பாட்டி, அருள் பிரகாச வள்ளலார், திருவள்ளுவர் ஆகியோர் நெற்றியில் இருந்த இந்து மத அடையாளங்களை அழித்து தங்களது இந்து விரோத போலி நாத்திக கருத்தைத் திணித்தது. அது மட்டுமல்லாமல் சனாதனத்தை அழிப்பேன் என திமுக தலைவர்களை பேச வைத்தது.
திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பை குறிக்கும் சொல்தானே தவிர அது இனத்தை, மொழியை குறிப்பதல்ல. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் குறிக்கும் இந்த திராவிடம் என்ற சொல் தமிழனின் மாண்பை மறைத்து ஆங்கிலேயன் மேற்கத்திய நாகரிகத்தை திணிக்கும் கோட்பாடு என்பதுதான் நிதர்சனமான உண்மை.
திராவிடம் என்று உங்களால் வரையறுக்கப்பட்ட அண்டை மாநிலங்கள் ஆன கேரளாவிலோ கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ திராவிடம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதே இல்லை. திமுக தங்களது சுய லாபத்திற்காக இந்து மதத்தை அழிக்கும் நோக்கோடு இது காவி நாடல்ல என பேசி வருகிறது . தேசிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மாணவர்களும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி, தாய்மொழி வழி கல்வியை இலவசமாக தருவதை உறுதி செய்கிறது. மேலும் பிற மொழிகளையும் கற்கவும் வாய்ப்பு தருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள வலியுறுத்துகிறது.
இதுநாள் வரை தமிழக மாணவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் சரித்திரத்தை அறிய விடாமல் முகலாய ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை தான் திணித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று தமிழ் மன்னர்கள் ஆளுமையை வரலாற்றை படிக்கும் வாய்ப்பை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி தருகிறது. அதை சகிக்க முடியாமல் தேசிய கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறுவது அபத்தத்திலும் அபத்தம்.
திராவிட மாடல் தமிழ் வளர்த்த லட்சணம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தவர்கள் வெறும் எட்டு நபர்கள் மட்டுமே. ஆனால் ஆங்கில மொழியில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் மிகப் பலர் அந்த வகையில் திராவிடம் தமிழை வளர்த்ததா? அல்லது ஆங்கிலத்தை திணித்துள்ளதா? என்பதை அறிய முடிகிறது.
தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசும் பொழுது சம்பந்தமே இல்லாமல் காவி என்ற புனித வார்த்தையை ஏதோ தீண்டாத வார்த்தை போல தமிழக முதல்வர் சித்தரித்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை பார்த்து முதல்வர் அவர்கள் அச்சத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். பல ஆன்மீகவாதிகளும் ரிஷிகளும் முனிவர்களும் தேசியத்தை உயிரெனக் கொண்ட வ.உ.சி., மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணிய சிவா இன்னும் பல தேச பக்தர்களும் அவதரித்த பூமி தமிழகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அனைத்து மதத்தினரின் வாக்குகளை வாங்கிக் கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் காழ்புணர்ச்சியோடு இது காவி நாடு அல்ல என பேசி இருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தனது பேச்சினை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது
எப்போதெல்லாம் திமுகவின் ஊழலும் லஞ்சமும் அம்பலபடுத்த படுகிறதோ அப்போதெல்லாம் திராவிடம், வடக்கு தெற்கு, தமிழ் இந்தி என வாய்க்கு வந்த படி பிரிவினை பேசுவது திமுகவின் வாடிக்கை
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை மற்றும் துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் அமலாக்க துறை சோதனை என்றவுடன் திமுகவின் லஞ்சம் ஊழல் அம்பலப்படுவதை திசை திருப்ப முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள்..
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லுரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை/இளநிலை (UG)பாடப்பிரிவுகள் அரசு உதவிபெறும் பிரிவு (Aided courses)மற்றும் சுயநிதி பிரிவில் (self finance courses) விண்ணப்பித்த மாணவியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் அரசு நிர்ணயித்த இட ஒதிக்கீட்டின் படி 21-05-2025 முதல் 22-05-2025 வரை பாடவாரிய நேர்முகதேர்வு கல்லுரி கலையரங்கத்தில் நடைபெறும்.
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் UG-முதலாமாண்டு சேர்க்கைக்கு மாணவியர்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.05.2025, மாலை: 5.00 P.M வரை..
மாணவிகள் கல்லூரியில் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏதுவாக சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.. சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : *19.05.2025 மாலை: 5.00 P.M வரை..
Selection list 20-05-2025 முதல் கல்லூரி website இல் பிரசுரிக்கப்படும்.
சேர்க்கை விபரங்களுக்கு உடனே தொடர்புகொள்ளவும்:- செல் : 9442081290 / 9715029454
பயந்துட்டீங்களா மிஸ்டர் பெரியண்ணன்! வல்லரசு நாடுகள் என்ற பெயரில் உலக பெரியண்ணனாக நீங்கள் இருந்ததை, உங்கள் ஆயுதங்கள் தான் தலை சிறந்த போர் ஆயுதங்கள் என்று உலகை இது நாள் வரை நம்ப வைத்து இப்போது அது பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலால் பஸ்பமாகி, அமெரிக்க சீன துருக்கி ஆயுதங்கள் வெறும் தகர டப்பா தான் என்று நிருபணமாகி விட்டதால், அதிர்ந்த வெளிப்பாடு – உங்களின் இந்தியாவில் முதலீடு வேண்டாம் என்ற வயிற்றெரிச்சலின் கூவலால் உள்ளுக்குள் இருக்கின்ற பயம் தெரிகின்றது!
ட்ரம்ப் ஐயா .. உலகின் விஸ்வ குருவை நீங்கள் கட்டிப் பிடித்து எனது நண்பர் மோடி என்று சொல்லும் போதே எங்கள் பிரதமர் மோதி உஷாராகி விட்டார் .
ஏனெனில் உலக வரலாற்றில் உங்கள் நாட்டின் முதுகில் குத்தும் பச்சோந்தித்தனம் பலமுறை பல வகைகளில் வெளிப்பட்டு இருப்பதை அறியாதவரா எங்கள் பிரதமர்?
உங்களின் இரட்டை கோபுரங்கள் நசுக்கப்பட்டு உங்கள் நாட்டையே கலங்க வைத்த பயங்கரவாதி பின்லேடனைப் பிடிக்க நீங்கள் பயங்கரவாத பாகிஸ்தான் நாட்டிற்குள்ளேயே ராணுவத்தை அனுப்பி கள்ளாட்டம் ஆடி பின்லேடனை போட்டுத் தள்ளிய போது இருந்த பழிவாங்கும் வெறி எங்கள் பிரதமரிடம் இருக்கக் கூடாதா?
26 பெண்களின் கணவர்களை கண் முன்னே சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள், “போய் உங்கள் மோடி கிட்ட சொல்லு” என்று கொக்கரித்த போதே எங்கள் பிரதமர் இனி உலகில் பயங்கரவாதிகளை அழிக்க இந்தியா தான் முன்னணி வகிக்கும் என்பதை தன் சிந்தூர் தாக்குதல் மூலம் நிருபித்தார். இப்போது உங்கள் ஆயுதங்களின் தர லட்சணங்களை வெளிக் கொணர்ந்தது கண்டு உலக நாடுகள் அமெரிக்கா சீனா பூச்சாண்டித்தனம் இனி செல்லுபடி ஆகாது என சிரிக்கின்றனர். இந்தியாவை இந்தியப் பிரதமரை இந்தியாவின் ராணுவ பலத்தை கண்டு வாயடைத்து வியக்கின்றனர்.
மேக் இன் இந்தியா ஆயுதத் தயாரிப்பை வாங்க வரிசை கட்டி நிற்க முந்தினால் உங்கள் கதி அதோ கதி என பேஜாராகி பீதியில் கண்டபடி உளறி அறிக்கை விடுவதில் இருந்தே அமெரிக்க நம்பகத்தன்மை லட்சணம் சந்தி சிரிக்கிறது .
இதில் அண்டை நாடு சீனா குள்ளநரி பயங்கரவாத பாகிஸ்தானோடு கள்ள உறவாடி இந்தியாவை எப்படி எப்போது நசுக்கலாம் என்று கண்ட கனவு சிந்தூர் அதிரடி தாக்குதலால் மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு உள்ளுக்குள் கலங்கி பீதியாகி உங்களோடு சமரசமாகி சித்து வேலை செய்கிறது .
இந்தியா, ஞானிகள் யோகிகள் வாழ்ந்த தர்மத்தின் வழி நடக்கும் நாடு. ஒரு காலத்தில் தான் அடிமையாக்கி வைத்திருந்த நாடு இன்று தன்னையே பின்னிற்கு தள்ளி வளர்ந்து வருவதை உங்களால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது உங்கள் உளறல்கள் மூலம் தெரிகின்றது .
செய்த வினை செய்வினையாகி தன்னையே தாக்கி அழிக்கும் என்பதை உலகிற்கு அதர்மத்திற்கு எடுத்துச் சொன்ன நாடு எங்கள் இந்தியா .
எக்காலத்திலும் எந்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தியதில்லை எங்கள் பாரதம் . வலிய போரைத் திணித்ததில்லை. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையாகிய காலத்தில் இருந்து 78 ஆண்டுகளாக தலைகனத்துப் போன மதவெறியில் ஹிந்துக்களை பாகிஸ்தான் வாழ விடவில்லை என்பதற்கு அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாட்சி என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை.
இதை உண்மையாக கண்டிக்காமல் வெளியே பொய்யாகக் கண்டித்து உள்ளே ஆயுதங்களை கொடுத்து உறவாடும் உங்கள் அரசியல் சூழ்ச்சி எத்தனை நாளைக்கு தான் ஜெயிக்கும்?
அதர்மத்தை அடக்கம் செய்து தர்மத்தை வாழ வைக்க இந்தியாவால் மட்டுமே சாத்தியம் என்பதை சிந்தூர் நிருபித்து விட்டது . இனி இந்தியா தர்மத்தின் வழி நடப்பவரை மட்டுமே ஏற்கும் .
உள்ளிற்குள் குமறிப் பயனில்லை டிரம்ப், சீன அரசியல்வாதிகளே. இனி இந்தியா நிச்சயம் அடித்து ஆடும். தேசப்பற்றுள்ள எங்கள் பிரதமர் மோதியை உங்கள் சூழ்ச்சிகளால் ஒரு கூந்தலையும் அசைத்து பார்க்க முடியாது.
ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.
மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அவ்வாறாக, பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கும் பாகிஸ்தான் அரசு என்பதை அவர்களே இந்த உலகுக்கு மற்றொரு முறை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த வாரத்தில் நம் இந்திய பிரதமர் ஆதம்பூர் சென்று அங்கு உள்ள நம் படைவீரர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். உடனே பாகிஸ்தான் பிரதமர் ஷப்பா ஷெரிப் இதே போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு தானும் அதுபோலவே கலந்து கொள்ள சென்றார். விமானத்தில் அல்ல, தரை மார்க்கமாக. காரணம் விமான ஓடுதளம் அவ்வளவுக்கு சேதமடைந்திருந்தது. என்னென்னமோ நினைத்துக் கொண்டு சென்றவர் எள்ளும் கொள்ளும் வெடிக்க திரும்பினார்.
அங்கு ஒரு மலைப் பகுதி இருக்கிறதாமே, அந்த மலைப்பகுதியில் மீண்டும் ற்றைய தினம் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்கிறார்கள். ஏதோ ஒன்றின் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக இது இருக்கக்கூடும் என்கிறார்கள். சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது என மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் இவையெல்லாம் கட்டுக் கதைகள் என்கிறார்கள் அவர்கள்.
நம் நாட்டிலோ, அப்படியா அந்த மலைப்பகுதியில் தான் ஒளித்து வைத்து இருக்கிறார்களா? ஐயோ பாவம் என முடித்துக்கொண்டனரே தவிர, மற்ற எந்த ஒரு கேள்விக்கும் வாயே திறக்கவில்லை.
பிரெஞ்சு தயாரிப்பு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வந்த தகவல்களிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். நம் வசம் இன்றளவும் அந்த 36 விமானங்கள் பத்திரமாக இருக்கின்றன. அப்படி என்றால் சுடப்பட்ட விமானங்கள்? அது மிஃராஜ் 5 என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்! இதுவும் அதே பிரஞ்சு நிறுவன தயாரிப்பு தான், ஆனால் அது பாகிஸ்தான் பயன் படுத்தும் விமான ரகம். அப்படி என்றால்?
இதே ரகத்திலான மிராஜ் 2000 விமானங்கள் நம் இந்திய தரப்பிலும் பயன் படுத்தி வருகிறார்கள். கூடவே ஐக்கிய அரபு நாடுகளில், கட்டார் போன்றவற்றில் இருந்து பழைய விமானங்களை நம்மவர்கள் வாங்கி உதிரி பாகங்களுக்காக பயன் படுத்தி வருகிறார்கள். ஒரு வேளை இந்த விமானங்களில் ஏதேனும் ஒன்றை பாகிஸ்தான் மீது?! அதுவும் இல்லை.
ஏனெனில் பாகிஸ்தானிய மிஃராஜ் 5 ரகத்திலான விமானங்களின் ஏர்பேக் தனித்த ரகம். அதாவது அவசர கால பொறிமுறையாக விமானியோடும் விமானி இருக்கையோடும் வெளியே தூக்கி வீசப்படும் இவற்றில் உயிர் காக்கும் அவசர கால பாராசூட் இருக்கும். இது இளஞ்சிவப்பு மற்றும் கரும்பச்சை நிறத்தில் இருந்திருக்கின்றது. இது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மிஃராஜ் விமானங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்ட ரகம் என்பதை ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.
அப்படி என்றால், பாகிஸ்தான் தரப்பில் JF 17, F16 விமானங்களோடு இந்த மிஃராஜ் விமானங்களும் தாக்குதல் நடத்த ஆய்தமானதா என்றால் அதற்கு சரியான பதில் இல்லை.
இதில் F16 விமானங்கள் இரண்டு திசை தெரியாமல் பறக்க, அதாவது, திசை தெரியாமல் பறக்க, அவற்றை ஏதோ ஒன்று தாக்கியதில், ஒரு F16 விமானம் சேதமடைந்தது என்றனர். சீன தயாரிப்பு JF17 பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால் மிஃராஜ் பற்றி எந்த ஓர் இடத்திலும் எந்த ஒரு தகவலும் இல்லை.
அவசர கால வெளியேற்றம் நடந்த விமானி இருக்கையைக் கண்டெடுத்து இருக்கிறார்களே தவிர விமானத்தின் கையளவு பாகங்கள் பற்றி எவரும் வாயே திறக்கவில்லை.
வானில் வைத்தே பாகிஸ்தானிய அவாகஸ் எனப் படும் ஏர்போர்ன் வார்னிங் சிஸ்டம் விமானத்தை நம் இந்திய தரப்பில் முற்றிலுமாக அழித்திருக்கிறார்கள். இது வானில் வைத்தா அல்லது தரையில் நிலை நிறுத்தி வைக்கப் பட்ட நிலையிலா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த விமானங்கள்தான் போர்க் காலத்தில் களத்தில் செயல்படும் கட்டளைத் தளம் என்பர். தவிர இதுவே மற்ற போர் விமானங்களின் ஒருங்கிணைக்கும் உயிர் நாடி என்பர். இதனை எட்டாம் தேதி இரவு இந்தியா தாக்கி இருக்கிறது.
சரி, அப்படி என்றால் மிஃராஜ்? இந்த மிஃராஜ் விமானங்களில் தான் அணு ஆயுத தாக்குதல் நடத்த கொண்டு செல்ல ஏதுவாக சிலவற்றை செய்து வைத்திருந்திருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அந்த மலைப்பகுதியின் நுழைவு வாயிலை தாக்கியவர்கள், மலையையும் தாக்கி விட்டு விமான நிலைய ஓடுதளம் மற்றும் அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களையும் தாக்கி இருக்கக் கூடும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!
எப்படி இதைச் சொல்கிறார்கள் என்று பார்த்தால், முதல் நாள் இரவு அதாவது எட்டாம் தேதி தாக்குதல் நடந்த போது ஒரு அவாகஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். அடுத்த நாள் மதிய வேளையிலேயே பாகிஸ்தான் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பது நாம் அறிந்ததே. அந்த சமயத்திலோ அல்லது அன்று இரவிலோ தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றோர் அவாகஸ் விமானத்தை பிரமோஸ் பயன்படுத்தி வீழ்த்தி இருக்கக்கூடும் என்கிறார்கள்.
சரி இது பற்றி பாகிஸ்தான் என்ன சொல்கிறது? அவர்கள் நிச்சயமாக பிரமோஸ் பயன்படுத்தியே தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தரையில் இருந்தா அல்லது விமானத்தில் இருந்தா என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என சொல்லி இருக்கிறார்கள்.
தலையில் அடித்துக் கொண்டு இருக்கிறது மேற்கு உலகம். அவர்கள் இதை ரசிக்கவில்லை. கூடவே பாகிஸ்தான் வான் பாதுகாப்பு மண்டலம் எந்த லட்சணத்தில் உள்ளது, என்பதை இப்படி பட்டவர்த்தனமாக உளறிக் கொட்டி இருக்கிறார்களே என்ற கவலை அவர்களுக்கு!
இதில் ஐரோப்பிய ஊடகம் ஒன்றில் மட்டுமே, ஏற்கெனவே இந்தியத் தரப்பில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை பாகிஸ்தானிய பகுதியில் தவறுதலாக அனுப்பிய சம்பவத்தை தொடர்பு படுத்தி பேசியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ஒன்று நிச்சயம். மலை தாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எனர்ஜி சிஸ்டம்ஸ் விமானம் ஒன்று விழுந்தடித்துக்கொண்டு பறந்து வந்திருக்கிறது. IMF நிதி கொடுத்து இருக்கிறார்கள். போரான் எனும் தனிமத்தை எடுத்துக் கொண்டு எகிப்திய விமானமும் வந்திருக்கிறது. இது அணுக் கசிவை தடுக்க பயன்படுகின்றன என்பதை கூடுதல் தகவல்களாக நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை வந்து உடனடியாக சரி என்று நம் இந்தியத் தரப்பில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு தாக்குதலும் நடக்கவில்லை என நம் தரப்பில் சொல்லியும் இருக்கிறார்கள்.
அவ்வளவுதான் விஷயம்! ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சிந்து நதி நீர் கேட்டு கடிதம் எழுதி வருகிறார்கள். வாகா எல்லையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர். சமாதான உடன்பாடு ஏதேனும் செய்ய முடியுமா என பல அரபு நாடுகள் ஊடாக அலை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் நம் இந்திய தரப்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை என ஒன்று நடந்தால் அது, எங்கள் இந்திய நிலப்பரப்பில் இருந்து எப்போது பாகிஸ்தான் காலி செய்யப் போகிறது என்பது பற்றியதாக மட்டுமே இருக்கும் என கிலி ஏற்படுத்தி வைத்து இருக்கிறார். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
அவரளவில் ஆக்ரமிப்பு காஷ்மீர் எனச் சொல்லக்கூட அவர் தயாரில்லை எனத் தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார். அது இந்திய நிலப்பரப்பு அவ்வளவே! அங்கிருப்பவர்கள் ஏற்கெனவே இந்தியப் பிரஜைகள் தான் என்கிறார் அவர்.
அப்படி என்றால், ஆதார பூர்வமாக, அதிகார பூர்வமாக அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கு எந்த ஒரு சான்று ஆவணங்களும் இதுவரை இல்லை. ஒரு வேளை இனி பாகிஸ்தான் வழங்க முற்பட்டால் ஏவுகணை பாயும் என்கிறார். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!
திருப்பரங்குன்றம் பகுதியில், நடிகர் சூரியின் ரசிகர் மன்ற கொடி பால்குடம், ட்ரம் செட் உடன் மாமன் திரைப்பட திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்.
மதுரையில் பிறந்து திரையுலகில் வளர்ச்சி பெற்று கதாநாயகனாக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரிக்கு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ராஜ்கிரன் ஐஸ்வர்ய லட்சுமி உடன் நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை ஒட்டி, மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
திருநகரில் உள்ள கலைவாணி திரையரங்கு வாசலில் நடிகர் சூரியின் பிளக் யிற்கு பெண் ரசிகைகள் கொண்டு வந்த பால் குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களை தூவி தங்கள் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நான்கு படம் முடிந்து ஐந்தாவது படம் கதாநாயகன் நடித்த நிலையில், அகில இந்திய சூரி தலைமை ரசிகர் மன்றம் கொடியுடன் ஊர்வலமாக வந்தது பேசும் பொருளாகியுள்ளது .நடிகர் சூரி தனக்காக ஏதோ அடித்தளம் அமைக்கிறார் என, பரவலாக பொதுமக்கள் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஆதரவோடு நான்கு பயங்கரவாதிகள் சென்ற ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமிற்கு வந்து 25 சுற்றுலாப் பயணிகளை – அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று ஊர்ஜிதம் செய்த பின்னர் – படுகொலை செய்தனர். சீறி எழுந்தது மோடியின் இந்தியா.
தனது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா மின்னல்வேகத் துல்லியத் தாக்குதல்கள் நடத்தியது. அங்கு செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது. சில பாகிஸ்தான் ஊர்களின் வான்வெளிப் பாதுகாப்புக் கவசங்களை நொறுக்கிவிட்டு, அந்நாட்டின் 11 ராணுவ விமானத் தளங்களின் ஓடுபாதைகளையும் இந்தியா உருக்குலைத்தது.
பாகிஸ்தானின் எதிர் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியாவுக்குச் சில வருந்தத்தக்க உயிரிழப்புகள் ஏற்பட்டன. வேறு பெரிய பாதிப்பில்லை.
ஒரு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் காலத்திற்குள், நான்கே நாட்களில் போரைச் சுத்தமாக முடித்து பாகிஸ்தானைப் போர் நிறுத்தம் கேட்க வைத்தது இந்தியா. அந்த நாட்டை முடக்கிய பிரதமர் மோடியின் பேரும் புகழும் இந்தியர்களிடம் இப்போது அதிகரிக்கும். ஏனென்றால் உலகறிய அவர் தலைமையில் கிடைத்த பிரும்மாண்ட வெற்றி அது. பின்னாளில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி வாலாட்டினால், இந்தியா ஓங்கித் திருப்பி அடிக்கும் என்பது பாகிஸ்தானின் புதிய உள்ளுணர்வு.
முன்னதாக, பஹல்காம் படுகொலைகள் நடந்த இரண்டாவது நாள் பீஹாரில் பேசிய பிரதமர் மோடி, “கொலையாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடரப் படுவார்கள். அவர்களையும் அவர்களின் பின்னால் இருப்பவர்களையும் தேடிப் பிடித்து தண்டிப்போம்” என்று சூளுரைத்தார். கொலையாளிகளை ஏவிய பாகிஸ்தான் கதறக் கதற தண்டிக்கப் பட்டுவிட்டது. கொலை பாதகர்கள் தேடப் படுகிறார்கள்.
நமது எதிர்க் கட்சி அரசியல் தலைவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது?
பிரதமர் மோடி பொருத்தமாகப் பாகிஸ்தானைப் பழி வாங்குவார், அதற்குத் தேவையான தீவிரமும் மன உறுதியும் அவரிடம் உண்டு, தனது பதில் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஏற்கச் செய்யும் ஆற்றலும் கொண்டவர் மோடி, என்பது இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்திற்கும் தெரியும்.
மோடியை எதற்கும் எப்போதும் எதிர்க்கும் எதிர்க் கட்சிகள், பஹல்காம் விஷயத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பதாக அறிவித்தன. இப்போது மோடியை எதிர்த்துவிட்டுப் பின்னால் நாம் தனிமைப்படக் கூடாது, ஜாக்கிரதையாக இருப்போம், என்ற எண்ணமும் எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. சில கசக்கும் கற்பனைகள் இந்த உண்மையைப் பளிச்சென்று காட்டும்.
பஹல்காம் படுகொலைகள் நிகழ்ந்த நாளில் மோடிக்குப் பதிலாக, நம் தலைவிதியாக ராகுல் காந்தி பிரதமராக இருக்கிறார், அல்லது இன்னும் திகிலாக மம்தா பானர்ஜிதான் அப்போதைய பிரதமர், அல்லது படு பயங்கரமாக மு. க. ஸ்டாலின் அன்றைய பிரதமர் என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் எவ்விதம் பேசுவார்கள்? மோடி மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராக தில்லாகக் குரல் எழுப்புவார்களா? அப்படி நடக்காது.
ராகுல் காந்தி இப்படி உளறுவார்: “எனக்கு முந்தைய பத்தாண்டு மோடி அரசு, பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், ஓபிசி மக்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்கவில்லை, அதன் விளவை நாம் பஹல்காமில் பார்த்தோம். இனி பாஜக தனியாகவோ கூட்டணியாகவோ மத்தியில் ஆட்சிக்கு வராது என்று நமது நண்பன் பாகிஸ்தானுக்குத் தெரிவிப்போம். அவர்களுடன் நட்பை வளர்ப்போம்.”
மம்தா பானர்ஜியின் பிதற்றல் இப்படிப் போகும்: “பாஜக தான் நான்கு நபர்களை பஹல்காமுக்கு அனுப்பி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் பற்றிக் கேட்க வைத்துப் பின் கொலைகளை அரங்கேற்றியது. இதற்காகப் பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால், அதன் விளைவாக நம் நாட்டில் கலவரங்களை உண்டாக்கி எனனைப் பிரதமர் பதவியிலிருந்து இறக்கி விடலாம் என்பது தானே பாஜக-வின் கனவு? அது நடக்காது. மக்கள் என் பக்கம்.”
மு. க. ஸ்டாலினின் குழந்தைப் பேச்சு இப்படி இருக்கலாம்: “மோடி அவர்களே! என் அன்பிற்குரிய சிறுபான்மையினரும் மற்றவர்களும் இந்தியாவில் ஒருவருக்கொருவர் இன்முகத்துடன் சகோதர பாசத்துடன் பழகி வருவது உங்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காஷ்மீரத்தில் சில நிகழ்வுகள் நடந்தால், நீங்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலாமா? எனது அருமை நண்பர் பாகிஸ்தானின் ராணுவத் தளபதிக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்: இந்திய மக்கள் நன்மக்கள். நீங்கள் வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி பாகிஸ்தானுக்கே வேண்டும் என்றால், அதை இந்திய மக்கள் அன்பளிப்பாக உங்கள் நாட்டுக்கு வழங்கிட சம்மதிப்பார்கள் என்று நான் இந்த நேரத்தில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்!”
எதிர்க் கட்சிகளின் கூட்டணி இப்போது மத்தியில் ஆட்சி செய்தால், பஹல்காம் படுகொலைகளுக்காகப் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கும் தைரியம் அவற்றில் ஒரு கட்சிக்கும் இருக்காது, முழு மனதும் இருக்காது. அந்தப் பயங்கரவாத நாட்டின் மீது வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தேவையான நெஞ்சுரமும் தலைமைக் குணங்களும் எதிர்க் கட்சிகளிடம் கிடையாது. ஆனால் மோடி வேறு மாதிரியான பிரதமர் – இது எதிர்க் கட்சிகளே அறிந்தது.
பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவை முன்னதாகவே சொல்லி வைத்தால், இப்போதே அவர் பின்னால் நின்றால், சில கைதட்டல்கள் நமக்கும் வந்து சேரும் – அல்லது பரவலான வசவுகளாவது வராது – என்பது பல முக்கிய எதிர்க் கட்சிகளின் எண்ணம். அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள்.
2020-ம் ஆண்டு சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல் செய்த போது, அப்போது மோடியைத் தொடர்ந்து சீண்டியவர் தானே ராகுல் காந்தி? சீனாவுக்கு எதிரான நமது அன்றைய ராணுவ நகர்வுகள் மிதமாக, கமுக்கமாக நடைபெற வேண்டி இருந்தன. அப்போது தேச நன்மையை உயர்த்திப் பிடிப்பதும், மத்திய அரசின் பின்னால் நிற்பதும் ராகுல் காந்திக்கு அரசியல் லாபம் தருவதாகத் தோன்றவில்லை. இப்போது மட்டும் அவருக்கு எல்லாவற்றையும் விட தேச நலன் முக்கியம் என்று நாம் கருத முடியுமா? பிற எதிர்க் கட்சித் தலைவர்களும் அப்படித்தானே?
பாகிஸ்தான் ராணுவம் தனது படைபலத்தையும் ஆயுதங்களையும் வைத்து, அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு உயிர்ப் பயத்தை உண்டாக்கி, ராணுவம் முன்னதாகத் தேர்ந்தெடுத்தவர்கள் தான் தேர்தலில் ஜெயித்து எம்.பி-க்களாகவும் பிரதமராகவும் வரமுடியும் என்று ஒரு நடைமுறை விதியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ராணுவ பயங்கரவாதம். அந்த ராணுவம், சீருடை இல்லாத குட்டி பயங்கரவாதிகளைத் தொடர்ந்து தனது நாட்டில் உருவாக்கி வருகிறது. அந்தக் குட்டி பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பிடிக்காத லோக்கல் அரசியல்வாதிகளின் கதையை முடிக்க உதவுவார்கள், இந்தியாவில் அவ்வப்போது படுகொலைகளும் செய்தார்கள்.
நமக்கு இப்படியான, நம் வசமுள்ள காஷ்மீரையும் அபகரிக்க நினைக்கும், ஒரு அண்டை நாடு. இதைத் தவிர, சிறுபான்மை மக்களிடம் தாஜா அரசியல் செய்து, முறைகேடுகளில் மூழ்கி, தேச நலனையும் பாதுகாக்காத, எதிர்க் கட்சிகள் நிரம்பியதுதான் நமது நாடு. இவர்களுக்கு இடையில் மோடி பைத்தியம் பிடிக்காமல் தேர்தலில் போட்டியிடுகிறார், பிரதமர் ஆகிறார், இந்தியாவையும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பெருமைப் படுத்துகிறார். எப்படி அவரால் முடிகிறது?
பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ? வேறு எப்படி நினைத்தாலும் நமது ஜனநாயகம் இடிக்கிறதே!
Author: R. Veera Raghavan Advocate, Chennai veera.rvr@gmail.com https://rvr-india.blogspot.com
திரைப்படப் பாடலாசிரியர்கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சிங்காரவேலனே தேவா என்ற பாடலை முணுமுணுக்காத தமிழனே கிடையாது. சாந்தா ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் என்ற வசனம் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்காத இடமே இல்லை. பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் இந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க தங்களது மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுப்பார்கள். கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவ, மாணவியர் இதனைப் பாடாமல் இருக்க மாட்டார்கள். சமீபத்தில் நூறு கலைஞர்கள் இணைந்து இந்தப் பாடலைப் பாடினார்கள். அது யூட்யூபில் உள்ளது. இந்தப் பாடலை இயற்றியவர் கு. மா. பாலசுப்பிரமணியம் அவர்கள்.
அந்தக் காலத்தில் பாட விரும்பியவர்கள் அனைவரும் ஒரு பாடலை கண்டிப்பாகப் பாட முயற்சி செய்திருப்பார்கள். அது “சித்திரம் பேசுதடி” என்ற சபாஷ் மீனா படத்தில் வரும் பாடல். இந்தப் பாடலின் வீடியோ இந்தி நடிகர்கள் ராஜேந்திரகுமார்-ஆஷா பரேக் ஆகியோரின் நடிப்பில் கூட கிடைக்கிறது. ராஜேஷ் கன்னா-ஷர்மிளா தாகூர் நடிப்பில் ஒரு வீடியோ உள்ளது. அந்த அளவிற்கு இந்த பாடலின் மீது அனைவருக்கும் ஒரு கிரேஸ். இந்தப் பாடலும் கு.மா.பா எழுதியதுதான்.
கு. மா. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறந்த திரைப்படப் பாடலாசிரியரும் தமிழறிஞரும் ஆவார். குமாபா., என்று திரையிசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.
குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம் ஆகிய இவர் 1920இல் திருவாரூர் அருகேயுள்ள வேளுக்குடியில் மாரிமுத்து கோவிந்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் தேவாரம், திருவாசகம், பக்திப் பனுவல்களை இசைக்கக் கூடியவராக இருந்தார். தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையின் காரணமாக இவரது தாயாரால் ஆறாம் வகுப்புக்குமேல் இவரைப் படிக்க வைக்க இயலவில்லை. இதன் பிறகு வேளாண் தொழிலாளராகவும், மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை, துணிக்கடை போன்றவற்றில் வேலை செய்தார். பொட்டலம் மடிக்கும் வேலையின்போது ஓய்வு நேரத்தில் பழைய புத்தகங்களைப் படித்து வந்தார்.
இதனால் எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு சிறுகதைகளை எழுதத் துவங்கினார். எழுத்தாளர்கள் கா.மு.ஷெரீப், மேதாவி என்னும் கோ.த. சண்முகசுந்தரம் ஆகியோர் இவரின் சொந்த ஊரைச் சேர்ந்த இளமைக்கால நண்பர்கள். இவர் திருமதி ஜெயலட்சுமியை 1947இல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவர்களில் திரு கு.மா.பா. கபிலன் எனது நண்பர்.
பத்திரிகையாளர்
சி.பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து வெளியிட்ட தமிழன் இதழின் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் கோவையில் திருமகள் இதழில் பணியாற்றினார். 1945இல் கொழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1947இல் நாடு திரும்பியவர் தமிழன் குரல் என்ற மாதம் இருமுறை இதழை நடத்தி இழப்பை சந்தித்ததால் அதனை விற்றுவிட்டு, சென்னைக்கு வந்து ம.பொ.சியின் தமிழ் முரசு இதழில் துணை ஆசிரியராக இணைந்தார்.
அக்கால கட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் தமிழாசிரியராக இருந்த திருவேங்கடம் என்பவர் இவரின் எழுத்தாற்றலைக் கண்டு இவருக்கு மரபுக்கவிதைகளை எழுதக் கற்றுக்கொடுத்தார். இதன் பிறகு 1949ஆம் ஆண்டில் பாரதிதாசன் தலைமையில் கோவையில் நடந்த கவியரங்கில் தன் 28ஆம் வயதில் கலந்துகொண்டார்.
அரசியல் வாழ்க்கை
சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றினார். அக்கழகத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பாரதிதாசன் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
எழுத்தாளர்
ஏவிஎம் நிறுவனத்தின் கதை இலாகாவில் மாத ஊதியத்தில் இணைந்தார். அவர்களின் ஓர் இரவு படத்தின் உதவி இயக்குநராக ஆக்கப்பட்டார். அறிஞர் அண்ணா எழுதிய வசனங்களைப் படி எடுத்தல் இவரது பணி. படி எடுக்கும்போது தன்னார்வத்துடன் ஒரு காட்சிக்கு இவர் ஒரு பாடலை எழுதினார். “புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே” என்ற அந்தப்பாடல் படக்குழுவுக்குப் பிடித்துவிட்டதால் அது பாடல் பதிவு பெற்று, படத்தில் இடம் பெற்றது.
1962ஆம் ஆண்டில் கொஞ்சும் சலங்கை மற்றும் 1966இல் மகாகவி காளிதாஸ் திரைப்படங்களுக்கான திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதினார். மேலும் 1953 இல் பொன்னி, 1962இல் மடாதிபதி மகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதினார். ஓர் இரவு (1951), கோமதியின் காதலன் (1955) ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் வேலைக்காரன் (1952) திரைப்படத்திற்கு கதை மற்றும் பாடல்களையும் எழுதினார்.
எழுதிய சில திரைப்படப் பாடல்கள்
யாரடீ_நீ_மோகினி – (உத்தம புத்திரன், 1958) – சிவாஜி அவர்களின் நடனம், நடன மங்கையர்களின் நடனங்கள், இசை ஆகியவற்றைப் பற்றி பெரிதாகப் பேசப்படும் இப்பாடம் கு.மா.பா அவர்கள் எழுதியது.
காணா இன்பம் கனிந்ததேனோ, குங்குமப் பூவே கொஞ்சு புறாவே (மரகதம்) – குங்குமப்பூவே இடம்பெற்ற இப்பாடல் நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல் ஆகும்.
அன்பே என் ஆராவமுதே வாராய்
அமுதைப்_பொழியும்_நிலவே (தங்கமலை ரகசியம்)
மாசிலா_நிலவே_நம்_காதலை (அம்பிகாபதி)
நெஞ்சினிலே நினைவு முகம் (சித்ராங்கி)
சிரிக்கத் தெரியுமா (குழந்தைகள் கண்ட குடியரசு, 1960)
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
மீனம்
இதுவரை மூன்றில் இருந்த ராசிநாதன் குரு இனிவரும் 11-05-2025 முதல் சுகஸ்தானத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது தடைபட்ட காரியம் செயல்படதுவங்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்வது கூட்டு தொழிலில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். பேசுவது போல நடக்காமல் உடன் இருந்து சிலர் மாறுவது மனவருத்தத்தை தரும். உடல் நலனின் அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். நரம்பு சார்ந்த பிரச்சனை உண்டாகும். வாகன வசதிகளை குறைத்துக் கொண்டு இருக்க வேண்டிவரும். அலைச்சல் அதிகரிக்கும்.
அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சில தடைகள் நீங்கி நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் சீக்கிரம் முடிவுக்கு வரும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது இனி முடிவுக்கு வரும். மலை போல இருந்த விடயம் பனி போல மறையும். எதற்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. குறை சொல்லி கொண்டிருந்தவர்கள் இனி அமைதி ஆவார்கள்.
விரைய சனியுடன் ராகு இணைவு பெறுவது வெளிநாடு செல்தல். வெளிநாடு தொடர்பு உருவாக்குதல். றினைவுக்கு வராத பல காரியம் நினைவுக்கு வந்து செயல்படதுவங்கும். மேலும் குரு விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் தேவையற்ற விரையம் குறைந்து நலம் பெறுவீர்கள். புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
அசையாத சொத்துகள் வாங்குதல் கட்டிய வீடு வாங்குதல் மூலம் சுப விரையங்கள் உண்டாகும். இதன் மூலம் உங்களின் பல நாட்கள் குறை நீங்கி வளம் பெறுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லா வகையி லும் செல்வாக்கு அதிகரிக்கும். குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 12-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம் |
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 – 07.30 மணிக்கு விநாயகர்கள் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அரிசி மாவில் சக்கரை கலந்து நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் வெற்றியை தரும்.