Home Blog Page 168

ஓணம் வந்தல்லோ… திருவோணம் வந்தல்லோ!

onam athappoo kolam - 2026
#image_title

கடவுளின் சொந்த தேசம் என்று கூறப்பட்ட கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை, இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை நேற்று அஸ்தம் நட்சத்திரம் பிறந்ததும் அத்தப்பூ கோலம் மலர, கோலாகலமாகத் தொடங்கியது.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திருவோணம் பண்டிகை கேரளா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருவோணம் பண்டிகை என்பது மகாவிஷ்ணுவின் அவதார தினமான ஆவணி மாதம் திருவோணத்தன்று ஆரம்ப காலத்தில் தமிழர்களால் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு மிகப்பெரிய பக்தி பூர்வமான விழாவாகக் கூறப்படுகிறது.

திருவோணத்தான் உலகாளும் என்பார்களே எனும் ஆழ்வாரின் வாக்குக்கு ஏற்ப, திருவோணம் பண்டிகை கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் அந்தக் காலத்தில் உலகளந்த பெருமாள் கோயிலில் தொடங்கி பிரபலமான மகாவிஷ்ணுவின் தலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தற்போது இந்தப் பண்டிகையானது கேரளாவில் வெகு விமர்சையாக திருவோணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்றும் மகாபலிச் சக்கரவர்த்தி வருகைக்காக வரவேற்றும் கொண்டாடப்படும் மிகப் பெரும் பண்டிகை என்றும் கேரளாவில் இந்தத் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

thiruvonam - 2026

திருவோணம் பண்டிகையின் வரலாறு!

இந்து புராணங்களின்படி, அசுரர் குலத்தில் பிறந்தாலும் ஸ்ரீ விஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்த பிரஹலாதனுக்கு, மகாபலி என்ற பேரன் இருந்தான். அவன் சுரர்களாகிய தேவர்களைத் தோற்கடித்து மூன்று உலகங்களையும் கைப்பற்றினான். அதனால் தங்கள் உலகை இழந்த தேவர்கள், மகாபலிக்கு எதிரான போரில் தங்களுக்கு உதவ விஷ்ணுவை அணுகினார்கள். ஆனால் மகாபலி தன் பக்தன் பிரஹலாதனின் வம்சம் என்பதாலும், அவன் வம்சத்தாரைக் காப்பதாக பிரஹலாதனுக்குக் கொடுத்த வாக்கையும் கருதியும், மகாபலி ஒரு நல்ல ஆட்சியாளராகவும் தனது பக்தராகவும் இருந்ததால் விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளை மறுத்துவிட்டார். எனினும் மகாபலி தவறு செய்யும் போது அவரைத் திருத்திப் பணிகொள்வதாக தேவர்களுக்கு வாக்களித்தார்.

மகாபலிக்கு சக்தி அதிகரித்ததால், கர்வம் கூடியது. தானே எல்லாம் என்ற கர்வம் ஏற்பட்ட நேரத்தில் அவரைத் திருத்திப் பணிகொள்ள வாமன அவதாரத்தை எடுத்தார் ஸ்ரீவிஷ்ணு. அந்நேரம் மகாபலி பெரும் செருக்குடன் ஒரு யாகம் செய்தார். அப்போது எவர் வந்தாலும் அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மகாபலியின் பக்தியை சோதிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட விஷ்ணு, வாமனன் என்ற குள்ள சிறுவனின் அவதாரத்தில் மகாபலியை அணுகினார்.

அரசன் மகாபலி, அந்தச் சிறுவனுக்கு தன்னால் இயன்ற அனைத்தையும் வழங்குவதாகக் கூறினார். ஆனால் வாமனச் சிறுவன் மறுத்து, ஒருவன் தனது தேவைகளை விட அதிகமாகத் தேடக் கூடாது என்றும், அவருக்குத் தேவையானது மூன்றடி நிலம் மட்டுமே என்றும் கூறினார். மகாபலி, சிறுவனின் விருப்பத்தால் ஆச்சரியப்பட்டாலும், அதை வழங்க ஒப்புக்கொண்டு நீரில் தாரை வார்த்து வழங்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் சிறுவனாக வந்த வாமனர் திடீரென நெடிய வளர்ந்து, நிலத்தையும் நீரையும் ஒரு காலால் மூடி, மற்றொரு காலால் வானத்தையும் மூடி, இப்போது தன் மூன்றாவது அடியை வைக்க இடம் தேட, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மகாபலி தன்னைத்தானே அவருக்கு வழங்க முன்வந்தார். அதனால் வாமனர் மகாபலியின் சிரத்தில் பாதம் வைத்து அவரைப் பாதாளத்தில் தள்ளி விட்டார். அதன் மூலம் இவ்வுலகை மக்களுக்கும், வானுலகை தேவர்களுக்கும் மீட்டுக் கொடுத்தார். ஆனால் மகாபலியின் பக்தியால் மகிழ்ந்த ஸ்ரீவிஷ்ணு, ஒவ்வோர் ஆண்டும் தனது நிலத்திற்குச் செல்ல வரம் அளித்தார். இவ்வாறு தான் மகாபலிக்கும் திருவோணத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதன்படி, மகாபலியின் மறு வருகை இந்த ஓணம் பண்டிகையைக் குறிக்கிறது!

இந்தப் புராண வரலாற்றின் படி, மகாபலி சக்கரவர்த்தி மலையாள தேசத்து மக்களை மலையாள புத்தாண்டு என அழைக்கப்படும் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் பிறந்தது முதல் திருவோணம் வரை பல்வேறு இடங்களில் பார்க்க வருவதாக மலையாள தேசத்து மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இதனால் அஸ்தம் நட்சத்திரம் பிறந்த நேற்று முதல் கேரளாவில் பல்வேறு கோவில்கள் மற்றும் பொது இடங்கள், வணிகத் தலங்களில் அத்தப்பூ கோலமிட்டு மன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவானது கேரளாவில் எர்ணாகுளம் அருகில் உள்ள திருப்புணித்துறையில் மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. பார்க்கும் இடமெல்லாம் அத்த பூக்கோலங்கள் வழியாக, மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது!

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், அச்சன்கோவில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் உட்பட முக்கிய கோவில்களில் திருவோணம் பண்டிகை விழாக்கள் முக்கிய முக்கியமான அத்தப்பூ கோலம் இடும் நிகழ்வு நடைபெற்றது.

எர்ணாகுளம் அருகில் உள்ள திருப்பூணித்துறாவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவில் உள்ளது. இங்கு தான் மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்டு பின் அவருக்கு அனுக்கிரகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இங்கே உலகளந்த பெருமாள் ஆகவும் மகாவிஷ்ணு இருப்பதாகக் கூறப்படுகிறது!

இக்கோவிலில் நேற்று அஸ்தம் பிறந்ததும் திருவோணத் திருவிழா தொடங்கியது. 10 நாட்களில் நடைபெறும் இந்தத் திருவிழா மிகப் பிரபலமானது. சபரிமலை குருவாயூர் உட்பட கேரளாவின் முக்கியக் கோவில்களில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று திருவோணம் பண்டிகை கொண்டாட்டத்தில் பக்தர்களுக்கு திருபுவன விருந்து 26 வகை பதார்த்தங்களுடன் பரிமாறப்படுவது முக்கிய நிகழ்ச்சியாகும்!

மாணிக்கவாசகரும் மஹாகணபதியும்!

sankarar thirumoolar vinayakar - 2026
  • கிருஷ்ணா ராமலிங்கம்

மஹா பெரியவா அருள் வாக்கு :

மாணிக்கவாசகர் அவருடைய திருவாசகத்திலே பிள்ளையாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் பிள்ளையார் ரொம்ப நெருக்கமா ஸம்பந்தப் பட்டிருக்கிறார்.

ரொம்ப பேருக்குத் தெரியாத கதை சொல்கிறேன். பழங்காலத்திலே பாண்டிய நாட்டிலேயிருந்து சோழ தேசம் போகிறதற்கு ஆவுடையார் கோவில் வழியாகத்தான் நல்ல சாலை இருந்தது.

மாணிக்கவாசகர் காலத்தில் ஆவுடையார் கோவிலுக்கு திருப்பெருந்துறை என்று பெயர். அங்கே வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஒரு சத்திரம் இருந்தது.

அதற்குப் பக்கத்தில் வானம் பார்க்க, அதாவது வரையில்லாமல், ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பார்.

வெயிலில் வந்த யாத்ரிகர்கள் ஒரு கூரையின் கீழ் ‘ரெஸ்ட்’ பண்ணிக் கொள்ளும் சத்திரத்துக்குப் பக்கத்திலேயே இப்படி அத்தனை வெயிலையும் தன் மேலே வாங்கிக் கொள்கிற ஒரு பிள்ளையார் !

இன்னும் சில இடங்களிலும் இப்படி உண்டு. அங்கேயெல்லாம் ‘வெயில் உகந்த பிள்ளையார்’ என்று அவருக்கு பேர் சொல்வார்கள்.

இங்கேயோ ‘வெயில் காத்த பிள்ளையார்’ என்று பேர். என்ன வித்யாஸமென்றால் மற்ற இடங்களில் ஜனங்கள் அநுபவிக்கிற வெயிலின் கஷ்டத்தை நாமும் அவர்களோடு சேர்ந்து அநுபவிப்போமே என்று ‘ஸிம்பதி’யிலே அவராக வெயிலை ப்ரியப்பட்டு உகந்து ஏற்றுக் கொள்கிறார்.

இங்கேயோ அதற்கு மேலே ஒரு படி போய், சத்திரத்தில் தங்கினவர்கள் அப்புறம் யாத்திரையை தொடரும் போது வெயிலால் கஷ்டப்படாமல் அந்த வெயிலை அவர்களுக்குமாகச் சேர்த்து vicarious suffering என்கிறார்களே, அப்படித் தாமே வாங்கிக்கொண்டு, அவர்களை உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.

அதனால் ‘வெயில் காத்த பிள்ளையார்’ என்று பெயர் பெற்றிருக்கிறார்.

பாண்டிய ராஜாவுக்காகத் குதிரை வாங்கப் போன மந்திரி திருவாதவூரர் அப்புறம் மாணிக்கவாசகர் என்ற மஹானான கதை தெரிந்திருக்கும்.

அவர் குதிரை வாங்கப் போகிற வழியிலே அந்தத் திருப்பெருந்துறைச் சத்திரத்தில்தான் ராத்திரி தங்கினார்.

அப்போது அவருடைய ஸ்வப்பனத்திலே வெயில் காத்த பிள்ளையார் தோன்றி,

வெயிலோ, suffering எதுவும் தெரியாத பரப்ரஹ்மமே தாம் என்று வாதவூரருக்கு தெரிவிக்க நினைத்து, தான் ஒருத்தரே ப்ரஹ்ம – விஷ்ணு -ருத்ரர் ஆகிய மூன்று ரூபமாக மாறி அவருக்குக்காட்சி கொடுத்தார்.

கொடுத்ததற்கு அப்புறம், “இந்த ஊரிலே பரப்ரஹ்மத்துக்குக் கோவில் கட்டு. அரூபமாகவும் நிர்குணமாகவும் இருக்கிற தத்வத்துக்கு எப்படிக் கோவில் கட்டுவது என்று கேட்காதே. அதற்கு நேரடியாகக் கோவில் கட்ட முடியாது தான் ஆனாலும் அப்படி ஒரு தத்வம் உண்டு என்று ஸகல ஜனங்களுக்கும் துளியாவது நினைப்பு வர வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் அதை ‘ஸிம்பாலிக்’காக (உருவகமாக)புரிந்து கொள்ளும்படியாக ஒரு கோவில் கட்டச் சொல்கிறேன்.

“ப்ரஹ்மம் அருவம். நாம் பார்க்கிற மூர்த்திகளுக்குள் சிவலிங்கம் தவிர பாக்கி எல்லாம் உருவம்.

சிவ லிங்கத்துக்கு அவயவங்கள் கொண்ட உருவமும் இல்லை, அது அருவமுமில்லாமல் ஒரு நீள உருண்டையாயிருக்கிறது. அதனால் அருவுருவம் என்று அதற்குப் பேர். சிவலிங்கத்துக்குப் பீடம் இருக்கிறதே, ஆவடையார் என்று, அதுவே ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ர ஸ்வரூபம். அதற்கு மேலே சிவம் என்கிற அருவ ப்ரஹ்மம் இருப்பதை ஸிம்பாலிக்காக காட்டத்தான் லிங்கம் வைத்தது.

“ஆனால் உருவ தத்வத்திலேயே ருசியுள்ள ஜனங்கள் அதை மறந்துவிட்டு லிங்கத்தையும் ஒரு உருவ மூர்த்திதான் என்று நினைக்கிறார்கள். பொது ஜனங்கள் உள்ள ஸ்திதியில் அப்படி நினைப்பதுதான் இயற்கை. அதனால் மற்ற கோவில்களிலெல்லாம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

ஆனாலும், இத்தனாம் பெரியதேசத்தில் ஒரு இடத்திலாவது வேதத்தின் பரம தாத்பர்யமான பரப்ரஹ்மத்தை, அருவப் பரம்பொருளை அழுத்தமாக ஞாபகப் படுத்த ஒரு ஆலயம் வேண்டாமா? உருவம் என்பதிலிருந்து அருவுருவம் என்கிற வரையில் கொண்டுவிட்டு இருக்கிற ஈச்வரனுக்குத்தான் அதற்கும் அடுத்த ஸ்டேஜான அருவமாக வைத்தும் கோவில் கட்டினால் பொருத்தமான இருக்கும், ஜனங்களின் மனோ பாவத்துக்கும் அதுவே ஸரியாய் வரும்.

“ஆனபடியால் இங்கே ஆவுடையாரை மட்டும் மூலஸ்தானத்தில வைத்து, அதற்கு மேல் லிங்கம் ப்ரதிஷ்டை பண்ணாமல் காலியாகவே விட்டுக் கோவில் கட்டு. காலி என்பதால் சூன்யம் இல்லை, அதுதான் நம் இத்தனை ஜீவாத்மாக்களுக்கும் மூலம் என்று ஜனங்களுக்குப் புரிவிப்பதாக அதற்கு ஆத்மாநாதஸ்வாமி என்று பெயரை வை.

“நான் சொன்னேனே என்று இப்பவே காரியத்தில் இறங்காதே! இங்கே ஒரு குருந்த மரத்தின் கீழே என் தகப்பனார் குரு ஸ்வரூபத்தில் வந்து ஆத்மாவை அநுபவத்தில் தெரிந்து கொள்ளும் படியாக – அதாவது நம்முடைய ஆத்மா பரப்ரஹ்மமே என்பதை அநுபவமாக அறியும்படி – உபதேசிப்பார். அதற்கு அப்புறமே ஆலய நிர்மாணம் பண்ணு” என்று சொல்லி விட்டுப் பிள்ளையார் மறைந்துவிட்டார்.

இப்படி ஒரு ஆனை சொன்னதன் மேல் தான் குதிரைக்கான பணத்தில் மாட்டுக்கு கோவில் எழும்பிற்று.

ஆவுடையார் என்பது மாடுதான், பரமேச்வரனின் ரிஷபம்! ஆ-மாடு,

உடையார் என்றால் ஸ்வாமி. கோவில் கல்வெட்டுக்களில் பார்த்தால் ‘ஸ்வாமி’ என்பதற்குத் தமிழ் வார்த்தையாக ‘உடையார்’ என்றே போட்டிருக்கும்.

ராஜராஜீச்சுரமுடையார், திருநாகேச்சுர முடையார் என்கிற மாதிரி. மற்ற மாடுகளுக்கெல்லாம் தலைமையில் அவற்றுக்கு ஸ்வாமியாக உள்ள ரிஷபந்தான் ஆவடையார். மற்ற ஊர்களில் அந்த ரிஷபத்தின் மேலே லிங்க ரூபத்தில் பரமேச்வரன். ஜீவாத்மாக்களான அத்தனை பசுக்களுக்குள்ளும் உடையாரான பசுபதி மாட்டு ஜாதிப் பசுபதியான ஆவுடையார் மேலே உட்கார்ந்திருப்பார்.

பிள்ளையார் சொன்னபடியே அப்புறம் ப்ராம்மண குருவாக ஈச்ரவன் வர, அவரிடம் வாதவுரரர் உபதேசம் பெற்றுக் கொண்ட ஆவுடையாரை மட்டும் வைத்துக் கோவில் கட்டினார். ஞானாபூதி பெற்றவுடனேயே அவருக்கு மணி மயியாகத்தான் திருவாசகம் பாடவந்ததால் மாணிக்கவாசகர் என்ற புதுப் பெயரும் உண்டாகி விட்டது.

அரூப ஸ்வாமி ஆவுடையார் மட்டுமே மூலஸ்தானத்தில் இருந்ததால் ஜனங்கள் அந்த திருப்பெருந்தறைக்கும் ‘ஆவுடையார் கோவில்’ என்று புதுப் பெயர் வைத்துவிட்டார்கள்.

அம்பாளும் அங்கே அரூபந்தான். இவர் ஆத்மநாதர் என்றால் அவள் யோகாம்பிகை.

இப்படி அவர்கள் அரூபமாக விட்டதற்கு வட்டியும் முதலுமாக மாணிக்கவாகர் என்ன பண்ணினாரென்றால் கோவில் கட்டச் சொன்ன பிள்ளையாருக்கே அங்கே மூன்று மூர்த்திகள் சேர்ந்தார் போல் வைத்து விட்டார்.

அவர் இவருக்கு மும்மூர்த்திகளாக மூன்று ரூபத்தில் தரிசனம் தந்தால் இவரும் அவருக்கு மூன்று மூர்த்தி வைத்துவிட்டார் – மூம்மூர்த்திகளும் அவரே என்று காட்டுவதாக.

இரட்டைப் பிள்ளையாரை பல ஊரில் உண்டு. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆவுடையார் கோவிலில் மட்டும் மூன்று பிள்ளையார்!

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி பண்டிகை வணக்கங்கள் வாழ்த்துக்கள்.

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (43): அஜகர வ்ருத்தி ந்யாய:

samskrita nyaya - 2026

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் -43

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

அஜகர வ்ருத்தி நியாய: (அஜகர: – மலைப்பாம்பு, வ்ருத்தி – வாழ்க்கை)

பாம்பு இனத்தைச் சேர்ந்த பெரிய உயிரினம் மலைப்பாம்பு. சுமார் பதினெட்டில் இருந்து முப்பது அடி வரை நீளமாகவும், இருநூறு பவுண்டு எடையும் கொண்ட இது, கடித்துக் கொல்லும் பாம்பு அல்ல.

ஆனால் மலைப்பாம்பு தனக்கு அருகில் வருபவரைச் சுற்றிவளைத்து மூச்சு விட முடியாமல் செய்து சட்டென்று விழுங்கி விடும். பெரிய மிருகங்களையும் ஒரு கணத்தில் வயிற்றில் போட்டுக் கொள்ளும். முயல், நரி போன்றவை இதற்கு ஒரு பொருட்டே அல்ல. சிறுத்தைப் புலியைப் போல தன் உணவுக்காக ஓட்டமெடுக்காது.

கடவுளின் படைப்பு அப்படிப்பட்டது. இந்த ‘அனகொண்டா’, பார்ப்பதற்கு ஒரு குன்றைப் போலவோ, ஒரு பெரிய சிலையைப் போலவோ, பெரிய மரக்கட்டை போலவோ இருந்து. பார்ப்பவருக்கு பிரமையை ஏற்படுத்தும். சிறிய மிருகங்கள் அதன் மேல் ஓடி விளையாடும்போது நேரம் பார்த்து பிடித்துக் கொள்ளும்.

அதுவரை, தவத்தில் இருக்கும் யோகியைப் போல அசையாமல் கிடக்கும். உணவு கிடைத்தபின் பொறுமையாக அசைந்து சென்று ஒரு மரத்தைச் சுற்றிக் கொண்டு தன்னுள்ளே சிக்கிய மிருகத்தைத் துண்டுகளாகும்வரை இறுக்கும். எத்தனை பெரிய மிருகமாக இருந்தாலும் அதற்குத் தகுந்தவாறு வாயைப் பெரிதாகத் திறக்கும் திறன் கொண்டது.

புராணங்களில் அஜகரம் – மகாபாரதத்தில் அனகொண்ட –
மகாபாரதம் வன பர்வத்திலும் மலைப்பாம்பின் வர்ணனை உள்ளது. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட பீமனை ஒரு மலைப்பாம்பு இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அது நஹுஷன் மலைப்பாம்பான கதை.

பாகவதத்தில் அஜகரம் – பால கிருஷ்ணன் தன் தோழர்களோடும் பசுக்களோடும் கோகுலத்தில் மாடு மேய்க்கச் சென்றான். கண்ணன் இல்லாத நேரத்தில் அகாசுரன் என்ற அசுரன் ஒரு பெரிய மலைப்பாம்பாக வந்து தன் வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு, பாதையில் குறுக்காக உட்கார்ந்திருந்தான். கோபாலர்கள் விளையாடியபடி, அது ஏதோ ஒரு குகை போலும் என்று எண்ணி அதன் வாய்க்குள் புகுந்தனர். பாலகிருஷ்ணன் நடந்ததை அறிந்தான்.

இறைவனுக்கு எதிரில் பாவிகளின் ஆட்டம் செல்லுமா? கண்ணனும் அந்த மலைப்பாம்பின் வாயில் புகுந்து தன் உடலைப் பெரிதாக்கி அந்த அஜகரத்திற்கு மூச்சு விடமுடியாமல் செய்தான். அந்த அசுரன் மடிந்தான். அதன் வாயில் புகுந்த கோபாலர் அனைவரும் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு வெளியில் வந்தனர். இது பாகவதத்தில் இருக்கும் காட்சி.

தர்மத்தில் நிலைத்த யது மகாராஜாவுக்கு, அவதூதர் தர்ம போதனை செய்தார். அப்போது ஸ்ரீ தத்தாத்திரேயர் அஜகரத்தை ஒரு குருவாக நினைத்து தியானிப்பது பற்றிக் கூறினார். இந்த சம்பவத்தை ஸ்ரீமத் பாகவதம் பதினோராவது ஸ்கந்தம் எட்டாவது அத்தியாயத்தில் பார்க்கலாம். மலைப்பாம்பிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய குணங்களை தத்தாத்திரேயர் இவ்விதம் எடுத்துரைத்தார்.

* யோகியானவன், தனக்குக் கிடைத்த ஆகாரத்தைக் கொண்டு திருப்தியடைவான். அது ருசியானதா, இல்லையா என்பது குறித்து கவலை கொள்ள மாட்டான். அளவைப் பற்றியும் சிந்திக்க மாட்டான். இந்த குணங்களுள்ள உயிரினம் மலைப்பாம்பு. அது எந்த முயற்சியும் செய்யாமல் இருந்த இடத்தில் கிடைத்ததை அனுபவித்து உதாசீனமாக வாழும் இயல்புடையது.

* மலைப்பாம்பு, உணவு கிடைக்காவிடில் உணவில்லாமலே காலம் கழிக்கும். அதற்காக எந்த முயற்சியும் செய்யாது. ஆன்மீக சாதகனும் கிடைத்ததை உண்பது, கிடைக்காவிட்டால் உபவாசம் இருப்பது, பிராரப்த கர்மாவின்படி கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவது, புலன்பங்களுககாக தவிக்காமல் இருப்பது போன்றவற்றில் அஜகரத்தைப் போல திருப்தியோடு வாழ வேண்டும்.

* அஜகரத்திற்கு எத்தனைதான் உடல் வலிமை இருந்தாலும், புலன்களில் காரிய சாதனைக்கான சக்தி இருந்தாலும், செயல் புரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். சாதகன், புலனின்பங்களுக்காக ஏங்கக் கூடாது என்பது மலைப்பாம்பு அளிக்கும் செய்தி.

ஆதிசங்கரரின் உபதேசம் –
க்ஷுத் வ்யாதிச்ச சிகித்ஸதாம் ப்ரதி தினம் பிக்ஷௌஷதாம் புன்ஞ்யதாம்|
சாத்வன்னம் ந து யாச்யதாம் விதிவஸாத் ப்ராப்தேன சந்துஷ்யதாம் ||

பொருள் – பசி என்பது ஒரு நோய் போன்றது. அந்த நோய்க்கு நிவாரணமாக, பிச்சையாக வந்த உணவை மருந்தாக ஏற்க வேண்டும். ருசிக்காக அலையாமல் பரமேஸ்வரனின் கிருபையாக, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று ஆதி சங்கரர் சாதகனுக்கு உபதேசிக்கிறார்.

இப்படி இருப்பவர்களை அஜகர விருத்தியில் இருப்பவர் என்பார்கள். இவர்கள்
கடைபிடிக்கும் விரதம் என்னவென்றால், ‘பிக்ஷை கிடைத்தால் பண்டிகை.
கிடைக்காவிட்டால் ஏகாதசி உபவாசம்”. அதனால்தான் தத்தாத்திரேயர் மலைப்பாம்பை குருவாக ஏற்றார்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் –

முன்னர் ஒரு சாது ஒரு வீட்டின் வாயிலில் நின்று, ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று யாசகம் கேட்டார். அவ்வாறு மூன்று முறை அழைத்து விட்டு பிக்ஷு சென்று விடுவார்.

அது அவர்களின் நியமம். அதனால் அந்த வீட்டு இல்லாள், குளித்துக்
கொண்டிருந்தவள், அவசரமாக ஆடையைச் சுற்றிக்கொண்டு பிச்சை எடுத்து வந்தாள். அந்த தாயின் வக்ஷஸ்தலத்தை கவனித்த சன்யாசி, ‘அது என்ன?” என்று கேட்டாராம். அதற்கு அந்த இல்லாள், ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு இறைவன் எற்படுத்திய பால்கலசம்’ என்று பதிலளித்தாளாம். ‘இன்னும் பிறக்காத பிள்ளைக்கே ஆண்டவன் ஆகாரம் ஏற்பாடு செய்கிறான்.

ப்படியிருக்க, நான் பிட்சைக்காக எதற்காக அனுஷ்டானம் செய்ய
வேண்டிய நேரத்தை வீணடிக்கிறேன்? கடவுளின் கிருபை இருந்தால் என்னிடமே பிச்சை வந்துவிடுமல்லவா?’ என்று எண்ணி அஜகர விருத்தியை அனுசரித்து ஆசிரமத்திலேயே அமர்ந்து சாதனையில் மூழ்கினார். சாதுவுக்கு அந்த கிராம மக்கள் பிச்சை ஏற்பாடு செய்தார்கள். அசையாமல் இருந்து எது கிடைக்குமோ அதையே கடவுளின் கருணைப் பிரசாதமாக ஏற்பது என்பது அஜகர விருத்தியின் பொருள்.

உலகியல் பொருள் – மற்றொரு கோணம் –
பெரிய மலைபபம்பின் வாயில் விழுந்து பல விலங்குகள், பசுக்கள், சில மனிதர்கள் கூட காணாமல் போகிறார்கள் என்ற செய்தியை கேட்டுள்ளோம். அது எவ்விதம்? அதன் இருப்பு யாருக்கும் தெரியாது. பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு பயங்கரமான பிராணியாகத் தென்படாது. புலி, சிங்கம் போன்றவை கண்ணில் பட்டால் நாம் கவனமாக இருப்போம். இந்த அஜகரம், தவத்தில் இருக்கும் திருட்டு கொக்குபோல இருந்து, அருகில் வரும் உயிரினம், கவனமில்லாமல் இருக்கும் போது விழுங்கிவிடும்.

அசையாமல் மரக்கட்டை போல கிடந்து, குழப்பத்தை ஏற்படுத்தி மோசம் செய்கிறது. அதாவது நம்ப வைத்து ஏமாற்றுகிற குணம் கொண்ட உயிரினமாக இந்த மலைப்பாம்பை பார்ப்பது மற்றொரு கோணம். தெய்வத்தின் சிருஷ்டி அப்படி உள்ளது. அதனை நிந்திப்பதிலோ விமர்சிப்பதிலோ எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் தான் கவனமாக
இருக்க வேண்டும்.

‘நம்பவைத்து ஏமாற்றி விட்டான்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். ‘நம்ப
வைக்காமல் எப்படி மோசம் செய்வது?’ என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.
ராட்சச குணம் – சில அரக்க குணம் கொண்டவர்கள், மக்களை மாயம் செய்து, ஏமாற்றுவார்கள். மரக்கட்டை போல் கிடந்தது நம்பிக்கை ஏற்படுத்தி, கபக்கென்று விழுங்கி விடும் மலைப்பாம்போடு இவர்களை ஒப்பிடுவர் ஆய்வாளர்.

லவ் ஜிஹாத் – அண்மையில் காதில் விழும் நம்பிக்கை துரோகங்களில் லவ் ஜித்ஹாத்தும் ஒன்று. இதன் மூலம் பல இளம் ஹிந்து பெண்கள் அழிந்து வருகிற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். பிற மதங்களைச் சேர்ந்த அரக்க குணம் கொண்டவர்கள், தங்கள் பெயரையும் வேஷத்தையும் மாற்றி கொண்டோ, மாற்றிக் கொள்ளாமலோ ஹிந்து பெண்களை நம்ப
வைத்து வலையில் சிக்கச் செய்து அவர்களைத் தம் மதத்திற்கு மாற்றி, அவர்களைத் தங்களுடைய மக்கட்தொகையை அதிகரிக்கும் இயந்திரமாகவோ, இஸ்லாம் தேசங்களுக்கு ஏற்றுமதி செய்தோ, தேவை தீர்ந்த பின் கருணையின்றி ஏமாற்றித் தூக்கி எறியும் செய்திகள் பலப்பல. நம்மவர்கள் இப்படிப்பட்டவர்களின் நடத்தைகளைக் கேள்விப்பட்டாலும் கண்களை மூடிக் கொண்டு அஜகரத்திற்கு பலியாகிறார்கள்.

இத்தகைய அரக்க குணம் கொண்டவர்கள், அஜகர நியாயதிற்கு உதாரணமாக கூறத் தக்கவர்கள். ‘என் காதலன் அப்படிபட்டவன் அல்ல’ என்று நினைப்பது, மலைப்பாம்பை ஒரு கல்லாகவோ, மரமாகமோ எண்ணி ஏமாறுவதற்கு ஒப்பானது.

சைபர் கிரைம்ஸ் – ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்கள், சைபர் குற்றவார்களைப் பற்றிய கதைகளைச் சுமந்து வருவதைப் பார்க்கிறோம். இது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குற்றம் யாருடையது? நம்பி ஏமாறுபவர்களுடையதே. எனக்கு அறிமுகமுள்ள ஒரு வியாபாரிக்கு
மோசக்காரர்களிடமிருந்து ஒரு நாள் போன் வந்தது. “அனந்தப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து விவசாய வேலை செய்து வரும் போது தங்களுக்கு தங்கக் காசுகள் கிடைத்தன. எங்களுக்கு அச்சமாக உள்ளது. நீங்கள் வந்து அவற்றை எடுத்துக் கொண்டு எங்களுக்கு பணம் கொடுங்கள்” என்று கேட்டார்கள். அவரை நம்ப வைத்து தம் கிராமத்திற்கு பணத்தோடு வரவழைத்து, மாதிரிக்கு சில உண்மையான தங்கக் காசுகளைக் காட்டி, மூன்று லட்சம் ரூபாய்க்கு போலி காசுகளைக் கொடுத்து
ஏமாற்றினர்

முகநூலை ஹேக் செய்து, தாம் ஆபத்தில் இருப்பதாக நம்ப வைத்து பணத்தை அபகரிக்கும் கதைகள் பல. அவற்றின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக இதனை எண்ணலாம்.

இதன் நீதி என்னவென்றால் – அஜகர விருத்தி ஆன்மீக சாதகர்களுக்கு ஆதரிசமானது. ஆனால், உலகியல் வாழ்க்கையில் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும்.

கடவுளின் படைப்பில் இது ஒரு விசித்திரம். அஜகரத்தின் வடிவமைப்பும் அசைவின்றிக் கிடக்கும் விதமும் பார்ப்பவரை குழப்பத்தில் ஆழ்த்தி ஏமாற்றும் ஆபத்து உள்ளது.

செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

DSC 0327 - 2026


செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கம்; இரயில் பயணிகள் சங்கம், வா்த்தக சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!
.
செங்கோட்டை, செப், 07, செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தல் வைத்து
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி எண்-(06242) இயக்க துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழச்சிக்கு செங்கோட்டை இரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் எல்எம்.முரளி தலைமைதாங்கினார். செயலா் கிருஷ்ணன், பொருளாளா் சுந்தரம், வர்த்தக சங்க தலைவரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான எஸ்எம்.ரஹீம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவா் சங்கரபாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடா்ந்து இரயில் லோகோபைலட், உதவி லோகோபைலட் ஆகியோருக்கு இரயில் பயணியா் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினா். இந்த சிறப்பு விரைவு இரயிலானது வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. .

இரயில் எண்.06241 மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயில் மைசூரிலிருந்து 04.09.2024 & 07.09.2024 ஆகிய தேதிகளில் 21.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 16.50 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும் இரயில் எண்.06242 செங்கோட்டை மைசூர் சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து 05.09.2024 & 08.09.2024 ஆகிய தேதிகளில் 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 14.20 மணிக்கு மைசூரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி செப்-05ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களுர், மாண்டியா, மைசூரை சென்றடையும்

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலா்கள் ஜீவா, சங்கர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். 

வரவிருக்கும் வெற்றிகள் பாரத தேசத்துடையவையே!

hinduism - 2026

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

“ஒரு தேசம் தன் வழியில் தான் முன்னேறிச் சென்றால், இருபதாம் நூற்றாண்டு நாகரிகம் சும்மாயிருக்காது” என்றார் ஒரு கவிஞர். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாகரிகமும் அதேபோல்தான் இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் அகம்பாவம், பிற தேசங்களின் வளர்ச்சியைப் பொறுப்பதில்லை. பொறாமையோடு கொடூரமான செயல்களைச் செய்வது வரலாறாக உள்ளது.

அண்மையில், பங்களாதேஷில் நடந்த வன்முறைகளும், அங்கிருந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நாட்டை விட்டே ஓடியதும் உலகறிந்த செய்தி. அத்தகைய அக்கிரமங்களுக்கு, வளர்ந்த நாடுகளின் தலையீடே முக்கிய காரணம் என்று அந்நாட்டு பிரதமரே அறிவித்த செய்தியும் உலகம் அறிந்ததே!

கடினமான சூழ்நிலைகளையும் திறமையோடு சமாளித்து, தேசத்தை அனைத்து விதத்திலும் முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லும் பாரத தேசத்தின் தலைமையின் மீது கொண்ட பொறாமையால், கையாலாகாத கோபத்தோடும், பாரத தேசத்தின் வளர்ச்சியைத் தாங்க இயலாத வெறுப்போடும், இந்த நிலையான தமைமையை, திறமையான பாரதத்தை, தற்சார்பு மிகுந்த தேசத்தை, சுயமான செழிப்பை, தலைகீழாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிநாடுகள் செய்து வரும் சதித்திட்டங்கள் இப்போது தான் பொது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்து வருகிறது.

அந்நிய நாட்டுத் தீய வியூகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஊழல் தலைவர்கள், தம் அதிகார தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக சதிகாரர்களோடு கை கோர்த்து, அவர் கையில் பொம்மலாட்ட பொம்மைகளாக, அவர்கள் ஏற்படுத்திய திட்டங்களின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஹிந்து அல்லாத மதங்களை சமதானப்படுத்துதல், தேசிய வெறுப்பு போன்ற கோஷங்களோடு கூத்தாடினார்கள்.

பாரத தேசத்தில் குல, மத வேறுபாடின்றி, ஒவ்வொரு குடிமகனுடைய நலனுக்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எடுத்த சிஏஏ, அக்னிவீர் போன்ற சிறந்த முடிவுகளையும் திட்டங்களையும் கூட தவறாகச் சித்திரித்து, பொய் சொல்வதே தம் வழிமுறையாக, மீண்டும் மீண்டும் பொய்களையே உண்மைகள் என்று வாதம் செய்து மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்ல முயற்சித்தார்கள். அந்த முயற்சியில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் கூட இடையூறு விளைவிக்கத் தயங்கவில்லை.

முழுமையான தேச முன்னேற்றத்திற்காகவும், பழுதடையாத ஒருமைப்பாட்டிற்காகவும், அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும், திடமான பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வலிமைக்காகவும், நிரந்தரம் உழைக்கும் அரசாட்சியை ‘ஹிந்துத்துவம்’ என்று முத்திரை குத்தி, மத வெறுப்பைத் தூண்டும் முயற்சி மும்முரமாக நடத்தப்பட்டது. தேசத்தைத் துண்டாடவேண்டும் என்று இந்த துக்கடா கும்பல்கள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல. அத்தனை வீராவேசமாக உக்கிர முயற்சி செய்தாலும் அவர்களால் எதிர்க் கட்சியாக மட்டுமே இடம் பெற முடிந்தது. அதையே பெரிய வெற்றியாக எண்ணி டம்பமடித்துக் கொள்கிறார்கள்.

அதோடு நில்லாமல், பொருளற்ற வாய்ச் சவடால்களால், வெட்கமின்றி பச்சைப் புளுகுகளை பரம சத்தியமாக பிரகடனம் செய்து, இரு சபைகளிலும் சற்றும் கௌரவமோ மரியாதையோ இன்றி நடந்து கொள்கிறார்கள். பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டம் என்ற பெயரில் தீவிரவாத மதக் குழுக்கள் மிருகத்தனமான, கொடூரமான செயல்களைத் தூண்டி, விபரீதமான திகிலூட்டும் ஹிம்சையைப் பரப்பியது போல, பாரத தேசத்திலும் செய்ய வேண்டும் என்று திட்டங்களை பலமாகத் தீட்டி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தைப் போலவே போலி போராட்டங்களை நடத்திக் காட்டி, செயற்கை இயக்கங்களை ஏற்பாடு செய்து, வெளிநாட்டு நிதி உதவியோடு ஆட்டம் போடுகிறார்கள். “பாரத தேசம் என்னாவானாலும் பரவாயில்லை. வளர்ச்சி குன்றினாலும் நஷ்டமில்லை. தம்முடைய மதமே இந்த தேசம் முழுவதும் பரவ வேண்டும். தம் மதத்திற்கு மாறாதவர்களை ஹிம்சை செய்து, வன்கொடுமை செய்து, குரூரமாகக் கொல்ல வேண்டும்” என்பதையே கொள்கையாகக் கொண்ட மத வெறியர்களின் உதவியோடு, பாரத தேசத்திலும் மரண காண்டத்திற்கு வழிசெய்யத் துடிதுடிக்கிறார்கள்.

நம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தாலும், நம்மவர்களின் நட்பையும் உதவியையும் பெற்றாலும், இந்த ‘அமைதிவழியினர்’ என்று கூறிக்கொள்ளும் ஹிம்சைவாதிகள், தம் தலைவர்களிடம் இருந்து செய்தி வந்தவுடனே பெரும் பயங்கரவாதிகளாக மாறி விடுகிறார்கள். நேற்றுவரை ‘பாய், பாய்’ என்று பழகி விட்டு, தேவைக்கு உதவி புரிந்தவர்களைக் கூட தயவு தாட்சிண்யமின்றி நன்றிகெட்டு, கிழித்துக் கொன்ற வரலாற்றை அவர்களுடைய கடந்த காலத்தில் மட்டுமின்றி நிகழ்காலத்திலும் பார்க்க முடிகிறது.

ஆனால் செக்யூலர் என்ற முகமூடியிட்டு, கபட இயக்கங்களின் மறைவில் நின்று, கொடூரர்களின் உதவியோடு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, ஒன்றுபட விடாமல் தடுத்து, தேசத்தின் முன்னேற்றத்தை உடைத்துத் துண்டாடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

மத தீவிர வாதிகளின் வன்முறையால் சொந்த தேசமே வேற்று நாடாக மாறிப் போகையில், நடந்த, நடந்துவருகிற, கோரதாண்டவத்தைக் கண்டித்து, எந்த ஒரு தலைவரும், எந்த ஒரு முக்கியஸ்தரும் வாயே திறக்கவில்லை. அனுதாபமும் தெரிவிக்கவில்லை. தாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று டமாரம் அடித்துக் கொள்பவர்கள் ஊமையாகிப் போனார்கள்.

பகை நாடுகளில் இருந்து அக்கிரமமாக பாரத தேசத்திற்குள் நுழைந்து, மேற்கு வங்காளம், கேரளா முதல் ஹைதராபாத், தமிழ்நாடு, கர்நாடகா, காஷ்மீர் வரை செயற்கை அடையாள அட்டைகளோடு, இந்திய குடிமக்களாக, ஓட்டுரிமை பெற்று, வன்முறையையும் குற்றங்களையும் செய்து வரும் மத வெறிகள் குவிந்து வருகிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி, வளர்த்து, போஷித்து, தேச துரோக மாநில அரசுகள் அச்சமின்றி நடந்து கொள்கின்றன.

இந்த நிலையில் நம் தேசத்தின் கதி என்ன என்ற அச்சம் தேச பக்தி உள்ளவர் அனைவருக்கும் ஏற்படுகிறது. இதற்கான பதில் – சமூக ஊடகங்களின் புண்ணியத்தால் இப்போதுதான் சிறிது சிறிதாக, வெளிநாட்டு சதிகளும், எதிர்கட்சிகளின் தீய நோக்கங்களும் உலகில் அனைவருக்கும் தெரிய வருகின்றன. உண்மை என்ன என்பதை செய்திகளாக மக்கள் அறிகிறார்கள்.

வர்க்கம், மதம் என்ற பாகுபாடின்றி பாரத தேசத்தைச் சேர்ந்த அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சுயநலமின்றி அயராது பாடுபடும் தலைமையின் திறமையை அடையாளம் காண்கிறார்கள். சதிகளைத் தாங்க முடியாமல் தேசத்தை விட்டு வந்த தலைவிக்கு அடைக்கலம் கொடுத்து, வெளிநாட்டு சதிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை அளித்துள்ளது பாரதம்.

எத்தகைய போராட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு கொடுமைகளைத் தூண்டினாலும், அழிக்கும் சக்திகளைத் தகர்க்கும் பலமான பாதுகாப்பு அமைப்பை, பலம் பொருந்திய பாரத தேசம் ஏற்பாடு செய்துள்ளது.

ஒற்றுமையாக, உற்சாகத்தோடு பணி புரியும் அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் குறைவில்லை என்று அடித்துக் கூறும் நம் தேசத் தலைமை அற்புதமான வியூகத்தைத் திட்டமிடுகிறது. விழித்தெழுந்து வரும் பாரத தேசத்தவர் அனைவரும், இந்த தலையின் திறமையின் கீழ் தம் உண்மையான பாதுகாப்பும் நலனும் முன்னேற்றமும் இருப்பதை அறிந்து வருகின்றனர்.

உலகிலேயே அமைதியையும் சௌபாக்கியத்தையும் நிலைநாட்டக் கூடிய திறமை, தர்மம் மிகுந்த பாரத பூமிக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை வெகு விரைவில் உலகம் தெளிவாக உணரும்.

இந்தப் போராட்ட காலத்தில் மேலும் திடமாக இந்த தெய்வீக பாரத பூமியின் மகிமை வெளிப்படும். அதற்கு ரிஷிகளின் தவ சக்தியும், மகா யோகிகள் தாரை வார்க்கும் நற்செயல்களின் பலமும் ஆதரவாக இருக்கும்.

பரமேஸ்வரனின் அரவணைப்பும் நிரம்ப கிடைத்து வருகிறது. பாரத மாதா விஜயதுர்காவாக நிச்சயம் ஒளிர்வாள். வந்தே பாரதமாதரம்.

(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், செப்டம்பர், 2024)

மைசூர் ரயிலுக்கு செங்கோட்டை, அருப்புக்கோட்டையில் வரவேற்பு!

aruppukottai mysore train - 2026
#image_title

அருப்புக்கோட்டையில் புதிய ரயில் வருகைக்கு வரவேற்பு:

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் செங்கோட்டை மைசூர் சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு

ரயில் பயணிகளுக்கும் ரயில் ஓட்டுநருக்கும் கடலை உருண்டை வழங்கி சால்வை அணிவித்து வரவேற்பு

காரைக்குடியில் இருந்து மைசூர் வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதன்முறையாக அருப்புக்கோட்டை வழியாக மைசூரில் இருந்து செங்கோட்டை சென்ற இந்த சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் ரயில் ஓட்டுனருக்கு, சால்வை அணிவித்தும் கடலை உருண்டை வழங்கியும் வரவேற்பு அளித்தனர். அதேபோல அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த ரயில் பயணிகளுக்கும் கடலை உருண்டை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அருப்புக்கோட்டை வழியாக வாரம் இரண்டு நாட்கள் வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்த புறப்பட்டு விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி திருச்சி சேலம் நாமக்கல் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பெங்களூர் மைசூரு செல்ல உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ரயில் பயணி போர் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையில் புதிய ரயிலுக்கு வரவேற்பு:

மைசூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்த புதிய ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வரவேற்று இனிப்புகள் வழங்கினர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் இரவு 7 மணிக்கு புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

முதன் முதலாக பயணம் மேற்கொண்ட செங்கோட்டை – மைசூர் சிறப்பு விரைவு ரயில் துவக்க விழாவில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம், மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் சங்கர பாண்டியன், முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் அனந்த பத்மனாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரவு 7.45க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டாம் நடைமேடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலை வழியனுப்பி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள், ரயில் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

டிஆர்டிஓ.,வில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

employment career opportunities - 2026
#image_title

டி.ஆர்.டி.ஓ.,வில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு

பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., சோதனை தளத்தில் அப்ரென்டிஸ் ஆக பணியாற்ற 54 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defense Research and Development Organisation (டி. ஆர். டி. ஓ.,) இந்திய ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகள், பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதன் ஒருங்கிணைந்த சோதனை தளம் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் அமைந்துள்ளது.

இங்கு அப்ரென்டிஸ் பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள் மொத்தம் 30 பேரும், டிப்ளமோ படித்தவர்கள் 24 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 7.

மொத்த பணியிடங்கள்: 54

பட்டதாரி அப்ரென்டிஸ் (Graduate Apprentice)- 30
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரென்டிஸ் (Technician (Diploma) Apprentice)- 24

கல்வித் தகுதி என்ன?

  • பட்டதாரி அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்தில் பி.இ., பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பதவிக்காலம்

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 1 ஆண்டு பதவியில் இருப்பார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.drdo.gov.in/drdo/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை! பள்ளிச் சுவரில் மனிதக் கழிவு!

  • நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி சுவரில் மனித கழிவை பூசி நடந்துள்ள அட்டூழியம்…!
  • தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் அட்டூழியம்; தலைவரித்தாடும் தீண்டாமை கொடுமை…!
  • மனித நாகரீகம் அருவெறுக்கச் செய்யும் செயலை தடுத்து நிறுத்த திராணியற்ற போலி திராவிட மாடல் ஆட்சி…! – எல். முருகன்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிச் சுவரில் மர்ம நபர்கள் மனிதக் கழிவைப் பூசிச் சென்ற விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து பள்ளி சுவரிலும், சமையலறையின் பூட்டிலும், மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனித கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர்.அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இதுபோன்ற அருவெறுக்கத்தக்க வகையில் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தியுள்ளன.

ஆனால் 600 நாட்களை கடந்த பின்னரும் இந்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோலவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூசப்பட்ட சம்பவம் நடந்தது. இதுபற்றி எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதனை விசாரணை செய்து உண்மையை கண்டறியவில்லை. மாறாக சம்பவத்தையே மறைத்து விட்டனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே காவேரிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் மனிதக் கழிவை பூசி மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான்தெருவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த சம்பவம் நடந்தது. அதிகாரிகளை வைத்து தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக சம்பவத்தை வழக்கம்போல் திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது.

இதுதொடர்பான விசாரணையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையே சுட்டிக்காட்டி கண்டித்தது.

தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று.

தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன.
பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசு பள்ளிகளில் தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாததால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் திமுகவும், முதலமைச்சரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமான செயல்.

பள்ளி சுவரிலும் பள்ளி சமையலறை பகுதியிலும் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு பெரும் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. நாகரிகமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். – இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவரிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த விடியா ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஏற்கனவே #வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிசெயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த விடியா அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. எங்கு மைக் கிடைத்தாலும் “சமூகநீதி” என்று வாய்கிழிய முழங்கிவிட்டு, அதனை தனது விடியா ஆட்சியில் நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே தனது வெற்று விளம்பரத்திற்காக மட்டும் உதட்டளவில் பயன்படுத்தும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். அரசுப்பள்ளி வளாகத்தில் மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை விளாச்சேரியில் ரூ.30 முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனை!

vinayakar chaturti staus in vilacheri - 2026
#image_title

மதுரை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விளாச்சேரி பகுதியில் , சுமார் 40 கோடி அளவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

வரும், செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, மதுரை விளாச்சேரி பகுதியில் பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர்.

இங்கு ,200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மட்பாண்ட பொருட்களில் விநாயகர் சிலை மற்றும் லட்சுமி, பார்வதி, சிவன், உள்ளிட்ட கொழு பொம்மைகளும் தயார் செய்யப் படுகிறது.

நான்கு அங்குள்ள பிள்ளையார் முதல் 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வரை இப்பகுதியில் தயாராகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மதுரை மட்டுமல்ல விருதுநகர், தேனி, திண்டுக்கல் இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் கரூர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீர் நிலைகளில் உள்ள களிமண்களை சேகரித்து பதப்படுத்தி விநாயகர் பொம்மை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைக்கு மோல்டில் களிமண் அச்சு தயார் செய்யப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டு ரூ.30 அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, எட்டடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. விற்பனைக்கு இதில் கஜ (யானை) முக விநாயகர், நந்தி விநாயகர் சிம்ம விநாயகர் மூஷிக
விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலை தயாரிக்
கப்படுகிறது.

ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை ரூபாய் 3 ஆயித்திற்கு எட்டடி வியாபாரம் உயரம் உள்ள விநாயகர் 24 ஆயிரம் ரூபாய்க்கும் கஜமுகம் மற்றும் வாகனங்களில் உள்ள விநாயகர் செய்வதற்கு எட்டடி வீரத்திற்கு 30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து விளாச்சேரி பகுதியில் வந்து விநாயகர் சிலைகள் செய்து வாங்கி செல்கின்றனர். மேலும், நவீன காலத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைக்குள் பனைமர விதைகள் வைத்து விற்பனை செய்யப் படுகிறது.

இதன் மூலம் , வீடுகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை நீர் நிலையில் கரைக்கும் போது அங்கு கரைகளில் பனை மரங்கள் வளர உதவியாக இருக்கும் என, சமூக அக்கறையோடும் சில விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.

சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, களிமண்ணால் செய்யப்படும் விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் நீர்வளம் பாதுகாக்கவும் முடியும் என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் பிஓபி எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குளம், கண்மாய்களில் கரைக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும்,
நீர் மாசடைந்து நீரில் வாழும் மீன்கள் மற்றும் உயிரினங்கள் மிகவும் நீர்நிலைகளும் பாதிப்படைந்தது துர்நாற்றம் வீசியது.

இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பு ஏற்படுத்தியதை அடுத்து, அதை தண்ணீரில் கரைக்கவும் அதனால் நீர் வளம், நீர்வாழ் உயிரினம் மற்றும் மண் வளம் ஆகியவற்றை பாதுகாக்கவும் முடியும்.

தற்போது விளாச்சேரி பகுதியில் தயாராகி வரும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. மற்றும் விறுவிறுப்பாக விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

பாலமேடு அருகே ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

kumbabishekjam ion muthalmman temple - 2026
#image_title

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66.மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, எஜமானர் அழைப்பு, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜையுடன் யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு விமான கலசம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.