Home Blog Page 169

IND Vs SA T20: சஞ்சு அதிரடியில் அபார வெற்றி பெற்ற இந்தியா!

ind vs sa t20 - 2026
#image_title

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் –08.11.2024

இந்திய அணி அபார வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி(20 ஓவர்களிக்கு 8 விக்கட் இழப்பிற்கு 202, சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33, சூர்யகுமார்யாதவ் 21, ஜெரால்ட் கோயட்சி 3/37) தென் ஆப்பிரிக்க அணியை (17.5 ஓவர்களில் 141, கிளாசன்25, கோயட்சி 23, ரிக்கிள்டன் 21,  வருண்3/25, ரவி பிஷ்னோய் 3/28, ஆவேஷ் கான் 2/28, அர்ஷதீப் சிங் 1/25) 61 ரன்கள் வித்தியாசத்தில்வென்றது.

          இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்குடி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவதற்காகச் சென்றிருக்கிறது. அதில் முதல் ஆட்டம் இன்றுடர்பன் நகரைல் நடந்தது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் அணித்தலைவர். பூவாதலையா வென்றதென் ஆப்பிரிக்க அணித்தலைவர் மர்க்ரம் இந்திய அணியை மட்டையாடச் சொன்னார்.

          இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக்ஷர்மா (8 பந்துகளில் 7 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் சஞ்சுசாம்சன் அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் (17 பந்துகளில்21 ரன்) திலக் வர்மா (18 பந்துகளில் 33 ரன்) சாம்சனுக்குத் துணை நின்றனர். இறுதியில்15.4 ஓவரில் சஞ்சு சாம்சன் (50 பந்துகளில் 107 ரன், 7 ஃபோர், 10 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 2 ரன்) இன்று சோபிக்கவில்லை.  இதன் பின்னர் வந்த வீரர்களான ரிங்கு சிங்(10 பந்துகளில் 11 ரன்), அக்சர் படேல் (7 பந்துகளில் 7 ரன்), அர்ஷ்தீப் சிங்(4 பந்துகளில் 5 ரன்), ரவி பிஷ்னோய் (3 பந்துகளில் 1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களேசேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது. 

          இதற்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணி ஆடவந்தபோதுஅதன் தொடக்கம் சரியாக அமையவில்லை. அணித்தலைவர் மர்கரம் (4 பந்துகளில் 8 ரன்)முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸ் (11 பந்துகளில் 11 ரன்) மற்றும் ரிக்கிள்டன்(11 பந்துகளில் 21 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தபோதும் நாலாவது ஓவரிலும் ஆறாவதுஓவரிலும் முறையே ஆட்டமிழந்தனர்.

ஆறாவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்து வீசவந்தார். அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் அவர் ரிக்கிள்டனை ஆட்டமிழக்கச்செய்தார். வருணும்ரவி பிஷ்னோயும் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

12ஆவது ஓவரில் வருண், கிளாசன்மற்றும் டேவிட் மில்லர் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். 13ஆவது ஓவரில் பிஷ்னோய்பேட்ரிக் குருகரையும் சிம்லேனையும் அவுட் ஆக்கினார். அதன் பின்னர்17.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 141 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

          ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.  

திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

thirumalaikoil ther kumbidu vazhipadu - 2026
#image_title

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு!

தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கடந்த 2 ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இன்று காலை வண்டாடும் பொட்டலில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில், கந்தசஷ்டி விழா தேரோட்டமும், கும்பிடு கரண சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும், கந்தசஷ்டி விழாவிற்காக விரதம் இருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு கரண சேவை வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பண்பொழி கரிசல்குடியிருப்பு, செங்கோட்டை, அச்சன்புதூர், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கோமதி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மின் பகிர்மான கழகத்தில் வேலை!

employment career opportunities - 2026
#image_title

பொதுத்துறை நிறுவனமான மின் பகிர்மான கழகமான பவர்கிரிடு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.CC/09/2024

பணி: Trainee Supervisor

மொத்த காலியிடங்கள்: 70

சம்பளம்: மாதம் ரூ.24,000 – 1,08,000

வயதுவரம்பு: 6.11.2024 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்(பவர்), பவர் சிஸ்டம், பவர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் குறைந்தது 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை மூலம் படிப்பை முடித்தவர்கள், தொலைத்தூர் கல்வி முறையில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பத்தாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூருவில் நடைபெறும். தேர்வு உத்தேசமாக 2025 ஜனவரியில் நடத்தப்படலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற இணையதளம் ஆன்லைன் மூலம் வரும் 6 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் எழுத்துத்தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சாதாரண வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

தென்கரை கோயிலில் சூரசம்ஹாரம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

thenkarai temple kantha sasthi soorasamharam - 2026
#image_title

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோவில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு 

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு  சூரசம்ஹார விழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2 தேதிஅன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்றைய முன் தினம் மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் கோவில் முன்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல்முருகா,வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள விநாயகர் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பரசுராமன் என்ற கண்ணன் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது 

விழா ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டி செய்திருந்தனர். கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன், பிரதோசம் கமிட்டியினர்  உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸார் பாதுகாப்பு செய்திருந்தனர். தென்கரை ஊராட்சி சார்பாக கூடுதலான சுகாதார பணி, கூடுதலான தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும் சூரசம்ஹார விழா, தச்சம்பத்து ஆறுமுகம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. அன்னதான ஏற்பாடுகளை ஆதித்யா புட்ஸ் உரிமையாளர் செந்தில் செய்திருந்தார்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்… சூரசம்ஹாரம்!

karur soorasamharam - 2026
#image_title

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆறுமுகசாமி அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என சுவாமி தரிசனம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி விழா கடந்த 02-ஆம் தேதி சிறப்பான முறையில் தொடங்கியது.

அதை முன்னிட்டு கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விசேஷ பூஜைகள் மற்றும் பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்தார்.

தொடர்ந்து விழாவின் ஆறாம் நாளான இன்று காலையில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

பின்னர் மாலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக உற்சவர் சுவாமி ஆறுமுகங்களை கொண்டு கோவிலின் உள் பிரகாரம் பாதையில் வலம் வந்து சூரபத்ம அசுரனை வேல் கொண்டு அழிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தத்ரூமான முறையில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் சுவாமி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் காண கரூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷங்களை எழுப்பியவாறு முருகப்பெருமானை மனம் உருகி தரிசனம் சென்றனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மதுரை மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி – சூரசம்ஹாரம்!

thiruparankundram murugan temple sasthti vizha - 2026
#image_title

மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயம், தென்கரை மூல நாத சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், அழகர் கோவில் சோலைமலை முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , மதுரை அண்ணாநகர் தாசில்தா நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயம்,
வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம் ஆகிய கோயில்களில் கந்தசஷ்டி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றது.

பக்தர்கள் முருகனுக்கு, பால், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், பக்தருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முருகன் கோவிலில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கந்த சஷ்டி முன்னிட்டு சூரசம்காரம் நடைபெற்று நடைபெற்றது.

இதே போல தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்தில், சூரசம்காரம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கிய சேவாபாரதி!

sevabarathi veedu vazhangum vizha - 2026
#image_title

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர்.

இந்த நிலையில், சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு தொடங்கி, பல்வேறு சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சேவையின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி அமைப்பின் சார்பில் புதிய வீடுகள் கட்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் புதிய வீடுகளை அந்தக் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் திரு.மாசாண முத்து (Ex) IPS அவர்கள் தலைமை தாங்கினார் , சிறப்பு அழைப்பாளராக ZOHO Foundation நிறுவனத்தின் CEO பத்மஸ்ரீ திரு. ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

sevabarathi veedu vazhangum vizha2 - 2026
#image_title

நிகழ்ச்சியின் சிறப்புரை அகில பாரத சக சேவா பரமுக் திரு. அ. செந்தில் குமார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தென் பாரத தலைவர் திரு. இரா. வன்னியராஜன் ஆகியோர் வழங்கினர்.

அத்துடன், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் திரு. ஹரிகிருஷ்ணகுமார், RSB அகில பாரத பொறுப்பாளர் திரு. பத்மகுமார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக அமைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சேவா பாரதி அமைப்பின் இந்த முயற்சி, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மீட்டெடுக்க உதவியாக அமைந்துள்ளது.

செங்கோட்டை: சூரசம்ஹார விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

sengottai soorasamharam 2024 - 2026
#image_title

செங்கோட்டையில், கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுந்தோறும் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதேபோல, இந்த ஆண்டும் கந்த சஷ்டித் திருவிழா – விழாவை முன்னிட்டு இன்று காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இந்தநிலையில் மாலை 4 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் முருகபெருமான் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். பின்னர் 5.30 மணிக்கு ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார்.

அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோஹரா, கந்தனுக்கு அரோஹரா கோஷத்துடன் முருகப் பெருமானை தரிசித்தனர்.

நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

லகு ரக வாகன உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

supreme court of india - 2026

வாகன உரிமம் – அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

இலகு ரக வாகன உரிமம் பெற்றவர்கள் 7500 கிலோவிற்கு மிகாமல் இருக்கும் சரக்கு வாகனங்களை ஓட்டலாம் என்று, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், சரக்கு வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு காப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வந்தன. 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், குறிப்பிட்ட விபத்தில் வாகனம் ஓட்டிய நபர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தார். ஆனால், அவர் ஓட்டிச் சென்ற வாகனம் போக்குவரத்து வாகனம் என்பதால், அதற்கான காப்பீட்டுப் பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது: 

இலகு ரக வாகனத்திற்கும், போக்குவரத்து வாகனத்திற்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. இதற்காக தனித்தனி ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தாலும், இலகு ரக உரிமம் வைத்துள்ளவர்கள் 7,500 கிலோ வரை எடைகொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி உள்ளது.

சில வாகன விபத்துகளில் போக்குவரத்து வாகனத்தை இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் இயக்கி விபத்தில் சிக்கும்போது இதைக் காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுப் பணத்தை வழங்க மறுப்பது சட்ட விரோதம்  – என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நாளை திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்! விரிவான ஏற்பாடுகள்!

1710825 tiruchendu 1 - 2026

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடந்து வரும் நிலையில் முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நாளை 7.11.24 வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு முறைமைகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும் சூரசம்ஹாரம் எனும் நிறைவுப்பகுதி திருச்செந்தூரில்தான் விசேஷமாக நடைபெறுகிறது.

அறுபடை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத இடம் திருத்தணிகை. முருகப்பெருமான் சினம் தணிந்து அருளும் இடம் என்பதால் மற்ற தலங்களில் நடப்பது போல கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இங்கே நடைபெறுவது இல்லை.

கந்த சஷ்டி ஐதீக விழாவாகவே இங்கே கொண்டாடப்படுகிறது. ஆனால் திருச்செந்தூரில் கடற்கரையில் இந்த விழாதான் அதிமுக்கியம்.இந்த ஆண்டு 7.11.2024 அன்று மாலை 4.15 மணி முதல் 6.00 மணிக்குள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மஹா சூரன், சிங்கமுகன், பானு கோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களின் பெரிய உருவங்கள் கடற்கரையில் நிற்கும்.

வீரபாகு மற்றும் பாலசுப்பிரமணியர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் ஆகியோரின் திருவுருவங்கள் தனித்தனி தேர்களில் கொண்டு செல்லப்படும்.சூரபத்மன் என்ற அரக்கனின் முழுப் போரும் இறுதி வீழ்ச்சியும் இயற்றப்படும்.

இந்த சடங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும். பக்தர்கள் அமைதியுடனும், வசதியுடனும் இத்திருவிழாவைக் கண்டு தரிசிப்பார்கள். அன்று கடலே சற்று உள்வாங்குவதோடு சிவப்பு நிறத்தோடு காட்சி தருவதும் உண்டு.இந்த சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்தில் ஆண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதற்கு சாயா அபிஷேகம் என்று பெயர்.

கந்த சஷ்டி விரதமிருந்து இந்த சூரசம்ஹார விழாவை நினைத்தாலும் தரிசித்தாலும் நம் அசுர எண்ணங்கள் மாயும். அகம் சிறக்கும். நல்வாழ்வு பிறக்கும்.

திருச்செந்தூரில் சூரசம்கார விழாவை காண வரும் பக்தர்கள் வசதிக்காக திருநெல்வேலி நாகர்கோவில் மதுரை தென்காசி உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பசுக்களை இயக்குகிறது இது போல் தென்னக ரயில்வே தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும் வியாழக்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சிறப்பு முறையில் இயக்குகிறது

பக்தர்களின் வசதிக்காக மேலும் கூடுதல் ரயில்களை திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கும் திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கும் பயணிகள் ரயில் இயக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்