Home Blog Page 187

பாக்., சீனாவை எதிர்கொள்ள நவீன ரக லேசான பீரங்கி!

light tank by drdo - 2026

உயரமான மலை பிராந்தியங்களில், சீனாவின் சவாலை முறியடிக்கும் வகையில், ‘ஜோராவார்’ என்ற இலகு ரக போர் பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இரண்டே ஆண்டுகளில், குஜராத்தின் ஹசிரா பகுதியில் உள்ள ‘எல் அண்டு டி’ ஆலையில் இந்த பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., மற்றும் ‘எல் அண்டு டி’ நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போரில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, மலைப்பகுதிகள் மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வேகமாகச் செயல்படும்படி இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 25 டன்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் தனியார் நிறுவனமான Larsen & Toubro (L&T) ஜோராவார் லைட் டேங்கின் முதல் முன்மாதிரியை வெளியிட்டது. குஜராத்தின் ஹசிராவில் உள்ள L&Tல் இந்த டேங்க் ஏற்கெனவே அதன் உள்மட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ளது.

இந்த இலகு ரக பீரங்கி சோராவர், மிகக் குறுகிய காலத்தில் – 24 மாதங்கள் அல்லது இரண்டு வருடங்களுக்குள் – உருவாக்கப்பட்டுள்ளதாகவும், லடாக் மற்றும் சிக்கிமின் உயரமான பகுதிகளில் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. சோராவர் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அங்கு அதன் செயல்திறன் மற்றும் திறன்கள் பாலைவன மற்றும் உயரமான பகுதிகளில் அடையாளம் காணப்படும்.

இந்திய இராணுவத்தின் தரமான தேவைகளின் (QRs) படி, டேங்கின் எடை 25 டன் ± 10 சதவீதம் இருக்க வேண்டும். எல்லாம் சரியாக நடந்தால், சோதனைகளை எதிர்கொண்டு தேர்வாகும் பட்சத்தில், ஜோராவார் 2027 ஆம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வரும்.

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில், ராணுவ நடவடிக்கைகளுக்காக 350 இலகுரக டாங்கிகளை ராணுவம் எதிர்பார்க்கிறது. 2020ல் லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சீனர்கள் ZTQ-15 லைட் டேங்கைப் பயன்படுத்தியபோது ஒரு இலகுவான டேங்கை உருவாக்க வேண்டிய தேவை வந்தது.

இந்திய ராணுவம் டி-72 மற்றும் டி-90 டேங்கிகளை டெம்சோக்கிலும், லடாக்கில் உள்ள டெப்சாங்கிலும் எதிர்ப்புப் போருக்கு ஏற்ற நிலப்பரப்புகளில் இயக்குகிறது. இருப்பினும், T-90 மற்றும் T-72 சராசரியாக 15,000 அடிக்கு மேல் உயரம் கொண்ட உயரமான பகுதிகளில் 40 டன்களுக்கும் அதிகமான எடையைக் கொண்டிருப்பதால் அவை செயல்படத் தகுதியற்றவை என கூறப்படுகிறது.

இந்த கனரக டேங்கிகளின் இயந்திர உருவாக்கப்படும் குதிரைத்திறன் சக்தி, அங்குள்ள காற்றின் காரணமாக குறைகிறது. அங்குதான் ZTQ-15 மற்றும் Zorawar போன்ற இலகுரக டேங்கிகளின் தேவை அதிகரிக்கின்றன.

இந்த லகு ரக பீரங்கியின் உருவாக்கல் காலக்கெடு மிகவும் குறுகியதாகவே இருந்துள்ளது. அதாவது, இரண்டு வருடங்களுக்கும் குறைவானது. 2022 மார்ச் மாதத்தில் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த லகுரக பீரங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 59 பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படுவதாகவும், இரண்டாம் கட்டமாக 295 பீரங்கிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த சோதனைகள் முடிவடையும்.

வெளியிடப்பட்ட படங்களின் டேங்கியில் ஜான் காக்கரில்ஸ், பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட உற்பத்தியாளரின், 105 மிமீ கோபுரத்தை எடுத்துச் செல்வதைக் காணலாம். இது வெப்பக் காட்சிகள், இரவு நேர சண்டை திறன்களைக் கொண்டிருக்க வேண்டும், அடுத்து, குழாய் மூலம் ஏவப்படும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை ஏவ முடியும்.

ரௌடி லிஸ்ட்… செல்வபெருந்தகை Vs அண்ணாமலை!

annamalai bjp tn leader - 2026

ரௌடி என குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆதாரம் கேட்க, அதற்கு பட்டியல் போட்டு பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

‘ நான் ரௌடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?” என செல்வபெருந்தகை சவால் விடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:

அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அவர் ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா? தலித் சமூகத்தைச் சேர்ந்த என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் சிறை செல்ல நேரிடும். இந்த நாடும், சட்டமும், நீதிமன்றமும், போலீசாரும் அண்ணாமலைக்கு சொந்தம் என நினைக்கிறார். நான் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமின் கிடைக்குமா?.

ஆணவமும், திமிரும் அண்ணாமலைக்கு எங்கே இருந்து வந்தது. தமிழக பா.ஜ.,வில் உள்ளவர்கள் மீது மொத்தம் 834 வழக்குகள் உள்ளது. இதில் 124 குற்ற வழக்குகள். ஆம்ஸ்ட்ராங் கொலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன் என அண்ணாமலை சொல்கிறார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசும் அண்ணாமலைக்கு நாகரீகம் இருக்கிறதா? – என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் . செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை.

  • ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி
  • 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
  • 2003 வழக்கு எண் 136/2003 இபிகோ 307 – கொலைமுயற்சி
  • 2003 வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
  • 2003 வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்
  • 2003 வழக்கு எண் 451/2003 இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.
  • இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2008 வழக்கு எண் 1464/2008 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்

கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.

குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்?

வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை.

செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

இலவச மருத்துவக் காப்பீடு… ரூ.10 லட்சமாக உயருமா?

nirmala sitharaman budget 2023 - 2026

இலவச மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக உயருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைவோா் எண்ணிக்கை மற்றும் காப்பீட்டுத் தொகையை இரு மடங்காக உயா்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான அறிவிப்பு வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

தற்போது இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதை ரூ.10 லட்சமாக உயா்த்தவும், பயனாளிகள் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, 70 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த முடிவுகளை படிப்படியாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

2024 இடைக்கால பட்ஜெட்டில் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது. இதன் மூலம் ஒதுக்கீட்டுத் தொகை ரூ.646 கோடியில் இருந்து ரூ.7,200 கோடி வரை உயா்ந்தது. மொத்தம் 12 கோடி குடும்பங்களுக்கு இந்த மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அளித்துள்ளது.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சோ்க்கப்படுவாா்கள் என்று அறிவித்தாா். இதன் மூலம் 5 கோடி புதிய பயனாளா்கள் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது.

தூண்டி விடப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் போராட்டம்; நீதிமன்றம் முடிவுகட்ட வேண்டும்!

hindumunnani - 2026

தமிழகத்தில் தூண்டி விடப்படும் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் மாண்புமிகு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்துமுன்னணி அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு , சட்டவல்லுநர்களின் கருத்துரைகளைப் பெற்று , பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு , நாட்டின் குடியரசுத்தலைவரால் ஒப்புதல் வழங்கப்பெற்ற பின்பு மூன்று சட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் கூட இந்த மூன்று சட்டங்களும் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த புதிய மூன்று சட்டங்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக திமுக அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களின் போராட்டத்தை பின்னால் இருந்து தூண்டி வருகின்றனர்.

ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பெருமளவு தேங்கியுள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள் வழக்கு விசாரணை நடைபெறாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது எப்போது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது புரியாத புதிராக உள்ளது.

மேலும் வருகிற 10ம் தேதி தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் அரசின் ஆதரவு இருப்பதால் வழக்கறிஞர்களின் ரயில் மறியல் போராட்டம் மிக சுதந்திரமாக எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் சாதாரண பொது மக்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

நாடு முழுவதும் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமக்களை காப்பாற்றும் வல்லமை மாண்புமிகு நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளதாக மக்கள் எதிர்பார்கிறார்கள். வழக்கறிஞர் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் வழக்கறிஞர்கள் பணியிலிருந்து விலகல் என தொடர்ந்து போராடிவரும் நிலையில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத வழக்குகளில் நீதிமன்றங்கள் மென்மையான போக்கை கடைபிடித்து வருவதால் வழக்கறிஞர்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் நலன் கருதி நீதிமன்றத்திற்குள் சென்று வழக்கு நடத்த நினைக்கும் வழக்கறிஞர்கள் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டப்பட்டு தடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர் பெருமக்கள் ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்கு பலியாகாமல் நாடு முழுவதும் ஏற்கப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை நாமும் ஏற்று அதற்கு ஏற்ப தயாராகி பணிக்கு திரும்ப வேண்டும் என வழக்கறிஞர் பெருமக்களை இந்துமுன்னணி அன்போடு கேட்டுக்கொள்கிறது.

மேலும் மாண்புமிகு உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10நாட்களுக்கு மேலாக முடிவே தெரியாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

தேசிய நெடுஞ்சாலையில் குப்பைக்கு தீவைப்பு; கடும் புகையால் மூச்சுத்திணறல்!

fire and fogs distrub madurai roads - 2026

தேசிய நெடுஞ்சாலையில் குப்பைக்கு தீ வைப்பு: மூச்சுத் திணறல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்!

மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி குப்பைக்கு தீயிட்டு கொளுத்தி, புகை மண்டலத்தை உருவாக்கி, சுகாதார சீர்கேட்டை அரங்
கேற்றுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை பாண்டி கோவில் பை-பாஸ் சாலையில் இருந்து சற்று தொலைவில் வளர்நகர் பிரதான சாலை அமைந்துள்ளது. இதன் அருகே மதுரை- திருச்சி- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கான சாலை உள்ளது. கரை
யோரப்பகுதியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளையும், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கழிவுகளையும் கொட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மதுரை, சென்னை, திருச்சி மார்க்கத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் கன்னியாகுமரி மாட்டுத்தாவணி ஒத்தக்கடை உள்ளிட்ட ஊர்களுக்கு தினமும் ஆயிரக்
கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பயணித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை தினமும் கொட்டி, சுகாதார சீர்கேட்டை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், அடிக்கடி குப்பைக்கு தீயிட்டு கொளுத்தி எரியூட்டிச் செல்வதும் உண்டு.

தீ பற்றி எரிந்து நச்சு வாயுவை ஏற்படுத்தி, வாகனங்களில் பயணிப்போருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர்கள் பலரும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படும் அவலமும் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கால்நடைகள் அங்கும் இங்கும் கழிவுகளை உண்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கும் வண்ணம் உள்ளன. மேலும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பையை கொட்டி, தீ மூட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் தொடரும் வெடி விபத்து! இன்று உடல் கருகி 2 பேர் உயிரிழப்பு!

sivakasiblast - 2026

சிவகாசியில் தொடரும் வெடி விபத்து.. இன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உடல் கருகி 2 தொழிலாளிகள் உய்ரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்.

சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது இதுநாக்பூர் லைசன்ஸ் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெடிமருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சரோஜா , சங்கரவேல் இரண்டு தொழிலாளர்கள் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட சிவகாசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை, போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து எம்.புதுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் காமடைந்த சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஷ்யாவில் பிரதமர் மோடி! உத்ஸாக வரவேற்பு அளித்து கார் ஓட்டிய புதின்!

putin modi meet - 2026

பாரத பிரதமர் நரேந்திர மோதி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரை தடபுடலாக வரவேற்ற ரஷ்ய அதிபர் புடின், தானே கார் ஓட்டி அவரை அழைத்துச் சென்று மரியாதை செய்துள்ளார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ள நரேந்திர மோடியின் முதல் அதிகாரப்பூர்வ அரசு முறை வெளிநாட்டு பயணம் இது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தியர்கள் விவகாரத்தை பிரதமர் மோடி அதிபர் புதினிடம் எடுத்துரைத்ததை அடுத்து, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் டிஸ்சார்ஜ் செய்து இந்தியா திரும்ப வசதி செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இரு ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா – ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, தில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. கடைசியாக, 2019ல் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். மேலும், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது.

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். இந்த காரில், அவருடன், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் உடன் சென்றார். ஹோட்டலுக்கு வெளியே திரண்ட ஏராளமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார்.

மாஸ்கோவில் இன்று, இந்தியா – ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. இதில், பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து, இரு நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய சுற்றுப்பயணத்தை இன்று முடித்துக் கொண்டு, ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டிற்கு இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

பிரதமர் மோடியை காரில் அமர வைத்து ஓட்டிய புடின்

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை, எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, ரஷ்ய அதிபர் புடின் ஓட்டி செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றுமாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 09) பிரதமர் மோடியை எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் ரவுண்டு அடித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

போலிப் புனைவுகளைப் பரப்புவதே காங்கிரசின் சதித்திட்டம்!

modi ji parliament speech - 2026

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்து ஆக்ரோஷமாக காங்கிரஸின் இரட்டை வேடத்தையும் நாட்டுக்கு எதிரான அதன் செயல்களையும் பற்றி பேசினார். அவற்றிலிருந்து..

-தமிழில்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

போலிப் புனைவுகளைப் பரப்புவதே காங்கிரசின் சதித்திட்டம்

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த நாடாளுமன்றம், இந்த உயர்வான அவை, அர்த்தமுள்ள வாதம் விவாதம் உரையாடல்களுக்கானது. இந்த கருத்தாய்வுகளிலிருந்து, அமுதினை வெளியெடுத்து நாட்டுமக்களுக்கு அளிக்கப்பதற்கான, இது தேசத்தின் மிகப்பெரிய மேடையாக கருதப்படுகிறது. ஆனால், நான் இங்கே, பல மூத்த தலைவர்களின் உரைகளைக் கேட்ட பொழுது, கடந்த இரண்டு நாட்களாக, எனக்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இங்கே என்ன கூறப்பட்டது? தேசத்தின் வரலாற்றிலேயே அரசியல் சட்டத்தைக் காப்பதற்கு, முதல் தேர்தல் என்பதே முக்கியமான கருப்பொருளாம். நான் சற்று, அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இப்போதும் கூட இந்தப் போலிப் புனைவைக் கட்டமைப்பீர்களா? நீங்கள் என்ன மறந்து விட்டீர்களா? 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலை? செய்தித்தாள்களுக்குத் தடை வானொலிக்குத் தடை. பேச்சுரிமைக்கும் தடை.

ஒரே ஒரு பிரச்சனைக்காக நாட்டுமக்கள் வாக்களித்தார்கள். ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டி மக்கள் வாக்களித்தார்கள், அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற உலகெங்கிலும், இதை விடப் பெரிய தேர்தல் இதுவரை நடந்ததேயில்லை. மேலும் பாரத நாட்டவரின் நாடிநரம்புகளில் ஜனநாயகம் எத்தனை உயிர்ப்போடு இருக்கிறது, இதை 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால் நீங்கள் தேசத்தை ஏமாற்ற நினைக்கிறீர்களா?

அரசியல் சட்டத்தை நிலைநிறுத்திய மிகப்பெரிய தேர்தல், அது தான் என்று நான் கருதுகிறேன். மேலும் அப்போது, தேசத்தின் விவேகம் நிறைந்தவர்கள், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற, அப்போது ஆட்சியில் இருந்தவர்களை வேரடி மண்ணோடு கிள்ளி எறிந்தார்கள். மேலும் இந்த முறை, அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும் தேர்தல் என்றால், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற, எங்களையே உகந்தவர்கள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தை நாங்கள் காப்பாற்றுவோம் என்று எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. சரி தான், அரசியல் சட்டத்தை யாராலாவது காக்க முடியும் என்றால், இவர்களால் தான் அது முடியுமென்று, நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரத்தை அளித்திருக்கிறார்கள்.

நம்பிக்கைதரும் அரசியலுக்கு வெற்றித் திருமகளை உரித்தாக்கிய மக்கள்

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, பத்து ஆண்டுகளாக, தடையில்லாத ஒருமுனைப்பான தொடர்ச்சியான, சேவை…. உணர்வுடன் செய்யப்பட்ட செயலினுக்கு, தேசத்தின் மக்கள், உளமார்ந்த ஆதரவை நல்கியிருக்கின்றார்கள். தேசத்தின் மக்கள், நல்லாசிகளை வழங்கியிருக்கின்றார்கள்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்தத் தேர்தலிலே, தேசத்தின் மக்களின் புத்திசாலித்தனத்தின் மீது பெருமை ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்கள், பொய்ப்பிரச்சாரத்தைத் தோற்கடித்திருக்கிறார்கள். தேசத்தின் மக்கள், செயல்திறனிற்கு முதன்மை அளித்திருக்கின்றார்கள்.

பொய் பிம்பத்தைக் கட்டமைக்கும் அரசியலை, தேசத்தின் மக்கள் மறுதலித்திருக்கிறார்கள். மேலும், நம்பிக்கை தரும் அரசியலுக்கு, வெற்றித் திருமகளை உரித்தாக்கியிருக்கிறார்கள்.

பிரதமரை விட உயர்ந்த நிலையில் சிலரை வைத்து மன்மோஹன் சிங் அவர்களை அவமானம் செய்த காங்கிரஸ்

கடந்த அரசாங்கத்திலே, பத்தாண்டுகள், அமைச்சரவையிலே இருந்தவர் நம் கட்கே அவர்கள். என்ன நடந்தது? பிரதம மந்திரி……….. அரசியலமைப்புச்சட்டப் பதவி. பிரதம மந்திரியின் பதவிக்கு மேலே, தேசிய ஆலோசனைக் குழு அமர்வது, இது எந்த அரசியலமைப்புச்சட்ட முறையிலே இருக்கிறது? எந்த அரசியல்சட்டத்திலிருந்து இதை நீங்கள் ஏற்படுத்தினீர்கள்?

நீங்கள் தேசத்தின் பிரதம மந்திரி பதவியின் கண்ணியத்தினை, தவிடுபொடியாக்கியிருந்தீர்கள். மேலும், ரிமோட் பைலட்டாகச் செயல்பட்டு, நீங்கள் அவர் தோளிலேறி சவாரி செய்தீர்கள். எந்த அரசியல் சட்டம் உங்களுக்கு அனுமதி வழங்கியது? மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, எங்களுக்கு உண்மையை உரைக்க வேண்டும். எந்த அரசியல்சட்டத்தின் அடிப்படையிலே, ஒரு அவையினுடைய, அமைச்சரவையின் தீர்மானத்தை, பொதுப்படையாக, கிழிக்கின்ற உரிமையை அளிக்கிறது கூறுங்கள்? அது எந்த அரசியலமைப்புச் சட்டம்? எதனடிப்படையில் கிழிக்கப்பட்டது?

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நம்முடைய தேசத்திலே, எழுத்துவடிவிலே மரபுச்சீர்முறை இருக்கிறது. குடியரசுத்தலைவர் உபகுடியரசுத்தலைவர் பிரதம மந்திரி அவைத்தலைவர், என ஒரு கிரமம் உண்டு.

யாராவது எனக்குச் சொல்லுங்கள். இந்த அரசியல்சட்டத்தின் மாட்சிமையைச் சுக்குநூறாகத் தகர்த்து, மரபுச்சீர்முறையிலே, ஒரு குடும்பத்திற்கு முதன்மை எப்படி அளிக்கப்பட்டது… அது என்ன அரசியலமைப்புச் சட்டம்? அரசியலமைப்புச் சட்டப் பதவிகளை வகித்தவர்கள் பின்னிலையிலா?

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னிலையா? அரசியல்சட்டத்திற்கு எந்த மாதிரியான மரியாதையை நீங்கள் அளித்தீர்கள்?

இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்களை எங்கள் அரசு தண்டிக்கும்!

modi ji parliament speech - 2026

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்து ஆக்ரோஷமாக காங்கிரஸின் இரட்டை வேடத்தையும் நாட்டுக்கு எதிரான அதன் செயல்களையும் பற்றி பேசினார். அவற்றிலிருந்து..

— தமிழில் / குரல் : ஆர்.சுதர்ஸன் —

அவசரநிலைக்காலம் அதிகாரப் பேராசை மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கு எதிரானதும் கூட

எமர்ஜென்ஸி. சுயநலத்தின் உச்சகட்டம். அதிகாரப் பேராசை காரணமாக, யதேச்சாதிகார மனோநிலை காரணமாக, தேசத்தின் மீது திணிக்கப்பட்டது. யதேச்சாதிகார அரசின் ஆட்சி. தேசத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பினையும், சின்னாபின்னப்படுத்தும் பாவம் புரியப்பட்டது.

அரசாங்கங்களை, கவிழ்ப்பது, ஊடகங்களை நசுக்குவது, அனைத்துவிதச் அராஜகங்களும், அரசியல் சட்டத்தின் உணர்வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு சொல்லுக்கு எதிராகவும் இருந்தன.

இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்யும் சூழலமைப்புகள் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று எச்சரிக்கும் மோதிஜி

2014இலே, அரசாங்கப் பொறுப்புக்கு வந்த பிறகு, தேசத்தின் முன்பாக, ஒரு மிகப்பெரிய சவால் என்றால், காங்கிரஸின் சூழலமைப்பும் ஒன்றாக இருந்தது. இந்த அமைப்புத் தான், 70 ஆண்டுக்காலம் வரை, தழைத்துச் செழித்திருந்தது. இந்தச் சூழலமைப்பிற்கு நான், எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

இந்தச் சூழலமைப்பு உறுதியாக இருக்கிறது, இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தைத் தடுப்போம் என்று. தேசத்தின் முன்னேற்றத்தை தடம் புரளச் செய்வோம் என்று. நான் இன்று இந்த, சூழலமைப்பிற்குத் தெரிவிக்க விரும்புகிறேன், அதனுடைய அனைத்துச் சதிகளுக்குமான பதில், இப்போது அதன் மொழியிலேயே கிடைக்கும்.

இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்கள் அனைவரையும் எங்கள் அரசாங்கம் தண்டிக்கும்

மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் அவர்கள், தன்னுடைய பேருரையினிலே, வினாத்தாள் கசிவு குறித்தும் கவலை தெரிவித்திருந்தார். நானும் கூட, தேசத்தின் அனைத்து மாணவர்களுக்கும், தேசத்தின் அனைத்து இளைஞர்களுக்கும் கூற விரும்புகிறேன். எங்கள் அரசாங்கம், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதிலே, மிகவும் தீவிரமாக இருக்கிறது.

மேலும் போர்க்கால வேகத்திலே, நாங்கள், எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிப் பார்ப்பவர்களை, கண்டிப்பாகத் தப்பிக்க விட மாட்டோம்.

நீட் தேர்வு விஷயத்திலே, ஒட்டுமொத்த தேசத்திலும், தொடர்ந்து கைதுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசாங்கம், முன்னமே கூட, ஒரு கடுமையான சட்டத்தை இயற்றியிருக்கிறது.

தேர்வுகள் நிர்வகிக்கப்படும், ஒட்டுமொத்த அமைப்பினையும், ஒழுங்குபடுத்துவதற்காக, அவசியமான முன்னெடுப்புகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தங்கள் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும்!

modi ji parliament speech - 2026

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்கும் ராகுல் பேச்சுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

3ஆவது முறையும் ஆட்சியை ஒப்படைத்திருக்கும் மக்களாகிய மகேசர்கள்

என்னைப் போல இந்த தேசத்திலே பொதுவாழ்க்கையிலே பலர் இருக்கிறார்கள்.   அவர்கள் குடும்பத்திலே யாரும், கிராமத்தலைவராகக் கூட இதுவரை இருந்ததில்லை, கிராமமன்ற உறுப்பினராகவும் இருந்ததில்லை.   அரசியலிலே எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.   ஆனால் இன்று, பல மகத்துவம் வாய்ந்த பதவிகளை, அடைந்து விட்டு, தேசத்திற்கு சேவை புரிந்து வருகிறார்கள்.  

இதற்கான காரணம் என்றால், பாபாசாகேப் ஆம்பேட்கர் அளித்திருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தான், இது தான் எங்களைப் போன்றோருக்கு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது. 

மேலும் என்னைப் போன்ற அநேகர் இருக்கின்றார்கள், இவர்களுக்கெல்லாம், பாபாசாகேப் ஆம்பேட்கர் வாயிலாக அளிக்கப்பட்ட அரசியல்சட்டம், இதுவரை வருவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது.  

மேலும் மக்களாகிய மகேசர்கள் அதன் மீது தங்கள் ஆமோதிப்பை அளித்திருக்கிறார்கள்.   3ஆவது முறையும் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். 

தன்னுடைய பாதுகாப்பிற்காக, பாரதம், எதை வேண்டுமானாலும் செய்யும்

2014ற்கு முன்பாக,  அப்படியும் ஒரு காலம் இருந்தது, அப்போதெல்லாம், தீவிரவாதிகள் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்துக்கு, இஷ்டத்துக்கு வருவார்கள், தாக்குதல் நடத்துவார்கள்.   ஆனால் அரசாங்கங்களோ, சும்மாவே பார்த்திருந்தார்கள்.  

வாயைத் திறக்கக்கூட திராணியில்லாமல் இருந்தார்கள்.   இன்று, 2014ற்குப் பிறகான இந்துஸ்தானம், வீட்டிற்குள்ளே புகுந்து திருப்பி அடிக்கிறது.   மேலும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் கூட, பாடம் புகட்டும் வல்லமையை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம். 

தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிவான், தன்னுடைய பாதுகாப்பிற்காக, பாரதம், எதை வேண்டுமானாலும் செய்யும் என்று.

எங்களைத் தோற்கடித்து விட்டது போன்ற பிரமையை நிலைநாட்ட முயற்சி செய்யும் காங்கிரஸ்

காங்கிரசின் வரலாற்றிலேயே, இது தான் முதல் தடவை.   அவர்கள் தொடர்ந்து மூன்று முறைகளாக, காங்கிரஸால் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை.   தன்னுடைய தோல்வியை, காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமேயானால் நன்றாக இருக்கும். 

மகேசர்களான மக்கள் அளித்திருக்கும் கட்டளையை, சிரமேற் தாங்க வேண்டும்.   ஆனால் இவர்களோ, தலைகீழாக அல்லவா நின்று கொண்டிருக்கிறார்கள்!!   மேலும் காங்கிரஸ், மற்றும் அதன் சூழலமைப்பு, இந்தியாவின் குடிமக்களின் மனதிலே, எங்களைத் தோற்கடித்து விட்டது போன்ற பிரமையை, அவர்கள், நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.