இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை: நாடாளுமன்றத்தில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும் , மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது.
மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தபால் மூலம் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.
துறவியர் பேரவை வழங்கிய மனுவில், மதுரை எம் .பி. சு. வெங்கடேசன் செங்கோல் பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் நாடாளுமன்றத்தில் தவறாக பேசியதாகவும், அவர் விதியை மீறியதாக, அவர் எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, பேரவை நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தன், தலைமையில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்து துறவிகள் பேரவை, எல்லாம் வல்ல சித்தர் ஆசிரமம், மதுரை என்று குறிப்பிட்டு ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது…
பொருள்: அருள்மிகு சொக்கநாதர் மற்றும் பாண்டிய சேர, சோழன் போன்றவர்கள் செங்கோல் ஏந்தி 1000 பெண்கள் அந்தபுரத்தில் வைத்தது இருந்ததாக அவமானப்படுத்தி பேசி மதுரை வெங்கடேசன் M.P.கண்டித்து
வணக்கங்கள், மேற்கண்ட அமைப்பில் அமைப்பாளராக இருக்கின்றேன். கடந்த இரண்டு நாள் முன்பு பாராளுமன்றத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் தொடர்ந்து தமிழக பண்பாடு கலாசாரம், பாரதபண்பாடு கலாசாரம் அனைத்தையும் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரைக்கு பதில் அளிக்கும் படி பேசினார்கள். அருள்மிகு சொக்கநாதர் செங்கோல் ஏந்தி ஆட்சிபுரிந்தார். இப்போழுது பட்டாபிசேக விழா நடத்தபட்டு வருகிறது. 64 திருவிளையாடல் மூலம் மக்கள் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
அதில் பட்டாபிசேக விழா இப்பொழுதும் நடைபெற்று வருகிறது. மற்றும் பாண்டிய மன்னர்களையும் சேர சோழன் மன்னர்களையும் சேதுபதி மன்னர்களையும் செங்கோல் ஏந்தி 1000 பெண்கள் அந்தபுரத்தில் வைத்து உடல் உறவில் ஈடுபட்டார்கள் என மிக மிக கொச்சையாகவும் அவமான படுத்தியும் பேசி இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய சொற்கள் மிக மிக கொடுரமானது. அவர் தொடர்ந்து அவமானப் படுத்தி பேசி உள்ளார்கள்.
புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா சமயத்தில் ராமர் படம் இருந்ததை அவமானப்படுத்தி பேசி இருக்கிறார்கள்
அடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விழா சமயத்தில் போது முதலிரவு எப்போது என பேசி இருக்கிறார்கள்.
எம்.பியாக உள்ள திரு.வெங்கடேசன் பாரத நாட்டு கலாசாரத்தையும் தமிழக பண்பாட்டையும் கோயில் வழிபாட்டையும் இறைவனையும் இறைவியையும் மற்றும் சேர சோழ பாண்டியர்களையும் மற்றும் அவர்கள் வழி தோன்றல் அனைத்து மக்களையும் மிக மிக கொடுரமாக அவமானபடுத்தி பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள்.
யாரையும் அவமானபடுத்த மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்ற மதுரை எம்.பி வெங்கடேசன் வேண்டும் என்றே தொடர்ந்து கொடுரமாக அவமான படுத்தி பேசி இருக்கிறார்கள். ஆகையால் எம்.பி வெங்கடேசன் அவர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கோவில் கும்பாபிஷேகத்திற்காக அவசர கதியில் அரைகுறையாக திருப்பணிகள் நடைபெறுவது நியாயமா? என்று கேட்டு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஸ்தாணுமாலய சுவாமிகள் திருக்கோவிலில் அவசர கதியியில் கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வருகின்றன.
தமிழக அரசு அதிக எண்ணிக்கையில் திருப்பணி செய்ததாக கணக்கு காட்டி பெருமை பேச வேண்டும் எனும் நோக்கத்தில் வேலைகளை முறையாகவும், முழுமையாகவும் முடிக்காமல் கோவில்களில் கும்பாபிஷேகத்தை தான்தோன்றி தனமாக நடத்தி வருகின்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இக்கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மேல்புறம் உள்ள ஓடுகள் பதிக்கப்பட்டு 40 ஆண்டு காலத்திற்கும் மேலாகிறது. அதில் பல இடங்களில் வெடிப்பு, விரிசல் ஏற்பட்ட நிலையில் 90 ஆயிரம் சதுர அடி கொண்ட மேல் தளத்தில் 20000 கன அடி மட்டுமே தல கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கொடிமரமும் சாய்ந்த நிலையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலிலும் இதே போல் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் திருக்கோவிலிலும் இதுபோலவே அரைகுறையான வேலைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அங்குள்ள பக்தர்கள் வேதனையுடன் கூறுகையில் இத்திருக்கோவிலில் பாலாலய வேலைகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றது. கடந்த ஆண்டு பக்தர்கள் சார்பில் கோவிலின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட பின்பே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்து சமய அறநிலையத்துறை கடந்த வாரம் எந்த வேலையும் முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேக யாகசாலை கொட்டகை கால் நட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இது போல் பல திருக்கோயில்களில் சரிவர வேலைகள் முடிக்காமல் கணக்கு காட்டும் நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றது.
பழனி திருக்கோயில் கும்பாபிஷேக முடிந்த பின்னர் சில இடங்களில் தரமற்ற வேலையால் சிதைவுகள் ஏற்பட்டத்தை சுட்டி காட்டுகிறோம். இவ்வாறு கும்பாபிஷேகத்திற்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டு சீர்படுத்த நேரிட்டால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்வதுதான் மரபு.
இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க திருக்கோவில் திருப்பணியை மிகுந்த சிரத்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்.
கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய நிகழ்வு. எனவே அந்த அளவு தரமான திருப்பணி செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யும் திருப்பணிகள் அடுத்த நான்கு ஐந்து வருடங்களிலேயே பழுதடைந்து விடும் நிலையிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு அரைகுறையாக திருப்பணிகள் செய்து அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்துவதால் தங்களது ஊருக்கும் மக்களுக்கும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு பக்தர்கள் ஏராளமான நன்கொடைகள் தருகிறார்கள். தெய்வீக காரியம் சிறப்பாக செய்யவே பக்தர்கள் விரும்புகிறார்கள். அரசோ, அறநிலையத் துறையோ எந்த பங்களிப்பையும் தருவதில்லை. ஆனால் திருப்பணி அனுமதி பெறவே லஞ்சம் தரும் அவலநிலை உள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அங்கீகாரம் பெற்ற ஸ்தபதிகள் தான் இதனை செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அதன் காரணமாக நன்கொடை அளிக்கும் பக்தர்கள் காணிக்கை கொடுப்பதோடு இருக்க வேண்டியுள்ளது. எனவே திருப்பணி சிறப்பாக நடைபெற இந்து சமய அறநிலையத்துறை முழு பொறுப்பாகும்.
எனவே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பக்தர்கள் உணர்வை புரிந்து கொண்டு திருப்பணிகள் தரமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே தமிழகம் முழுவதும் கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து கோவில்களிலும் முறையாக அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
அவசரகதியில் தன்னிச்சையாக, தங்கள் பெருமைக்காக திருப்பணிகள் செய்தால் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் என்பதையும் தெர்வித்துக் கொள்கிறோம்.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம்
சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று (ஜூலை 7) பூஜையுடன் தொடங்கியது.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்,” என்று கூறினார்.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர். திரை உலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் பூஜை இன்று நடந்த நிலையில் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்காவில் அமைந்துள்ள சிற்றூர் ரங்கசமுத்திரம்.
ரங்கசமுத்திரம் சிற்றூரில் ஸ்ரீதேவி & பூதேவி சகிதம் ஸ்ரீ வேங்கடாசலபதி பெருமாள் மெய்யன்பர்களுக்குக் காட்சி தருகிறார். பல்வேறு சிறப்புக்களைப் பெற்றுள்ள இவ்வூர் வேங்கடாசலபதியை தரிசிப்பதின் மூலம் திருமணத் தடைகள் நீங்குவதோடு குடும்ப தோஷங்களும் நிவர்த்தியாகும்.
ரங்கசமுத்திரம் கிராமத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள கோவிலில் கிழக்கே பார்த்து ஸ்ரீ வேங்கடாசலபதி காட்சி தருகிறார். மூலவருக்கு எதிர்த்தார்போல் பட்சி ராஜன் பாங்குடன் தரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. பெருமாள் கோவிலுக்கு எதிரே இரு பக்கமும் வரிசையாக வீடுகள், பழைய காலத்து பாரம்பரிய பாணியில் காட்சியளிக்கின்றன.
சமுத்திரம் என்ற பெயரில் பல ஊர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளன. ஊரின் அருகில் அபிஷேகப்பரி குளம் இருந்ததால், அதனைக் குறிக்கும் வண்ணம் சமுத்திரம் என்று அடைமொழி கொடுக்கிறார்கள். இராவணனைக் குறிக்கும் இரவண சமுத்திரம், வடமலையானைக் குறிக்கும் வடமலை சமுத்திரம், கோபாலனைக் குறிக்கும் கோபால சமுத்திரம் போல ஸ்ரீ ரங்கனைக் குறிப்பது ரங்கசமுத்திரம். ரங்க நாயக்கர் என்பவர் இவ்வூரை ஆட்சி செய்ததால் ரங்க சமுத்திரம் ஆனதாகவும் சிலர் சொல்வர்.
ரங்கசமுத்திரம் கோவிலில் உள்ள மூலவரை புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் வழிபாடு செய்தால் தடைபட்ட திருமணங்கள் உடனே நடந்துவிடுமாம். சாகரம் என்றாலும் சமுத்திரம் என்றாலும் வடமொழியில் ஒரே அர்த்தம் தான். கடல் என்று தமிழில் பொருள் கொள்ள வேண்டும். சம்சார சாகரத்தில் கால் அடி எடுத்து வைக்க ரங்கசமுத்திரம் வேங்கடாசலபதியை வணங்க வேண்டும்.
வைகானச ஆகம முறையில் இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலில் ஆனி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சிறப்பு பூசனைகள் செய்யப்படுகின்றன.
இந்த ஊரில் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால், திரிவேணி சங்கமத்தில் குளித்து, நீத்தார் கடன் செய்ததற்கு உரிய பலன் கிடைக்கும். பொருநை என்றழைக்கும் தாம்பிரவருணி நதி, கருணை நதி என்று அழைக்கப்படும் கடனாநதி, நந்தன் தட்டை கிராமத்து உள்ளூர் ஆறு என்பதால் அழைக்கப்படும் உள்ளாறு ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம்.
நந்தன் தட்டை, ரங்கசமுத்திரம் ஊருக்கு அருகில் உள்ள ஊராகும். இந்த ஊருக்கு பக்கத்தில்தான் முக்கூடல் உள்ளது. பொருநை நதியுடன் கருணை நதி கலக்கும் இடம் ரங்கசமுத்திரம். இவ்வூருக்கு எதிர்கரையில் உள்ள ஊர் திருப்புடை மருதூர்.
காசியில் உள்ள பஞ்சகோசரம் பகுதி போல் இவ்வூரும் சிவசைலம், பாபநாசம், பிரம்மதேசம், அம்பாசமுத்திரம் பகுதிகளோடு இணைந்து ரங்கசமுத்திர கிராமமாய் பஞ்சகோசரப் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் முக்தி அடைவது சிறப்பு.
கல்வெட்டுக்களிலிருந்து ஆதித்த வர்மன் என்ற பாண்டிய மன்னன் இப்பகுதிகளை அரசாண்ட செய்தி தெரிய வருகிறது. இவ்வூருக்கு பக்கத்திலுள்ள பாப்பாகுடி சிவன் கோவில் ஆண்டவருக்கு ஆதித்த வன்மேசர் என்றுதான் பெயர். நான்கு வேதங்களும் தழைத்த ஊர். பழைய கல்வெட்டுக்களில் இப்பகுதியை ராஜசதுர்வேதி மங்கலத்து ரங்கசமுத்திரம் என்றும் அழைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.
நடுவே வித்யா தீர்த்த மடம் உள்ளது. இவ்வூர் மக்கள் வழிவழியாக சிருங்கேரி சங்கராச்சாரியார்களை வழிபடக் கூடியவர்கள். வேங்கடாசலபதிக்கு ஏற்ற உத்ஸவம் கல்யாண உத்ஸவம்தான். எனவே தான் சனிக்கிழமைகளில் அரவணையோடு (சக்கரப்பொங்கல்) சுண்டல் நிவேதனம் செய்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்தால் சீக்கிரமே திருமணம் நடக்கும் என்றும், தடைப்பட்ட திருமண தோஷம் தானாகவே விலகும் என்றும் பரம்பரையாக இவ்வூர்க்காரர்கள் நம்புகிறார்கள்.
அம்பாசமுத்திரம் & முக்கூடல் பாதையில் அமைந்துள்ள இவ்வூருக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.
330 கிமீ வரை செல்லும் உலகின் முதல் சிஎன்ஜி பைக் பஜாஜின் ஃப்ரீடம் 125 அறிமுகமாகியுள்ளது. இதன் விலை குறைவு என்பதுதான் ஈர்க்கும் அம்சம்!
பஜாஜ் ஆட்டோ உலகின் மற்றும் நாட்டின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. பஜாஜ் இந்த பைக்கை மூன்று வகைகளில், 330 கி.மீ வரை ரேஞ்ச் செல்லும் வகையில் உருவாக்கி உள்ளது. பஜாஜ் முதல் CNG பைக் ஃப்ரீடம் 125 பாரதத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் விலை 95,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோலுக்கான சிங்கிள் ஸ்விட்ச் கொண்ட பைக்கில் இருப்பது சிறப்பு. அதாவது பெட்ரோலில் இருந்து சிஎன்ஜிக்கு அல்லது சிஎன்ஜியில் இருந்து பெட்ரோலுக்கு மாறினால் பைக்கை நிறுத்த வேண்டியதில்லை.
மேலும் பல சிறப்பு வாய்ந்த அம்சங்கள் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 7 டூயல் டோன் வண்ணங்களில் கிடைக்கிறது. புதுமையான தொழில்நுட்ப பேக்கேஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. வலுவான ட்ரெல்லிஸ் பிரேம் மற்றும் இணைக்கப்பட்ட மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப்களை வழங்கியுள்ளது. இது தற்போது மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்று.
வெளிப்புறம், இரட்டை வண்ண கிராஃபிக் வடிவமைப்புடன் காணப்படுகிறது. பைக்கில் 125சிசி இன்ஜின் உள்ளது. இதனுடன் 2 கிலோ எடையுள்ள சிஎன்ஜி டேங்க் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் 330 கிமீ ரேஞ்ச் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த பைக் அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம்மில் 9.5 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 9.7 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உருவாக்குகிறது. இதில் மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது அதிக ஸ்திரத்தன்மையை அளிக்கிறது. சிஎன்ஜியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களாக, இது 780 மிமீ நீள இருக்கையைக் கொண்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை 3 வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இங்கு Freedom 125 NG04 Disc LED, Freedom 125 NG04 Drum LED, Freedom 125 NG04 டிரம் போன்ற தேர்வினைப் பெறுவார்கள்.
பைக்கின் அடிப்படை வேரியண்ட் விலை ரூ.95,000. மிட் வேரியண்ட் ரூ.1.05 லட்சம் மற்றும் டாப் வேரியண்ட் ரூ.1.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பைக்கின் முன்பதிவு தொடங்கியுள்ளது, படிப்படியாக இந்த பைக் நாட்டின் பல்வேறு நகரங்களில் கிடைக்கும்.
ஃபிரீடம் 125 என்ஜி04 டிஸ்க் எல்இடியின் விநியோகம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் தொடங்கும். ஆனால் மற்ற இரண்டு வகைகளின் விநியோகம் படிப்படியாகத் தொடங்கும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
செங்கோட்டை ரயில் நிலையம், அந்நாளின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலத்தில் கட்டப்பெற்ற மிகப் பழைமையான பாரம்பரியமான ரயில் நிலையம்! பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில், பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த தமிழகப் பகுதியில் இருந்து, தன்னாட்சிப் பகுதியான திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு அந்நாளில் ரயில் பாதை அமைத்தார்கள். எனவே தான் நூற்றாண்டுகள் பழைமையான ரயில் பாதையாக இந்தப் பாதை அறியப்பட்டது.
எல்லைப் பகுதியில் இருந்த செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவாங்கூர் சமஸ்தானப் பகுதி தொடங்குவதால் இந்த ரயில் நிலையம் மிகப் பெரும் அளவில் கட்டமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
மிகப் பாரம்பரியமான ரயில் நிலையமாக, அதிக அளவிலான பணியாளர்களுடன் பரபரப்பாகத் திகழ்ந்த ஒரு ரயில் நிலையம், இன்று மதுரை கோட்ட நிர்வாகத்தினரின் பாராமுகத்தால் படிப்படியாக அந்தப் பரபரப்பை இழந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது.
செங்கோட்டை ரயில் நிலையத்தில்… மீண்டும் பிட் லைன் வசதி ஏற்படுத்தப் படுமா?! என்ற நமது 2021ம் ஆண்டின் பதிவு… அதில் இருந்து…
100 கி.மீ., தொலைவுக்குள் இரு பிட் லைன் வாய்ப்பு இல்லையாம். திருநெல்வேலியில் பிட்லைன் வசதி உள்ளது. அடுத்து கொல்லம் பெரிய ஸ்டேஷன். ஆனால் கொல்லத்தில் பிட் லைன் தேவை என்று பிரேமசந்திரன் எம்.பி., குரல் கொடுத்தார். ரயில்வே வளர்ச்சி விவகாரங்களில் கேரள எம்.பி.க்களின் செயல்பாடு அலாதியானது.
செங்கோட்டையில் பிட்லைன் வசதி இல்லாத காரணத்தால் தான், பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை – சென்னை சென்று, மறுநாள் சென்னை – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகி, அது மறுநாள் நெல்லை – சென்னை சென்று, பின்னர் சென்னை-செங்கோட்டை பொதிகை ஆகி… ஒரு சுற்று வருகிறது. திருநெல்வேலி பிட் லைனில் வைத்து பராமரிப்புப் பணிகளைச் செய்கின்றனர்.
முன்னர் செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெரும் குடியிருப்பே இருந்தது. இஞ்சின் பராமரிப்பு, இன்சின் பராமரிப்பு கட்டடம், பெட்டிகள் பராமரிப்பு, பிட் லைன், அவற்றுக்கான பொறியாளர்கள் , குடும்பத்தினர் வசிப்பிடம், ரயில்வே மருத்துவமனை, இப்படி பெரிய தளமாக, நிறைய பேர் வசித்து வந்தனர். மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜ் ஆகும் போது, ஒவ்வொன்றாக கழன்று கொள்ள ஆரம்பித்தது. வசிப்பிடங்கள் காலியாயின. மீட்டர் கேஜ் பிட் லைன் மண் மூடி, புதர் வளர்ந்தது.
முன்னர் மீட்டர் கேஜில் 8 பெட்டிகள் பிட் லைனில் விட்டு பராமரித்த இடம்… இப்போது 18 பெட்டிகள், நீளமான 24 பெட்டிகள் கொண்ட பொதிகை .. இதற்கெல்லாம் பிட்லைன் அமைக்க என்றால் ஒரே நீளத்துக்கு நேர் கோட்டில் இடம் வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது செங்கோட்டை ரயில் நிலையத்தில் பழைய பிட் லைனில் இட நீட்டிப்பு செய்தால், ஓர் இடத்தில் அது திரும்பி விடுகிறது. கனமான பாறை உயரத்திலும், கூடவே சில குடியிருப்புகளும் அந்த இடத்தை முட்டுகிறது… என்கிறார்கள்.
ரயில் நிலையத்தில் தற்போது முதல் 4 பிளாட்பாரங்களே பயன்பாட்டில் உள்ளன. அடுத்து பழைய லைனைப் பிரித்து சும்மா இருக்கக் கூடாது என்று… 2 லைன்கள் இன்சின் மாற்ற (5, 6வது ட்ராக்) வைத்திருக்கிறார்கள். இடைப்பட்ட 4வது பிளாட்பார்மில் அதிக அளவிலான இடம் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. இது பயணிகள் புழக்கத்தில் இல்லாதது.
ஒருவேளை எதிர்காலத்தில்… என்ற ரீதியில் வைக்கப் பட்டுள்ளது… ஆனால் இந்த அளவு அதிக அளவிலான இடம் இந்த பிளாட்பாரத்தில் தேவையில்லாதது. இந்த இடத்தில், இரண்டு லைன் அமைக்கப் பட்டு ஒரு பிட் லைன் போட்டிருக்கலாம். ஆனால் கோட்டை விட்டுவிட்டார்கள்.
இப்போது கட்டப்பட்டிருக்கும் 4வது பிளாட்பார்மை இடித்து விட்டெல்லாம் செய்ய முடியாது என்ற சூழல்! எனவே ரயில்வே நிர்வாகம், செங்கோட்டை – பகவதிபுரம் செல்லும் நீட்டிக்கப்பட்ட பகுதியில் பிட் லைன் அமைத்து, குடியிருப்புகளை மீண்டும் புத்துயிர் ஊட்டி, இங்கே விரைந்த சரக்கு போக்குவரத்துக்கும் வழி செய்ய வேண்டும்.
செங்கோட்டை ரயில் நிலையத்தின் பழைய படங்கள்…
செங்கோட்டை ரயில் நிலையத்தில்… மீண்டும் பிட் லைன் வசதி ஏற்படுத்தப் படுமா?! என்ற நமது 2021ம் ஆண்டின் பதிவு… அதில் இருந்து…
தற்போது செங்கோட்டை – திருநெல்வேலி, செங்கோட்டை – விருதுநகர், செங்கோட்டை – புனலூர் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. இவற்றில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி, மதுரை பாதைகளில் மின்சார எஞ்சினில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புனலூர் பாதையில் சோதனை ஓட்டம் முடிந்தும், மின்சப்ளை பிரச்னை காரணமாக செங்கோட்டை – புனலூர் பாதையில் தற்போதும் டீசல் எஞ்சினில் தான் ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் புனலூர் ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்து பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்த தகவல்…
செங்கோட்டை ரயில் தட மின்மயமாக்கல் டிராக்ஷன் சப் ஸ்டேஷன் துவக்குவதில் தாமதம்!
நேற்று 05.07.24 வெள்ளி மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்பாதை ரயில்களை இயக்குவதற்கான புதிய டிராக்ஷன் சப் ஸ்டேஷனில் தெற்கு ரயில்வே மதுரை டிபுடி சீஃப் இன்சினியர் மின்மயமாக்கல் – ரோஹன், பிரதீப் நட்டாலியா துணை பொதுமேலாளர் விக்ரான் கம்பெனி, தானே ஒப்பந்ததாரர் செங்கோட்டை -புனலூர் தடம் மின்மயமாக்கல், தமிழக மின்வாரிய திருநெல்வேலி வட்ட தலைமைப் பொறியாளர் செல்வராஜ் மற்றும் தென்காசி செங்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு சோதனைகள் செய்தனர் .
இவற்றில் தமிழக மின்வாரியம் இந்த டிராக்ஷன் சப் ஸ்டேஷனில் அமைத்த பொறியியல் பணிகள் செவ்வனே செய்யப்பட்டதால் அவை இறுதி செய்யப்பட்டன. ஆனால் ரயில்வே ஒப்பந்ததாரரின் பணிகளில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த சோதனை நேற்று இரவு 11 மணி வரை நீடித்தது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும் என தெரிகிறது என, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலர், பொறியாளர் KH கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் ராமன், எலக்டிரிகல் இன்சினியரிங்கில் பட்டய பொறியாளரான PRO ராமன் கலந்து கொண்டார். அவர் கூறியபோது, டிராக்ஷன் சப் ஸ்டேஷனில் ஒப்பந்ததாரர் எர்திங் பாய்ண்டுகளை பல்வேறு பகுதிகளில் சரியாக அமைக்கவில்லை என்று இந்த ஆய்வின்போது தெரிய வந்தது. பல இடங்களில் சிறிய கோளாறுகள் இருந்தன. நாளைக்குள் 07.07.24 இந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டு டிராக்ஷன் சப் ஸ்டேஷன் தனது பணிகளை துவங்குவதற்கான ஆணை ரயில்வே நிர்வாகத்தால் பிறப்பிக்கப்படும்…” என்றார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே, ஜூலை 6ம் தேதி சனிக்கிழமையே கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, செங்கோட்டை ரயில் நிலைய ட்ராக்ஷன் சப்ஸ்டேஷன் வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக, ஜூன் 26 புதன்கிழமை அன்று, தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கௌஷல் கிஷோர், மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஶ்ரீவத்சவா மற்றும் இதர அதிகாரிகள் இணைந்து, கொல்லம் செங்கோட்டை பாதையை ஆய்வு செய்தார்கள்.
புனலூர் – செங்கோட்டை மலை வழிப் பாதையின் உறுதித் தன்மையையும், புனலூரில் மின்சார உப மின் நிலையம் மற்றும் விரைவில் மின்சார இன்ஜின் மூலம் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது குறித்தும் ஆய்வு செய்து, ஆரியங்காவு கணவாய் முன்னதாக தென்மலை போன்ற இடங்களிலும், வளைவான பகுதிகளிலும் ஆய்வு செய்தார்கள்.
தற்போது 18 பெட்டிகளுடன் இயங்கும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி மற்றும் கொல்லம் – சென்னை ரயில்களில், பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும், இந்த இரு ரயில்களையும் தற்போது அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றி இயக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தற்போது கொச்சுவேலி – கொல்லம் – செங்கோட்டை – தாம்பரம் இடையே இயங்கும் வாரம் இருமுறை குளிர்சாதன ரயிலை நிரந்தரமாக இயக்கவும், சபரிமலை பயணிகளுக்கு புனலூர் மற்றும் செங்கோட்டையில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதிகள் செய்வது குறித்தும் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் வந்த தனி ரயில்செங்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று விட்டு தென்காசி வழி புறப்பட்டு சென்றது. தென்காசி – திருநெல்வேலி மற்றும் தென்காசி – விருதுநகர் வழித் தடங்களையும் இவர்கள் ஆய்வு செய்து சென்றதாகத் தெரிகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது இயங்கும் ஒரே ஒரு பயணிகள் ரயிலான மதுரை – செங்கோட்டை – மதுரை ரயிலை, இரு மார்க்கத்திலும் இரு முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது… என்று தகவல்களைக் கேட்டுத் தெரிவித்தார் நமது நிருபர்.
புதிதாக வசதிகள் வேண்டுமானால், புதிய ரயில்கள் விடப் பட வேண்டுமானால் அதிக அழுத்தம் கொடுத்து, எம்.பிக்கள் அமைச்சரை சந்திப்பதும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுப்பதுமாக இருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த பல வசதிகளை பறித்துக் கொண்ட மதுரை கோட்ட ரயில் நிர்வாகத்திடம் என்ன சொல்லிப் போராடுவதோ?! அதற்கும் மேற்படி மல்லுக்கட்டல் தேவையோ?!
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகிறது.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் மீண்டும் நிதி அமைச்சர் ஆகியுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது புதிதாக அரசு அமைந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
3வது முறையாக மோடி பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதும், தேர்தல்களில் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில், பட்ஜெட் அமையக் கூடும் என்றும் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக, நடுத்தர மக்களின் வருமான வரி தொடர்பில் புதிய கொள்கைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலையை நிகழ்த்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், அங்கிருந்த தனது வீட்டை இடித்துவிட்டு புதிதாக 3 மாடிகளைக் கொண்ட வீட்டைக் கட்டி வந்தார். தினமும் வீடு கட்டும் இடத்தில் சேர் போட்டு அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். பின்னர் அயனாவரம் வேணுகோபால் தெருவில் தற்போது வசித்து வரும் வீட்டுக்குச் செல்வாராம்.
நேற்று இரவும் வழக்கம் போல புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வந்த போதுதான் மர்ம கும்பலால் அவர் சரமாரியாக வெட்டப்பட்டார். கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலை நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. எந்த இடத்தில் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்த பின் நிறைய பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்த உளவுத் தகவலும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலுவுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொன்னை பாலு, திருமலை மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
தேர்தல் நடத்தை விதிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப் பட்டிருக்கிறார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 4,000 பேர் உள்ளனர். ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கொலை குற்றங்கள் குறைந்தள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரமாக உள்ளது… என்று கூறினார்.
ஆட்டோ ஓட்டுநர் மூலம் உளவு:
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருமலைதான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒரு வாரமாக நிறுத்தி, நோட்டமிட்டுள்ளார் திருமலை. ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி, தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு கொலை செய்தனராம். ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறத்தில் இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டியதில், ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாகக் கூறப்படுகிறது. வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லவும் தயார் நிலையில் இருந்துள்ளனர். கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக் கத்திகளை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்த பின்னர், திருவள்ளூர் மாவட்டத்திற்குச் சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறையுடன் கூடிய கத்தியை கொலைக் கும்பல் வைத்துள்ளது. குறிப்பாக, நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால், ஆம்ஸ்ட்ராங்கை கொன்று, அந்தக் கத்தியை படத்டில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரே, திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர் சரணடைந்துள்ளார்.
வருகிறார் மாயாவதி:
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார்.
முதலில் அயனாவரம் இல்லத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்படுகிறது. இதன்பின், செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பிறகு நாளை பிற்பகலில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் 3 முறை எச்சரித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்தும் போலீஸார் மெத்தனமாக இருந்து கோட்டை விட்டனரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா?
ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்? இந்த கேள்விக்கு பலருக்கும் தெரியாத விடை.
ஒரு லிட்டர் எரிபொருளை உட்கொண்டால் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம். டூவீலர் அல்லது கார் வாங்கும்போது ‘எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும்?’ என்றுதான் முதலாவதாக கேட்போம்.
இதற்கான பதில் நமக்கு திருப்தி அளித்தால் மட்டும்தான், புதிய வாகனம் வாங்கியது திருப்தியை கொடுக்கும். அதே நேரம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிற விபரங்கள் பலருக்கும் தெரியாது. இது குறித்து யாரும் அவ்வளவாக யோசித்திருக்க மாட்டார்கள்.
மைலேஜ் என்பது ஒரு வாகனத்தின் எரிபொருள் செயல்திறனைப் பற்றியதாகும். அதாவது ஒரு லிட்டர் எரிபொருளை உட்கொண்டால் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம்.
மற்ற வாகனங்களைப் போலவே, ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்து அமையும்.
ஒரு ரயில் இத்தனை கிலோ மீட்டர்தான் லிட்டருக்கு கொடுக்கும் என்று, உறுதியாக நேரடியாகச் சொல்வது கடினம். ஏனெனில் அதன் மைலேஜ் பாதை, எந்த வகையான பயணிகள் ரயில் – எக்ஸ்பிரஸ், அதிவிரைவு, பயணிகள் மற்றும் அதில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு ரயிலின் மைலேஜைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணி அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இயந்திரம் குறைந்த சுமைகளை இழுத்தால் போதும். ஒரு டீசல் இன்ஜினின் மைலேஜ் ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
24 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு 1 கி.மீ. தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் ரயில்களை விட சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் குறைவான டீசலைப் பயன்படுத்துகின்றன என்ற தகவல் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
பயணிகள் ரயில் என்ஜின்கள் ஒவ்வொரு 1 கி.மீ.க்கும் 5-6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன. பயணிகள் ரயில்கள் ஏறக்குறைய அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டியதுதான் இதன் காரணம்.
12 பெட்டிகளை இழுக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் 1 கி.மீ. தூரம் பயணிக்க 4.5 லிட்டர் டீசல் செலவழிக்கிறது. இந்த வகையில் பார்த்தால் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலில் 230 மீட்டர் தூரம் வரையிலும், பேசஞ்சர் ரயில்கள் 180-200 மீட்டர் வரையிலும் தோராயமாக செல்லலாம்.
இப்போது ரயில்கள் எத்தனை மைலேஜ் தருகிறது என ரயில்வே பொறியாளர் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
Hindenburg Vs Adani! – “அதானி பங்குகளில் முறைகேடு” என அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை விட்டதும், அதைத் தொடர்ந்து அதானி பங்குகள் வீழ்ந்ததும் நமக்கு நினைவிருக்கும். மேற்படி விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துச் சென்றவர் காங்கிரஸின் அடிவருடியான பிரஷாந்த் பூஷன். அதற்கு செபி “அதானி பங்குகளில் எந்த பிரச்சினையும் இல்லை.” என்று பதிலளித்தது.
“செபி சரியில்லை. வெளிநாட்டு நிறுவனத்தைக் கொண்டு செபியை ஆடிட் செய்ய வேண்டும்” என்று கேட்ட பூஷனிடம், “செபி அறிக்கையை நாங்கள் ஏற்கிறோம்” என்று நீதிமன்றம் பதிலளித்து மண்டையில் குட்டு வைத்தது.
இப்போது, ஹிண்டன்பர்க், செபிக்கு அளித்த பதில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து, பாஜக.,வின் மஹேஷ் ஜேத்மலானி பல விவரங்களை சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
#WATCH | Mahesh Jethmalani, Rajya Sabha MP & Senior Advocate, alleges 'China angle' in Hindenburg report on Adani group. He says, "In connection with the short sale of Adani shares, we have only heard of Hindenburg, they prepared the research report on the Adani group at the… pic.twitter.com/uZOptIXOfM
ANI செய்தி நிறுவனத்துக்கு அவர்அளித்த பேட்டியிலிருந்து:
1, ஹிண்டன்பர்க் ‘அதானி பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை’ வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டது.
2, ஹிண்டன்பர்க்கை அந்த ‘அறிக்கையை’ தயாரிக்க சொன்னது Mark Kingdon & அவரது சீன மனைவி Anla Cheng ஜோடியின் அமெரிக்க நிறுவனம்.
3, அன்லா செங் ஒரு சீன உளவாளி என்ற விவரம் அமெரிக்க பாராளுமன்றத்தில் / காங்கிரஸில் வெளியாகியிருக்கும் தகவல். அன்லா செங் அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டுவரும் நபர்.
4, மார்க் கிங்டன் இந்தியாவின் கோட்டக் (Kotak’s International Investment arm KMIL) நிறுவனத்தை நாடி, அதானி பங்குகளை வர்த்தகம் செய்யக் கோர, அதன் விளைவாக Kotak India Opportunity Fund KIOF உருவாக்கியது கோட்டக். மொரிஷியஸ் வழியாக இது நடந்திருக்கிறது.
5, ஹிண்டன்பர்க் ‘அறிக்கை’ வெளியானதும், பங்குகள் வீழ்ச்சியடையும் போது பங்குகளை வாங்கி, மீண்டும் பங்குகள் விலை ஏறும் போது விற்று, பல மில்லியன்கள் பார்த்திருக்கிறது இந்தக் கூட்டம்.
6, கோட்டக் உருவாக்கிய KIOF மூலம் அதானி பங்குகளில் 40 மில்லியன் டாலரை கிங்டான் – செங் ஜோடி முதலீடு செய்தது.
7, இதில் அதானிக்கு எதிராக குரல் எழுப்பிய அரசியல் கட்சிகள் (காங். – திரிணாமூல் – திமுக., உள்ளிட்டோர்) பலனடைந்தனரா / லஞ்சம் பெற்றனரா? என்று கேட்கிறார் ஜெத்மலானி.
8, உலகெங்கும் பல துறைமுகங்களை ஏற்று நடத்துகிறார் அதானி. இது சீனாவின் விருப்பங்களுக்கு விரோதமாக இருக்கிறது. (கடைசியாக இஸ்ரேல் துறைமுகத்தை அதானி எடுத்த பிறகு தான் இந்த ஹிண்டன்பெர்க் அறிக்கை என்பதை கவனிக்கவும்).
9, இந்தியாவின் வளர்ச்சி மூதும், அதானியின் துறைமுகங்களும் கண்ணெரிச்சலை உருவாக்கியிருக்கிறது சீனாவுக்கு. ஹிண்டன்பெர்க் அறிக்கை மூலம் அதானி முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டதோடு, அந்த அறிக்கையை காரனமாகக் காட்டி பாராளுமன்றத்தை முடக்கினர் ராகூல் இத்யாதிகள்.
10, கோட்டக் பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. இதிலும் சிக்கியிருக்கிறது. இன்னும் செபி விசாரணை நடந்து வருகிறது.
அதானிக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு, பெருமளவு விளம்பரம் தேடியதில் முக்கியமானவர்கள்: காங். தலைவர் ராகுல், மஹுவா மொயித்ரா, ரவிஷ் குமார் (உள்ளிட்ட பல என்.டி.டி.வி குழுவைச் சேர்ந்தவர்கள்), பர்க்கா தத், நியூஸ் மினிட் தன்யா ராஜேந்திரன், பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட பலர்.
ஒரு புறம் அதானி பாரதத்தின் கொள்கை முடிவுகளின் படி செயல்படும் பல்வேறு விவகாரங்களில் பாரதத்துக்கு துணை நிற்கிறார். ஆனால் அம்பானி இன்னும் இந்தியா விரோதிகளான சமாஜ்வாதி – காங்கிரஸுக்கு துணை நிற்கிறார்! எனினும் காங்கிரஸ் கோஷ்டிகள் இவர்கள் இருவரையும் குறித்து தூற்றியே அரசியல் லாபம் அடைந்தன.