பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக 30 கோடிக்கு மேல் மோசடி செய்த 18 பேர் மீது வழக்கு 10 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலைவனத்ததைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சசி மற்றும் அவரது கணவர் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணசாமி என்ற இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ 50 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக வந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சசி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன
திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் அவரின் உருதுணை யோடு தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டவர்களிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 30 கோடிக்கு மேல் சுருட்டியதாக தெரியவந்துள்ளது.
மேலும் காரியாபட்டியைச் சேர்ந்த சின்ன சுப்பையா ஆதிமூலம் நாராயணசாமி கமுதி தோப்படி முத்துஉள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமிஜெயந்தி என்பவர் அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் பயிற்சி ஆணை வழங்கியதும் அதற்கு உடந்தையாக செய்யது அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி என கூறிக்கொண்டு பயிற்சியாளராக இருந்து வந்ததாகவும் சென்னையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கோயம்புத்தூர் கோபிசெட்டிபாளையம் மணிகண்டன் உடன் இணைந்து தனியாக உயர் நீதிமன்ற வெப்சைட் தொடங்கியதாகவும் அதன் அடிப்படையில் சிபிசிஐடி மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தையே ஏமாற்றும் அளவிற்கு நீதிமன்றத்தின் பெயரை பயன்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் நேரடி நியமன டிஎஸ்பி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாகேந்திர குமாரை கஸ்டடி எடுத்து விசாரித்ததில் மேற்படி சென்னை சேர்ந்த மூவருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது
உடனடியாக சென்னை சென்ற காவல்துறையினர் மேற்படி விஜயலட்சுமி ஜெயந்தி உள்பட மூவரை கைது செய்து விருதுநகர் கொண்டு வந்தனர்
மேலும் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் ரூ. 300 தரிசன டிக்கெட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கித் தருகிறோம் என்று சில இடைத்தரகர்கள் தங்கள் செல்போன் நம்பர்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ. 300 தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலமும், மாநில அரசுகளுக்கு சொந்தமான ஒரு சில சுற்றுலா வளர்ச்சி கழகங்கள் மூலமும் மட்டுமே பக்தர்கள் பெற முடியும்.
ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம். சமூக வலைதளங்களில் வெளியாகும் இது போன்ற போலியான தகவல்களை பக்தர்கள் நம்ப கூடாது.
மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றதது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 10தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்துதினசரி கலை நிகழ்ச்சி நடந்தது.
16ஆம் நாள் திருவிழா தேரோட்டம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் .
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா, சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், துணைக் கண்காணிப்பாளர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்இன்ஸ்பெக்டர் சேகர், கோவில் செயல் அலுவலர் இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல்அலுவலர் செல்வகுமார், தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், அர்ச்சகர் சண்முகவேல், ஆலய பணியாளர்கள் பூபதி ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர், இதில் தாசில்தார் மூர்த்தி, மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேஷ், சோழவந்தான் பாட்டியமந்தார்,கிராம காவல்காரர்கள்ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள்.
தேர், அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு தேர் வந்து சேர்ந்தது. தேர் வலம் வருவதற்கு ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக குடில் கட்டை போட்டு வழிநடத்தி வந்தனர்..
வழிநெடுக அம்மனை வரவேற்று பூஜைகள் செய்தனர். இதில், முன்னாள் சேர்மன் எம் .கே. முருகேசன், வருவாய் ஆய்வாளர் ,சுகாதாரபணி ஆய்வாளர் சூரியகுமார், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செந்தில்வேல், ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்கள் சூரை விட்டனர்,
சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர்,மோர்,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், முத்தையா, முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மின்சார வாரிய உதவி இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் தேர் செல்லும் இடங்களில் மின் வயர்களை கழற்றி மீண்டும் இணைப்பு கொடுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு, வட்டப் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நண்பர்கள் சார்பாக 11வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.
இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல் துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெறும். சோழவந்தான் காவல் துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காமாட்சிபுரம் சோழவந்தான் பூ வியாபாரிகள் சார்பாக தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.
டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 24 ஜூன் 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை
குரூப் 1
புள்ளி
குரூப் 2
புள்ளி
A
இந்தியா
6
தென் ஆப்பிரிக்கா
6
B
ஆஃப்கானிஸ்தான்
4
இங்கிலாந்து
4
C
ஆஸ்திரேலியா
2
மேற்கு இந்தியத் தீவுகள்
2
D
வங்கதேசம்
0
அமெரிக்கா
0
சூப்பர் 8இல் முதல் அப்செட்
22.06.2024 அன்று கிங்க்ஸ்டனில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் (148/6) ஆஸ்திரேலியா (19.2 ஓவரில் 127) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று, சூப்பர் 8இல் முதல் அப்செட்டை பதிவு செய்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் வெளியேறினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11, டிம் டேவிட் 2, மேத்யூ வேட் 5, பேட் கம்மின்ஸ் 3, அஷ்டன் அகர் 2, ஆடம் ஜம்பா 9 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை அனேகமாக கேள்விக் குறி ஆக்கிக் கொண்டது ஆஸ்திரேலியா.
அமெரிக்கா vs இங்கிலாந்து
23.06.2024 அன்று அமெரிக்கா (18.5 ஓவரில் 115) இங்கிலாந்து (9.4 ஓவரில் 117/0) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. அமெரிக்க அணியை இங்கிலாந்து அணி மிக எளிதாக 10 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.
அதேநாள் மேற்கு இந்தியத் தீவுகள் (135/8) தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் 124/7) டக்வெர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும்போது மழை குறுக்கிட்டது. இதனால் வெற்றி இலக்கு 123ஆகக் குறைக்கப்பட்டது. அச்சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 15 ரன் எடுத்திருந்தது. எனவே மீதமுள்ள 90 பந்துகளில் 108 ரன் எடுக்கவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஈரமான பந்து, ஈரமான மைதானம் ஆகியவற்றோடு மிகவும் போராடி மேற்கு இந்தியத்தீவுகள் அணி தோல்வியைச் சந்தித்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா
24.06.2024 கிரோஸ் ஐலட்டில் நடைபெற்ற இந்தியா (205/5) ஆஸ்திரேலியா (181/7) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறுவது இரண்டு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தநிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. விராட் கோலி இந்த முறையும் மிக மோசமாக அவுட் ஆணார். ஆனால் ரோஹித் ஷர்மா இன்று ஆடிய ஆட்டத்தைக் காண கண் கோடி வேண்டும். அவர் சந்தித்த 41 பந்துகளில் 11 பந்துகள் டாட் பால்கள்; மீதமுள்ள 30 பந்துகளில் 7 ஃபோர், 8 சிக்சர் (மொத்தம் 66 ரன்கள்) மீதமுள்ள 26 ரன்கள் ஒன்றாகவும் இரண்டாகவும் ஓடிச் சேர்த்தவை.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், மிட்சல் ஸ்டார்க்கின் இரண்டாவது ஓவரில் 4 சிக்சர், ஒரு ஃபோர் அடித்து மொத்தம் 29 ரன்கள் அந்த ஓவரில் எடுத்தார். 19 பந்துகளில் 50 ரன். 11.2ஆவது ஓவரில் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
இன்று ரிஷப் பந்த் (15 ரன்) சரியாக விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் (31 ரன்), ஷிவம் துபே (28 ரன்), ஹார்திக் பாண்ட்யா (27 ரன்), ஜதேஜா (9 ரன்) ஆகியோரின் பங்களிப்பில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.
இரண்டாவதால ஆஸ்திரேலிய அணி ஆடியபோது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் (76 ரன்) சிறப்பாக ஆடினார். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக குல்தீப் யாதவ் (4 ஓவர், 24 ரன், 2 விக்கட்) மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா (4 ஓவர், 29 ரன், 1 விக்கட்), அர்ஷ்தீப் சிங் (4 ஓவர், 37 ரன், 3 விக்கட்) ஆகியோர் முக்கியமான சமயங்களில் விக்கட் எடுத்து ரன் கொடுப்பதையும் கட்டுப்படுத்தினர். அதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
ஆப்கானிஸ்தான் Vs வங்கதேசம்
இந்தப் பிரிவில் கடைசி ஆட்டமாக ஆஃப்கானிஸ்தான் வங்கதேச அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது இந்தப் போட்டி. இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அரையிறுதிக்குள் நுழையப் போகும் மற்றொரு அணி ஆஸ்திரேலியாவா அல்லது ஆஃப்கானிஸ்தானா என முடிவாகும் என்ற சூழ்நிலை இருந்தது. காரணம், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற நேரிடும்.
பரபரப்பாக நடைபெற்ற வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. 20 ஓவர் முழுதும் விளையாடி, அந்த அணியால் 115 ரன்களே எடுக்க முடிந்தது. குர்பாஸ் 55 பந்துகளை சந்தித்து 43 ரன் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான் 10 பந்துகளில் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹுசைன் 4ஓவர்கள் வீசி 26 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பின்னர் விளையாடிய வங்கதேச அணி,இடையிடையே மழை குறுகிட்டதால், விதிமுறைகளை உணர்ந்து தொடக்கம் முதலே அதிவிரைவாக ரன்களைக் குவித்திருக்க வேண்டும். ஆனால் அது கோட்டை விட்டது. இதனால் முதலில் 19 ஓவர்களில் 114 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களே எடுக்க முடிந்தது. வங்கதேச தரப்பில் லிதன் தான் 49 பந்துகள் விளையாடி 54 ரன் எடுத்தார். ஆப்கன் தரப்பில் ரஷீத் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதை அடுத்து வங்க தேச டக்வொர்த் லூயிஸ் முறையில் 8 ரன்களில் ஆப்கன் அணியுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.
இந்தியாவுடான போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்துக்கு வந்தது. இதனால் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியது. வங்கதேசத்துடனான போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், அது விளையாடிய 3 போட்டிகளில் ஒரு தோல்வி, இரண்டு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இதை அடுத்து, முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 27.06.2024 அன்று இந்திய அணி இங்கிலாந்து அணியை கயானாவில் ப்ராவிடன்ஸ் மைதானத்தில் சந்திக்கிறது.
India remembers 26th June,2024, as the fiftieth anniversary of the promulgation of internal emergency by Madam Indira Gandhi on 26th June,1975. Time to recall the amazing facts leading to it, in and around, including the roles played by no less than Justice V R Krishna Iyer and the iconic jurist Nani Palkhivala, in the events unfolding then.
It was on June 12th,1975 that Justice Jagmohan Lal Sinha, Allahabad High Court unseated Prime Minister Indira Gandhi, as Member of Parliamrnt for ‘indulging in corrupt practices’. A stunning verdict out of the blue.
Indira Gandhi engaged Nanabhoy Ardeshir Palkhivala as her counsel, to impugn the orders in the election petition filed by Raj Narain. The challenge was listed before Justice V R Krishna Iyer before the Supreme Court. After hearing Nani Palkhivala on 25th June,1975, Krishna Iyer granted ‘interim stay’ of Allahabad High Court. But, the nature and wordings of the order made ‘a telling difference’ wrote a political columnist. Did proclamation of internal emergency on 26th June,1975, had anything to do with it?
Tomes have been written on the “causes” leading to the draconian Emergency and the suspension of fundamental rights of citizens. Primary among the reasons cited are the Sampoorna Kranti – total revolution – urged by Jayaprakash Narayan (JP) and his call on June 20, 1975.
At a public rally in New Delhi, JP asked Chief Justice of India AN Ray not to hear Indira Gandhi’s petition against the Allahabad High Court order that set aside her election and in his 80-minute-long speech, JP also “deliberately” reiterated his appeal to the police, armed forces and government servants not to obey the “illegal and immoral” orders of the government.
Supreme Court heard the case. In the interim order, Krishna Iyer wrote, “At the first flush I was disposed to prolong the ‘absolute stay’ granted by the High Court, moved not only by what Shri Palkhivala had urged but by another weighty time factor that the appeal itself, in the light of the directions I have already given yesterday, may well be decided in two or three months. But on fuller reflection I have hesitated to take that course.”
The ultimate order passed by Krishna Iyer on “fuller reflection”, on 25th June,1975, was one not to grant “absolute stay” but grant “stay” with “conditions” that while the prime minister could attend Parliament, “She will neither participate in the proceedings in the Lok Sabha nor vote nor draw remuneration in her capacity as Member of the Lok Sabha”
Indira Gandhi felt slighted. She perceived the ‘conditional stay’ as an insult to her and the constitutional position she occupied. And her lackeys and sycophants made so much noise which triggered a bugle, on the advice of Sidharth Shankar Ray, an advocate himself. Thus, was born the infamous internal emergency.
We can continue to speculate, in the fiftieth year, that if Nani Palkhivala had succeeded in persuading Justice V R Krishna Iyer ‘to continue the absolute stay granted for 20 days’ by Allahabad High Court and ensured avoidance of the ‘conditions’, there may have been no internal emergency!
Could it have been avoided? Nani Palkhivala thinks otherwise, as he wrote about this true experience he had on the flight back to. Delhi to Bombay on 25th June,1975 itself. One was waiting to go on record with this Nani speak, for long, which has remained tucked away in ‘ We the Nation’, in the Chapter- ‘Are We the Masters of our Fate?’.
Let us read it in Nani’s own words, as it happened, on 25th June,1975, the very day the election appeal of Indira Gandhi was heard by Justice Krishna Iyer as Vacation Judge. Destiny or happenstance as Justice R F Nariman called it!
“On the plane which I boarded to return to Bombay, next to me was seated an elderly, simple man dressed in khadi, carrying a khadi cloth bag. He asked me what had happened that day in the Prime Minister’s case and I told him briefly what the judge had decided.”. He was an inmate of Gandhi Ashram, Bangalore. He told Nani what a clairvoyant in Bangalore had told him sometime in May,1975 .
Nani again, “The conversation between us ran somewhat as follows. ‘When I left the ashram in May,1975 the clairvoyant told me that the Prime Minister would lose the case which she was fighting in the Allahabad High Court and yet, after losing the case, she would become the most powerful woman in the world. In surprise, I asked, ‘How can Mrs. Indira Gandhi become any more powerful than she is today? When she is already the head of the largest democracy on earth, what can possibly add to her power.
“I do not know. I am only repeating to you what he said? Unimpressed, I did not bother even to make a mental note of the name of the clairvoyant. But to carry on the conversation, I asked, ‘Did the soothsayer say anything else? ‘Yes, he said that the extraordinary power which the Prime Minister is to acquire will end in March,1977.’’ Did he mention precise month and year? ‘Yes, he mentioned specifically that the cessation of the extraordinary power would be March 1977’.
“Did he make any other prediction?’. ‘Yes, he said that Jayaprakash Narayan who is today the most popular figure in India’s public life would be stricken by a fatal illness which would carry him away in about two years. He also said Mr. Y B Chavan who aspires to be the Prime Minister of India would never attain that position’.
“I came home, wondering what the future would bring. In less than 36 hours Emergency was declared, the invaluable fundamental rights of the people were suspended, and the Prime Minister virtually acquired all the powers of a leader of a totalitarian state”.
To cut the story and predictions short, Palkhivala records that he disclosed his conversation with the passenger about the clairvoyant’s precise predictions to the Editor of Times of India and Ramnath Goenka of Indian Express, who was being hounded out by the Congress Government I need hardly mention that all the four predictions were accurately fulfilled’
Facts are always stranger than fiction. And internal emergency promulgated in India was of no different genre!
தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம்
இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணி குடும்பத்தினரின் இதயம் தொட்ட ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி ‘திமிரி எழுடா’ என்ற உத்வேகமூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்ப பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.
இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், “பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்,” என்று கூறினார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன் மூன்றாம் தலைமுறை இசைக்கலைஞர் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் ‘ரங் தே பசந்தி’யில் இணைந்து இரண்டு தசாப்தங்களாக ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். இசைக்கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதோடு, பிட்ச் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனத்தையும் கிருஷ்ண சேத்தன் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த முன்னோடி இசை மென்பொருள் நிறுவனம் அதன் புதுமையான தயாரிப்புகளுக்காக பல சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டைம்லெஸ் வாய்சஸ் குறித்து கிருஷ்ண சேத்தன் கூறுகையில், “பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து ‘திமிரி எழுடா’ பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார்.
கிருஷ்ண சேத்தன் மேலும் கூறுகையில்: “குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும். உலகெங்கும் உள்ள இசை நிறுவனங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை அவர்கள் எளிதில் அணுக முடியும். பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்,” என்றார். “கலைஞர்களுக்கு முன்னுரிமை” என்ற அணுகுமுறையுடன், கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். “கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் தேவைகளை ஆதரிப்பதன் மூலமும் நாங்கள் வளர விரும்புகிறோம்,” என்று கிருஷ்ண சேத்தன் தெரிவித்தார்.
குலதெய்வ வழிபாடு குறித்து ஆளுநர் ஆர் எம் ரவி பேசியதாக ஊடகத்தில் போலி செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளுநர் மாளிகை புகார் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் (செய்தி வெளியீடு எண்: 31 : 24.06.2024)
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது
“குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்; தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் – ஆளுநர் ரவி” என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.
இந்த விஷயத்தில் இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.
இந்தப் போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.
இந்தப் பிரச்னையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
– என்று, அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் நடைபெற்ற முறைகேடுகளை பூசி மெழுகி மறைக்கும் வேலைகளில் ஆளும் தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் இந்த நேரத்தில், தமிழக ஊடகங்களில் இது போன்ற போலியான தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் குரூரத் தனத்தை மத்திய ஒலிபரப்புத் துறையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தமிழக அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூகத் தளங்களில் பலரும் கடும் கோபத்துடன் கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின், முதல் முறையாக இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி உள்பட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவி ஏற்பு உறுதிமொழிகளைச் செய்து வைத்தார். முன்னதாக, தற்காலிக அவைத்தலைவராக பர்த்துஹரி மஹதப்க்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
நான், நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, இந்த மக்களவையினுடைய, உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், இறைவன் பெயரால் சபதமேற்கிறேன். அதாவது நான், விதிமுறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட, பாரதத்தின் அரசியல்சட்டத்தின்பால், மெய்யான சிரத்தை, மற்றும், அர்ப்பணிப்போடு இருப்பேன். நான், பாரதத்தின் இறையாண்மை, மற்றும் ஒருமைப்பாட்டைப், கேடுறாமல் பாதுகாப்பேன். மேலும், எந்தப் பதவியை, நான் ஏற்க இருக்கிறேனோ, அதற்குண்டான, கடமைகளை, சிரத்தையுடன் அவற்றை, முழுமையாக நிறைவேற்றுவேன். – என்று உறுதி மொழி உரைத்தார்.
18வது மக்களவைக்கு நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவில், பெரும்பான்மை பெற்ற தே.ஜ.கூ., சார்பாக, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. இன்று ஒரு பகுதி உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், நாளையும் உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். நாளை மறுநாள், 18வது மக்களவையின் அவைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. வரும் 27ம் தேதி, புதிய மக்களவையின் முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடக்கும். இறுதியில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார். அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும். தொடர்ந்து 22ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
3வது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி!
18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…
நாடாளுமன்ற அரசியலில் இந்நாள் பெருமைக்குரியது மட்டுமல்ல கொண்டாட்டத்திற்குரிய நாள். சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில், புதிய உறுப்பினர்களுடன் அவை கூடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.,க்கள் அனைவரையும் வரவேற்கிறேன், வாழ்த்து தெரிவிக்கிறேன். நாடாளுமன்றக் கூட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் கூட்டமாக இது இருக்கும். புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது.
2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். உலகின் பெரிய தேர்தல் பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை ஒரு தரப்புக்கு மக்கள் கொடுத்துள்ளனர். இது நாடாளுமன்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம், நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் ஆட்சி நடைபெறும். அனைவரையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள். 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம். 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். இரண்டு முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.
Sharing my remarks at the start of the first session of the 18th Lok Sabha. May it be a productive one.https://t.co/Ufz6XDa3hZ
நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்குப் பணியாற்ற எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.. என்று பேசினார்.
பள்ளி மாணவர்கள் தொடர்பாக சந்துரு அறிக்கை: அவர் இந்த உலகில் இருக்கிறாரா?
— ஆர். வி. ஆர்
ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு, பள்ளி மாணவர்களிடையே ஜாதிய நல்லிணக்கம் நிலவ தமிழக அரசுக்குச் சில பரிந்துரைகள் செய்திருக்கிறார். அவைகள் சிலவற்றில் அவர் சிந்தனை தவறு.
சந்துருவின் தவறான சில பரிந்துரைகள் இவை:
மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணியத் தடை விதிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு ஜாதிப் பெயர்கள் இருந்தால், அவற்றில் ஜாதியைக் குறிக்கும் சொற்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிகள் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது. அதற்கான உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி துவங்க அனுமதி அளிக்க வேண்டும்.
சந்துரு பரிந்துரைகளின் பின்னணி இது: சென்ற ஆண்டு, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. 17 வயதுள்ள அரசுப் பள்ளி மாணவன் ஒருவனை, வேறு ஜாதியைச் சார்ந்த சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். பலத்த காயங்களுடன் அந்த மாணவன் உயிர் பிழைத்தான்.
இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் ஜாதி மோதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு-நபர் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது. அவர் தனது ஆய்வின் முடிவில் அரசுக்கு அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில, மேலே காண்பவவை. அவரது சில பரிந்துரைகள், ஜாதி என்பதைத் தாண்டி ஹிந்து மத சுதந்திரத்தில் அனாவசியமாகத் தலையிடுகின்றன.
சந்துருவின் அணுகுமுறையில் உள்ள பொதுவான தவறை இந்தக் கேள்விகளும் அவற்றுக்கான சரியான பதில்களும் தெளிவாக்கும்.
மக்களிடையே ஜாதி ஒற்றுமையும் நல்லிணக்கமும் சட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா, அல்லது சாதாரண மக்களின் மனதிலிருந்து தொடங்க வேண்டுமா? இரண்டில் எது நிச்சயம் பயன் தரும்?
வீட்டிலும் வெளியிலும் உள்ள சமூகப் பெரியவர்கள் தமது பேச்சாலும் செயலாலும், அறிந்தோ அறியாமலோ, ஜாதி வேற்றுமைகளை வலியுறுத்தவும் ஜாதி உரசல்களை மேற்கொள்ளவும் தமது இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்களா? ஆம் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? தீர்வுக்கு வழி உண்டா?
எல்லா ஜாதிகளும் அந்தந்த ஜாதி மக்களிடையே ஒரு இயற்கையான நட்பை, பிணைப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஜாதிகள் நல்லது செய்கின்றன.
தலைமுறை தலைமுறையாக ஒரு வம்சத்தினர் இன்ன ஜாதி என்று சொல்லி வளர்க்கப் படும்போது, அந்த மனிதர்களுக்குத் தங்கள் ஜாதியின் மீதான பிடிப்பு இயற்கையாக, ஒரு உள்ளுணர்வாகத் தங்குகிறது. அவர்கள் வேறு மாநிலத்துக்குப் போய் வசித்தாலும், வேறு நாட்டுக்கே குடி பெயர்ந்து வாழ்ந்தாலும், அவர்களின் ஜாதிச் சார்பும் உணர்வும் தொடர்கின்றன – சற்று வலுக் குறைந்தாலும்.
ஜாதி என்பது அந்தந்த மக்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவது போல், வேறு வேறு ஜாதி மக்களிடையே சிறிது வேற்றுமை உணர்வை ஏற்படுத்தத்தான் செய்யும். இதுவும் இயற்கை. ஆனால் அந்த வேற்றுமை உணர்வை ஒரு பகை உணர்வாகப் பார்க்காமல், அந்த வேற்றுமையை நமது வாழ்க்கையின் அம்சமாகப் புரிந்துகொண்டு, மற்ற ஜாதி மக்களையும் சினேக பாவத்துடன் நம்மால் ஏற்க முடியும். அது எப்போது சாத்தியம்? மனிதப் பண்புள்ள கண்ணோட்டம் நம்மிடையே இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
நம் ஒவ்வொருவரிலும் ஒரு பகுதி, நாம் ஒரு தேசத்தவர் என்கிற உணர்வு. நம்மில் இன்னொரு பகுதி, நாம் ஒரு மதத்தவர் என்கிற உணர்வு. இன்னொரு பகுதியில், நாம் ஒரு மொழியினர் என்கிற உணர்வு. இன்னொரு முக்கிய பகுதியில், நாம் ஒரு ஜாதியினர் என்கிற பெருமை. இந்த அடையாளங்கள் நமக்குப் பிறப்பிலேயே கற்றுக் கொடுக்கப் படுகின்றன.
இந்த அடையாளங்கள் மட்டும் நம்மை வழி நடத்தினால், நம்மைக் கட்டுப் படுத்தினால், நாம் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் நியாயமாக நடந்துகொள்ள முடியாது. அப்போது பகையும் உரசல்களும் வரும். இது நாங்குநேரியில் நடந்தது. இதைத் தவிர்க்க, நம் மனதுக்குள் இன்னொரு அடையாளம் ஏற்படுவதும் நமக்கு முக்கியம்.
அந்த இன்னொரு அடையாளம், “நான் கட்டுகளுக்குள் சிக்காத மனிதன்” என்ற உணர்வு. அந்த உணர்வால், “நான் ஒரு தேசத்தவன், ஒரு மதத்தவன், ஒரு ஜாதிக்காரன், இன்ன தாய்மொழியைக் கொண்டவன், என்ற எனது அடையாளங்களை ஒரு லகானில் பிடித்து வைத்திருக்க முடியும். அதன் விளைவாக, மாறான அடையாளங்கள் கொண்ட மற்ற மக்களிடமும் வெறுப்பில்லாமல் சினேகமாக நான் பழக முடியும். இந்தப் பண்பான உணர்வு இரண்டு புறத்திலும் அவசியம்தான். ஆனால் “நான் மனிதன்” என்ற நல்ல உணர்விலிருந்து நானே முதலில் விலகி இருக்க வேண்டாமே?
“நான் மனிதன்” என்ற நல்ல உணர்வுக்குப் பெரிதும் வித்திடுவது நல்ல கல்வி. சிறுவர்களுக்கு நல்ல கல்வியைப் புகட்ட நல்ல பாடத் திட்டங்கள், தரமான கல்விக் கூடங்கள், சிறப்பான ஆசிரியர்கள் எல்லாம் அவசியம். அப்படியான நல்ல கல்வி, நமக்கு வாழ்க்கையின் மீது ஆச்சரியத்தையும் நமக்குள்ளே பணிவையும் ஏற்படுத்தி, “நான் மனிதன்” என்ற பிரதான உணர்வையும் நமக்குத் தரும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல கல்வியை அளிக்க முனைபவர்களா மாநிலத்தின் திராவிடக் கட்சிகள்? இல்லை. இதற்கும் காரணம் உண்டு.
நல்ல கல்வி, மக்களின் அறிவுக் கண்களையும் திறக்க உதவும். தமிழகத்தில் சாதாரண மக்களின் அறிவுக் கண்கள் திறந்திருந்தால், எப்படி அந்த மக்களின் முதுகில் அரசியல்வாதிகள் சவாரி செய்வது, எப்படி அரசியல்வாதிகள் அனைத்து மக்களின் ஓட்டுக்களை அரசாங்க இலவசங்கள் வழியாக வாங்குவது, எப்படிக் கொழிப்பது?
ஜாதி உணர்வுகள் மக்களுக்கு மேலோங்கி இருந்தால், அந்தந்த ஜாதி மக்களின் சில பிரமுகர்களைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு, அந்தப் பிரமுகர்களுக்குப் பதவிகளும் சில வாய்ப்புகளும் கொடுத்து, அவர்கள் மூலமாக அவர்கள் சார்ந்த ஜாதி மக்களின் ஓட்டுக்களை எளிதில் தொடர்ந்து அறுவடை செய்வது, ஒரு அரசியல் கட்சிக்கு சுலபம். என்ன — ஜாதி மோதல்கள் மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவை ஏற்பட்டால், ஏதாவது கமிட்டி போட்டு விஷயத்தை ஆறப் போட வேண்டும். பிறகு அடுத்த அறுவடையைக் கவனிக்கலாம்.
தனக்கு ஏதோ தோன்றியதைச் சந்துரு சில பரிந்துரைகளாகச் சொல்லி வைத்திருக்கிறார். தாங்கள் திட்டமிடுவதை ஆளும் அரசியல்வாதிகள் செய்து கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து, சாதாரண மக்கள் நிஜமாகவே நலமும் வளமும் பெற நீங்களும் நானும் பிரார்த்திக்கலாம். வேறென்ன சொல்லுங்கள்?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com