Home Blog Page 218

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

sengol in parliament - 2026
#image_title

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

செங்கோல் பற்றி அவர் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், செங்கோல் என்பதன் பொருள் புரியாமல் ஆங்கிலேய அடிமைகளின் பொது புத்தியில் பொதிந்துபோன கசடுகள் மட்டுமே. பாரத நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் என எதுவும் அறியாத நேருவின் வழியில் வந்தவர்களால் இப்படி தான் பேச முடியும்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், நீதியின் சின்னமாக செங்கோலை வைத்திருந்தனர். அரசன் நீதி தவறும்போது செங்கோல் சாய்ந்து விட்டது எனக்கூறினர். மதுரையில் நீதி தவறியதை அறிந்த பாண்டியன் தன் உயிர் துறந்து செங்கோலை காத்தான்.

மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப் பின், சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன.

செங்கோல் பற்றி தொல்காப்பியம் துவங்கி, பக்தி இலக்கியங்கள் வரை பல்வேறு இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பழம் பெரும் இலக்கியங்களான சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை உள்ளிட்டவை குறிப்பிடும் நிலையில், அவற்றில் செங்கோலாக திருக்குறள் குறிப்பிடப்படுகிறது.

திருக்குறளில் மனைமாட்சி, செங்கோண்மை எனும் அதிகாரங்கள் மன்னனின் இயல்புகள், அவன் கடைபிடிக்க வேண்டிய நெறிகள், அவன் ஆட்சியில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. அதுபோலவே வள்ளலாரும் இறைவன் அளித்த செங்கோலாக தன் சுத்த சன்மார்க்க சங்கத்தை குறிப்பிடுகிறார்.

அத்தகைய செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் இந்தி கூட்டணியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சமாஜ்வாதி கட்சி எம்.பி.யின் கடிதத்தை தொடர்ந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணியின் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் செங்கோல் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்து ஏற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.பி திரு. மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

அதுபோலவே, செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை எனவும், அதனால் தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என்ற திமுக மூத்த தலைவர் திரு. டி.கே.எஸ் இளங்கோவனின் கருத்தும் இந்தி கூட்டணியினர் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இவர்களின் இந்த கருத்துகள் அனைத்துமே ஆங்கிலேயே அடிவருடி மனப்பான்மையின் வெளிப்பாடு தான். செங்கோலின் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த இந்தி கூட்டணி தலைவர்களுக்கும் தெரியவில்லை.

தமிழ் பண்பாட்டின் மீதும், தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தின் மீதும் இவர்களுக்கு மதிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் நிருபித்து விட்டார்கள். இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டு விட்டார்கள்.

நமது தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்தி கூட்டணி தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வரலாறை மறைத்துப் பேசுவதா? சேகர் பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!

sekharbabu with stalin - 2026
#image_title

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:

கோவில்களைத தமிழர்கள் கலவரமாக பார்க்காமல் கலையாக பார்த்ததால் கோவில் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் பேசியுள்ளார். அமைச்சராவதற்கு முதல்வரின் அடிமையாக இருந்து ஆமென் போட்டால் போதும். எந்த தகுதியும் தேவையில்லை என்பதை இவரது பேச்சு வெளிக்காட்டுகிறது. சேகர் பாபுவிற்கு சரித்திரமும் தெரியாது தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் முகலாயர், ஆங்கிலேயரால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று தெரியாமல் பேசியிருக்கிறார்.

எந்த சட்டசபையில் நின்று இவர் பேசுகிறாரோ அந்த இடத்தில்தான் சென்ன மல்லீஸ்வரர் கோவில், சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்தது. அதனை பிரிட்டிஷ் காரர்கள் இடித்து தான் ஜார்ஜ் கோட்டை கட்டினார்கள்.

அதற்கு அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் தான் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் இருந்தது. அதனையும் இடித்தார்கள். தன்மானத்தோடு ஆங்கிலேய கொடுங்கோலனை இந்துக்கள் எதிர்த்தனர். மக்களின் எதிர்ப்பிற்கு பின்னர் பணிந்து போனான். அதன்பிறகு இந்துக்கள் ஒன்று சேர்ந்து தேவராஜ் முதலியார் தலைமையில் கட்டிய கோவில்கள் தான் தற்போது ஒரு கிலோமீட்டர் தாண்டி பூக்கடை பகுதியில் உள்ளது.

சென்னையின் தலக் கோவில்களே இவைதான். அதனால் தான் இதற்கு சென்னை என்ற பெயரே வந்தது என்பதை மறந்துவிட முடியாது.

சென்னை மைலாப்பூர் கடலையொட்டி இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அதனை இடித்து அங்கு கட்டப்பட்டது தான் செயிண்ட் தாமஸ் சர்ச். இப்போது உள்ள கோவில் அதன் பிறகு கட்டப்பட்டது.

இப்படி பல கோவில்களை மதவெறி பிடித்த ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு உள்ளது. சாம்பலில் இருந்து உயிர்ப்பெறும் ஃபினிக்ஸ் பறவை போல இந்துக்கள் மீண்டும் கட்டிய கோவில் வரலாறு அமைச்சர் சேகர்பாபுவிற்கு தெரிந்தால் வாய்க்கு வந்தபடி இப்படி பேசுவாரா?

மதவெறியர்களான முகலாயர், திப்பு சுல்தான், ஹைதர்அலியால் பாதிக்கப்பட்டது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில். 400 ஆண்டுகள் சாமி (சிவலிங்கம்) இல்லாத கோவிலாக வேலூர் மாவட்டமே பாழடைந்து கிடந்தது. இந்து முன்னணி நிறுவனர் ஐயா வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் இந்துக்களை ஒன்று திரட்டி 1981-ல் சுவாமியை பிரதிஷ்டை செய்ய வைத்தார்.

செஞ்சி கோட்டை மீது இருந்த கோவில் பெருமாள் ஆக்கிரமிப்பாளனால் பாதிக்காமல் அப்புறப்படுத்தினர் பக்தர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தான் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திண்டுக்கல் அபிராமி மலைக்கோவிலில் இருந்த சுவாமிகள் திப்பு சுல்தான் ஆக்கிரமிப்பு சமயத்தில் கொடியவர்களால் அகற்றப்பட்டது. அதனை மீண்டும் வைக்க இந்துக்கள் போராடி வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமும் திருவரங்கமும் 40 ஆண்டுகள் முகலாயர்களின் ஆக்கிரமிப்பால் மூடி கிடந்த சரித்திரம் அமைச்சருக்கு தெரியுமா?

விஜயநகர பேரரசின் தளபதி கம்பண்ண உடையாரின் படைகளால் இவ்விரு கோவில்களும் மீட்கப்பட்டன.

வரலாறு தெரியாத அமைச்சருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் முகலாயர்களால் சிதைக்கப்பட்ட லிங்கமும் அதன் அருகில் இந்த சரித்திர நிகழ்வு குறித்து தகவல் பலகை இருப்பது தெரியுமா?

அந்த தகவல் பலகையை வைத்தவர் என்றும் மக்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர். ஆவார்.

அதுபோல பல சரித்திர உண்மைகளை தமிழர்களிடம் மறைத்தது தி.மு.க.வின் மோசடி அரசியல். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது உண்மைதானே. அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அதே காரணங்களால் இடிக்கப்பட வேண்டிய வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களை இடித்தது உண்டா? காரணம் இந்துக்கள் ஏமாளிகள் என்ற அகம்பாவம்தானே.

முகலாய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழகத்தில் சுமார் 300 கோவில்களை இடித்து மசூதி / தர்கா கட்டியதற்கு ஆதாரபூர்வமான பட்டியல் இருக்கிறது அமைச்சர் அவர்களே.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று பெரியோர்கள் கூறுவார்கள் மறந்து விடாதீர்கள். இந்த உண்மைகள் உங்களுக்கும் முதல்வருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதற்காக உண்மையை மறைக்க நினைக்காதீர்கள்.

நீங்கள் கோவிலை கலையாக பார்த்து இருந்தால் நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து குப்பையாக குவித்து இருப்பீர்களா?

முகலாயனும் ஆங்கிலேயனும் இடித்து சேதப்படுத்திய வரலாறை மூடி மறைத்து பேசுவீர்களா??

அப்படி கோவிலை ஆன்மிக கேந்திரமாக தாங்கள் பார்க்காவிட்டாலும், கலையாக பார்த்தாலும் கோவில் இடிப்பதை கைவிடுங்கள். திண்டுக்கல் அபிராமி மலைமீது ஈசனும் அம்பாளும் எழுந்தருள செய்யுங்கள்.

தமிழகத்தின் திருக்கோவில்களை திட்டமிட்டு சிதைக்கும் கயவாளிகளை மனநிலை பாதித்தவர்கள் என்று வழக்கை முடிப்பதை கைவிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் சமூக விரோதிகளுக்கு அச்சம் வரும்.

எனவே அமைச்சர் சேகர் பாபு அவர்களே மதவெறி இஸ்லாமிய படையெடுப்பாளர்களை பக்தி நெறியோடு வாழ்ந்த தமிழ் மன்னர்களும், பாளையக்காரர்களும்,
வடக்கே இருந்த மன்னர்களும், விஜயநகர பேரரசும், மராட்டிய வீரசிவாஜி வம்சத்தவர்களும்,
தடுத்து நிறுத்தியதால் தான் தமிழக திருக்கோவில்கள் ஓரளவேணும் காப்பாற்றப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

அதே சமயம் கோவில்கள் பாதிக்கப்படாமல் இருக்க கவனம் செலுத்திடவும் கோவிலின் புனித தன்மை காத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

narendra modi in parliament - 2026

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை…

3ஆவது முறையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் மோதி அவர்கள்

நண்பர்களே,  தேசத்தின் மக்கள் நமக்கு, 3ஆவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார்கள்.   அந்த வகையிலே, நம்முடைய பொறுப்புகளும் கூட, மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.   ஆகையினாலே, நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன், நீங்கள் எங்களுக்கு 3ஆவது முறையாக சந்தர்ப்பம் அளித்திருக்கிறீர்கள், இரண்டு முறை அரசாங்கத்தை நடத்திய அனுபவம் எங்களிடம் இருக்கிறது.  நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன், இந்த நம்முடைய 3ஆவது ஆட்சிக்காலத்திலே, நாங்கள் முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக உழைப்போம்.  மேலும் இந்த உறுதிப்பாட்டோடு கூட, நாங்கள் இந்த புதிய பொறுப்பினை மேற்கொண்டு, எங்கள் கடமைகளை ஆற்றுவோம்.

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட அவசரநிலை பற்றி நினைவுகூர்கிறார் மோதி அவர்கள்

யாரெல்லாம், பாரதத்தின் மக்களாட்சி முறையின்…… பாரம்பரியங்களின் மீது, அர்ப்பணிப்பு உடையவர்களோ, அவர்களுக்கெல்லாம், ஜூன் 25, மறக்கக்கூடாத தினமாகும்.   அவசரநிலைக்காலத்தின், இந்த 50 ஆண்டுகள், நமக்களிக்கும் உறுதிப்பாடு, நாம் பெருமையோடு நமது அரசியல்சட்டத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டுமக்கள் உறுதியேற்போம்.   நம் பாரதத்தில் மீண்டுமொருமுறை,   50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்ட, செயலைச் செய்ய யாரும் துணியவே கூடாது.   மேலும் மக்களாட்சி முறையின் மீது, களங்கத்தை ஏற்படுத்த விடக்கூடாது. 

ஆக்கப்பூர்வமான விவாதங்களே அவையில் மக்களின் எதிர்பார்ப்பு, அமளியல்ல, காங்கிரஸுக்கு அறைகூவல் விடுக்கும் மோதிஜி

தேசத்தின் மக்கள், எதிர்க்கட்சிகளிடம், நல்ல முயற்சிகளையே எதிர்பார்க்கின்றார்கள்.  இதுவரை அவர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம், இப்போது இந்த, 18ஆவது மக்களவையினிலே, எதிர்க்கட்சிகள், தேசத்தின் சாமான்ய மக்கள் எதிரணியினர் என்ற முறையில் அவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள்.  ஜனநாயகத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.   எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு, இசைவாக நடப்பார்கள், என்று நான் நம்புகிறேன்.  அவையினிடத்திலே, சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு என்றால், விவாதங்களைத் தான், விழிப்புடன் இருத்தலைத் தான்.   பாசாங்கு செய்தலையோ, பகட்டாக நடத்தலையோ மக்கள் விரும்பவில்லை.  இடையூறுகளை விரும்பவில்லை.  மக்கள், விரும்புவது ஆக்கப்பூர்வமானதை,  வெற்று கோஷங்களை அல்ல.

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தேர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடி
யேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சோழவந்தான் பெரிய கடை வீதியில் தொடங்கிய, தேர் பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி சின்ன கடை வீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் வழியாக மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும் .

காலை 8:30 மணிக்கு தொடங்கும் தேரோட்ட நிகழ்ச்சியானது 11:30 மணி அளவில் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்வது வழக்கம் ஆனால், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டை மறித்து கடைகளை கட்டி இருப்பதாலும் சாலையின் நடுவில் கடைகள் இருப்பதாலும் தேர் வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக, சின்ன கடை வீதி எனும் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் நுழைந்த தேர் 20 நிமிடத்தில் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டிய நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது . குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் இருந்து தேரை இழுப்பதற்கு பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு இடத்தில் இருந்து தேரை நகற்றுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலானதால், தேரோட்ட நிகழ்ச்சியை காண வந்த வெளியூர் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பல இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து தேர் இப்போது வரும் அப்போது வரும் என ,எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக எடுத்து தேர் வருவதற்கு வழி ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாததால் 3 மணி நேரத்தில் நிலைக்கு வர வேண்டிய தேர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தேர் நிலைக்கு வராததால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன ..?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது ..?

நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது ..!

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.
இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின் பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது .

நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..! இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..! நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது. பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,

முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..!

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை… ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது…

பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று ; புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு தெய்வங்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது… அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

எல்லாம் சரி , ஆனால் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது ..?

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு. மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது)
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..!

அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!! தெய்வத்தின் அருளுடன் வாழ்க வளமுடனும் நலமுடனும் ..!!!

சமூகத் தளங்களில் சுற்றி வரும் ஒரு பழைய செய்தி தான். இருந்தாலும் இதை நாம் அடிக்கடி மனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. மீண்டும் மீண்டும் படித்து உரு ஏற்றிக் கொள்வது சிறந்தது.

தகவல் பகிர்வு: சரவண பாரதி

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக 30 கோடிக்கு மேல் மோசடி செய்த 18 பேர் மீது வழக்கு 10 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலைவனத்ததைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சசி மற்றும் அவரது கணவர் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணசாமி என்ற இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ 50 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக வந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சசி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன

திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் அவரின் உருதுணை யோடு தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டவர்களிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 30 கோடிக்கு மேல் சுருட்டியதாக தெரியவந்துள்ளது.

மேலும் காரியாபட்டியைச் சேர்ந்த சின்ன சுப்பையா ஆதிமூலம் நாராயணசாமி கமுதி தோப்படி முத்துஉள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமிஜெயந்தி
என்பவர் அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் பயிற்சி ஆணை வழங்கியதும் அதற்கு உடந்தையாக செய்யது அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி என கூறிக்கொண்டு பயிற்சியாளராக இருந்து வந்ததாகவும் சென்னையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கோயம்புத்தூர் கோபிசெட்டிபாளையம் மணிகண்டன் உடன் இணைந்து தனியாக உயர் நீதிமன்ற வெப்சைட் தொடங்கியதாகவும் அதன் அடிப்படையில் சிபிசிஐடி மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தையே ஏமாற்றும் அளவிற்கு நீதிமன்றத்தின் பெயரை பயன்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் நேரடி நியமன டிஎஸ்பி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாகேந்திர குமாரை கஸ்டடி எடுத்து விசாரித்ததில் மேற்படி சென்னை சேர்ந்த மூவருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது

உடனடியாக சென்னை சென்ற காவல்துறையினர் மேற்படி விஜயலட்சுமி ஜெயந்தி உள்பட மூவரை கைது செய்து விருதுநகர் கொண்டு வந்தனர்

மேலும் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது

செய்தி: சக்தி பரமசிவம்

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

tirupathi perumal in simma vahanam - 2026
#image_title

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் ரூ. 300 தரிசன டிக்கெட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கித் தருகிறோம் என்று சில இடைத்தரகர்கள் தங்கள் செல்போன் நம்பர்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ. 300 தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலமும், மாநில அரசுகளுக்கு சொந்தமான ஒரு சில சுற்றுலா வளர்ச்சி கழகங்கள் மூலமும் மட்டுமே பக்தர்கள் பெற முடியும்.

ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம். சமூக வலைதளங்களில் வெளியாகும் இது போன்ற போலியான தகவல்களை பக்தர்கள் நம்ப கூடாது.

வாழ்த்துப் பா – சிலம்புச் செல்வர்!

maposi 1 - 2026

ஜூன் 26 – மபொசி ஐயா பிறந்தநாள் வாழ்த்துப்பா

– பத்மன்

தமிழை வைத்துப் பிழைக்கவில்லை 
தமிழைப் பிழைக்க வைத்திட்டார்,
திராவிடப் புளுகைத் தோலுரித்தார்
தெய்வத் தமிழுக்குத் தோள்கொடுத்தார்.

அச்சுக் கோர்க்கும் பணிபுரிந்தார்
நச்சு மனிதரைப் பணியவைத்தார்,
பிச்சுப் பிடித்த கருத்துகளைப்
பிச்சுப் போட்டுப் புரியவைத்தார்.

சிலம்பைப் பழித்த சிறியோரைச்
சிலிர்த்தே எழுந்துச் சிலம்பிட்டார்,
சிலிம்பின் புகழை உலகெங்கும்
சிறப்பாய் ஊன்றி நிறுத்திட்டார்.

வடவேலவன் குன்றம் மீட்டிட்டார்
தென்குமரியும் சேர்ந்திட போரிட்டார்,
தமிழன் உணர்வதை உயர்த்திடவே
தமிழரசு கொண்டு உழைத்திட்டார்.

பாரதி புகழைப் பரப்பிட்டார்
பாரதப் பெருமை போற்றிட்டார்,
தமிழன் தேசிய வாதியென்றே
தரணியில் ஓங்கி மொழிந்திட்டார்.

தமிழர் தம்மை திசைதிருப்பும்
தரமற்ற போக்கைத் தடுத்திடவே
தன்மானத் தமிழர் மபொசி
தந்திட்ட வழியில் செல்வோமே! 

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

jenagai mariamman koil therottam - 2026

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றதது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 10தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்துதினசரி கலை
நிகழ்ச்சி நடந்தது.

16ஆம் நாள் திருவிழா தேரோட்டம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது.
அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் .

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா, சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், துணைக் கண்காணிப்பாளர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்இன்ஸ்பெக்டர் சேகர், கோவில் செயல் அலுவலர் இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல்அலுவலர் செல்வகுமார், தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், அர்ச்சகர் சண்முகவேல், ஆலய பணியாளர்கள் பூபதி ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர், இதில் தாசில்தார் மூர்த்தி, மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேஷ், சோழவந்தான் பாட்டியமந்தார்,கிராம காவல்காரர்கள்ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள்.

தேர், அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு தேர் வந்து சேர்ந்தது. தேர் வலம் வருவதற்கு ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக
குடில் கட்டை போட்டு வழிநடத்தி வந்தனர்..

வழிநெடுக அம்மனை வரவேற்று பூஜைகள் செய்தனர். இதில், முன்னாள் சேர்மன் எம் .கே. முருகேசன், வருவாய் ஆய்வாளர் ,சுகாதாரபணி ஆய்வாளர் சூரியகுமார், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செந்தில்வேல், ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்கள் சூரை விட்டனர்,

சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர்,மோர்,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், முத்தையா,
முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மின்சார வாரிய உதவி இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் தேர் செல்லும் இடங்களில் மின் வயர்களை கழற்றி மீண்டும் இணைப்பு கொடுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு, வட்டப் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நண்பர்கள் சார்பாக 11வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.

இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்
துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெறும். சோழவந்தான் காவல் துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காமாட்சிபுரம் சோழவந்தான் பூ வியாபாரிகள் சார்பாக தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

T20 WC 2024: அரையிறுதியில் அசால்ட்டாக வந்த இந்திய அணி!

t20 worldcup - 2026
#image_title

டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 24 ஜூன் 2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை

 குரூப் 1புள்ளிகுரூப் 2புள்ளி
Aஇந்தியா6தென் ஆப்பிரிக்கா6
Bஆஃப்கானிஸ்தான்4இங்கிலாந்து4
Cஆஸ்திரேலியா2மேற்கு இந்தியத் தீவுகள்2
Dவங்கதேசம்0அமெரிக்கா0

சூப்பர் 8இல் முதல் அப்செட்

          22.06.2024 அன்று கிங்க்ஸ்டனில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் (148/6) ஆஸ்திரேலியா (19.2 ஓவரில் 127) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று, சூப்பர் 8இல் முதல் அப்செட்டை பதிவு செய்தது.

          டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

          அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் வெளியேறினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11, டிம் டேவிட் 2, மேத்யூ வேட் 5, பேட் கம்மின்ஸ் 3, அஷ்டன் அகர் 2, ஆடம் ஜம்பா 9 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

          இறுதியாக ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை அனேகமாக கேள்விக் குறி ஆக்கிக் கொண்டது ஆஸ்திரேலியா.

அமெரிக்கா vs இங்கிலாந்து

          23.06.2024 அன்று அமெரிக்கா (18.5 ஓவரில் 115) இங்கிலாந்து (9.4 ஓவரில் 117/0) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. அமெரிக்க அணியை இங்கிலாந்து அணி மிக எளிதாக 10 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.

அதேநாள் மேற்கு இந்தியத் தீவுகள் (135/8) தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் 124/7) டக்வெர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும்போது மழை குறுக்கிட்டது. இதனால் வெற்றி இலக்கு 123ஆகக் குறைக்கப்பட்டது. அச்சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 15 ரன் எடுத்திருந்தது. எனவே மீதமுள்ள 90 பந்துகளில் 108 ரன் எடுக்கவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஈரமான பந்து, ஈரமான மைதானம் ஆகியவற்றோடு மிகவும் போராடி மேற்கு இந்தியத்தீவுகள் அணி தோல்வியைச் சந்தித்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா

          24.06.2024 கிரோஸ் ஐலட்டில் நடைபெற்ற இந்தியா (205/5) ஆஸ்திரேலியா (181/7) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறுவது இரண்டு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தநிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. விராட் கோலி இந்த முறையும் மிக மோசமாக அவுட் ஆணார். ஆனால் ரோஹித் ஷர்மா இன்று ஆடிய ஆட்டத்தைக் காண கண் கோடி வேண்டும். அவர் சந்தித்த 41 பந்துகளில் 11 பந்துகள் டாட் பால்கள்; மீதமுள்ள 30 பந்துகளில் 7 ஃபோர், 8 சிக்சர் (மொத்தம் 66 ரன்கள்) மீதமுள்ள 26 ரன்கள் ஒன்றாகவும் இரண்டாகவும் ஓடிச் சேர்த்தவை.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், மிட்சல் ஸ்டார்க்கின் இரண்டாவது ஓவரில் 4 சிக்சர், ஒரு ஃபோர் அடித்து மொத்தம் 29 ரன்கள் அந்த ஓவரில் எடுத்தார். 19 பந்துகளில் 50 ரன். 11.2ஆவது ஓவரில் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

இன்று ரிஷப் பந்த் (15 ரன்) சரியாக விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் (31 ரன்), ஷிவம் துபே (28 ரன்), ஹார்திக் பாண்ட்யா (27 ரன்), ஜதேஜா (9 ரன்) ஆகியோரின் பங்களிப்பில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

          இரண்டாவதால ஆஸ்திரேலிய அணி ஆடியபோது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் (76 ரன்) சிறப்பாக ஆடினார். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக குல்தீப் யாதவ் (4 ஓவர், 24 ரன், 2 விக்கட்) மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா (4 ஓவர், 29 ரன், 1 விக்கட்), அர்ஷ்தீப் சிங் (4 ஓவர், 37 ரன், 3 விக்கட்) ஆகியோர் முக்கியமான சமயங்களில் விக்கட் எடுத்து ரன் கொடுப்பதையும் கட்டுப்படுத்தினர். அதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

ஆப்கானிஸ்தான் Vs வங்கதேசம்

          இந்தப் பிரிவில் கடைசி ஆட்டமாக ஆஃப்கானிஸ்தான் வங்கதேச அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது இந்தப் போட்டி. இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அரையிறுதிக்குள் நுழையப் போகும் மற்றொரு அணி ஆஸ்திரேலியாவா அல்லது ஆஃப்கானிஸ்தானா என முடிவாகும் என்ற சூழ்நிலை இருந்தது. காரணம், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற நேரிடும்.

பரபரப்பாக நடைபெற்ற வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. 20 ஓவர் முழுதும் விளையாடி, அந்த அணியால் 115 ரன்களே எடுக்க முடிந்தது. குர்பாஸ் 55 பந்துகளை சந்தித்து 43 ரன் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான் 10 பந்துகளில் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹுசைன் 4ஓவர்கள் வீசி 26 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
பின்னர் விளையாடிய வங்கதேச அணி,இடையிடையே மழை குறுகிட்டதால், விதிமுறைகளை உணர்ந்து தொடக்கம் முதலே அதிவிரைவாக ரன்களைக் குவித்திருக்க வேண்டும். ஆனால் அது கோட்டை விட்டது. இதனால் முதலில் 19 ஓவர்களில் 114 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களே எடுக்க முடிந்தது. வங்கதேச தரப்பில் லிதன் தான் 49 பந்துகள் விளையாடி 54 ரன் எடுத்தார். ஆப்கன் தரப்பில் ரஷீத் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதை அடுத்து வங்க தேச டக்வொர்த் லூயிஸ் முறையில் 8 ரன்களில் ஆப்கன் அணியுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.

இந்தியாவுடான போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்துக்கு வந்தது. இதனால் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியது. வங்கதேசத்துடனான போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், அது விளையாடிய 3 போட்டிகளில் ஒரு தோல்வி, இரண்டு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இதை அடுத்து, முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 27.06.2024 அன்று இந்திய அணி இங்கிலாந்து அணியை கயானாவில் ப்ராவிடன்ஸ் மைதானத்தில் சந்திக்கிறது.