Home Blog Page 219

IPL 2024: அப்பாடா… மும்பை அணி வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதினேழாம் நாள்

ஐபிஎல் 2024 – 07.04.2024

இரண்டு ஆட்டங்கள்

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றாது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடையே நடைபெற்றது. 

மும்பை vs டெல்லி

மும்பை அணி (234/5, ரோஹித் ஷர்மா 49, இஷான் கிஷன் 42, ஹார்திக பாண்ட்யா 39, டிம் டேவிட் 45, ரொமாரியோ ஷெப்பேர்ட் 39, அக்சர் படேல் 2/35, நார்ட்ஜே 2/65) டெல்லி அணியை (205/8, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 71*, பிருத்வி ஷா 66, அபிஷேக் போரல் 41, ஜெரால்ட் கொயட்சி 4/34, பும்ரா 2/22) 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் நன்றாக ஆடினார்கள். ரோஹித் 27 பந்துகளில் 49 ரன் (6 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள்) அடித்தார். இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன் (4 ஃபோர், 2 சிக்சர்) அடித்தார். இன்று ஐ.பி.எல் 2024 இல் முதன் முறையாக ஆட வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 5 ரன் களில் அவுட்டானார். ஹார்திக் பாண்ட்யா (33 பந்துகளில் 39 ரன்), டிம் டேவிட் (21 பந்துகளில் 45 ரன்) இருவரும் மும்பை அணியின் ரன் ரேட் குறையா வண்ணம் பார்த்துக்கொண்டனர். இன்றைய ஹைலைட் மும்பை அணியின் ரொமாரியோ ஷெப்பேர்ட்-தான். கடைசி ஓவரில் 4 சிக்சர் மற்றும் 2 ஃபோர் அடித்து 202 என்று இருந்த மும்பை அணியின் ஸ்கோரை அவர் 234 ரன்னுக்கு உயர்த்தினார்.    

235 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் முதல் நான்கு வீரர்கள் சிறப்பாக ஆடினர். டேவிட் வார்னர் (8 பந்துகளில் 10 ரன்) 3.4 ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பிருத்வி ஷா நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று அதிரடியாக ஆடினார். அவர் 40 பந்துகளில் 66 ரன் அடித்து 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து அபிஷேக் போரல் (31 பந்துகளில் 41 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்தில் ஆட்டமிழக்கமல் 71 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ஆனால் பிற டெல்லி அணி வீரர்கள் நிலைத்து ஆடாததால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 ரன் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 34 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரில் லலித் யாதவ், குமார் குஷகர, ரிச்சர்ட்சன் ஆகியோர் கோயட்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். எனவே டெல்லி அணி 29 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மும்பை அணியின் ரொமாரியோ ஷெப்பேர்ட் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

லக்னோ vs குஜராத்

லக்னோ அணி (163/5, மார்கஸ் ஸ்டோயினிஸ் 58, கே.எல். ராகுல் 33, நிக்கோலஸ் பூரன் 32, ஆயுஷ் பதோனி 20, உமேஷ் யாதவ் 2/22, தர்ஷன் நல்கண்டே 2/21) குஜராத் அணியை (18.5 ஓவரில் 130, ராகுல் திவாத்தியா 30, சாய் சுதர்ஷன் 31, யஷ் தாகூர் 5/30, க்ருணால் பாண்ட்யா 3/110) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவா தலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. இன்று இந்த அணியின் வீரர்கள் தடாலடி பேட்டிங் எதுவும் செய்யவில்லை. சீரான ரன்ரேட்டுடன் பேட்டிங் செய்தனர். ராகுல் (33 ரன்), ஸ்டோயினிஸ் (58 ரன்), நிக்கோலஸ் பூரன் (32 ரன்), பதோனி (20 ரன்) ஆகிய நால்வரும் சிறப்பாக விளையாடினர். டி காக் (6 ரன்), படிக்கல் (7 ரன்) இருவரும் இன்று சரியாக விளையாடவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்திருந்தது. 

164 என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் கில் சுமாரான தொடக்கம் தந்தார்கள். அதன் பின்னர் டாகுதிவாத்தியா (30 ரன்) தவிர பிற குஜராத் அணி வீரர்கள் ஆட்டத்தை வெல்வதற்கான ந்ம்பிக்கையின்றி ஆடினர் இதனால் 18.5 ஓவரில் 130 ரன்னுக்கு அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது. லக்னோ அணியின் யஷ் தாகூர் 30 ரன் கொடுத்து 5 விக்கட் வீழ்த்தினார். க்ருணால் பாண்ட்யா 11 ரன் கொடுத்து 3 விக்கட் வீழ்த்தினார்.  

லக்னோ அணியின் யஷ் தாகூர் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.   

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

jb nadda in virudhunagar meeting - 2026
#image_title

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக., மூத்த தலைவர்கள் பாஜக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.

விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்து ஜே.பி. நட்டா தேர்தல் பிரசாரம் செய்தார்.

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பாஜக., தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் திருமங்கலத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து பிரசாரத்தை, முடித்து திருச்சி புறப்பட்டார்.

பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டார் ஹெலிகாப்டர் மூலம் மதுரை எலியார் பத்தியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வந்தடைந்தார். பின்னர் பாஜக நிர்வாகிகள் வரவேற்கு பின் காரில் திருமங்கலம் நோக்கி புறப்பட்டு சென்றார்.

திருமங்கலத்தில் நடைபெற்ற விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் எலியார் பத்தி தனியார் கல்லூரி வந்தடைந்து நிர்வாகிகளுடன் வரவேற்புக்கு பின் , பேசி விடை பெற்றார்.

பாஜக சார்பில், திருமங்கலம் சட்டமன்ற பொறுப்பாளர் சத்திவேல், மாவட்ட மாவட்ட செயலாளர் இளையராஜா எலியார் பத்தி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட 20 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை எலியார் பத்தி தனியார் கல்லூரியிலிருந்து திருச்சி புறப்பட்டு சென்றார்.

திருச்சியில் சாலை ஊர்வலம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் அவர் திருச்சிக்கு வந்தார்.

முன்னதாக, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை சாலை ஊர்வலம் (ரோடு ஷோ) நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாஜக., மற்றும் கூட்டணிக் கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கு காவல் ஆணையர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

சாலை ஊர்வலத்துக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பாஜக.,வினர் முடிவு செய்தனர்.

இதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பேரில் அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அதன்படி, அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. “கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி” வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்படி ஜே.பி. நட்டாவின் சாலை ஊர்வலம் திருச்சியில் நடைபெற்றது.

கூடுதல் பெட்டிகளுடன் ஓடுது கொல்லம்- சென்னை விரைவு ரயில்!

railway news - 2026
#image_title

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயிலைத் தொடர்ந்து கொல்லம் – சென்னை ரயிலிலும் பெட்டிகள் அதிகரிக்கப் படுகின்றன. கொல்லம் – செங்கோட்டை – சங்கரன்கோவில் – ராஜபாளையம் – மதுரை வழியாக தினசரி இயக்கப்படுகின்ற வண்டி எண் 16101/16102 சென்னை – கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன!

பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயிலான, எர்ணாகுளம் – கோட்டயம் – கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்படுகின்ற வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 18 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் இயங்கி வருகிறது.

இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் (2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (2) இணைக்கப்பட்டு மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படுகின்றன .

இந்த வழித்தடத்தில் செங்கோட்டை முதல் கொல்லம் வரை உள்ள மலை வழி ரயில் பாதையில் 14 பெட்டிகள் மட்டுமே இயங்கும் ரயில்களை கூடுதல் பெட்டிகள் இணைக்க வசதியாக கடந்த ஆண்டு சோதனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் முடிவில் 22 பெட்டிகள் வரை இந்த மலைவழிப் பாதையில் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழியில் இயங்கும் கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் – சென்னை விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் – பாலக்காடு இடையே இயங்கும் விரைவு ரயில் பெட்டிகளும் 18 பெட்டிகளாக நீட்டித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வண்டி எண் 16101/16102 சென்னை – கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் (2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (1) இணைக்கப்பட்டு மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளன. வரும் செவ்வாய்க் கிழமை ஏப்.9 மற்றும் 10 முதல் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

இதன் மூலம் இந்த ரயிலில் கூடுதல் பயணிகள் சென்னை சென்று வர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு செங்கோட்டை திருநெல்வேலி விரைவு ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் தேர்தலைச் சீர்குலைக்க சீனா திட்டம்!

election voting - 2026

செயற்கை நுண்ணறிவு எனும் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளது .

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தேர்தலைச் சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது …

2024ல் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இவற்றைக் குறி வைத்துள்ளன சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள். இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு.

இந்தத் தேர்தலின் போது நிலவும் பொதுக் கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரவ வைத்து, குழப்பத்தை ஏற்படுத்த சைபர் குழுக்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த ஆண்டு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் முக்கியத் தேர்தல்கள் நடைபெறுவதால் தனது நலனுக்கு பயனளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தி இடையூறு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியபோது, டீப்பேக் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இவைபோன்ற மோசடி விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி அவர்களைத் தவறாக வழி நடத்தும்.

சீனா, தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது பின்னாளில் அந்நாட்டுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்துப் பார்த்துள்ளது. அங்கு போலியான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக காரணங்களுக்காக பயன்படுத்துவது, பெண்கள் தலைமையில் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் புதுமைகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது உலகம் முழுவதும் ஐரோப்பிய யூனியனைத் தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடக்கின்றன. எனவே இந்த 2024ஆம் ஆண்டு பல நாடுகளுக்கு முக்கியமான ஆண்டாகத் திகழ்கிறது. இந்த நேரத்தில் தான் சீனா தனது குயுக்தி நிறைந்த வேலைகளை திட்டமிட்டுச் செய்து வருகிறது.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய நாடாளுமன்றட் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு தவகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் வரும் ஏப்.19 ம் தேதி தேர்தல் தொடங்குகிறது. ஜூன் மாதம் வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வழக்கமான சுவர் விளம்பரங்கள், ஒலிபெருக்கி விளம்பரங்கள், நோட்டீஸ் விநியோக, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது போன்ற பாரம்பரிய முறைகளைக் கடந்து, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்வது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

வேட்பாளர்கள் , கட்சிகளின் தரப்பில் விளம்பரங்கள், மீம்ஸ், வீடியோ என பெருமளவில் மக்களை சமூகத் தளங்கள் வாயிலாக விளம்பரங்கள் சென்றடைகின்றன. இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் குழப்பம் விளைவிக்க சீனா திட்டமிடுகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‛டீப் ஃபேக்’ முறையில் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்கி, வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்களிடையே பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தும்.

ஏற்கெனவே பிரதமர் மோடி இது போன்ற ஏஐ., தொழில்நுட்பம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அளித்த ஒரு பேட்டியில் , ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆபத்தாக உள்ளது. இதில் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது என கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே சீன ஆதரவுக் குழுக்களின் ஏமாற்று வித்தைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்!

IPL 2024: கோலி சதம் அடிச்சும் வேஸ்டா போச்சு!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதினாறாம் நாள்
ஐபிஎல் 2024 – 06.04.2024 – ஜெய்ப்பூர் 
ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணியை (183/3, விராட் கோலி 113*, ட்யு பிளேசிஸ் 44, சாஹால் 2/34) ராஜஸ்தான் அணி (19.1 ஓவரில் 189/4, ஜாஸ் பட்லர் 100*, சஞ்சுசாம்சன் 69) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ட்யு பிளேசிஸ் இருவரும் நன்றாக ஆடினார்கள். கோலி 72 பந்துகளில் 113 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 ஃபோர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். ட்யு பிளேசிஸ் 44 ரன் எடுத்தார். கிளன் மேக்ஸ்வெல் மற்றும் சௌரவ் சௌஹான் இருவரும் சோபிக்கவில்லை. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுத்திருந்தது.   

184 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடிய இவர் டி20 ஆட்டத்தில் சொதப்புவது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் (58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) சஞ்சு சாம்சனுடன் (42 பந்துகளில் 69 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து 14.4 ஓவர் வரை ஆடி 148 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். ரியன் பராக் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தபோதிலும் ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்து வெற்றியைப் பெற்றது. 

இரண்டு அணியிலும் தலா ஒரு பேட்டர் சதம் அடித்தது இந்த ஆட்டத்தின் சிறப்பு. விராட் கோலி சற்று அதிரடியாக ஆடியிருந்தால் ஒருவேளை முடிவு மஆறியிருக்கலாம்.  ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடையே நடைபேறும்.  

NCERT பாடத் திருத்தங்களுக்கு நன்றி பிரதமர் மோடி ஐயா!

books - 2026
  • செல்வ நாயகம்

தேர்தல் சமயத்தில் மேலும் ஒரு குண்டு போட்டிருக்கிறது மோடிஅரசு. கதறுவார்களா இந்துக்களின் எதிரிகள்?

11 மற்றும் 12 வகுப்புகளுக்கான (Political Science) புத்தகங்களில் சில மாற்றங்களை அறிவித்திருக்கிறது தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Educational Research and Training-NCERT).

இண்டியா டுடே ஊடகம் இது குறித்து கதறியபடி, “பாபர் கட்டிட இடிப்பு, குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொலை உள்ளிட்ட பல விவகாரங்களை மாற்றியிருக்கிறது NCERT” என்கிறது.

அதே இண்டியா டுடே ஊடகம், என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளது இந்தக் கட்டுரையில். இதில் மோடி அரசு செய்தது சரியா அல்லது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்தது சரியா என்பதை கவனிக்கவும்.

1. யுபிஏ புத்தகத்தில், ‘2002 குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பெரும்பாலோர் முஸ்லிம்கள், கொல்லப்பட்டனர்’ என்று இருந்திருக்கிறது. அதை இப்போது, ‘2002 குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்’ என்று மாற்றியிருக்கிறது . (அனைத்து மதத்தவரும் பாதிப்படைந்தனர். குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமல்ல).

2. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி யுபிஏ காலத்தில், “அந்தப் பகுதியை இந்தியா தன்னுடையது ‘என்கிறது’. பாகிஸ்தான் தன்னுடையது என்கிறது” என்றிருந்திருக்கிறது புத்தகத்தில். அதை இப்போது, “பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. அதை சட்டவிரோதமாக பாக். ஆக்கிரமித்துள்ளது” என்று மாற்றியிருக்கிறார்கள். (யுபிஏ படி, ‘அந்தப் பகுதி இருவருக்கும் சொந்தமாக இருக்கலாம்’).

3. மணிப்பூர் பற்றி யுபிஏ காலத்தில், “மணிப்பூர் மஹாராஜாவை மணிப்பூரின் சட்டமன்றத்தை கேட்காமல் இந்தியாவுடன் வெற்றிகரமாக 1949இல் இணைய வைத்தது இந்திய அரசு” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை இப்போது, “”மணிப்பூர் மஹாராஜாவை இந்தியாவுடன் வெற்றிகரமாக 1949இல் இணைய வைத்தது இந்திய அரசு” என்று மாற்றியிருக்கிறார்கள். யுபிஏ புத்தகம் சிண்டு முடித்து விடுகிறது, ‘சட்டமன்றத்தை கேட்காமல் மஹாராஜா தன்னிச்சையாக முடிவெடுத்தார். எனவே, அது மக்களின் முடிவல்ல’ என்று. அதை சரி செய்திருக்கிறது மோடி அரசு.

4, ராம் மந்திரை இடித்து பாபர் கட்டிய கட்டிடம் பற்றி யுபிஏ காலத்தில், “ராம் ஜன்மபூமி இயக்கமும், பாபர் கட்டிட இடிப்பும், அதன் அரசியல் விளைவுகளும்” என்றிருந்த அத்தியாத்தை, “ராம் ஜன்ம பூமி இயக்கம் எதைப் பற்றியது?” என்று மாற்றியிருக்கிறார்கள் இப்போது.

5, மேற்சொன்ன அத்தியாத்தில் யுபிஏ, “பாபர் கட்டிட இடிப்பால் பாஜகவும் இந்துத்துவமும் வளர்ந்தது” என்று அரசியல் பேசியிருந்ததை, “ராம ஜன்ம பூமி இயக்கம் பாரதத்தில் பல அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அயோத்தியில் ராம் மந்திர் கட்டப்பட்டது” என்று மாற்றியிருக்கிறார்கள்.

தேசத்தின் எதிரி காங்கிரஸ் என்பதை, அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களிலிருந்தே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது!

தேர்தல் சமயத்தில் இந்த மாற்றங்கள் வெளிவந்திருப்பதால், இதையும் அரசியல் செய்து கதறுவார்கள் இந்து விரோதிகள். இந்து விரோதிகள் இந்துக்களுக்கு செய்த துரோகத்தை அவர்களே பிரசாரம் செய்வார்கள். உறங்கிக் கொண்டிருக்கும் நடுநிலை இந்துக்கள் சிலர் விழித்துக் கொள்வார்கள்.!

NCERT திருத்தங்களுக்கு நன்றி மோதி ஜி!

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திமுக., விசிக.,; துணை போகும் போலீஸார் மீது நடவடிக்கை தேவை!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திமுக., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகத்துக்கு, துணைபோகும் காவல்துறை மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

தேசிய வாக்காளர் பேரவை சார்பில் தேர்தலில் 100% வாக்குகளை செலுத்தவும், நல்லவர்களை தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரம் நகரம் விளங்கி அம்மன் கோவில் தெருவில், நேற்று 05/04/24 காலை 11:30 மணியளவில் திண்ணை கூட்டம் நடத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் குரு. சுப்ரமணியம் மற்றும் அவருடன் சென்ற பொறுப்பாளர்களான அன்பரசன். ராகவன், சஞ்சய் ஆகியோர் மீது திமுக கவுன்சிலர்கள் C.K.ராஜன் மற்றும் ஜெய்ஸ் விஜயராகவன், பேட்டை பாலு பாலசுப்ரமணியம், அப்பு சந்திரசேகர் ஆகியோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் வன்முறை வெறியாட்டம் ஆடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல். அடிப்பட்டவர்களை விசாரணை என்னும் பெயரில் மாலை 06:30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி தகாத வார்த்தைகளை பேசி அச்சுறுத்தியுள்ளனர். திமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் அவர் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதால்தான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட DSP ரகுபதி தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களாட்சி நடைமுறையில் வாக்குகளை செலுத்துங்கள், நூறு சதவீத வாக்கு பதிவு ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும், ஓட்டிற்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என அரசாங்கம் தனது செலவில் பிரச்சாரம் செய்கிறது

இதே கருத்துடன் நல்லாட்சி அமைவதற்கு உங்கள் வாக்குகளை அவசியம் பதிவு செய்யுங்கள் என்று வீடுவீடாக அரசியல் சார்பு இல்லாமல் தேசிய வாக்காளர் பேரவை சார்பாக எடுத்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய பிரச்சாரம் செய்தவரை தாக்குவது சமூக விரோத செயல்.

ஓட்டிற்கு பணம் கொடுத்து ஆசை தூண்டி வாக்குகளை பெற முயற்சி நடப்பதாக பல புகார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது கூறப்படுகிறது. இத்தகைய நேர்மையான, ஜனநாயக ரீதியிலான கருத்தால் மக்கள் விழிப்படைந்து ஊழல் முறைகேடு சாதிய வன்முறைக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள் என்ற பயத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் தமிழக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வாகனங்களை முறையாக சோதனையிடாமல் அனுப்பிய அதிகாரிகள் பற்றி நடுநிலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன்பிறகு தமிழக அரசு அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து தமிழக அரசு அதிகாரிகளில் உள்ள கருப்பு ஆடுகள் எப்படி செயல்படுகிறது என்பதை நேர்மையான தேர்தல் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முறையாக அமைதியாக நடைபெற வேண்டுமானால் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வன்முறையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து அவர்களின் பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

மேலும் திமுக கூட்டணி கட்சிகள் வன்முறை வெறியாட்டம் நடக்க சாத்தியம் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்பு படையை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்.

மக்களின் தேவை அறிந்து உடனே செய்வேன்: செங்கோட்டையில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

john pandian tenkasi - 2026

மக்களின் தேவைகளை அறிந்து உடனே செய்வேன், தென்காசி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்று, தென்காசி தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை பகுதியில் பாஜக., சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஜான் பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார். 

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன், தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பல் வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

ஏப்.5 வெள்ளிக் கிழமை நேற்று புளியரை அருகே தமிழக- கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் வேட்பாளர் ஜான் பாண்டியன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

அங்கிருந்து புளியரை, புதூர், கட்டளைக் குடியிருப்பு, தவணை, கற்குடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து தாமரைச் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 

பின்னர், செங்கோட்டை நகரத்திற்கு வந்து கீழ பஜார் முக்கு, தெற்குத் தெரு, வம்பளந்தான் முக்கு, தாலுகா அலுவலகம் சந்திப்பு, மேலூர், பம்பு ஹவுஸ் ரோடு, சேர்வைகாரன்புதுத்தெரு ஆகிய முக்கிய வீதிகளிலும், காலாங்கரை, பெரியபிள்ளைவலசை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

தன்னுடைய பிரசாரத்தின் போது ஜான் பாண்டியன் கூறியதாவது:-

நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன். தொகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதுணையாக இருந்து செய்து கொடுப்பேன்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுச் சென்றவர்கள் நாடாளுமன்றத்தில் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல் அவர்களின் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தான் பேசி வந்தார்கள். நான் அப்படி இல்லை. உங்கள் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று பேசினார்.  

பிரசாரத்தின்போது, மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ராமநாதன், மாவட்ட ஓ.பி.சி. அணித் தலைவர் மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ், நகர பொதுச் செயலாளர்கள் பேச்சிமுத்து, மாரி, மேற்பார்வையாளர் சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகராஜன், ராம்குமார், பொண்ணுலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

IPL 2024: சன் ரைசர்ஸ் அணியிடம் தோற்ற தோனி அணி!

ipl 2024 - 2026

பதினைந்தாம் நாள்
ஐபிஎல் 2024 – 05.04.2024 – ஹைதராபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை அணியை (166/5, ஷிவம் துபே 45, அஜிங்க்யா ரஹானே 35, ரவீந்த்ர ஜதேஜா 31*) ஹதராபாத் அணி (18.1 ஓவரில் 166/4, எய்டன் மர்க்ரம் 50, அபிஷேக் ஷர்மா 37, ட்ராவிஸ் ஹெட் 31) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்த்ரா (12 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (26 ரன்) 8 ஓவருக்குள்ளே ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் அஜிங்க்யா ரஹானே (35 ரன்), ஷிவம் துபே (24 பந்துகளில் 45 ரன்), ஜதேஜா (31 ரன்) ஆகியோர் சிறப்பாக வீளையாடியும் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்துவீசினர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.

166 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 12 பந்துகளில் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ட்ராவிஸ் ஹெட் (24 பந்துகளில் 31 ரன்), மர்க்ரம் (36 பந்துகளில் 50 ரன்) என அனைவரும் நன்றாக ஆடினர். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் ரேட் சென்னை அணியின் ரன் ரேட்டைவிட எப்பொதும் அதிகமாகவே இருந்தது.

எனவே எந்தவிதப் பதற்றமும் இன்றி 18.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் கிளாசனும் சிக்ஸ் அடிக்கவில்லை; சென்னை அணியின் தோனியும் சிக்ஸ் அடிக்கவில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் ஷர்மா தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பசு மாட்டை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை!

hindumunnani - 2026
  • தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் கசாப்பு கடைக்கு செல்லும் அவலம்.
  • அறம் இல்லாத அறநிலையத்துறையின் அலட்சியம்…

கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பசு மாட்டை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…!

தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கு பக்தர்களால் பசுக்கள் தானமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு தானமாக வழங்கப்படும் பசுக்களை ஆலய நிர்வாகம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் எந்தக்காரணத்தைக் கொண்டும் பசுக்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி ஆவணத்தில் எழுதி வாங்கிக் கொண்டு கொடுக்கின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

பெரும்பாலும் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் பசுக்களை இடைத்தரகர்கள் மூலம் கசாப்பு கடைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு புனித நோக்கத்திற்காக இறை நம்பிக்கையுடன் ஆலயத்திற்கு வழங்கப்படும் பசுக்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க முடியாத நிலையில் நிர்வாகத் திறனற்று இருக்கிறது.

இதனால் இறை நம்பிக்கையுடன் இறைவனுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கசாப்பு கடைக்கு செல்வது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

ஆலயங்களுக்கு வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை மற்றும் அதனை பெற்றுக் கொள்ளும் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை, பசுக்களை பெற்றுச் சென்ற சுய உதவி குழு நபர்கள் தற்போது வைத்திருக்கும் பசுக்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து விவரங்களையும் அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

ஆலயத்திலிருந்து தானமாக பெற்ற பசுவை விற்க மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு அதனை விற்பனை செய்யும் சுய உதவிக் குழு நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.