Home Blog Page 217

மதுரை ரயில் நிலையத்துக்குள் அவசர கதியில் வரீங்களா… இதை அவசியம் படிங்க!

railway news - 2026
#image_title

பொது மக்களுக்கான – பயனுள்ள தகவல்:
*
30.06.2024 – ஞாயிறு இன்று காலை மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு வாயிலில் பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு 3ம் எண் நடைமேடைக்கு விரைந்தேன். அதில் இருந்து தான் மதுரை – செங்கோட்டை பயணியர் ரயில் கிளம்பும் என்று தகவல் பலகை வழிகாட்டியது.

ஞாயிறு காலை 6.50க்கே ரயிலில் இருக்கைகள் முழுக்க நிரம்பி விட்டன. ஒத்தக்கட்டை என்பதால் பார்த்தபடியே வேகமாய் நடந்து… ஏழாவது பெட்டியில் ஓர் இடத்தில் சற்று இடைவெளி இருப்பதை உணர்ந்து, 2 வயது சிறுவனை அருகே அமர்த்தியிருந்த நபரிடம் கேட்க, உட்காருங்க என்று சொல்லி இடம் அளித்தார். எதிரில் அவரது 5 வயது பையன், மனைவி அமர்ந்திருந்தார்கள். புன்னகைப் பரிமாறல்கள், சிறுவர்களுடனான விளையாடல்கள் என அமைதியாக நேரம் கடந்தது.

7.15க்கு வண்டி கிளம்பிய போது, என்ன வண்டி லேட்டா கிளம்புது என்றவாறு, ஏன் வண்டி இப்படி நகருது, அந்தப் பக்கம்ல போகணும் என்ற கேள்விக்குறியுடன் பக்கத்து நபர் விழிக்க, பிறகுதான் தெரிந்தது அவர்கள் கோவை செல்லும் ரயிலில் ஏறியிருக்க வேண்டும் என்பது. அவர்கள் பழனிக்குச் செல்ல வேண்டுமாம்!

ஐயா இது செங்கோட்டை போகும் வண்டி என்றேன். பெரிதாக அதிர்ச்சி ஏதும் அடையாமல் சிரித்த படியே, ஆனா 3ம் எண் பிளாட்பார்ம் என்றுதானே போர்டில் போட்டிருந்தது, அதுவும் 7 மணிக்கு கிளம்புவதாக- என்றார்.

மதுரை ரயில் நிலையத்தில் பொறுப்பில் இருந்த நம் நண்பரிடம் உடனே கைபேசியில் விசாரித்தேன்.

“ஆமாம் சில மாதங்களாக இப்படித்தான் நடைமுறை. ஒரே பிளாட்பாரத்தில் இரு ரயில்கள் கிளம்பும். செங்கோட்டை வண்டி 7.15க்கு தெற்கு முனையில் இருந்தும், கோவை வண்டி 7 மணிக்கு வடக்கு முனையில் இருந்தும் கிளம்பும். டிக்கெட் வாங்கிக் கொண்டு வருபவர்களுக்கு வழிகாட்ட வாசலிலேயே இருவரை போட்டிருக்கிறோம். அவர்கள் கோவை வண்டி என்றால் சொல்லி, அந்தப் பக்கம் அனுப்பி விடுவார்கள். அடுத்து நடைமேடையிலும் வழிகாட்டுவார்கள். இது குறித்த அறிவிப்பு முறையாக செய்யப்படுகிறது. அதைக் கேட்டுவிட்டு வண்டி ஏற வேண்டும். காலையில் ட்ராஃபிக் அதிகம். பிளாட்பாரம் கிடைக்காது. அதனால் இந்த நடைமுறை. இப்படி ஒரு வழிமுறை ரயில்வேயில் உள்ளது. ஜங்ஷன் நிலையங்களில் இருந்து இரு வேறு திசைகளில் செல்லும் ரயில்கள் சிறிது நேர இடைவெளியில் செல்ல நேரும் போது இது மாதிரி ஏற்பாடு உள்ளது. திருநெல்வேலியிலும் இப்படி உள்ளது” – என்றார்.

எனக்கும் இது புதிய தகவலாகத்தான் இருந்தது. ரயிலில் சென்று வெகுநாட்கள் ஆகி விட்டதால்…! இன்னும், திருச்சியில் 3 ரயில்கள் கூட ஒரே பிளாட்பார்மில் இருந்து சில நேரம் புறப்பட நேர்வதாகத் தெரியவருகிறது.

இந்தத் தகவலை அருகே அமர்ந்திருந்த நபரிடம் சொல்லி விளக்கி, திருமங்கலம் நிலையத்தில் இறங்கி, அவர் ஏற்கெனவே எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருப்பதால், ஈரோடு செல்லும் ரயிலில் ஏறி திண்டுக்கல்லில் இறங்கி பழநிக்கு பஸ்ஸில் செல்லுமாறு, மாற்று ஏற்பாடுக்கு வழி சொன்னேன். அவர்களும் அப்படியே செய்தார்கள்.

அப்போது அந்த நபரிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்… ஐயா இந்த மாதிரி ரயிலில் ஏறினதும் அருகில் அமர்ந்திருக்கும் நபர்களிடம் ஏதாவது பேச்சுக் கொடுங்கள். நீங்க எங்க ஊர்ல இறங்கறீங்க? என்றோ, ரயில் எப்போ கிளம்பும், அல்லது எத்தனை மணிக்கு இந்த ஊருக்குப் போய்ச் சேரும் என்றோ சாதாரணமாக விசாரித்தாலே, இந்த ரயில் நாம் போகும் ஊருக்குதான் போகுமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம் இல்லயா என்று!

உண்மையில் ரயில் பயணம் மிக இனிமையானது. பல்வேறு முகங்களைப் பார்க்க முடியும். எட்டு பேர் அமரும் ஒரு கேபினில் ஆறு பேராவது புதிய நபர்கள் பேச்சுத் துணைக்கு அல்லது அறிமுகத்துக்கு அமைவார்கள். சிலர் வேறு துறைகளில் இருக்கலாம். பேசிக் கொண்டே வரும் போது அவர்களின் துறைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு அமையும்.

எனவே மதுரைக்காரர்கள், கோவை – ஒட்டன்சத்திரம் – பழநி – பொள்ளாச்சி பாதையில் செல்ல, காலை நேரம் அவசர கதியில் டிக்கெட் வாங்கிக் கொண்டு மதுரை ரயில் நிலையத்துக்குள் வேகமாக நுழைந்தால், 3ம் எண் நடைமேடையில் வடக்குப் பக்கம் ஓட வேண்டும். விருதுநகர் – ராஜபாளையம் – தென்காசி- செங்கோட்டைக்கு செல்பவர்கள் அதே நடைமேடையில் தெற்குப் பக்கம் அலுங்காமல் குலுங்காமல் வந்து ஏறலாம்.

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 111ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  30.06.2024
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்றைய நாளுக்காகத் தான் நாம் ஃபிப்ரவரி மாதம் முதல் காத்துக் கிடந்தோம்.  நான் மனதின் குரல் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன்.  ஒரு மிகவும் இனிமையான பயன்பாடு உண்டு – இதி விதா புனர்மிலனாய என்பார்கள்.  இதன் பொருளும் கூட மிகவும் இனிமையானது, நான் விடை பெறுகிறேன், மீண்டும் சந்திப்போம் என்பதாகும் அது.  இந்த உணர்வோடு தான் நான், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன் என்று ஃபிப்ரவரி மாதம் உங்களிடம் கூறியிருந்தேன், இன்று மனதின் குரலோடு உங்களிடையே மீண்டும் வந்திருக்கிறேன்.  நீங்கள் அனைவரும் நலமாய் இருப்பீர்கள், உங்கள் வீடுகளில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

  இப்போது பருவமழைக்காலமும் வந்து விட்டது, பருவமழைக்காலம் வரும் போது, மனமும் குதூகலத்தில் துள்ளுகிறது.  இன்று மீண்டும் ஒருமுறை நாம் மனதின் குரலில், தங்களுடைய செயல்பாடுகளால் தேசத்தில் மாற்றமேற்படுத்திய நாட்டுமக்களைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.  மேலும் நாம் நமது வளமான கலாச்சாரம், கௌரவமான வரலாறு, வளர்ச்சியை நோக்கிய பாரதத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். 

நண்பர்களே, ஃபிப்ரவரி தொடங்கி இப்போது வரை, எப்போதெல்லாம் மாதத்தின் கடைசி ஞாயிறு வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களுடன் உரையாட முடியவில்லையே என்ற உணர்வு என்னை அழுத்தியது.  ஆனால்  கடந்த மாதங்களில் நீங்கள் எல்லாம் எனக்கு இலட்சக்கணக்கான செய்திகளை அனுப்பியிருக்கிறீர்கள் என்பதைக் காணும் போது, என் மனதிற்கு மிகவும் உவப்பாக இருக்கிறது.  மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு என்னமோ தடைப்பட்டிருக்கலாம் ஆனால், மனதின் குரலில் ஏற்படுத்திய உணர்வினால், தேசத்தில், சமூகத்தில், ஒவ்வொரு நாளும் நல்ல பணிகள், சுயநலமற்ற உணர்வோடு புரியப்படும் பணிகள், சமூகத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.    தேர்தல் காலத்துச் செய்திகளுக்கு இடையே கண்டிப்பாக மனதைத் தொடக்கூடிய செயல்கள்-செய்திகள் மீது உங்கள் கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும்.  உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை.  இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள்.  நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும்.  இந்த நாளைத் தான் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், ஹூல் தினம் என்ற வகையிலே கொண்டாடுகிறார்கள்.  இந்த நாள், வீரர்களான சித்தோ-கான்ஹூவின் அசாத்தியமான சாகசத்தோடு தொடர்புடையது.  இவர்கள் அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகளை வலிமையாக எதிர்த்தார்கள்.  வீரர்கள் சித்தோ-கான்ஹூ, ஆயிரக்கணக்கான சந்தாலி சகாக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை மேற்கொண்டார்கள், இது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா?  இது 1855ஆம் ஆண்டு நடந்தது, அதாவது 1857 பாரதத்தின் முதல் சுதந்திரப் போருக்கு ஈராண்டுகள் முன்னமேயே நடந்தது.   அப்போது ஜார்க்கண்டின் சந்தால் பர்கனாவிலே, நம்முடைய பழங்குடி சகோதர சகோதரிகள், அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவக்கினார்கள்.  நம்முடைய சந்தாலி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மீது ஆங்கிலேயர்கள் பலவகையான கொடுமைகளைப் புரிந்தார்கள், அவர்கள் மீது பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்கள்.  இந்தப் போராட்டத்தில் அற்புதமான வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களான சித்தோவும் கான்ஹூவும் பலிதானிகளாகினார்கள்.  ஜார்க்கண்டின் பூமியின் இந்த அமரகாதை படைத்த சத்புத்திரர்களின் பலிதானம், இன்றும் கூட, நாட்டுமக்களுக்கு உத்வேகமளித்து வருகின்றது.  இவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு  பாடலை, சந்தாலி மொழியிலே கேட்போம் வாருங்கள்.

எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள்.  நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும்.   அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள்.  ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பைச் சொரிகிறாள்.  நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது.  நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்?    இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில்.  நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன்.  

நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.   அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள்.  அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் ஏழைகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும் இல்லத்தரசிகளாகட்டும்.  இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது.  அவர்கள் தங்களின் படங்களை #Plant4Mother மற்றும் #एक_पेड़_मां_के_नाम என்பதில் தரவேற்றுவதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள்.

நண்பர்களே, இந்த இயக்கத்தினால் மேலும் ஒரு ஆதாயம் உண்டு.  பூமித்தாயும் நமது தாய்க்கு நிகராக நம்மை கவனித்துக் கொள்கிறாள்.  பூமித்தாய் தான் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம், ஆகையால் நாம் பூமித்தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகிறது.   அன்னையின் பெயரில் மரம் நடும் இயக்கத்தால் நமது அன்னை கௌரவப்படுத்தப்படுகிறாள் என்பதோடு, பூமித்தாயும் காக்கப்படுகிறாள்.  கடந்த பத்தாண்டுகளாக, அனைவரின் முயற்சிகளாலும், பாரதத்தில் வரலாறுகாணாத வனப்பகுதி விரிவாக்கம் ஏற்பட்டிருக்கிறது.  அமுதப் பெருவிழாக்காலத்தில், நாடெங்கும் 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  இப்போது நாம் இதைப் போலவே நமது அன்னையரின் பெயரில் மரம் நடும் இயக்கத்திற்கு மேலும் விரைவு கூட்ட வேண்டும்.

எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் பருவமழையானது வேகமாக தனது வண்ணங்களைப் பரப்பி வருகிறது.  மேலும் இந்த மழைக்காலத்தில், அனைவரின் வீடுகளிலும் தேடப்படும் ஒரு பொருள் என்றால் அது குடை.  மனதின் குரலில் இன்று ஒரு விசேஷமான குடைகளைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர இருக்கிறேன்.  இந்தக் குடை நமது கேரளத்திலே தயார் செய்யப்படுகிறது.   பார்க்கப்போனால், கேரளத்தின் கலாச்சாரத்திலே குடைகளுக்கென ஒரு விசேஷ மகத்துவமுண்டு.  குடைகள் என்பவை அங்கே பல பாரம்பரியங்கள் மற்றும் விதிகள்-பழக்கங்களில் முக்கியமான பங்காற்றுகின்றன.  ஆனால் நான் எந்தக் குடை பற்றிப் பேசுகிறேன் என்றால், அது கார்த்தும்பிக் குடை, இவை கேரளத்தின் அட்டப்பாடியிலே தயாரிக்கப்படுகின்றன.  இந்த வண்ணமயமான குடைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன.  இவற்றின் விசேஷம் என்னவென்றால், இவை கேரளத்தின் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளால் தயாரிக்கப்படுகிறது என்பது தான்.  இன்று நாடெங்கிலும் இந்தக் குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது.  இவை இணையம்வழியும் விற்பனை செய்யப்படுகின்றன.  இந்தக் குடைகளை வட்டாலக்கி கூட்டுறவு வேளாண் அமைப்பின் மேற்பார்வையில் தயாரிக்கிறார்கள்.  இந்த அமைப்பின் தலைமை, நமது பெண்களிடம் தான் இருக்கிறது.  பெண்களின் தலைமையில் அட்டப்பாடியின் பழங்குடியினச் சமூகமானது, தொழில்முனைவின் அற்புதமான எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறது.   இந்த அமைப்பு, மூங்கில் கைவினைப்பொருட்களுக்கான ஒரு அலகையும் நிறுவியிருக்கிறது.  இப்போது இவர்கள் ஒரு சில்லறை விற்பனை அங்காடியையும், ஒரு பாரம்பரியமான கஃபேயையும் திறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அதாவது தங்களுடைய குடைகளையும், இன்னும் பிற பொருட்களையும் விற்பனை செய்வது மட்டுமல்ல, தங்களுடைய பாரம்பரியம், தங்களுடைய கலாச்சாரம் ஆகியவற்றையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது என்பதே உள்ளார்ந்த விஷயம்.  இன்று கார்த்தும்பி குடைகள், கேரளத்தின் சின்ன கிராமம் தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நமது கொள்கைக்கு இதை விடச் சிறப்பான வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?

என் மனம் நிறை நாட்டுமக்களே, அடுத்த மாதம் இந்த நேரம் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடங்கப்பட்டிருக்கும்.  நீங்கள் அனைவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நம்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு.  ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கெடுக்கவிருக்கும் இந்தியக் குழுவின் வீர்களுக்கு நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   டோக்கியோ ஒலிம்பிக்கின் நினைவுகள் நம்மனைவரின் நினைவுகளிலும் இன்னமும் கூட பசுமையாக இருக்கின்றது.  டோக்கியோவில் நமது வீரர்களின் வெளிப்பாடு, பாரதீயர்கள் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது.  டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகிலிருந்தே நமது தடகள வீரர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தங்களைத் தயார் செய்வதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.   அனைத்து விளையாட்டு வீரர்களையும் கணக்கெடுத்தால், இவர்கள் அனைவரும் சுமார் 900 சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள்.  இது கணிசமான எண்ணிக்கை.

நண்பர்களே, பாரீஸ் ஒலிம்பிக்கில் சில விஷயங்களை நீங்கள் முதன்முறையாகக் காண்பீர்கள்.  துப்பாக்கிச் சுடும் போட்டியில் நமது விளையாட்டு வீரர்களின் திறமை வெளிவரத் தொடங்கியிருக்கிறது.  டேபிள் டென்னிஸில் நமது ஆடவர் மற்றும் பெண்களின் அணிகள் தகுதி பெற்றன.  இந்திய ஷாட்கன் அணியில் நமது ஷூட்டர் பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  இந்த முறை மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றத்தில் நமது அணியின் வீரர்கள், நாம் முன்பு போட்டியிடாத பிரிவுகளிலும் போட்டிபோட இருக்கிறார்கள்.  இந்த முறை விளையாட்டுக்களில் ஒரு அலாதியான சிலிர்ப்பை நம்மால் உணர முடியும் என்பதை நீங்களே அனுமானித்துக் கொள்ளலாம்.  சில மாதங்கள் முன்பாக, உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் நமது மிகச் சிறப்பான செயல்பாடு என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அதே போல சதுரங்கம் மற்றும் பேட்மிண்டனிலும் கூட நமது விளையாட்டு வீரர்களும் வெற்றிக் கொடி நாட்டியிருந்தார்கள்.  நம்முடைய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் கூட மிகச் சிறப்பான செயல்பாட்டைப் புரிவார்கள் என்று நாடு முழுவதும் எதிர்பார்க்கிறது.   இந்தப் போட்டிகளில் பதக்கங்களையும் வெல்வார்கள், நாட்டுமக்களின் இதயங்களையும் கொள்ளை கொள்வார்கள்.  அடுத்து வரவிருக்கும் நாட்களில், பாரதிய அணியைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவிருக்கிறது.  நான் உங்களனைவரின் சார்ப்பாகவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்.  அப்புறம் ஆம்….. இந்த முறை நம்முடைய #Cheer4Bharat  ஆகும்.  இந்த ஹேஷ்டேக் வாயிலாக நாம் நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவோம்.   அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து அதிகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.   இந்த வேகத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்…. உங்களுடைய இந்த வேகம்…… பாரதத்தின் மாயாஜாலம், உலகிற்கு நம் வீரர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்த பேருதவியாக இருக்கும்.

என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்களனைவருக்கும் ஒரு குரல் பதிவை இசைக்க விரும்புகிறேன்.

        இந்த வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு, நீங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனீர்கள் இல்லையா!!   சரி, இதன் பின்னணியில் இருக்கும் விஷயம் முழுவதையும் நான் உங்களிடம் கூறுகிறேன் வாருங்கள்!!   உள்ளபடியே இது குவைத் வானொலியின் ஒரு ஒலிபரப்புப் பகுதி.   நாமோ குவைத் பற்றிப் பேசுகிறோம், ஆனால் ஹிந்தி எங்கிருந்து வந்தது என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்?   ஆனால் குவைத் அரசாங்கம் தனது தேசிய வானொலியில் ஒரு விசேஷமான நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது.  அதுவும் ஹிந்தி மொழியில்.  குவைத் வானொலியில், ஞாயிறுதோறும் இது அரை மணிக்கு ஒலிபரப்பாகும்.  இதிலே பாரதக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் இடம் பெறும்.  நமது திரைப்படங்கள் மற்றும் கலையுலகோடு தொடர்புடைய விவாதங்கள் ஆகியன அங்கே இருக்கும் பாரதநாட்டவர்களுக்கு இடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.  குவைத் நாட்டவர்களும் கூட இதிலே அதிக நாட்டம் காட்டுகிறார்களாம்.     இந்த அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே, இன்று உலகமெங்கிலும் நமது கலாச்சாரம் எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதைக் காணும் போது, எந்த ஒரு இந்தியர் தான் உவப்பெய்த மாட்டார்!!  இப்போது துர்க்மெனிஸ்தானிலே இந்த ஆண்டு மே மாதம், அவர்களுடைய தேசியக்கவியின் 300ஆவது நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.  இந்தச் சந்தர்ப்பத்தின் போது, துர்க்மெனிஸ்தானின் குடியரசுத் தலைவர், உலகின் 24 புகழ்மிக்க கவிஞர்களுடைய உருவச்சிலைகளைத் திறந்து வைத்தார்.  இவர்களில் ஒரு உருவச்சிலை, குருதேவ் ரவீந்திரநாத் டாகோர் அவர்களுடையதாகும்.  இது குருதேவருக்கான கௌரவம், பாரதத்துக்கான கௌரவம்.  இதைப் போலவே ஜூன் மாதம், இரண்டு கரிபியன் தேசங்களான சூரினாம் மற்றும் செயிண்ட் வின்செண்ட் அண்ட் தி க்ரெனாடீன்ஸ் ஆகியன, தங்களுடைய இந்திய மரபினை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடின.  சூரினாமிலே இந்திய வம்சாவழியினர் ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதியன்றும், இண்டியன் அரைவல் டே அதாவது இந்தியர்கள் வந்து சேர்ந்த நாள் மற்றும் அயலக இந்தியர்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.   இங்கே ஹிந்தி மொழியோடு சேர்ந்து, போஜ்புரி மொழியையும் நன்கு பேசுகிறார்கள்.  செயிண்ட் வின்செண்ட் அண்ட் தி க்ரெனாடீன்ஸில் வசிக்கும் நமது பாரதீய வம்சாவழியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6000.  அவர்கள் அனைவருக்கும் தங்களுடைய மரபு பற்றி மிகுந்த பெருமிதம் இருக்கிறது.  ஜூன் மாதம் 1ஆம் தேதியன்று இந்தியர்கள் வந்து சேர்ந்த  தினத்தை அவர்கள் கொண்டாடிய விதத்தைப் பார்த்தாலே போதும், அவர்களுடைய இந்தியத்தன்மை மீதான பெருமித உணர்வை நம்மால் உணர முடியும்.  உலகெங்கும் பாரதநாட்டு மரபு மற்றும் கலாச்சாரத்தின் இத்தகைய பரவலைப் பார்க்கும் போது, அனைத்து இந்தியருக்குமே பெருமை மேலோங்குகிறது.

நண்பர்களே, இந்த மாதம் உலகெங்கிலும் 10ஆவது யோகக்கலை தினம் மிகுந்த உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் கொண்டாடப்பட்டது.  நானுமே கூட ஜம்மு கஷ்மீரத்தின் ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன்.  கஷ்மீரத்தின் இளைஞர்களோடு கூடவே இளம் சிறார்களும் சிறுமிகளும் கூட யோகக்கலை தினத்தில் பங்கெடுத்துக் கொண்டு யோகக்கலை பயின்றார்கள்.  உலகெங்கிலும் யோகக்கலை தினம் பல அருமையான சாதனைகளைப் படைத்திருக்கிறது.  சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு பெண்மணியான அல் ஹனௌஃப் ஸாத் அவர்கள், பொதுவான யோகக்கலை நெறிமுறையை முன்னின்று நடத்தினார்.   ஒரு பிரதானமான யோகக்கலைப் பயிற்சியை, சவுதி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் வழிநடத்துவது என்பது இதுவே முதன் முறையாகும்.   எகிப்திலும் இந்த முறை யோகக்கலை தினத்தன்று ஒரு புகைப்படப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நீலநதிக்கரையோரம், செங்கடலின் கடற்கரைப் பகுதிகளில், பிரமிடுகளுக்கு முன்பாக யோகக்கலை பயிலும் இலட்சக்கணக்கானோரின் படங்கள் மிகவும் பிரபலமாகின, பலராலும் விரும்பப்பட்டன.  பளிங்காலான புத்தர் சிலைக்குப் பெயர் போன மியான்மாரின் மாராவிஜயா பகோடா வளாகம் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது.  இங்கே ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று அற்புதமான யோகக்கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   பஹரீனில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இலங்கையில் யுனெஸ்கோ மரபுச்சின்னமான புகழ்மிக்க கால் கோட்டையிலும் கூட ஒரு நினைவுகொள்ளத்தக்க யோகக்கலைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.   அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆப்சர்வேஷன் டெக்கிலும் கூட மக்கள் யோகக்கலையைப் பயின்றார்கள்.  மார்ஷல் தீவுகளும் கூட முதன்முறையாக நடந்த, பெரிய அளவில் யோகக்கலை தினத்தின் நிகழ்ச்சிகளில், அவர்களின் குடியரசுத் தலைவரும் பங்கு கொண்டார்.  பூட்டான் நாட்டின் திம்புவிலும் கூட ஒரு பெரிய யோகக்கலை நிகழ்ச்சி அரங்கேறியது, இதிலே என்னுடைய நண்பரான, பிரதமர் டோப்கேயும் கூட பங்கெடுத்துக் கொண்டார்.  அதாவது உலகின் பல்வேறு இடங்களிலும் யோகக்கலை பயிலும் ஒரு பரந்துபட்ட பார்வையை நாமனைவரும் கண்டோம்.   யோகக்கலை தினத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நான் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   உங்களிடத்திலே பழையதொரு விண்ணப்பமும் உண்டு.  நாம் யோகக்கலையை வெறும் ஒரு நாள் பயிற்சியாக மட்டுமே அணுகக் கூடாது.  நீங்கள் சீரான வகையிலே யோகக்கலையைப் பயில வேண்டும்.  இதனால் உங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உங்களால் உணர முடியும். 

நண்பர்களே, பாரதத்தின் பல பொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை அதிகம் இருக்கிறது, நாம் நமது நாட்டின் உள்ளூர்ப் பொருட்கள் உலக அளவில் பரவலாக்கப்படுவதைக் காணும் போது, நெஞ்சம் கர்வத்தில் விம்முவது இயல்பான விஷயம் தானே!!  இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் அரக்கு காப்பி.  அரக்கு காப்பி, ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.  இதன் செறிவான சுவையும் மணமும் உலகப் புகழ் வாய்ந்தவை.  அரக்கு காப்பியின் சாகுபடியோடு சுமார் ஒண்ணரை இலட்சம் பழங்குடியினக் குடும்பங்கள் தொடர்புடையனவாக இருக்கின்றன.  அரக்கு காப்பியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் கிரிஜன் கூட்டுறவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.   இங்கிருக்கும் விவசாய சகோதர சகோதரிகளோடு இணைந்து இது செயல்பட்டு, அரக்கு காப்பியைப் பயிர் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தியது.  இதன் காரணமாக இங்கிருக்கும் விவசாயிகளின் வருவாய் அதிகம் பெருகியது.  இதனால் ஆதாயம் இங்கிருக்கும் கோண்டா டோரா பழங்குடியினச் சமூகத்துக்கும் கிடைத்திருக்கிறது.  வருமானத்தோடு கூடவே அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு கௌரவமும் கிடைத்திருக்கிறது.  ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களோடு இந்தக் காப்பியைப் பருகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததை நான் இப்போது நினைவு கூருகிறேன்.   இதன் சுவையைப் பற்றி நான் என்ன சொல்ல, ஆஹா அற்புதம்!!   மிகவும் அருமையான காப்பி!!  அரக்கு காப்பிக்கு உலகளாவிய பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.  தில்லியில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டிலும் கூட காப்பி எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது.  உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, அப்போது நீங்களும் கூட அரக்கு காப்பியை சுவைத்து மகிழுங்களேன்!! 

நண்பர்களே, உள்ளூர்ப் பொருட்களை உலகளாவிய அளவுக்குக் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய ஜம்மு கஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் பின் தங்கிப் போனவர்கள் அல்ல.  கடந்த மாதங்களில் ஜம்மு கஷ்மீர் சாதித்துக் காட்டியிருப்பவை, நாடெங்கும் இருக்கும் மக்களுக்கும் கூட ஒரு எடுத்துக்காட்டு.  இங்கே, புல்வாமாவிலிருந்து அவரைக்காயின் முதல் தொகுதி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  கஷ்மீரில் விளையும் அரியவகைக் காய்கறிகளை ஏன் நாம் உலகிற்கு அறிமுகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் சிலர் மனங்களில் உதித்தது.  அப்புறமென்ன!!  சகூரா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ராஷீத் மீர் அவர்கள் இதற்காக முதன்முதலில் முன்வந்தார்.  இவர் கிராமத்தின் பிற விவசாயிகளின் நிலங்களை ஒருங்கிணைத்து, அவரைப்பயிரை விளைவிக்கும் பணியைத் தொடக்கினார், சில காலத்திற்குள்ளாகவே அவரைக்காய் கஷ்மீரிலிருந்து லண்டனைச் சென்றடைந்தது.  இந்த வெற்றி, ஜம்மு கஷ்மீரின் மக்களுக்கு வளங்களை அளிக்கும் புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.  நம்முடைய நாட்டிலே இப்படிப்பட்ட தனித்துவமான பொருட்களுக்குக் குறைவேதும் இல்லை.  நீங்கள் இப்படிப்பட்ட பொருட்களை  #myproductsmypride என்பதில் கண்டிப்பாகப் பகிருங்கள்.  நான் இந்த விஷயம் தொடர்பாக வரவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க இருக்கிறேன். 

मम  प्रिया: देशवासिन:

अद्य अहं किञ्चित् चर्चा संस्कृत भाषायां आरभे |

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

மனதின் குரலில் திடீரென சம்ஸ்கிருதத்தில் நான் ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்.   காரணம் என்னவென்றால், இன்று சம்ஸ்கிருதத்தோடு தொடர்புடைய ஒரு சிறப்பான சந்தர்ப்பம்.  இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தான் ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது.   50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கையானது பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது.    நான் ஆல் இண்டியா ரேடியோ குடும்பத்தாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். 

நண்பர்களே, பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் சம்ஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.  இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், நாம் சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும்.   தற்போது இப்படிப்பட்ட ஒரு முயற்சி பெங்களூரூவில் பலர் செய்து வருகிறார்கள்.  பெங்களூரூவின் ஒரு பூங்காவான கப்பன் பூங்காவில் இங்கிருப்போர் ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.  இங்கே வாரத்தில் ஒரு முறை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும், குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைவரும் பரஸ்பரம் சம்ஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள்.  இது மட்டுமல்ல, இங்கே வாதவிவாதங்களின் பல அமர்வுகளும் சம்ஸ்கிருதத்திலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன.  இவர்களுடைய இந்த முயற்சியின் பெயர் சம்ஸ்கிருத வார இறுதி.  இதன் தொடக்கத்தை ஒரு இணையத்தளத்தின் வாயிலாக, சமஷ்டி குப்பி அவர்கள் செய்தார்கள்.  சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி பெங்களூரூவாசிகளின் மத்தியிலே, சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானதாகிவிட்டது.  நாமனைவரும் இதைப் போன்ற முயற்சிகளில் இணைந்தோம் என்றால், உலகின் இத்தனை தொன்மையான, அறிவியல் செறிவுடைய மொழியின் வாயிலாகப் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். 

          எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பதிப்பில் உங்களோடு இணைந்து பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.  இப்போது முதல் இந்தத் தொடர் எப்போதும் போலவே தொடரும்.  அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு புனிதமான ரத யாத்திரை தொடங்கவிருக்கிறது.  மஹாபிரபு ஜகன்னாதரின் கிருபையானது நாட்டுமக்கள் அனைவரின் மீதும் பொழிய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.  அமர்நாத் யாத்திரையும் தொடங்கி விட்டது, அடுத்த சில நாட்களில் பண்டர்பூர் வாரியும் தொடங்கிவிடும்.  இந்தப் புனித யாத்திரைகளில் பங்குபெறும் அனைத்து பக்தர்களுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.  அடுத்து கச்சீ நவவர்ஷ் என்ற ஆஷாடீ பீஜ் பண்டிகையும் வரவிருக்கிறது.  இந்த அனைத்து சுபதினங்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.  ஆக்கப்பூர்வ உணர்வு நிரம்பிய, மக்களின் பங்கெடுப்புடன் கூடிய இத்தகைய முயற்சிகளை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வீர்கள் என்பதே என் நம்பிக்கை.  அடுத்த மாதம் உங்களோடு மீண்டும் இணைய ஆவலோடு காத்திருப்பேன்.  அதுவரை நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

IMG 20240630 WA0000 - 2026

டி-20 2024 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பிரிட்ஜ்டவுன் கெனிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. வழக்கம்போல விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ரோஹித் ஷர்மா (ஐந்து பந்துகளில் 9 ரன், 2 ஃபோர்), ரிஷப் பந்த் (2 பந்துகளில் பூஜ்யம் ரன்) சூர்யகுமார் யாதவ் (4 பந்துகளில் 3 ரன்) ஆகியோர் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 45/3.

அதன் பின்னர் விராட் கோலியும் (59 பந்துகளில் 76 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) அக்சர் படேலும் (31 பந்துகளில் 47 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். அதன் பின்னர் ஷிவம் துபே (16 பந்துகளில் 27 ரன்) கடைசி ஓவரின் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். இவ்வாறு 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

இரண்டாவதாக தென் ஆப்பிரிக்க அணி விளையாட வந்தபோது மூன்று ஓவர் முடிவதற்குள் ஹெண்ட்ரிக்ஸ் (4 ரன்) மற்றும் மர்க்ரம் (4 ரன்) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் க்விண்டன் டி காக் (31 பந்துகளில் 39 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன்), கிளாசன் (27 பந்துகளில் 52 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறாவே அதிக வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கை பெறவைத்தனர்.

இருந்தாலும் 16.1ஆவது ஓவரில் கிளாசன் (17 பந்துகளில் 21 ரன்) ஆட்டமிழக்கும்போது இன்னமும் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. 

18ஆவது ஓவரை பும்ரா வீசினார். அவர் 2 ரன்கள் கொடுத்து ஒரு விக்கட் எடுத்தார். அடுத்த ஓவரை அர்ஷ்தீப் வீசினார். அவர் அந்த ஓவரில் 4 ரன்கள் கொடுத்தார்.

கடைசி ஓவரில் 16 ரன் கள் தேவைப்பட்டன. ஹார்திக் பாண்ட்யா பந்துவீச வந்தார். அப்போது டேவிட் மில்லர் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரடித்த ஒரு பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்தார். பேலன்ஸ் தவறியதால் அவர் பவுண்டரிக்கு வெளியே செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் சமயோசிதமாக பந்தை மைதானத்திற்குள் வீசிவிட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று, பின்னர் மீண்டும் உள்ளே வந்து அந்த கேட்சைப் பிடித்தார்.

அதற்கடுத்த ஐந்து பந்துகளில் 8 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்கு 7 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றியையும் உலகக் கோப்பையையும் பெற்றுத்தந்தார்கள். 

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி!

IMG 20240629 WA0005 - 2026

மதுரை: சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல்
நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக ஹோட்டல் ஜெருமான்ஸ் வரை பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர்.

திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையர் சுபக்குமார், மற்றும் எஸ் எஸ் காலனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா , மற்றும் எஸ் எஸ் காலனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அரவிந்தோ மீராபள்ளி முதல்வர் தலைமையில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது.

சுமார் 150 மாணவர்கள் மற்றும் காவல்துறை ஆளிநர்கள் இந்த விழிப்புணர் பேரணியை நடத்தினர் .

பேரணி முடிந்தவுடன் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பலகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதில் , 200க்கும் மேற்பட்டோர் அந்த பதாகையில் கையொப்பம் இட்டனர்.

சாத்தூர் – பட்டாசு ஆலையில் வெடி விபத்து 4 பேர் பலி

IMG 20240629 WA0003 - 2026
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசு மருந்து கலக்கும்போது உராய்வின் காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டதில் 3-அறைகளும் தரைமட்டமாகின

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன்(41)என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கம்போல் இன்று சனிக்கிழமை காலை பட்டாசு தயாரிக்க தேவையான பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் புதுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி(38),அச்சங்குளம் ராஜ்குமார்(45),சத்திரபட்டி மோகன்(40,செல்வக்குமார்(50 ஆகிய 4-பேரும் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து மருந்து கலக்கு போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் 3-அறைகள் தரைமட்டமாகின இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் சாத்தூர் தாலுகா காவல் துறையினர்,சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகிய சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.மேலும் வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே கடந்த மே 9-ம் தேதி சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் தற்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Oldest Candidate in Oldest Democracy!

0
biden vs trump - 2026

         Narasimhan Vijayaraghavan

Within a few minutes of the Biden  v. Trump US Presidential Debate Live, on 27th June,2024 at 21.00 ET ( 06.30 IST) at CNN Headquarters in Atlanta,Georgia, it was clear to any dispassionate observer/watcher, that the incumbent POTUS who showed up was ‘ile,tired and lacking in mental acuity’ to hold the most powerful office in the world. Biden presented a painful picture to his devoted. It was Donald J Trump who won by default despite the ‘obvious bluster and bravado full of alternate facts a.k.a. lies’.  A poor advertisement for a proud nation as oldest democracy.

US declared itself free on July, 1776. The first U.S. Presidential elections was held on 15th Dec,1788. The most famous exchanges called Lincoln-Douglas, between  Abraham Lincoln and Stephen A  Douglas between August 21, 1858 – October 15, 1858, were a cluster of  seven debates in the 1858 Illinois senatorial campaign, are talked of, even today.

While the concept of televised political debates is commonplace today, their origin can be traced back to a single, groundbreaking event: the 1950 Senate race in Massachusetts between Democratic Congressman John F. Kennedy and Republican Congressman Richard Nixon. There is, however, a common misconception – their first encounter wasn’t on September 27th, 1950, but rather on September 21st.

This historic debate, broadcasted on radio and the relatively new medium of television, marked a turning point in American politics. It offered voters an unprecedented opportunity to see and hear the candidates directly, rather than relying solely on speeches and printed media. An interesting trivia is that the same Kennedy had passed 1000% as political donation from his father to Nixon, nine years earlier, appreciating his ‘anti-communist’ commitment.

The 1950s were a period of immense political and social change. The Cold War was intensifying, and anxieties about communism were rampant. The September 21st debate, aired on WBZ-TV in Boston, was a local affair. Neither candidate expected a large audience.The format was simple: both men delivered opening statements, then responded to questions posed by a moderator. While the debate lacked the intense back-and-forth of today’s televised encounters, it was groundbreaking in its use of the new medium.

The impact of the televised debate was significant. While viewership numbers were modest by today’s standards, the debate captured the national imagination. People who wouldn’t normally attend political rallies now had a front-row seat to the political process. Kennedy, with his youthful appearance and confident delivery, was seen as performing better on television than the sweating and somewhat nervous Nixon.

This initial success of televised debates paved the way for their increased use in future elections. The Kennedy-Nixon debates of 1960, which were viewed by millions nationally, are considered a landmark moment in American political history.

The 1950 Kennedy-Nixon debate holds historical significance for several reasons. It marked the dawn of televised political debates, forever altering the way voters engage with candidates. It showcased the power of television to shape public perception, a factor that continues to influence elections today. Finally, it highlighted the importance of a candidate’s personal image and communication skills in the television age.

While not the first debate between the two politicians, the September 21st, 1950 encounter stands as a testament to the evolving landscape of American politics. It ushered in a new era of political communication, one that continues to shape our democratic process.

American democracy is strange, unique and peculiar. The candidate who wins the POtuS election may not win the popular vote. The constitutionally mandated Electoral College beast, put in by the framers in 18th century, clinches the candidate. The latest candidate to succeed this route was Donald J Trump who best Hilary Clinton in Nov,2016, via the Electoral College, despite trailing by 3 million votes in popular stakes, by winning the ‘few critical swing States ‘, among the 50 States.

Now, age has become a huge issue in the oncoming Nov 2024. The challengers are the oldest candidates ever. Josef Biden is 81  years and Donald J Trump is 78 years. not far behind. Rupee Murdock backed Wall Street  Journal, with an obvious GOP/Trump slant had recently written al story-  which went viral,  declaring that “behind closed doors,” President Joe Biden had  shown “signs of slipping.” The story questioned Biden’s mental acuity, playing into a GOP-propelled narrative that the 81-year-old president lacks the fitness to hold the nation’s highest office. The report, “ Most of those who said Biden performed poorly were Republicans, but some Democrats said that he showed his age in several of the exchanges”, was questioned as ‘slanted and exaggerated’.

However, Josef R Biden proved the contents to be no far off the truth and reality. Even as the debate commences, the Democratic campaign managers , in a leak on social media said that ‘Biden was running a nasty cold’. It was clear that Bidrnvteam was covering up for the candidate who showed up on the debate stage.

Biden was ‘nervous and lacking in focus’, he ‘looked lost’, ‘was inchorrnt and worse’. Biden could not take Trump who was ‘galloping with lies’ as one of the CNN debate rules was that ‘there would be no fact-checking in real time’. Result: Trump trumped Biden fair and square.

The debate has had serious consequence that donors and aides associated in Biden campaign are  meeting to persuade Biden to ‘withdrawn from the race’. He alone can decide. The timeline was short but sufficient, ahead of Aug 19,2024, Democratic Party Convention in Chicago.

This too is one facet of the oldest democracy which fascinates,  in its multiple variants capturing the famed and apt quote from Winston Churchill, “ Many forms of Government have been tried, and will be tried in this world of sin and woe. No one pretends that democracy is perfect or all-wise. Indeed it has been said that democracy is the worst form of Government except for all those other forms that have been tried from time to time.…’

Would Biden pave the way for a  younger Democratic  nominee?

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

new vande bharat train color - 2026

சென்னையில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடா, திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்தியாவில் இயங்கும் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் நாளுக்கு நாள் பயணிகளிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க முடியும்.

ஆனால் நமது நாட்டின் ரயில்வே தண்டவாளங்களின் அமைப்புகள் காரணமாக இதன் அதிகபட்ச வேகம் 130 கிலோ மீட்டர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகம் உள்ள குறிப்பிட்ட முக்கியமான வழித்தடங்களில் தற்போது 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூர், விஜயவாடா, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும், மேலும் திருவனந்தபுரம் காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

தற்போது சென்னை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி துவக்கி வைக்க இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதால் இந்த சேவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மதுரை பெங்களூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு கோடை காலத்தில் கடந்த ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களில் சென்னையிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலம் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகளிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் வண்டி எண். 20607 ஏப்ரல் மாதத்தில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் இருக்கும் 100 சதவீத இடங்களை தாண்டி டிக்கெட் முன்பதிவு 120.41 சதவீதத்தை கடந்து பதிவாகியிருந்தது . அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் தவிர மீதி தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலில் நார்மல் சார் காரில் உள்ள இடங்களில் 122.64 சதவீதம் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது. மே மாதத்தை பொருத்தவரை எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் 135.24 சதவீதமும் சேர்க்காரி 130.4 சதவீதமும் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது.

சென்னை சென்ட்ரல் மைசூர் ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 69 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் வருமாருகத்தில் மைசூர் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 71 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், சென்னை கோவை இடையேய்க்கப்பட்ட ரயில் மூலம் ரூபாய் 92.75 லட்சமும், மறு மார்க்கத்தில் கோவை- சென்னை ரயில் மூலம் இரண்டு மாதங்களில் ரூபாய் 79. 04 லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே போல சென்னை எழும்பூர் -நெல்லை மற்றும் சென்னை-மைசூர் இயக்கப்பட்டு வரும் மந்தை பாரத் ரயில்களும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியிருப்பதாவது,

“சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலமாக இரண்டு மாதங்களில் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தவிர சில வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டது. அந்த ரயில்களுக்கும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பயணிகளின் தேவை அதிகமாக உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ‘இந்தியன் 2’ படம்; ஜூலை 12ல் வெளியீடு!

indian 2 kamal and shankar - 2026

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில சுவாரஸ்யமான தகவல்களும் பகிரப்பட்டன.

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன்-2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். 

தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  “இந்தியன் 2” டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியபோது… ‘உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஷங்கர் சார், ராக்ஸ்டார் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, இந்த படத்தில் ரணகளப்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கமல் சார், ஷங்கர் சார் இணைந்து, இதற்கு மேல் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பைத் தர முடியுமா எனத் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி’ என்றார்.

நடிகர் சித்தார்த் : ’21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழிநடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2.  இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்’ என்றார்.

இயக்குநர் ஷங்கர் : ‘பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.

அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான்.

பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங்கே முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார்.

அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை ஷீட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார்.

இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கி கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.

அனிருத் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக மியூசிக் போட்டுள்ளார். ஒரு டியூன் அனுப்புவார் 80 % ஓகே என்பேன். ஆனால் நீங்கள் 100 % சொல்லும் வரை போட்டுக் கொண்டே  இருப்பேன் என்பார். என்னவிதமான சிச்சுவேசன் தந்தாலும் மிரட்ட கூடியவர், அனிருத்துக்கு வாழ்த்துக்கள்.  விவேக் சார் அவரை திரையில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

மனோ பாலாவும் அழகாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவில் வர்மம் செய்து ரவிவர்மம் காட்டியுள்ளார் ரவிவர்மன். குணால் சின்ன சின்ன சவுண்டில் கூட அவ்வளவு உழைத்திருக்கிறார்.

இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படத்தை சப்போர்ட் செய்து பெரிய வெற்றி பெறச்செய்தீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.

நடிகர் கமல்ஹாசன் : ‘உயிரே உறவே வணக்கம்.  உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்திய 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது.

இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது.

ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2  மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி.

இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி.

சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார்.  நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2  எனவும் மற்றும்  தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

சென்னை அசோக் நகரில் UPSC இலவச பயிற்சி

upsc civil services - 2026

அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் “குரு விருக்ஷா ஐஏஎஸ் அகடமி” சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அடுத்து வரும் யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்க இருக்கிறது.

பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம்.

அகடமியின் சிறப்பு அம்சங்கள்:

  • சிறந்த நிபுணர்களை கொண்டு பயிற்சிி வகுப்புகள்
  • வாராந்திர, மாத, ஆண்டு மாதிரி தேர்வுகள்
  • வசதியான Study Hall
  • தேவையான நூல்களை பயன்படுத்த நூலகம்

இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் நுழைவு தேர்வு, நேர்முக தேர்வு, குழு விவாதங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-07-2024

போட்டித் தேர்வு தேதி : 07-07-2024

போட்டித் தேர்வு பாடத்திட்டம்: மே 2023 முதல் மே 2024 வரையிலான நடப்பு நிகழ்வுகளில் (current affairs) இருந்து கேள்விகள் அமையும்.

மேலும் விவரங்களுக்கு..

தொடர்பு தொலைபேசி எண்கள்: 9363923451 & 9500481074

இப்ப பயிற்சியில் சேர இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டுகிறோம்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf2T7EqEaBP-8XUpj1jMFs0P5uLfd_3WuAsMxhFLhp5KvadBQ/viewform?usp=sf_link

T20 WC 2024: அரையிறுதியில் அலேக் ஆக வென்ற இந்திய அணி!

t20 worldcup - 2026
#image_title

டி 20 உலகக் கோப்பை – அரையிறுதி ஆட்டங்கள் – 27.06.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான்

இந்த அரையிறுதிக்கு முன்னர் ஆஃப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாலும், தென் ஆப்பிரிக்கா அணி ஆங்கிலத்தில் ச்சோக்கர்ஸ் என அழைக்கப்படுவதாலும் – அதாவது கடைசி நேரத்தில் சொதப்புவர்கள் என்பதாலும் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திற்கு வந்து, இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து, டி20 கோப்பையை வெல்லப்போவதாக கனவு கண்டு கொண்டிருந்ததாக சிலர் எழுதிவந்தனர். ஆனால் இன்று நடந்தது அதற்கு நேர்மாறானது.

ஒரு பிள்ளைப்பூச்சியை காலில் போட்டு நசுக்குவதுபோல தென் ஆப்பிரிக்க அணி ஆஃப்கானிஸ்தான் அணியைத் தோற்கடித்தது. டாஸ்வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. 11.5 ஓவரில் 56 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

அதிகபட்ச் ஸ்கோர் அஸ்மத்துல்லா உமர்சாய் (10 ரன்) உதிரி ரன்கள் அதைவிட அதிகம் (13 ரன்).  டி காக் ரோஹித் ஷர்மா போல அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் 3 ஓவர் அல்லது அதிகபட்சமாக 5 ஓவரில் மேட்ச் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் டி காக் இரண்டாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸும் மர்க்ரமும் சற்று நிதானமாக ஆடி 8.5 ஓவரில் 60 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். 

இந்தியா  vs இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் ஆட்டம் இந்திய நேரப்படி காலையில் நடந்தது என்றால் இந்தியா இங்கிலாந்து அணிகளின் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது.  ஆனால் மழைக்கான முன்னறிவிப்பு இருந்தது. எனவே ஆட்டம் நடக்குமா? நடக்காதா என்ற பதட்டமும் இருந்தது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா சென்ற ஆட்டத்தைப் போலவே வெறியாட்டம் ஆடத் தயாராக இருந்தார். ஆனால் விராட் கோலி மீண்டும் ஒருமுறை குறைவான ஸ்கோரில் அட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் (39 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 23 ரன்), ஜதேஜா (9 பந்துகளில் 17 ரன்), அக்சர் படேல் (6 பந்துகளில் 10 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் மூன்று விக்கட்டுகளை எடுத்தார்.

இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின்போது முதல் சேஞ்ச் பவுலராக களமிறங்கிய அக்சர் படேல் நாலாவது ஓவரில் பட்லரையும் (23 ரன்), ஆறாவது ஓவரில் ஜானி பெயர்ஸ்டோவையும் (பூஜ்யம் ரன்), எட்டாவது ஓவரில் மொயின் அலியையும் (8 ரன்) வீழ்த்தினார்.

இதற்கிடையில் பும்ரா, பில் சால்டை (5 ரன்) ஐந்தாவது ஓவரில் அவுட்டாக்கினார். இதற்கு அடுத்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ், ஹாரி ப்ரூக் (25 ரன்), சாம் கரன் (2 ரன்), கிரிஸ் ஜோர்டன் (1 ரன்) ஆகியோரை தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கசெய்ததுடன், லியம் லிவிங்க்ஸ்டோன் ரன் அவுட் ஆகவும் காரணமாக இருந்தார்.

ஆட்டத்தின் எந்த நிலையிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் இல்லை. 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 68 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது. 

இந்திய அணி ஜூன் 29 அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் தனது இரண்டாவது முறை கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் விளையாடும்.

தென் ஆப்பிரிக்க அணி முதன் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.

இரண்டு அணிகளும் இந்தப். போட்டியில் தாங்கள் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்.