Home Blog Page 238

ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா!

alankanallur amman temple function - 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவில் ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றது

முதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மனுக்கு கொடியேற்றி கம்பம் சாட்டுதல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் எல்லைக் கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் கும்மி பாட்டு பெரியாற்றங்கரையில் சக்தி பூஜை செய்து அன்னை மாரியம்மன் சக்தி கரகம் எடுத்து பெரிய ஊர் சேரி பிரிவு கேட்டு கடை அலங்காநல்லூர் குறவன்குளம் பிரிவு எரம்பட்டி பிரிவு விஜயமங்கலம் கீழச்சின்னம்பட்டி பிரிவு வழியாக வீதி உலா வந்தது

பின் ஸ்ரீ ஜோதி செட்டி கருப்பசாமி ஆலயத்தில் இருந்து முளைப்பாரி உடன் கோவிலுக்கு வீதி உலா மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியாக மாவிளக்கு எடுத்தல் அக்கினி சட்டி கரும்பாலை தொட்டியில் எடுத்தல் அழகு குத்துதல் அங்கப்பிரவேசம் செய்தால் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அன்று மதியம் இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை அம்மன் பெரியாற்றங்கரை எழுந்தருளி பாராட்டு மற்றும் தீர்த்தவாரி வைபவம் நிகழ்ச்சியும் அன்று மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கேட்டு கடை வழியாக கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் திங்கட்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் சாந்தி பூஜை செய்து பிறகு முளைப்பாரி சக்தி கரகம் ஆலயம் வந்து திருக்கோயிலாகத்தில் கரைக்கப் பட்டது

அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் கோவிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நிதிஅம்மா செய்திருந்தார் இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்

செங்கோட்டை அருகே… ரயில் விபத்தைத் தவிர்த்த முதியோருக்கு குவியும் பாராட்டு!

train truck struck in sengottai - 2026

செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் அருகில், தங்கள் வீட்டில் நள்ளிரவு 12.50 மணி அளவில் தூங்கும் போது பெரிய சப்தம் கேட்டு வெளியே வந்த சண்முகையா குருந்தம்மாள் தம்பதியினர், ஒரு சரக்கு வாகனம் 18 அடி உயரத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு பதறி, தொலைவில் ரயில் வண்டி வரும் சப்தம் கேட்டு சுதாரித்து, தம் கையில் இருந்த டார்ச் லைட்டை அடித்தவாறு தண்டவாளத்தில் ரயில் வரும் திசையில் ஓடி ரயிலை நிறுத்தினர். இவர்களது சமூக பொறுப்புணர்வினால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அவர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிவந்த லாரி ஒன்று, செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் தமிழக கேரள எல்லையான எஸ் வளைவு பகுதியில், 20 அடி உயரத்தில் உள்ள சாலையில் இருந்து ரயில் தண்டவாளப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவு நேரம் என்பதால், திடீரென எழுந்த பயங்கர சத்தத்தைக் கேட்டு, தங்கள் வீட்டில் உறங்கச் சென்ற முதிய தம்பதியான சண்முகையா, குந்தம்மாள் தம்பதி உள்ளிட்ட மூவர் விரைந்து வந்து வெளியே பார்த்தனர்.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது தெரிந்தது. அந்த நேரம், கேரளாவின் ஆற்றிங்கல் பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகளின்றி பாலருவி சிறப்பு ரயில் அந்த வழித் தடத்தில் வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட அந்த வயதான தம்பதியர், ரயிலை நிறுத்துவதற்காக தண்டவாளத்தில் ரயிலை நோக்கி ஓடிச் சென்றனர். பின்னர், தங்கள் கைகளில் இருந்த டார்ச் லைட்டை அடித்து, அந்த ரயிலை நிறுத்துவதற்கு சமிக்ஞை கொடுத்தனர். மலைப் பாதையில் ரயில் அதிகபட்சமாக 30 கி.மீ. வேகத்தில் தான் செல்லும் என்பதால், ரயிலின் லோகோ பைலட் உடனடியாக அந்த ரயிலை நிறுத்தினார். இதனால், அந்தப் பாதையில் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயில், செங்கோட்டையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 3 மணி நேர கால தாமதத்திற்கு பின் ரயில் கொல்லம் புறப்பட்டுச் சென்றது. மேலும் சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து பின்னர் சீரானது.

கடல் கொண்ட பழைய துவாரகை! அன்று ஆய்வாளர்களால் வெளிப்பட்டது! இன்று மோடியால் பிரபலம்!

modi in gujrat dwaraka - 2026

22 வருடம் முன் சென்னையைச் சேர்ந்த NIOT National Institute of Ocean Technology குழு இதே துவாரகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியதன் முழு அவுட்பிரிண்ட் ஒன்றை வெளிக் கொண்டு வந்தார்கள். அப்போது அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சின்னச் சின்ன பொருள்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

அந்நாளில் சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்திருந்த என்.ஐ.ஓ.டியின் அலுவலகம் சென்று இதே பொருள்களை கைகளில் எடுத்துப் பார்த்து பரவசப்பட்டேன். அதை அன்று விஜயபாரதம் வார இதழில் ஒரு கட்டுரையாகவும் எழுதினேன். 

இப்போது பிரதமர் மோடி அந்த இடத்துக்கு நேரில் சென்று, அங்கே கிருஷ்ணன் காலடி பட்ட பூமியைத் தன் கைகளால் ஒற்றிக்கொண்டு பக்தி பூர்வமான வணக்கத்தைச் செலுத்தியதைப் பார்த்ததும் அந்த மயிற்பீலிகளைப் போன்று நினைவலைகள் நேரலைகளாய் நெஞ்சத்தை வருடுவதை உணர்ந்தேன்.

2002ல் சென்னை ஐஐடி வளாகத்தில் NIOT – National Institute of Ocean Technology – குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் குஜராத்தின் காம்பே மற்றும் கட்ச் வளைகுடா பகுதிகளில்  கடல் சார் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.. 

 துவாரகை நகரம் கடலில் மூழ்கிய விபரங்களை சேகரித்தார்கள். இன்றைய துவாரகை கடற்கரையிலிருந்து கடலின் உள்ளே சற்று தொலைவில் ஒரு நகரம் கடலில் மூழ்கியதன் படிமங்களை கண்டெடுத்து வந்தார்கள்.. அவற்றில் சில பொருள்கள் கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்வதில் 5000 ஆண்டு பழமையை பறை சாற்றின. 

துவாரகை நகரம் இருந்ததும் அது அழிந்த விவரமும் வரலாற்றுப் பதிவு என்பது உலகிற்கு தெளிவாக புலனானது… மகாபாரதம் வெறும் கதை அல்ல அது நம் முன்னோரின் வாழ்க்கை சரித்திரம் என்ற உண்மை வலுவாக பதிந்தது… அந்தக் குழுவினரை கண்டு அவர்கள் சேகரித்த பொருள்களை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்… அந்த சந்திப்பின் சிறு தொகுப்பு அப்போதைய விஜயபாரதம் வார இதழில் பிரசுரமானது… 2002 மார்ச் 1ல் வெளியான அந்தக் கட்டுரையின்  மீளுருவாக்கம் இங்கே… 

***

ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்!

பாரதத்தின் பழமையான நாகரிகத்தை வெளிப்படுத்திய NIOT குழுவினர்

சென்ற வார விஜயபாரதம் இதழில், புராதன பாரதம் என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. குஜராத் காம்பே வளைகுடா பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது சுட்டுரை. குறிப்பிடப்பட்டிருந்தபடி, இந்த ஆராய்ச்சிகளுக்கு மூலகாரணமான NIOT குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. குஜராத் மாநில காம்பே வளைகுடாவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இக் குழுவினரைச் சந்தித்து, அவர்களது அனுபவங்களைக் கேட்கலாம் என்று எண்ணினோம். இக்குழுவினைத் தலைமையேற்று வழிநடத்திய டாக்டர் எஸ். கதிரொளி இன்முகத்தோடு நம்மை வரவேற்று அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இக்குழுவில் பங்கேற்ற திரு. எஸ். பத்ரிநாராயணன திரு. டி. வெங்கடராவ் ஆகியோரையும் சந்தித்து உரையாடினோம்.

அவர்களுடன் நடைபெற்ற உரையாடலிலிருந்து…

நீங்கள் இருப்பதோ சென்னை. குஜராத் கடற்கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது. அதற்கான உந்துதல் என்ன?

சென்னையிலிருந்து கொல்கத்தா வரையிலான வங்காள விரிகுடா பகுதியிலும், மேற்குப் பகுதியான அரபிக்கடல் பகுதியிலும், எங்களுக்குச் சொந்தமான இரண்டு படகுகள் வழக்கமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே யதேச்சையாகத்தான் எங்கள் குழு அரபிக்கடல் பகுதியில், வழக்கமான கடல் மாசு அளவிடும் பணியில் ஈடுபட்டது. இதற்கென தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது.

குஜராத் கடற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி

குஜராத் மாநிலத்தில் உள்ள சுட்ச் பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், காம்பே வளைகுடா பகுதியில் நாங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். வழக்கமாக கடல் நீருக்குள் படம் எடுக்க உதவும் கருவிகளைக் கொண்டு படம் எடுக்க முயன்றோம். ஆனால் படம் தெளிவில்லாமல் இருந்தது. கடல் நீர் மிகவும் மாசடைந்து, கலங்கிய நிலையில் இருந்ததால், படம் சரியாகக் கிடைக்கவில்லை. பிறகு சைடு ஸ்கேனர் கருவியின் உதவியுடன் படம் எடுக்கப்பட்டது.

முதலில் யதேச்சையாகத்தான் சென்று திரும்பினோம். பிறகு ஒருநாள், சைடு ஸ்கேனரில் பதிவாகிய படங்களை ஆராய்ந்ததில், எங்களுக்குச் சில தடயங்கள் கிடைத்தன. படங்கள் எடுக்கப்பட்ட அந்தப் பகுதியின் கீழ், ஏதோ ஒரு நகரம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிந்தது. எனவே மீண்டும் ஒரு முறை அங்குச் செல்லலாம் என்று எண்ணி, எங்கள் குழு அங்குச் சென்றது. இவ்வாறு சுமார் இரண்டு மூன்று முறை சென்றுள்ளோம்.

நாங்கள் ஒரு முறை கடல் பகுதியில் சென்று வரவேண்டும் என்றால் அதற்கு லட்சக்கணக்கில் செ வாளும் எனவே தனிநபராக இருந்தால், பணம் செலவழித்துக்கொண்டு இவ்வாறு செல்லமுடியாது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அதன் உதவியின்பேரிலேயே இந்தப் பயணம் தொடர்ந்தது.”

இந்தப் புதிய நகரத்தின் கண்டுபிடிப்பில் தங்கள் குழுவினரின் முயற்சிகள்

கடந்த 2000 ஆவது வருடத்தின் கடைசியில் முதன் முதலாகச் சென்றிருந்தோம். அதன்பிறகு மார்ச் மாதத்திலும் பிறகு மே மாதத்திலும் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்தப் பகுதியில் ஏதோ ஒரு பழைய நகரம் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டன. உடனே அவற்றைப் படம்பிடித்துக்கொண்டு திரும்பினோம். அதை உடனே அரசுக்குத் தெரியப்படுத்தினோம். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த விவரம் தெரியவந்தவுடன், அவர் உடகே பத்திரிகையாளர்கள். தெரியப்படுத்தினார். மூலம் வெளியுலகுக்கு

நீங்கள் கண்டறிந்த அந்த நகரத்தின் நகரமைப்பு எப்படி இருந்தது? அந்தக்கால மக்களது நாகரீகத்தைப் பற்றி ஏதாவது அனுமானிக்க முடிந்ததா?

சுமார் ஒன்பது கி.மீ நீளத்திற்கு அந்த நகரம் பரந்து கிடந்தது. நகரின் மத்தியில் ஒரு பெரிய நதி ஓடிய தடம் தெரிந்தது. மதிற்கவர்கள், சிறிய சிறிய அணைக்கட்டுகள், மிகப்பெரிய நெற்குதிர்கள், அருக்கு நடுவில் பெரிய என்றி ஒழுங்காகக் கட்டமை ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டதுபோல் இருந்தது அந்த நகரம். அந்தக்காலத்திலேயே உணவைப் பாதுகாத்து வைப்பதிலும், நல்லமுறையில் அவற்றை வினியோகிப்பதிலும் நிபுணர்களாக அவர்கள் விளங்கியிருக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரியவந்தது. மேலும் கட்டடங்களுக்கு அவர்கள் மிகத்துல்லியமாக அஸ்திவாரம் போட்டு, அவற்றில் பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பியுள்ளனர்.

சுமார் 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. சமயத்தில் 30 அடி ஆழத்தில் இந்த நகரம் கடலில் மூழ்கியிருக்கலாம். எஞ்சிய மக்கள் தங்களது அமைத்துக்கொள்ள நிலப்பகுதியை நோக்கி முன்னேறியிருக்கிறார்கள். அப்படி நிலப்பகுதியை நோக்கி நகர்ந்தவர்கள்தான் ஹாப்பாவில் குடியேற்றத்தை உருவாக்கியிருக்கலாம். ஏனெனில் இந்த நகரமைப்பிலிருந்து சற்று மேம்பட்டதாக ஹாப்பா விளங்கியிருப்பதால், ஹாப்பா நாகரீசுத்தின் முன்னோர்களாக நாம் இவர்களைக் கருதலாம். குடியிருப்புகளை புதிய

உங்களது ஆராய்ச்சியின் முடிவுகளை எல்லோரும் உடனே ஏற்றுக்கொண்டார்களா?

முதலில் இதனை எவரும் நம்பவில்லை. வழக்கம்போல், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கேகூட முதலில் பயமாக இருந்தது – எங்கே நமது முயற்சிகள் எல்லாம் இவ்வாறு உதாசீனப்படுத்தப் பட்டுவிடுமோ என்று! ஏனெனில், இப்போதிருக்கும் மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் காணும் இடதுசாரி சிந்தனையாளர்கள், இந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டவே, எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதன்பிறகு எப்படியாவது இவர்கள் எல்லாம் நம்பும்படியாக தேனும் தடயங்களைச் சேகரித்துக் கொண்டுவந்தார். என்ன என்று தோன்றவே, அம்முயற்சியில் இறங்கினோம்.

ஏதாவது தடயங்கள் கிடைத்தனவா?

நிறைய தடயங்கள் கிடைத்தன. இம்முறை கடந்த 2001 டிசம்பரில் சென்றபோது, காம்பே வளைகுடா பகுதியில் இருந்து, மிகவும் சிரமப்பட்டு பல்வேறு பொருட்களைச் சேகரித்தோம். சிறியதும் பெரியதுமாக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களைச் சேகரித்து வந்தோம். மொத்தமாக எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு, பிறகு அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்தோம். அப்போது நாங்கள் பட்ட சிரமங்கள் எங்களுக்குத்தான் தெரியும். அந்தப் பொருட்களை நன்றாகச் சுத்தம் செய்து பார்த்தபோது, அவற்றில் பெரும்பாலான பொருட்கள் எங்களை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கின.

அவற்றில் என்னென்ன பொருட்கள் இருந்தன?

மிகவும் ஆச்சரியப்படும் விதத்தில், கற்களால் ஆன பொருட்களே கிடைத்தன. சிறு சிறு கருவிகள் கற்களால் செய்யப்பட்டதாகவே இருந்தன. கையில் மிகச் சரியாகப் பொருந்திப் பிடிப்பதற்கு வசதியாக உள்ளவாறு கல்லாலேயே கத்திகள், வெட்டுவதற்கு உபயோகப்படும் அரிவாள் போன்றவையெல்லாம் கிடைத்தன. குறிப்பாக, முகச்சவரம் செய்வதற்கு அவர்கள் உபயோகித்த மிகவும் சிறியதான கூர்மையான பிளேடு போன்ற கற்கள் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இன்றைய நவீன தொழில்நுட்பத்தில், இரும்பை வைத்துத் தயாரித்து நாம் உபயோகிக்கும் பல பொருட்களை அந்தக் காலத்திலேயே அவர்கள் கற்களால் செய்து வைத்திருந்தது பெரும்

வியப்பைத் தந்த இயந்திரங்களில் காணப்படும் எஞ்சினியரிங் கு போன்று, கற்களைப் பயன்படுத்தியே பல இயந்திர உருவாக்கியிருக்கிறாக்கள். ஒன்றோடு ஒன்று பொருந்தி, அப்படியும் இப்படியுமாக ஒரே அச்சில் சுற்றியவாறு இயங்கும் வகையில் இயந்திர பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காம்பே வளைகுடாவிலிருந்து கிடைத்த சுற்களாலான பொருட்கள், மனித முதுகெலும்பு, பல தாடை ஆகியவை ஒட்டுவதற்கு இரண்டு கற்களை ஒன்றோடு பசைபோட்டு ஒட்டியிருக்கிறார்கள். கற்களை அவர்கள் என்னவிதமான பசையை உபயோகப்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. பல்வேறு கற்களில் மிகமிகச் சிறிய ஊசி நுழையும் அளவிற்கு துளைகள் இட்டிருக்கிறார்கள் குறிப்பாக கல்லினாலேயே செய்யப்பட்ட ஊதல், அதாவது விசில் ஒன்றைப் பார்த்து நாங்கள் அசந்தேபோனோம்.

சிறுசிறு முத்துக்கள், பவளக்கற்கள், ஆபரணங்கள், அணிகலன்களில் உபயோகப்படுத்தும் கற்கள் என்று மிகச் சிறிய பொருட்கள் கிடைத்தன. அத்துடன் மரத்துண்டுகளும் கிடைத்தன. அதை வைத்துத்தான் கார்பன்டேட்டிங் முறையில் அதன் காலத்தைக் கணக்கிட்டோம். அதில் கிடைத்தபடி, அந்த மரத்துண்டுகள் இன்றிலிருந்து சுமார் எட்டாயிரம் ஆண்டுகள் முந்தையதாக இருந்தன.

மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலில் எங்கள் குழுவில் யாரும் தொல்லியல் துறை நிபுணர்கள் கிடையாது. எனவே எங்கள் கண்டுபிடிப்பை எவரும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது, நாங்கள் சேகரித்துக் கொண்டு வந்திருக்கும் பொருட்களை பல்வேறு தொல்லியல் துறை நிபுணர்கள் வந்து பார்வையிட்டுவிட்டு, பல்வேறு விதமான ஆச்சரியப்படும் செய்திகளைக் கூறிச் செல்கிறார்கள். அத்துடன் எங்கள் பணியை அங்கீகரித்துப் பாராட்டியும் செல்கிறார்கள். மேலும் மத்திய அமைச்சர் திரு. முரளி மனோகர் ஜோஷி எங்களது ஆராய்ச்சிகளை மனதாரப் பாராட்டியதோடு, வேண்டிய உதவிகளைச் செய்யவும் உறுதியோடு இருக்கிறார். தேசிய அளவில் ஒரு கமிட்டி அமைத்து, மேற்கொண்டு இந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செய்திருக்கிறார்.

எங்களது இந்த முயற்சி வெற்றியடைந்ததில், நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். மேற்கொண்டு, பூம்புகார் மற்றும் தூத்துக்குடி கடல் பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இது உத்வேகம் தந்துள்ளது. எங்களிடம் தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருப்பதால் எங்களது முயற்சியின் மூலம் இந்த தேசத்திற்கு பயனுள்ள பல விஷயங்களைத் தர முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக காம்பே வளைகுடாவின் ஒரு இடத்தில், எரிவாயு இருப்பது எங்களது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

எங்களது இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் ஆதரவைக் கண்டு இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இதை எண்ணி எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும்.

சந்திப்பு -ஆர்.எஸ். ஸ்ரீராம்

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு உற்சாக வரவேற்பு!

violin ganesh - 2026

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இசை உலகின் மிக முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படும் கிராமி விருதை வென்ற பிரபல இசைக்குழு சக்தியின் அங்கமான வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து இன்று (பிப்ரவரி 25) சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இசை மேதைகளான ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் தலைமையிலான சக்தி குழுவினரின் சமீபத்திய படைப்பான ‘திஸ் மொமென்ட்’, சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை வென்றது.

சென்னையைச் சேர்ந்த கணேஷ் ராஜகோபாலன், தனது சகோதரர் குமரேஷுடன் இணைந்து கணேஷ் குமரேஷ் என்ற பெயரில் இசைப்பணியை செய்து வருகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இத்துறையில் கோலோச்சி வரும் அவரது பங்களிப்பு இந்திய பாரம்பரிய இசையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் எம்.எம். கீரவாணி போன்ற முன்னணி திரை இசை அமைப்பாளர்களுடனும் கணேஷ் பணியாற்றி உள்ளார். மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

கிராமி வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கணேஷ், சக்தி இசைக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். “ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் போன்ற மேதைகளோடு இணைந்து இந்திய பாரம்பரிய இசையை உலகளாவிய ரசிகர்களுக்காக நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம் எங்கள் முயற்சிகளுக்கு மகுடம் வைத்தது போன்று கிராமி விருது கிடைத்துள்ளது,” என்றார் அவர்.

இசைக் கலைஞர், இசையமைப்பாளர், கல்வியாளர், ஈஸ்வரா மியூசிக் பள்ளியின் நிறுவனர் என்று பன்முகம் கொண்ட கணேஷ் ராஜகோபாலன் தொடர்ந்து பேசுகையில்: “கிராமி விருது பெற்ற குழுவில் ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் மற்றும் நான் என தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளோம். இது எங்களுக்கு மட்டுமில்லாது தமிழகம் மற்றும் இந்தியாவுக்கே பெருமை. ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எனது இசைப் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

இசை எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய அவர், பல்வேறு இடங்களில் இருந்த சக்தி இசைக்குழுவின் கலைஞர்களால் கோவிட் காலகட்டத்தின் போது கிராமி விருது பெற்ற ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’ உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

போதைப் பொருள் கடத்தலில் தமிழ் சினிமா தயாரிப்பாளரான திமுக., நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்! எச்சரிக்கும் அண்ணாமலை!

dmk functionery in smuggle - 2026

போதைப் பொருள் கடத்தலில் தில்லியில் மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், திமுக., மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான அவரை கட்சியில் இருந்து திமுக., நீக்கியுள்ளது. இந்நிலையில், இத் தொடர்புகள் குறித்து பாஜக., தமிழ் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்:

நேற்று தில்லியில் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதும் தெரிய வந்தது.

சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் வேதிப் பொருளை கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர் தான் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும், தற்போது அவர் தலைமறைவாகியிருப்பதாகவும், அவரை பிடிக்க தீவிர முயற்சிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அவர் யார் என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் நேற்று வெளியிடவில்லை. இன்று அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் மங்கை திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். சென்னை திமுக மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர். இன்னொருவர் அமீர் இயக்கிய திரைப்படமான “இறைவன் மிகப்பெரியவன்” படத்தின் ஹீரோ மைதீன், அவரது நண்பர் சலீம். இந்த மூவரையும் போலீஸ் தனிப்படை அமைத்து தேடுகிறது.

விவசாயிகள் போராட்டமும் போதைப் பொருளும் தில்லியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், திமுக., பிரமுகருக்கும் தில்லி போதைப் பொருள் கடத்தலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து இன்று அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கட்சியை விட்டு நீக்கிய திமுக.,

இந்நிலையில், ஜாபர் சாதிக்கை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக., அறிவித்துள்ளது. இது குறித்து திமுக., பொது செயலாளர் துரை முருகன் வெளியிட்ட அறிவிப்பில்,

சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – எனத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய வேண்டும்!

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய வேண்டும் என்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், @BJP4Tamilnadu சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.

மகளிர் சக்தியின் ஆற்றலைப் பறை சாற்றிய பிரதமர் மோடியின் மனதின் குரல் 110வது பகுதி!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 110ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  25.02.2024,
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன்.  எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.   மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான்.  ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.  இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை. 

நண்பர்களே, சில நாட்கள் கழித்து மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம்.  இந்த விசேஷமான நாளானது, தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்-சக்தியின் பங்களிப்பைப் போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது.  பெண்களுக்கு சமமான சந்தர்ப்பம் வாய்க்கப்பெறும் போது மட்டுமே உலகம் தன்னிறைவு பெற்றதாக ஆகும் என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார்.  இன்று பாரதத்தின் பெண்-சக்தி என்பது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது.  நமது தேசத்திலே, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் எல்லாம் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகள் முன்பு வரை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா!!  ஆனால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது.  இன்று, கிராமங்கள்தோறும் ட்ரோன் தீதீ எனும் இந்தப் பெண்களைப் பற்றியே பேச்சாக இருக்கிறது.  ஒரு மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காணும் போது, இந்த முறை மனதின் குரலில், ஒரு நமோ ட்ரோன் தீதியோடு நாம் ஏன் உரையாடக் கூடாது என்று நான் சிந்தித்தேன்.  நம்மோடு இந்த வேளையிலே, நமோ ட்ரோன் தீதியான சுனிதா அவர்கள் இணைந்திருக்கிறார்.  இவர் உத்திர பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர், வாருங்கள், அவரோடு நாம் உரையாடுவோம்.

mann ki baat manadhin kural - 2026
#image_title

மோதி ஜி:  சுனிதா தேவி அவர்களே, உங்களுக்கு வணக்கம்.

சுனிதா தேவி:  வணக்கம் சார்.

மோதி ஜி:  சரி சுனிதா அவர்களே, முதல்ல நீங்க உங்க குடும்பம் பத்தி, உங்க பின்னணி பத்தி சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.

சுனிதா தேவி:  சார், எங்க குடும்பத்தில ரெண்டு பிள்ளைங்க, நான், என் கணவர், எங்கம்மா…. இவங்க எல்லாம் இருக்காங்க.

மோதி ஜி:  நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க சுனிதா ஜி.

சுனிதா தேவி:  சார், பி.ஏ. (இறுதியாண்டு) வரை.

மோதி ஜி:  அப்புறம் வேலை எனும் போது, வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யறீங்க?

சுனிதா தேவி:  வேலைன்னா, விவசாயம் தானுங்கய்யா, வயல் வேலை.

மோதி ஜி:  சரி சுனிதா ஜி, இந்த ட்ரோன் தீதியாகற உங்க பயணம் எப்படி தொடங்கிச்சு.  உங்களுக்கு எங்க பயிற்சி கொடுத்தாங்க, என்ன மாதிரியான மாற்றம் எல்லாம் ஏற்பட்டிருக்கு, எனக்கு தொடக்கத்திலேர்ந்து ஒண்ணு விடாம சொல்லுங்க.

சுனிதா தேவி:  கண்டிப்பா சார்.  பயிற்சி இங்க நம்ம ஃபூல்புர் இஃப்கோ கம்பெனியில குடுத்தாங்க இலாஹாபாதில, அங்க தான் பயிற்சி கிடைச்சுது.

மோதி ஜி:  அதுக்கு முன்னால நீங்க ட்ரோன் பத்தி ஏதும் முன்னபின்ன கேள்விப்பட்டிருந்தீங்களா?

சுனிதா தேவி:  சார், கேள்விப்பட்டது கிடையாதுங்க.  ஆனா ஒருமுறை மட்டும் சீதாபுர்ல இருக்கற கிருஷி விஞ்ஞான் கேந்திரத்தில பார்த்திருக்கேன்.  அப்பத் தான் முத முறையா ட்ரோனை நான் பார்த்தது.

மோதி ஜி:  சுனிதா ஜி, அது தான் நீங்க முதமுறையா அங்க போனது, சரிதானே!!

சுனிதா தேவி:  ஆமாங்க.

மோதி ஜி:  முத நாள் உங்களுக்கு ட்ரோனை காண்பிச்சிருப்பாங்க, பிறகு பலகையில எழுதிப் போட்டு கத்துக் குடுத்திருப்பாங்க, காகிதத்தில எழுதி படிக்க வச்சிருப்பாங்க, பிறகு மைதானத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, பயிற்சி குடுத்திருப்பாங்க, இது எல்லாத்தைப் பத்தியும் விவரமா சொல்லுங்களேன்.

சுனிதா தேவி:  கண்டிப்பா சொல்றேன் சார்.  முத நாளன்னைக்கு நாங்க போன அடுத்த நாளிலிருந்து, எங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.  முதல்ல கோட்பாடு கத்துக் குடுத்தாங்க, பிறகு ரெண்டு நாள் வரை வகுப்பு நடத்தினாங்க.  வகுப்புல ட்ரோன்ல என்னென்ன பாகங்கள் இருக்கு, எப்படிஎப்படி இயக்கறதுன்னு, எல்லா விஷயங்களும் கோட்பாடு வகுப்புல நடத்தினாங்க.  3ஆவது நாளன்னைக்கு சார், எங்களுக்கு தேர்வு வச்சாங்க, அதுக்குப் பிறகு கணிப்பொறியிலயும் ஒரு தேர்வு வச்சாங்க.  அதாவது முதல்ல வகுப்பு எடுப்பாங்க, பிறகு தேர்வு எழுதச் சொல்லுவாங்க.  பிறகு தான் களப்பயிற்சி; அதாவது எப்படி ட்ரோனை எழும்பச் செய்யணும், எப்படி அதைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும் மாதிரியான விஷயங்கள் எல்லாம் இந்தக் களப்பயிற்சியில கத்துக் கொடுத்தாங்க. 

மோதி ஜி:  பிறகு ட்ரோன் என்ன வேலை செய்யும்னு கத்துக் கொடுத்தாங்களா?

சுனிதா தேவி:  சார் கண்டிப்பா.  அதாவது பயிர் இப்ப அறுவடைக்கு தயாராயிட்டு இருக்கு, இப்ப மழை இல்லை ஏதோ காரணத்தால வயல்ல எங்களால, இல்லை வேலையாட்களால நுழைய முடியலைன்னா இவை வாயிலா ரொம்ப ஆதாயங்கள் விவசாயிகளுக்கு ஏற்படும், வயல்ல நாங்க நுழைய வேண்டிய அவசியமே இல்லை.  நாம வரப்பு மேல நின்னுக்கிட்டு, வயல்ல ஏதும் புழுபூச்சி நுழைஞ்சிருக்கா, நாம என்ன முன்னெச்சரிக்கை எடுக்கணும், எல்லாத்தையும் நமக்குப் புட்டுபுட்டு வச்சிடும், விவசாயிகளுக்கும் ரொம்ப உதவிகரமா இருக்கும்.  சார், இந்த ட்ரோனை வச்சு நாங்க இதுவரைக்கும் 35 ஏக்கருக்கு ஸ்ப்ரே செஞ்சிருக்கோம்.

மோதி ஜி:  அப்ப இதனால பயனிருக்குன்னு விவசாயிகளுக்கும் புரியுதா?

சுனிதா தேவி:  கண்டிப்பா சார்.  விவசாயிகளுக்கு ரொம்ப சந்தோஷம், அவங்க இதை ரொம்ப பாராட்டிப் பேசறாங்க.  இதனால நேரமும் மிச்சப்படுது, எல்லா வேலைகளையும் இதுவே பார்த்துக்குது.  தண்ணி, மருந்துன்னு எல்லாத்தையும் இதுவே பார்த்துக்குது, நாம வந்து வயலோட அளவு, எல்லையை சொன்னா மட்டும் போதும், எல்லா வேலையையும் அரை மணி நேரத்தில செஞ்சு முடிக்க முடியுது. 

மோதி ஜி:  அப்ப இந்த ட்ரோனை பார்க்கவே ஆளுங்க வந்து போவாங்க இல்லை?

சுனிதா தேவி:  சார், அதை ஏன் கேக்கறீங்க.  ட்ரோனைப் பாக்கவே ஏகப்பட்ட பேருங்க வராங்க.  வயல்ல மருந்தடிக்க உங்களைக் கூப்பிடறோம், உதவி செய்யுங்கன்னு பெரியபெரிய விவசாயிகள்லாம் என்கிட்டேர்ந்து நம்பர் வாங்கிட்டுப் போறாங்க.

மோதி ஜி:  நல்லது.  நான் ஏன் இதைக் கேக்கறேன்னா, லட்சாதிபதி தீதியை உருவாக்கறதுங்கற ஒரு இலக்கு எனக்கு இருக்கு.  இன்னைக்கு நீங்க பேசறதை, ஒரு ட்ரோன் தீதி முதமுறையா என் கூட பேசறதை நாடு முழுக்க இருக்கற சகோதரிகள் கேட்டுக்கிட்டு இருக்காங்க, அவங்க கிட்ட நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

சுனிதா தேவி:  இன்னைக்கு நான் ஒரே ஒரு ட்ரோன் தீதியா இருக்கலாம், ஆனால் என்னை மாதிரியே ஆயிரக்கணக்கான சகோதரிகள் முன்வந்து என்னை மாதிரியே ட்ரோன் தீதியா ஆகணும், என் கூட ஆயிரக்கணக்கான நபர்கள் இணையும் போது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும், நம்ம எல்லாருக்கும் ட்ரோன் தீதிங்கற அடையாளம் கிடைக்கும்.

மோதி ஜி:  சரி சுனிதா அவர்களே, உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இந்த நமோ ட்ரோன் தீதி, இவர் தேசத்தின் விவசாயத்தை நவீனமயமாக்கும் ஒரு மிகப்பெரிய ஊடகமாக ஆகி வருகிறார்.  என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.

சுனிதா தேவி:  நன்றி சார்.  ரொம்ப நன்றி.

மோதி ஜி:  நன்றிம்மா.

நண்பர்களே, இன்று தேசத்தில் பெண்-சக்தி பின்தங்கி இருக்கும் துறை என்பது ஏதும் இல்லை.   பெண்கள், தங்களின் தலைமைப்பண்பு காரணமாக மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை, நீர்பாதுகாப்பு மற்றும் தூய்மை.  வேதிப்பொருள்கள் நமது பூமித்தாய்க்கு அளிக்கும் கஷ்டங்கள், அது தரும் வேதனை-வலி…. இவற்றிலிருந்து நமது பூமித்தாயைக் காப்பாற்றுவதில், தேசத்தின் தாய்மைசக்தி பெரும்பங்காற்றி வருகிறது.  தேசத்தின் மூலைமுடுக்கெங்கும் பெண்கள் இப்போது இயற்கை விவசாயத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   இன்று தேசத்தில் ஜல்ஜீவன் மிஷன், அதாவது அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டத்தின்படி நடந்துவரும் அனைத்துப் பணிகளுக்கும் பின்னணியில் நீர்க்குழுக்களின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.  இந்த நீர்க் குழுக்களுக்குத் தலைமையேற்று நடத்துபவர்கள் என்று சொன்னால் அவர்கள் பெண்கள் தாம்.  இதைத் தவிரவும் கூட சகோதரிகள்-பெண்கள், நீர் பாதுகாப்பிற்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.  என்னோடு இப்போது தொலைபேசிவழி இணைந்திருக்கும் பெண்ணின் பெயர் கல்யாணி பிரஃபுல்ல பாடில் அவர்கள்.  இவர் மஹாராஷ்டிரத்தில் வசிப்பவர்.  வாருங்கள், கல்யாணி பிரஃபுல்ல பாடில் அவர்களோடு உரையாடி அவருடைய அனுபவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

மோதி ஜி:  கல்யாணி அவர்களே, வணக்கம்.

கல்யாணி:    வணக்கம் சார், வணக்கம்.

மோதி ஜி:  கல்யாணி அவர்களே, முதல்ல நீங்க உங்களைப் பத்தியும், உங்க குடும்பம் பத்தியும், நீங்க பார்த்திட்டு இருக்கற வேலை பத்தியும் சொல்றீங்களா?

கல்யாணி:  சார், நான் மைக்ரோபயாலஜி, நுண்ணுயிரியல் படிப்பு முதுகலை வரைக்கும் படிச்சிருக்கேன்.  எங்க வீட்டில என்னோட என் கணவர், எங்க மாமியார், எங்க ரெண்டு பசங்க இருக்காங்க.  நான் கடந்த மூன்றாண்டுகளா கிராம பஞ்சாயத்தில பணியாற்றிக்கிட்டு வர்றேன்.

மோதி ஜி:  அப்புறம் கிராமத்தில விவசாயத்தில ஈடுபட்டிருக்கீங்களா?  ஏன்னா உங்ககிட்ட அடிப்படை ஞானமும் இருக்கு, உங்க படிப்பு வேற விவசாயத் தொடர்பு உடையதா இருக்கு, நீங்களும் இப்ப விவசாயத்தோட இணைஞ்சிருக்கீங்க, அந்த வகையில ஏதும் புதிய பரிசோதனை-முயற்சியில ஈடுபட்டிருக்கீங்களா?

கல்யாணி:  ஐயா, பத்துவகையான தாவரங்களை ஒண்ணு திரட்டி அது மூலமா ஒரு இயற்கை தெளிப்பானை உருவாக்கியிருக்கேன்.  இப்ப பார்த்தீங்கன்னா, நாம கிருமிநாசினியைத் தெளிக்கும் போது பயிருக்குத் தீங்கான பூச்சிகளோடு சேர்ந்து, பயிர்களோட வளர்ச்சிக்கு உதவிகரமா இருக்கற புழு-பூச்சிகளும் கூட அழிஞ்சு போயிடுது.   மேலும் பூமியும் மாசுபடுது.  இந்த வேதிப்பொருள் எல்லாம் நீரோட கலக்கறதால நம்ம உடம்புலயும் தீமையேற்படுத்தும் விளைவுகள் ஏற்படுது.  அந்த வகையில நாம மிகக் குறைஞ்ச அளவுலயே பூச்சிக்கொல்லியை பயன்படுத்தணும்.

மோதி ஜி:  அப்படின்னா நீங்க முழுமையான இயற்கை விவசாயம் செய்யறீங்கன்னு சொல்லுங்க.

கல்யாணி:  ஆமாங்க, இது பாரம்பரியமான விவசாயம்.

மோதி ஜி:  இயற்கை விவசாயம் பத்தின உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்களேன்.

கல்யாணி:  ஐயா, நம்ம பெண்களுக்கு இதனால செலவு குறைவாச்சு, இந்தப் பொருள் காரணமா அவங்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டிச்சு.  இதனால நாங்க பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை நிறுத்திட்டோம்.  இந்த பூச்சிக்கொல்லியால தான் புற்றுநோய் அதிகமாகுது, நகரங்கள்ல ஒருபக்கம் அதிகமாகுதுங்கறது ஒருபக்கம், கிராமங்கள்லயும் இது அதிகரிக்குதுங்கறதைப் பார்க்கறோம்.  நாம நம்ம குடும்பங்களோட ஆரோக்கியத்தை உறுதி செய்யணும்னா, இந்த இயற்கை வழி வேளாண்மையை கைக்கொள்றது அவசியம், அந்த வகையில பெண்களும் கூட ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்திட்டு இருக்கோம்.

மோதி ஜி:  நல்லது கல்யாணி அவர்களே, நீங்க நீர்மேலாண்மை-நீர்பாதுகாப்பு விஷயத்திலயும் பணியாற்றியிருக்கீங்க இல்லையா?  அதில என்ன செய்தீங்க?

கல்யாணி:  ஐயா, மழைநீர் சேகரிப்புங்கற வகையில, தொடக்கப்பள்ளி, ஆங்கன்வாடி, கிராமப்பஞ்சாயத்து மாதிரியான அரசுக் கட்டிடங்கள்ல சேருற தண்ணி எல்லாத்தையும் ஓரிடத்தில சேகரிக்கறோம், இது ஒரு  recharge shaft, நீர்சேகரிப்பு அமைப்புன்னு வச்சுக்குங்களேன்.   மழைநீர் விழும் போது, அது நிலத்தடியில ஊறி இறங்கணும், ஆக அதுக்கு ஏத்த வகையில நீர்சேகரிப்புக்கான 20 மீள்நிரப்புச் சுரங்கங்களை நாங்க கிராமத்தில உருவாக்கியிருக்கோம், மேலும் 50 மீள்நிரப்புச் சுரங்கங்களுக்கு ஒப்புதல் கிடைச்சிருக்கு.  இப்ப விரைவிலேயே இதுக்கான பணிகளும் தொடங்க இருக்கு.

மோதி ஜி:  நல்லது கல்யாணி அவர்களே, உங்களோட உரையாடினதுக்கு ரொம்ப மகிழ்ச்சி.  உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.

கல்யாணி:  ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.  உங்களோட பேசுறது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.  என் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா நான் உணர்றேன்.  ரொம்ப நன்றிங்க.

மோதி ஜி:  தொடர்ந்து சேவை செய்யுங்கம்மா.

மோதி ஜி:  உங்க பேரே கல்யாணி, நீங்க எப்பவுமே நல்லதே செய்வீங்க. நன்றிம்மா, வணக்கம்.

கல்யாணி:  நன்றிங்க, வணக்கம்.

நண்பர்களே, சுனிதா அவர்களாகட்டும், கல்யாணி அவர்களாகட்டும், இவர்களைப் போன்ற பெண்-சக்தியின் வெற்றி பல்வேறு துறைகளில் உத்வேகமளிப்பதாக இருக்கிறது.  நான் மீண்டுமொருமுறை நமது பெண்-சக்தியின் இந்த உணர்வுக்கு இதயப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, இன்று நம்மனைவரின் வாழ்க்கையிலும் தொழில்நுட்பத்தின் மகத்துவம் மிகவும் அதிகரித்து விட்டது.  மொபைல் ஃபோன், டிஜிட்டல் கருவிகள் ஆகியன நம்மனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான பங்கு வகிக்கத் தொடங்கி விட்டன.  ஆனால் இந்த டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு இப்போதெல்லாம் காட்டு விலங்குகளோடு இசைவு ஏற்படுவதிலும் உதவிகரமாக இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா?  சில நாட்கள் கழித்து, மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று உலக வன உயிரின நாள் வரவிருக்கிறது.  வன உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு உலக வன உயிரின நாளின் கருப்பொருளில் டிஜிட்டல் கண்டுபிடுப்புகள் முதன்மையானதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.  நமது தேசத்திலே பல்வேறு பாகங்களிலே வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.  கடந்த சில ஆண்டுகளில் அரசு முயற்சிகள் காரணமாக தேசத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  மஹாராஷ்டிரத்தின் சந்திரபுர் புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை 250க்கும் அதிகமாகி ஆகியிருக்கிறது. 

சந்திரபுர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் குறைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இங்கே கிராமத்திற்கும் வனத்திற்கும் இடையிலான எல்லையில் காமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.  கிராமத்துக்கு அருகே புலி ஏதேனும் வரும் போது, செயற்கை நுண்ணறிவின் உதவியால், அந்தப் பகுதி மக்களின் செல்பேசியில் எச்சரிக்கை ஒன்று அளிக்கப்படும்.  இன்று இந்த புலிகள் சரணாலயத்தின் அருகே இருக்கும் 13 கிராமங்களில் இந்த அமைப்பு காரணமாக மக்களுக்கு மிக வசதியாக இருப்பதோடு, புலிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நண்பர்களே, இன்று இளைய தொழில்முனைவோரும் கூட வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சூழலியல் சுற்றுலாவின் பொருட்டு, புதியபுதிய புதுமையான கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  உத்திராகண்டின் ரூட்கீயில், ரோட்டர் பிரசிஷன் க்ரூப்ஸ் அமைப்பானது, இந்திய வன உயிரினக் கழகத்துடன் இணைந்து ஒரு ட்ரோனைத் தயாரித்திருக்கிறது.  இதன் காரணமாக கேன் நதியிலே முதலைகளின் மீது ஒரு கண் வைத்திருப்பதில் உதவிகரமாக இருக்கிறது.  இதைப் போலவே பெங்களூரூவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பகீரா மற்றும் கருட் என்ற பெயர் கொண்ட ஒரு செயலியை ஏற்படுத்தியிருக்கிறது.  பகீரா செயலி மூலம் வனச்சுற்றுலாவின் போது வாகனத்தின் வேகம் மற்றும் பிற விதிமுறைகளின் மீது கண்காணிப்பு செலுத்தப்படுகிறது.  தேசத்தின் பல புலிகள் சரணாயலயங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.  செயற்கை நுண்ணறிவு மற்றும் Internet of things ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட கருட் செயலியை ஏதோவொரு சிசிடிவியில் இணைப்பதன் மூலம் உடனுக்குடன் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.  வன உயிரினங்களின் பாதுகாப்பு என்ற வகையில் இவை போன்ற அனைத்து முயற்சிகள் வாயிலாக நமது தேசத்தின் உயிரி பன்முகத்தன்மையை மேலும் வளமுடையதாக ஆக்குகின்றன.

நண்பர்களே, பாரதத்திலே இயற்கையோடு இயைந்த இசைவு என்பது நமது கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இயற்கையோடும், வன உயிரினங்களோடும் இசைவான வாழ்க்கையை வாழும் உணர்வோடு நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம்.  நீங்கள் மஹாராஷ்டிரத்தின் மேல்காட் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றால், அங்கே உங்களால் நேரடியாக இதை அனுபவிக்க முடியும்.  இந்த புலிகள் சரணாலயத்தின் அருகே கட்கலி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினக் குடும்பங்கள், அரசு உதவியோடு தங்களின் வீடுகளை ஹோம் ஸ்டே எனும் தங்கும் விடுதிகளாக மாற்றி விட்டார்கள்.  இவை வருமானத்திற்கான மிகப்பெரிய சாதனமாக இவர்களுக்கு ஆகியிருக்கிறது.  இதே கிராமத்தில் வசிக்கும் கோர்கூ பழங்குடியினத்தவரான பிரகாஷ் ஜாம்கர் அவர்கள், தனது இரண்டு ஹெக்டேர் நிலத்தில் ஏழு அறைகள் கொண்ட தங்கும் விடுதியை ஏற்படுத்தி இருக்கிறார்.  இவருடைய தங்கும் விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு-குடிநீர் வசதிகளுக்கான ஏற்பாடுகளைக் குடும்பம் செய்து தருகிறது.  தங்களுடைய வீடுகளுக்கு அருகே இவர்கள் மருத்துவத் தாவரங்களோடு கூடவே மாமரம், காப்பி ஆகியவற்றையும் நட்டிருக்கிறார்கள்.  இது சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தை அதிகரிக்கிறது, அதே வேளையில் புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

எனதருமை நாட்டுமக்களே, கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசும் போது, உரையாடல் பசுமாடுகள்-எருமைமாடுகளோடு நின்று போகின்றன.  ஆனால் ஆடுகளும் கூட ஒரு முக்கியமான கால்நடைச் செல்வங்கள் தாம், இவை அதிக அளவு விவாதப் பொருளாவதில்லை.   நாட்டில் பல்வேறு பகுதிகளில், பலர் ஆடுகள் வளர்ப்போடு இணைந்திருக்கிறார்கள்.  ஒடிஷாவின் காலாஹாண்டியில் ஆடுகள் வளர்ப்பு, கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தோடு சேர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தும் ஒரு மிகப்பெரிய சாதனமாக ஆகி வருகிறது.  இந்த முயற்சியின் பின்னணியில் ஜயந்தி மஹாபாத்ரா, இவருடைய கணவர் பீரேன் சாஹூ ஆகியோரின் ஒரு மகத்தான தீர்மானம் இருக்கிறது.  இவர்கள் இருவரும் பெங்களூரூவில் மேலாண்மை தொழில் வல்லுநர்களாக இருந்தார்கள், ஆனால் இவர்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு காலாஹாண்டியின் சாலேபாடா கிராமத்திற்கு வருவது என்ற முடிவை எடுத்தார்கள்.   இங்கே இருக்கும் கிராமமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதே வேளையில், அவர்கள் அதிகாரப்பங்களிப்பு உடையவர்களாகவும் ஆக வேண்டும் என்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.  சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த இந்த எண்ணத்தோடு இவர்கள் மாணிகாஸ்து அக்ரோ என்ற அமைப்பை நிறுவினார்கள், விவசாயிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள்.   ஜயந்தி அவர்களும், பீரேன் அவர்களும் இங்கே ஒரு சுவாரசியமான மாணிகாஸ்து ஆடுகளை வளர்ப்பதற்கான இடத்தையும் நிறுவினார்கள்.  இவர்கள் சமூகரீதியாக ஆடுகள் வளர்ப்புக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.  இவர்களுடைய பண்ணையில் கிட்டத்தட்ட பலடஜன் ஆடுகள் இருக்கின்றன.  மாணிகாஸ்து ஆடுகள் அமைப்பில் இவர்கள் விவசாயிகளுக்கென முழுமையான ஒரு முறையைத் தயார் செய்திருக்கிறார்கள்.  இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 24 மாதக்காலத்திற்கு 2 ஆடுகள் அளிக்கப்படுகின்றன.  ஈராண்டுகளில் ஆடுகள் 9 முதல் 10 குட்டிகள் வரை போடுகின்றன, இவற்றில் 6 குட்டிகளை அமைப்பு தக்க வைத்துக் கொள்கிறது, மற்றவை ஆடுவளர்க்கும் அந்த குடும்பத்துக்கே அளிக்கப்படுகிறது.  இது மட்டுமல்ல, ஆடுகளைப் பராமரிக்கத் தேவையான அவசியமான சேவைகளும் அளிக்கப்படுகின்றன.  இன்று 50 கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த இணையோடு இணைந்திருக்கின்றார்கள்.  இவர்களுடைய உதவியோடு கிராமத்தவர்கள், கால்நடை வளர்ப்புத் துறையில் தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.  பல்வேறு துறைகளில் வெற்றியடைந்த வல்லுநர்களும் கூட சிறிய விவசாயிகளின் அதிகாரப் பங்களிப்பு மற்றும் தற்சார்பு நிலைக்காக, புதியபுதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.  இவர்களுடைய இந்த முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கும் பாடம் – ‘परमार्थ परमो धर्मः’, பரமார்த்த பரமோ தர்ம: – அதாவது, மற்றவர்களுக்கு உதவுவது தான் முதன்மையான கடமையாகும் என்பதே.  இதே உணர்வோடு பயணிக்கும் நமது தேசத்தில், ஏராளமான பேர், தன்னலமற்ற உணர்வோடு மற்றவர்களுக்கு சேவை புரிவதற்கே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு நபர் தான், பிஹாரின் போஜ்புரைச் சேர்ந்த பீம் சிங் வேஷ் அவர்கள்.   தன்னுடைய பகுதியில் வசிக்கும் முஸஹர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இவருடைய பணிகள் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன.   ஆகையால் நாம் ஏன் இன்று இவரைப் பற்றியும் உரையாடக் கூடாது என்று எனக்குப் பட்டது.  பிஹாரின் முஸஹர் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக, மிகவும் ஏழ்மையான சமுதாயமாகக் கருதப்படுபவர்கள்.  இவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமானதாக ஆக வேண்டி, இந்த சமுதாயக் குழந்தைகளின் கல்வி மீது பீம் சிங் பவேஷ் அவர்கள் தனது குவிமையத்தைச் செலுத்தினார்.   இவர் முஸஹர் பிரிவின் கிட்டத்தட்ட 8000 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தார்.  குழந்தைகளின் படிப்புக்கான சிறப்பான வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பெரிய நூலகத்தையும் ஏற்படுத்தினார்.  பீம் சிங் அவர்கள், தன் சமூக உறுப்பினர்களின் அவசியமான ஆவணங்களைத் தயார் செய்யவும், படிவங்களை நிரப்பவும் உதவி புரிந்தார்.  இதனால் தேவையான ஆதாரங்களைப் பெறுவதில் கிராமவாசிகளுக்கு வசதி ஏற்பட உதவிகரமாக இருக்கும்.  மக்களின் உடல்நலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தார்.  கொரோனா பெருந்தொற்று பீடித்த காலத்தில், பீம் சிங் அவர்கள் தன்னுடைய பகுதிவாழ் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மிகவும் ஊக்கப்படுத்தினார்.  தேசத்தின் பல்வேறு பாகங்களில் பீம் சிங் பவேஷ் அவர்களைப் போன்ற பலர், சமூகத்தில் இப்படி பல நேரிய காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பொறுப்பான குடிமகன் என்ற முறையில் நாம் இவரைப் போன்று நமது கடமைகளைப் பின்பற்றி நடப்போம் என்றால், சக்திபடைத்த ஒரு தேசத்தை உருவாக்குவதில் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

என் கனிவுநிறை நாட்டுமக்களே, பாரதத்தின் அழகே இங்கிருக்கும் பன்முகத்தன்மை நமது கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்களில் கலந்திருப்பது தான்.  பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் இதை மேலும் பராமரிக்கும் முயற்சிகளில் எத்தனையோ பேர் சுயநலமில்லா உணர்வோடு ஈடுபடுவதைக் காணும் போது எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது.   இப்படிப்பட்ட நபர்கள் பாரதத்தின் அனைத்து இடங்களிலும் உங்களுக்குக் காணக் கிடைப்பார்கள்.  மொழித் துறையில் பணியாற்றுபவர்களை அதிக எண்ணிக்கையில் நீங்கள் காண இயலும்.  ஜம்மு கஷ்மீரத்தின் காந்தர்பலைச் சேர்ந்த மொஹம்மத் மான்ஷாஹ் அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாகவே கோஜ்ரி மொழியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  இவர் குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர், ஒரு பழங்குடியினச் சமூகமாகும் இது.  சிறுவயது முதற்கொண்டே, கல்வி பயில பெரும் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  தினமும் 20 கிலோமீட்டர் நடந்து சென்று படிக்க வேண்டியிருந்தது.  இதைப் போன்ற சவால்களுக்கு இடையே இவர் முதுகலைப் பட்டம் பெற்றார், தன்னுடைய மொழியைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை உள்ளத்தில் மேற்கொண்டார்.

இலக்கியத் துறையில் மான்ஷாஹ் அவர்களின் செயல்பாடுகளின் சாதனைத் தொடர் என்று பார்த்தால், இவருடைய எழுத்துக்கள் 50க்கும் மேற்பட்ட வெளியீடுகளில் இடம் பெற்றிருக்கின்றன.  இவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்;  இவற்றில் கவிதைகள், நாட்டுப்புற கீதங்கள் ஆகியன அடங்கும்.  இவர் பல புத்தகங்களை தன்னுடைய மொழியான கோஜ்ரியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நண்பர்களே, அருணாச்சல பிரதேசத்தின் திரப் பகுதியைச் சேர்ந்த பன்வங்க் லோஸூ அவர்கள் ஒரு ஆசிரியர்.  இவர் வாஞ்சோ மொழியைப் பரப்ப, தன்னுடைய முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார்.  இந்த மொழி, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்த், அஸாமின் சில பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது.  இவர் ஒரு மொழிப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார்.  இவருடைய வாஞ்சோ மொழியின் ஒரு எழுத்துவடிவத்தைக் கூட தயார் செய்திருக்கிறார்.   இந்த மொழி வழக்கொழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, வருங்காலத் தலைமுறையினருக்கும் வாஞ்சோ மொழியைக் கற்பித்து வருகிறார்.

நண்பர்களே, ஆடல்-பாடல்கள் மூலம் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பலர் நமது தேசத்திலே இருக்கிறார்கள்.  கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கப்பா அம்பாஜி சுகேத்கர் அவர்களுடைய வாழ்க்கையும் இந்த விஷயத்தில் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது.  இந்த மாநிலத்தின் பாகல்கோட்டில் வசிக்கும் சுகேத்கர் அவர்கள் ஒரு கிராமியப் பாடகர்.  இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட ”கோந்தலி” பாடல்களைப் பாடியிருப்பதோடு, இந்த மொழியிலே, கதைகளையும் நன்கு பிரச்சாரம் செய்திருக்கிறார்.  எந்த ஒரு கட்டணமும் பெறாமல், பல மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்திருக்கிறார். 

பாரதத்திலே உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த இப்படிப்பட்ட நபர்களுக்குக் குறைவே இல்லை, இவர்கள் நமது கலாச்சாரத்தைத் தொடர்ந்து வளப்படுத்தி வருகிறார்கள்.   நீங்களும் இவர்களிடமிருந்து உத்வேகமடையுங்கள், உங்கள் தரப்பில் ஏதேனும் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.  நீங்களும் நிறைவான உணர்வை அனுபவிப்பீர்கள்.

என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக வாராணசியில் நான் இருந்த வேளையில், ஒரு மிகச் சிறப்பான புகைப்படக் கண்காட்சியைப் பார்க்க நேர்ந்தது.  காசி மற்றும் அருகிலே இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் காமிராக்களில் படம்பிடித்த கணங்களைக் கண்ட போது அற்புதமானதாக இருந்தது.  இதிலே பல புகைப்படங்கள், மொபைல் காமிராக்களிலே எடுக்கப்பட்டவை.  உள்ளபடியே, இன்று யாரிடத்தில் செல்பேசி இருக்கிறதோ, அவர் ஒரு content creator, உள்ளடக்க விஷயங்களை உருவாக்குபவராக ஆகி விட்டார்.  மக்கள் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்த சமூக ஊடகமும் பேருதவியாக இருக்கிறது.  பாரதத்தின் நமது இளைய நண்பர்கள் உள்ளடக்க விஷயங்களை உருவாக்கும் துறையில் அற்புதங்களைப் படைத்து வருகிறார்கள்.  அது எந்த ஒரு சமூக ஊடகத் தளமாக இருந்தாலும் சரி, பல்வேறு விஷயங்கள் குறித்து, பல்வேறு உள்ளடக்கத்தை பகிரக்கூடிய நமது இளைய நண்பர்கள் கண்டிப்பாக அவற்றிலே இருப்பார்கள்.  சுற்றுலாவாகட்டும், சமூகச் சேவையாகட்டும், பொதுமக்கள் பங்களிப்பாகட்டும், அல்லது உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணமாகட்டும், இவற்றோடு தொடர்புடைய பலவகையான உள்ளடக்க விஷயங்கள், சமூக ஊடகத்தில் காணக் கிடைக்கின்றன.  உள்ளடக்க விஷயங்களை உருவாக்கிவரும் தேசத்தின் இளைஞர்களின் குரல் இன்று மிகவும் தாக்கமேற்படுத்துவதாக ஆகி விட்டது.  இவர்களுடைய வல்லமைக்கு மதிப்பளிக்கும் வகையிலே National Creators Award, தேசிய படைப்பாளிகள் விருது ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.  இதன்படி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தின் வலுவான குரலாக பல்வேறு பிரிவுகளில் ஒலிக்கும் இவர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.  நீங்களும் இத்தகைய சுவாரசியமான உள்ளடக்க விஷயங்களைப் படைப்போரை அறிவீர்கள் என்றால், அவர்களை தேசியப் படைப்பாளிகள் விருதுக்குக் கண்டிப்பாக பரிந்துரை செய்யுங்கள்.

எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் மேலும் ஒரு இயக்கமான, ‘मेरा पहला वोट – देश के लिए’ என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதைத் தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.   இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.  உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு.  நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு இலாபகரமானதாக இருக்கும்.   நானும் கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனைப்பதிவேற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள்.  18 வயது ஆன பிறகு, 18ஆவது மக்களவைக்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.  அதாவது இந்த 18ஆவது மக்களவையும் கூட இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் அடையாளமாக விளங்கும்.  ஆகையால் உங்களுடைய வாக்கின் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது.  பொதுத் தேர்தல்களின் இந்த அமளிக்கு இடையே, இளைஞர்களே, நீங்கள், அரசியல் வழிமுறைகளின் அங்கமாக ஆவதோடு கூடவே, இது தொடர்பாக நடைபெறும் வாதம்-விவாதங்கள் தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள்.  மேலும் நினைவில் வைத்திருங்கள் – என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதை.  விளையாட்டுத் துறையாகட்டும், திரைத்துறையினராகட்டும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களாகட்டும், பிற தொழில் வல்லநர்களாகட்டும், அல்லது நமது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ ட்யூப் ஆகட்டும் இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுங்கள், நிபுணர்களே, முதன்முறையாக வாக்களிக்கும் நமது வாக்காளர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தாக்கமேற்படுத்துபவர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே.  தேசத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான சூழல் நிலவுகிறது, கடந்த முறையைப் போன்றே, மார்ச் மாதத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும் சாத்தியம் இருக்கிறது.  மனதின் குரல் நிகழ்ச்சியின் கடந்த 110 பகுதிகளாக நாம் இதை அரசின் தாக்கத்திலிருந்து தள்ளி வைத்தே வந்திருக்கிறோம் என்பதே கூட மனதின் குரலின் மிகப்பெரிய வெற்றியாகும்.  மனதின் குரலில், தேசத்தின் சமூக சக்தி பற்றி பேசப்படுகிறது, தேசத்தின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன.  இது ஒரு வகையிலே மக்களின் மக்களுக்காக, மக்கள் வாயிலாக தயார் செய்யப்படும் நிகழ்ச்சியாகும்.  ஆனாலும் கூட அரசியல் கண்ணியத்தைப் பின்பற்றும் வகையில், மக்களவைத் தேர்தல் என்ற இப்போதைய காலகட்டத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதின் குரலின் ஒலிபரப்பு நடைபெறாது.  அடுத்த முறை நாம் உரையாடுவது மனதின் குரலின் 111ஆவது பகுதியாக இருக்கும்.  அடுத்த முறை மனதின் குரலின் தொடக்கம் 111 என்ற சுபமான எண்ணோடு கூடவே இருக்கும், இதை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்!!   ஆனால் நண்பர்களே, நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும்.  மனதின் குரல் வேண்டுமானால் மூன்று மாதங்கள் வரை வராமல் போகலாம் ஆனால், தேசத்தின் சாதனைகள் நின்று போகப் போவதில்லை என்பதால், நீங்கள் மன் கீ பாத் ஹேஷ்டேக்(#) என்பதோடு கூட, சமூகத்தின் சாதனைகளை, தேசத்தின் சாதனைகளை, சமூக ஊடகத்தில் தரவேற்றிக் கொண்டே இருக்கவும்.  சில நாட்கள் முன்பு தான் ஒரு இளைஞர் நல்லதொரு ஆலோசனையைக் கூறியிருந்தார்.  அதாவது மனதின் குரலின் இதுவரையிலான பகுதிகளிலிருந்து சின்னச்சின்ன காணொளிகளை, யூ ட்யூப் ஷார்ட்டுகளாக பகிர வேண்டும் என்று கூறியிருந்தார்.   ஆகையால் மனதின் குரலின் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்கள் இப்படிப்பட்ட குறும்படங்களை நன்கு பகிரவும். 

நண்பர்களே, அடுத்த முறை உங்களோடு உரையாடும் போது, புதிய சக்தி, புதிய தகவல்களோடு வந்து சந்திப்பேன்.  நீங்கள் உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

நரகத்தை மிஞ்சும் சந்தேஷ்காளி சம்பவம்: நீதி பெற்றுத் தருவது அவசியம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

நரகத்தை மிஞ்சும் சந்தேஷ்காளி பயங்கரம் – தேசம் முழுவதும் ஓரணியில் திரண்டு சந்தேஷ்காளி பெண்களுக்கு நீதி பெற்று தர வேண்டியது அவசியம் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த சந்தேஷ்காளி கிராமம் பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய தீவு பகுதி கிராமம், இந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினர் பெரும்பாண்மையாக வசிக்கும் பகுதியாகும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தபின்னர் ரோஹிங்கியர்கள் மற்றும் பங்களாதேசியர்களின் புகலிடமாக சரணாலயாமாக மேற்கு வங்க மாநிலம் மாற்றபட்டுவிட்டதை அன்றாட செய்திகள் மூலம் அறியலாம்

அந்த வகையில் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த ஷேக் ஷாஜஹான் என்ற நபர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திரினாமுல் காங்கிரசுக்கு தாவி சந்தேஷ்காளி பகுதியில் ஆகபெரும் தலைவராக உருவெடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் மீன்பிடி தொழிலில் இருந்த ஷேக் ஷாஜஹான் திரினாமுல் காங்கிரசின் பின்புலத்தில் அரசியல் தாதாவாக உருவெடுத்து பட்டியல் சமூகத்தினர்களின் நிலங்களை பறித்து அதில் இரால் பண்ணைகளை அமைத்து அந்த நிலங்களில் உரிமையாளர்களான பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினரை அவர்களின் சொந்த நிலங்களில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து கூலி கூட வழங்காமல் கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இதற்கெல்லாம் மேலாக ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் அரங்கேற்றிய பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் வன்முறையும் சினிமாவை மிஞ்சும் வகையில் இருப்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கும் சம்பவங்களே சாட்சி

இந்த கொடூரம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த 13 ஊராட்சிகள் வரை நீண்டுள்ளது, கல்வி அறிவும் போதிய விழிப்புணர்வும் அற்ற பழங்குடி பட்டியல் சமூக மக்களின் அறியாமையை பயன்படுத்திகொண்ட ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கும்பல் மேற்படி 13 கிராமங்களில் இரவில் எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து இளம் பெண்களை தூக்கி சென்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலேயே வைத்து கூட்டு பாலியல் வன்புனர்ச்சியில் ஈடுபட்டுவதும் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கிறது

இந்த கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருந்தாலும் சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலர் முதலாக அந்த பகுதி காவல்நிலைம், வருவாய் துறை, மாநில மகளிர் ஆணையம் போன்ற எந்தவிதமான அரசு எந்திரத்தின் புலனுக்கும் அறியாமல் நடந்துகொண்டிருந்தது என்றால் அந்தளவுக்கு சட்டத்தின் ஆட்சி செயலிழந்து அரசு எந்திரம் முற்றிலும் முடங்கிபோனது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம் நடத்துகையில் அவர்களை சந்தித்த காவல் துறை டிஐஜி போராட்டம் நடத்துபவர்களை கலைந்து செல்லுமாறும் இல்லாவிட்டால் வீடு தீக்கிரை ஆகும் உங்கள் வீட்டு ஆண்கள் காணாமல் போகலாம் என்று போராடூபவர்களை மிரட்டும் தொனியில் பேசுவது ஊடகங்களில் வெளியாகியுள்ளது

நில அபகரிப்பு, கொத்தடிமை முறை, ரவுடியிசம் கட்டபஞ்சாயத்து கூட்டு பாலியல் வல்லுறவு போன்ற கொடூரங்களை வெளியில் தெரியாமல் அரசு எந்திரத்தை முடக்கிய ஷேக் ஷாஜஹான் ரேஷன் அரிசியை பங்களாதேசுக்கு கடத்தியது மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கதுறை விசாரிக்க சென்றபோது ஷேக் ஷாஜஹான் ஆதராவாளர்கள் அமலாக்க துறை அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதான விளைவாக மத்திய அரசு தலையிட்டதால் ஷேக் ஷாஜஹானும் அவனின் கும்பலும் தலைமறைவானார்கள் அதன்பிறகே ஷேக் ஷாஜஹானின் பத்தாண்டுகால கொடூரங்கள் வெளிவந்திருக்கிறது.

ஷேக் ஷாஜஹானின் கொடுரங்களை எதிர்த்து தைரியம் கொண்ட சிலர் காவல்துறையில் புகார் கொடுத்தாலும் வழக்கு பதிந்து விசாரனை செய்து ஆதாரம் திரட்டி நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை புகார் கொடுப்பவர்களிடமே ஆதாரம் கேட்டு மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளது, தற்போதும் கூட்டுபாலியல் கொடூரத்தில் பாதிக்கபட்ட பெண்கள் புகார் கொடுக்க சென்றால் ஆதாரம் கேட்டும் மருத்துவ சான்றிதழ் கேட்டும் பாதிக்கபட்ட பெண்களை மிரட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஊடகங்கள் முன்பு கூறியிருக்கிறார்கள்.

பட்டியல் சமுதாய பெண்களை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தும் அவர்களின் சொத்துகளை அபகரித்த தன் கட்சி முக்கிய பிரமுகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் ஷாஜஹான் மீது உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்ய முனைப்பு காட்டாமல் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கள்ள மவுனம் காப்பது பெண்ணே ஆட்சி நடத்தியும் பெண்களின் நரகமாக சந்தேஷ்காளி மாறியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது

குற்றவாளியை காப்பாற்ற பாதிக்கபட்டவர்களின் குரல்வளையை நெரிக்க மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ளார், அந்த உத்தரவை மேற்குவங்க மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும் சட்டத்தை வளைத்து உயர்நீதிமன்ற உத்தரவை நீர்த்துபோக செய்யும் வகையில் 13 கிராமங்களிலும் தனிதனியாக 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ளார், அந்த வகையில் நவகாளி படுகொலைகளுக்கு காரணமான ஹுசேன் சுஹ்ரபோர்த்தியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் மமதா பானர்ஜி.

இந்நிலையில் நேரிடையாக களமிறங்கிய தேசிய பட்டியல் சமுதயாய ஆணையம் நேரிடை விசாரணை நடத்தி அரசு எந்திரம் செயலற்று முடங்கியிருப்பதையும் அரசியலமப்பு உறுதி செய்யும் அடிப்படை உரிமைகள் மீறபட்டு சட்டத்தின் ஆட்சி முடக்கபட்டிருப்பதையும் உறுதி செய்து மாநில அரசை உடனடியாக கலைக்குமாறு அறிக்கை கொடுத்துள்ளது

மேற்குவங்கத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியாக திரண்டு பாதிக்கபட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் வேளையில் பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கடும் நடவடிக்கை எடுத்த பின்னரும் கண் காது மூக்கு வைத்து ஊதிபெரிதாக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, கண்டன ஆர்பாட்டம், போராட்டம் என அதகளபடுத்தும் மகளிர் அமைப்புகளும் திமுகவின் கனிமொழி அவர்களும் பேரமைதியில் இருப்பது அரசியல் ஆதாயம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்பதையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மவுனம் காக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது ஆகவே இந்த தேசம் முழுவதும் ஓரணியில் திரண்டு சந்தேஷ்காளி பெண்களுக்கு நீதி பெற்று தர வேண்டியது அவசியம்

நாட்டின் மிக நீளமான ‘சுதர்ஷன் சேது’ பாலத்தைத் திறந்து வைத்த மோடி!

modi in gujrat dwaraka - 2026

குஜராத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக நீளமான “சுதர்ஷன் சேது” கேபிள் பாலத்தை ரிப்பன் வெட்டி பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை மற்றும் தரிசனம் செய்தார். துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் ஆழ்கடலில் பிரதமர் மோடி சென்று பார்த்தார்.

கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார் பிரதமர் மோடி. கடலுக்கடியில் மயிலிறகை காணிக்கையாக செலுத்தி வழிபட்டு வந்ததாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பாலத்தின் சிறப்பம்சங்கள்:

  • ஓகா மற்றும் பேட் துவாரகா தீவை இணைக்கும் “சுதர்ஷன் சேது” பாலம் ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • 2.3 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்திற்கு 2017 அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலம் உள்ளது. பாலத்தில் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன.
  • சுதர்ஷன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்புள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் அமையப் பெற்றுள்ளன.
  • நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இந்தப் பாலம், புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

நிகழ்வு குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி, ” நாட்டின் மிக நீளமான “சுதர்ஷன் சேது” கேபிள் பாலத்தை இன்று திறந்து வைத்ததால், மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்று” என பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பாதுகாப்பாக வாழ்கிறேன்; மலாலா போல் லண்டனில் தஞ்சம் அடையவில்லை: யானா மிர் பரபரப்பு பேச்சு!

yana mirr - 2026

ஜம்மு, காஷ்மீரில் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலராக இருப்பவர் யானா மீர். இங்கிலாந்தில், ஜம்மு காஷ்மீர் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு இங்கிலாந்து எம்.பி. தெரசா வில்லியர்ஸ் பன்முக தன்மைக்கான தூதர் விருது வழங்கி கௌரவித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் மீர் பேசும்போது, நான் மலாலா யூசுப் இல்லை. ஏனெனில், இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள என்னுடைய சொந்த ஊரான காஷ்மீரில் பாதுகாப்பாகவும், சுதந்திரத்துடனும் இருக்கிறேன். நான் என்னுடைய சொந்த நிலத்தில் இருந்து தப்பியோடி விடமாட்டேன். உங்களுடைய நாட்டில் அடைக்கலம் கேட்கவும் மாட்டேன் என்று கூறினார்.

இதன்பின் அவர் பேசியபோது, காஷ்மீர் ஒடுக்கப்பட்டு உள்ளது என கூறியதற்காக மலாலாவை சாடினார். காஷ்மீருக்கு வருகை தருவதில் கவனம் கொள்ளாத, ஒடுக்கப்பட்டு உள்ளது என்ற கதைகளை புனையும் சமூக ஊடகம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நான் ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்றார். மேலும், மத அடிப்படையில் இந்தியாவை பிரிவினைப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, அடைக்கலம் தேடி இங்கிலாந்தில் உள்ளார். இங்குள்ள மலாலா யூசுப்சாய் போன்று உயிருக்கு பயந்து லண்டனில் அடைக்கலம் கேட்க வரவில்லை. அவரைப் போன்று நான் இல்லை. காஷ்மீரை விட்டு ஓடிவரவில்லை.காஷ்மீரில் சமூக ஆர்வலர்கள் குறித்து தவறான பிரசாரம் பரப்படுகிறது நான் காஷ்மீரை சேர்ந்தவள், எனது சொந்த மண்ணில் அங்கு மிகவும் பாதுகாப்பாக தான் வாழ்கிறேன் என்ற இவரது பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

என் மண் என் மக்கள் யாத்திரை: மதுரையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு!

annamalai in madurai yatra - 2026

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் யாத்திரை நடைபெற்றது. அதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து அண்ணாமலையை வரவேற்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் என்மண் என்மக்கள் யாத்திரை சென்று வருகிறார். ஏற்கனவே, மதுரை மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மக்கள் யாத்திரை செய்திருந்தார்.

இந்த நிலையில், விடுபட்ட மேற்கு சட்டமன்ற தொகுதியில் 103 நாளாக என் மக்கள் யாத்திரை பயணத்திற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெயவிலாஸ் பகுதிக்கு வந்திருந்தார்.
அங்கிருந்து, நடைபயணமாக சோலை அழகப்பபுரம், எம். கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , என் மன் என் மக்கள் யாத்திரை பயணம் செய்தார்.

வழிநெடுக பாஜகவினர் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, இந்து மக்கள் கட்சி,இந்து எழுச்சி பேரவை, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து, ஜீவாநகர் சந்திப்பு பகுதியில் ,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.மேலும், அண்ணாமலையின், என் மக்கள் யாத்திரையானது பிப்ரவரி 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடையுள்ளது.

இந்த நிறைவு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஏற்பாடுகளை, பாஜகவினர் மும்பரமாக செய்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.