டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. இது பொது சிவில் சட்டத்தின் அமலாக்கத்தில் ஒரு படிநிலையாகக் கருதப்படுகிறது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வேலையில் பாஜக., ஈடுபட்டுள்ளது. அண்மைக் காலமாக மக்களிடம் மத்திய அரசு, இதுகருத்து கருத்து கேட்டுள்ள நிலையில், உத்தராகண்டில் ஏற்கெனவே இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அசாம் அரசும் இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு கூறியுள்ளது. நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்தார். இதுகுறித்துக் கூறிய அவர், “முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று பல்வேறு சூழல்களில் தெரிவித்துள்ளார்.
“மேலும், இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து ஆகியவை, அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது. மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறையும்.
“இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்து வந்த 94 பதிவர்களுக்கு சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்“.” என்றுகூறினார்.
இந்நிலையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு ரத்து குறித்த மசோதா விரைவில் அசாம் சட்டசபையில் தாக்கலாகும் என்று தெரிகிறது.
விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸைச் சேர்ந்த விஜயதரணி இன்று தில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜக.,வில் இணைந்ததாக அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, தேசியக் கட்சியான பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் விஜயதரணி.
விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ.,வாகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளராகவும் விஜயதரணி பதவி வகித்தார். அண்மைக் காலமாக கட்சியில் கடும் அதிருப்தியில் இருந்த அவர், புதிதாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில், பாஜக.,வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் அந்தத் தகவலை உண்மையாக்கும் வகையில், இன்று தில்லியில் பாஜக., அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி எம்எல்ஏ., பாஜக.,வில் இணைந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, “காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜக.,வில் இணைந்துள்ளேன். அண்ணாமலை பாத யாத்திரையால் தமிழகத்தில் பாஜக.,வில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாஜக.,வில் பெண்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. மோடி தலைமையில் என்னைப் போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன்” என்றார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விஜயதரணி தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக-வை எதிர்ப்பவர்களுக்குக் கல்கண்டாக ஒரு செய்தி.
சென்ற மாத இறுதியில் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தது. அதில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்ட பின், இப்போது சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அந்தத் தேர்தல் முடிவை ரத்து செய்திருக்கிறது. அவரிடம் தோற்றதாகக் கருதப்பட்ட ஆம் ஆத்மி–காங்கிரஸ் கட்சிகளின் பொது வேட்பாளர்தான் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மேயர் என்றும் அறிவித்து விட்டது சுப்ரீம் கோர்ட்.
அந்த மேயர் தேர்தலில், அனில் மசிக் என்பவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருந்தார். பதிவான மொத்த வாக்குகள் 36, அதில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்தவை 20, பாஜக வேட்பாளர் பெற்றது 16 என்பது உண்மை நிலவரம். இங்குதான் தேர்தல் அதிகாரி மோசடி வேலை செய்தார். அதாவது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு முறையாக விழுந்த 8 வாக்குச் சீட்டுகளின் மேல் எக்ஸ் குறியிட்டு அவற்றைச் செல்லாது என்று எடுத்துக் கொண்டார் தேர்தல் அதிகாரி. இறுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்றது 12 வாக்குகள் மட்டுமே, பாஜக பெற்றது 16, ஆகையால் பாஜக வேட்பாளரே மேயர் என்று தேர்தல் அதிகாரி வில்லத்தனமாக அறிவித்துவிட்டார். பிறகு விஷயம் சுப்ரீம் கோர்ட்டை அடைந்து, மேயர் தேர்தல் முடிவு சரியாக மாற்றப் பட்டது. இது சுப்ரீம் கோர்ட்டுக்குப் பெருமை.
தேர்தல் அதிகாரியாக இருந்த அனில் மசிக் என்பவர் பாஜக-வில் சுமார் பத்தாண்டுகளாக இருக்கிறார். மேயர் தேர்தல் நடந்த சமயம், சண்டிகரில் அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுக்குத் தலைவராகவும் இருந்தார்.
இவ்வளவு ஒழுங்கீனமாக, மோசடியாகச் செயல்படும் ஒருவர் பாஜக-வில் இருக்கிறாரா என்று அக்கட்சியின் மீது மதிப்பு வைத்திருக்கும் பொதுமக்கள் நினைக்கலாம். இது பற்றிச் சிறிது விளக்க வேண்டும்.
நமது அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியத் தலைவர்கள் எப்படியானவர்கள்? அவர்கள் தேசத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள், தமது குடும்ப நலனை வளர்ப்பவர்கள், நேர்மையற்றவர்கள், தேர்தல் மற்றும் நிர்வாகத்தில் எந்த மோசடியும் நடக்க எதுவும் செய்பவர்கள், லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள், தான் இருக்கும்போது மற்ற கட்சிகளில் இருந்து வேறு யாரும் – அந்த மற்றவர் அப்பழுக்கற்ற திறமையான தலைவராக இருந்தாலும் – ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராகவோ தேசத்தின் பிரதமராகவோ வரக்கூடாது என்ற அகந்தை கொண்டவர்கள்.
இந்த மாதிரித் தலைவர்களோ அவர்களது கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களோ எந்த ஊழல் புகாரில் சிக்கினாலும், அவர்களுக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் வந்தாலும், அவர்கள் மீது என்ன வழக்கு வந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போனாலும், அந்தக் கட்சிக்கும் அதன் பிரதானத் தலைவர்களுக்கும் கூச்சம் இல்லை, வெட்கம் இல்லை. அவர்களைப் போன்றவர்கள் அந்தக் கட்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அங்கு போய்ச் சேருகிறார்கள். அப்படிச் சேருபவர்கள் என்ன முறைகேடுகள் செய்தாலும், அதனால் ஜெயிலுக்குப் போனாலும், கட்சிக்குள் அவர்களுக்கு இழுக்கு வராது. மதிப்புதான் கூடும். அதற்கு ஏற்ப, அவர்களும் கட்சியின் பிதாமகர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்திருப்பார்கள். லாலு பிரசாத் யாதவ் தெரியுமல்லவா? சில திராவிடத் தலைவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?
பாஜக அப்படியான கட்சியல்ல. சண்டிகர் மாநகராட்சியில் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட அனில் மசிக் இப்படித் தில்லுமுல்லு செய்து, அதை அப்பட்டமாகவும் அசட்டுத்தனமாகவும் செய்து, பாஜக வேட்பாளரை எப்படியாவது மேயராக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அனில் மசிக்கிடம் எதிர்பார்த்திருக்காது.
பாஜக-வின் தலைமை அப்படித் தவறாக எதிர்பார்க்கக் கூடியது என்றால், பத்து வருடங்களாக அந்தக் கட்சி மத்தியில் ஆட்சி செய்து வரும்போது, ஒரு 2ஜி ஊழல், ஒரு நிலக்கரி ஊழல், ஒரு காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஹெலிகாப்டர்கள் ஊழல், டெல்லி சாராய விற்பனை ஊழல் மற்றும் தமிழகத்தில் தொடரும் விஞ்ஞான ஊழல்கள் மாதிரிப் பெரிய அளவில் டெல்லியில் செய்திருக்கலாம். சண்டிகர் மேயர் பதவி மூலமாகக் கட்சி மேலிடம் எதை அடைய முடியும்? ஒன்றுமில்லை.
அப்படியென்றால் ஒரு மோசடி மனிதர் ஏன் பாஜக–விற்கு வரவேண்டும்? அல்லது, கட்சிக்குள்ளிருந்து ஏன் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்? காரணம் இருக்கிறது.
பொய் பித்தலாட்டம், தில்லுமுல்லு, மோசடி, ஆகிய குணங்கள் சிலருக்கு இருக்கும். அதில் திறமையான பலர் அத்தகைய குணங்களை மறைத்துத் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வதுண்டு, அதற்கேற்ற பேச்சுத் திறமையும் அவர்களிடம் இருக்கலாம். அவர்களுக்குப் பல அரசியல் கட்சிகளின் வாசல் கதவுகள் தோதாகத் திறந்திருப்பது போல் தோன்றலாம். இருந்தாலும் அந்த மனிதர்களில் சிலர், ‘நாம் பாஜக–வுக்குச் சென்றால் அங்கு நமது வேலைகளுக்குப் பெரிய போட்டி இருக்காது, நடித்துக் கொண்டே நாம் முன்னேறலாம்’ என்று கூட கணக்குப் போடலாம். ஒருவரின் அடிப்படை குணமும் அவர் செயல்பாடுகளும் எப்போதுமே லாஜிகலாக சேர்ந்திருக்கும் என்று இல்லையே? இப்படியாக அனில் மசிக் பாஜக-விற்கு வந்திருக்கலாம். இல்லையென்றால், எப்படியாவது என்ன செய்தாவது தன் கட்சிக்காரர் ஒருவர் மேயர் ஆகட்டும் என்று தோன்றி, கட்சித் தலைமையின் கண்ணியத்தை முழுதும் உணராமல், அவருக்குத் தலைக்கிறுக்கு வேகமாக ஏறி இருக்கலாம். வேறு எது சாத்தியம் – பாஜக-வின் தலைமை நேராக இருக்கும்போது?
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன், தேசநலன், நேர்மை, நாணயத்தின் மறுஉருவமான மூன்று தலைவர்கள் சொன்னதைப் பாருங்கள்.
“ஜனநாயகத்தைக் கொலை செய்யும் சதியில், அனில் மசிக் ஒரு ஏவலாள். அவருக்குப் பின்னால் மோடியின் முகம் இருக்கிறது.” என்றார் காங்கிரஸின் ராகுல் காந்தி. டெல்லியில் குளிர் அதிகமானால் அதற்கும் மோடிதான் காரணம் என்று நினைப்பவர் அவர்.
“சண்டிகர் மேயர் தேர்தலில், இருக்கிற 36 ஓட்டுக்களில் பாஜக 8 ஓட்டுக்களைத் திருட முடிந்தால், 90 கோடி ஓட்டுக்கள் விழக் கூடிய அடுத்த லோக் சபா தேர்தலில் அந்தக் கட்சி என்னவெல்லாம் செய்யுமோ?” என்று கேட்டார் ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால். 2024 லோக் சபா தேர்தலில் கிடைக்கப் போகிற தோல்விக்கு இப்போதே குயுக்தியாக ஒரு காரணத்தைத் தட்டி விட்டிருக்கிறார் அவர்.
2006-ல் சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் போது, திமுக அரசு மாநிலத்தில் இருந்தது. அந்தத் தேர்தலில் அனுமதிக்கப்பட்ட அராஜகம், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் மற்றும் பல தில்லுமுல்லுகளை இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டார். அந்த ஏகாந்த நிலையில், சண்டிகர் தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை வரவேற்று, அது “பா.ஜ.க-வின் தகிடுதத்தங்களுக்கு எச்சரிக்கை” என்று அறிக்கை விட்டார்.
என்ன இருந்தாலும், மேயர் தேர்தல் அளவில் கூட தனது கட்சியினர் முறைகேடுகளை நினைக்காமல் இருக்க பாஜக ஆவன செய்யவேண்டும் – அனில் மசிக்கையும் கட்டுப்படுத்த வேண்டும். இது அவசியம் என்று அக்கட்சியே உணர்ந்திருக்கும். பிற கட்சிகள் மாதிரி எதையும் துடைத்துவிட்டுப் போகிற கட்சி இல்லையே பாஜக?
பிற கட்சிகளிலிருந்து சிலர் பாஜக-விற்கு மாறி வருவது (அவர்கள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்றும் இருக்கலாம்) வேறு விஷயம். ஏன், இப்போது சண்டிகர் மாநகராட்சி கவுன்சில் உறுப்பினர்கள் சிலரும் அணி மாறலாம். தேர்தல் என்னும் போருக்கான படைகளை, தளவாடங்களைச் சேகரிப்பது எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு நடைமுறைத் தேவை என்றாகிவிட்டது. அதை லாவகமாக, கட்சியின் தன்மைக்குப் பாதகமில்லாத அளவிற்குச் செய்வது பாஜக-விற்கும் அவசியம். அந்த வழி எல்லாக் கட்சிகளுக்கும் சட்டத்தால் அனுமதிக்கப் பட்டதும் கூட. பதிவான வாக்குச் சீட்டுக்களை சட்டத்திற்குப் புறம்பாக மாற்றுவதைப் போல் அல்ல அந்த விஷயம்.
இந்த விவகாரம் இரண்டு விஷயங்களைத் தொட்டுப் போகிறது. ஒன்று: காகித ஓட்டுச் சீட்டில் எப்படி ஒரு தேர்தல் பணியாளர் எளிதாகத் தில்லுமுல்லு செய்யலாம், ஆனால் நன்கு சோதிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரமானது (EVM) வாக்கு எண்ணும் கில்லாடிகளை அடக்கி வைக்கும் என்று அழுத்தமாகத் தெரிகிறது. இரண்டு: சுப்ரீம் கோர்ட்டின் உடனடித் தலையீட்டால், எதிலும் அப்பட்டமான மோசடிகளைச் செய்ய நாடெங்கும் இனி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சற்றுத் தயங்குவார்கள். நடந்த விஷயம் அதுவரைக்கும் நல்லது செய்யட்டும், நமது ஜனநாயகம் மெள்ள மெள்ள முதிர்ச்சி அடையட்டும், என்று நாம் நினைத்துக் கொள்ளலாம். வேறு எப்படி நினைப்பது?
Author: R. Veera Raghavan,
Advocate, Chennai (veera.rvr@gmail.com)
Blog: https://rvr-india.blogspot.com
உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் பாம்பன் கடலில் மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை கடலில் கட்டப்பட்ட110 வயது ரயில் பாலத்திற்கு பிரியாவிடை பிப் 24ல் நிகழ உள்ள நிலையில் புதிய பாலப் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. பாம்பனில் பிப் 28ல் பிரதமர் மோடி புதிய தூக்கு பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் தென்னக பயணிகள் மட்டுமல்லாது, பக்தர்களும் பயன்பெறும் வகையில் மங்களூர் முதல் ஆலப்புழா – செங்கோட்டை – ராஜபாளையம் வழியாக ராமேஸ்வரம் புதிய ரயில் சேவை மற்றும் எர்ணாகுளம் – கோட்டயம் – செங்கோட்டை – ராஜபாளையம் – ராமேஸ்வரம் புதிய ரயில் சேவை துவக்கப்படுமா என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ராமேஸ்வரம் – பாம்பன் புதிய தூக்கு பாலம்
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட ரயில் பாலம் பிப்.24ல் 110 வயதைக் கடந்து பிரியா விடை பெற உள்ளது. முழு வீச்சில் சுமார் 535 கோடி நிதியியல் நடந்து முடிந்த புதிய பாலத்தை பிரதமர் மோடி பிப் 28 திறந்து வைக்க உள்ளார்.
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சியில் 2054 மீ., நீளத்தில் 146 துாண்களுடன் ரயில் பாலம் அமைத்து 1914 பிப்., 24ல் போக்குவரத்தை துவக்கினர். இந்தியாவில் கடல் மீது அமைந்துள்ள நீளமான ஒரே ரயில் பாலம் இதுதான்.
இப்பாலத்தை கடந்து தான் சென்னை, நாகை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, குஜராத், கோல்கட்டா துறைமுகங்களுக்கு கப்பல், மீன்பிடி படகுகள் செல்ல முடியும். இதற்காக பாலத்தின் நடுவில் ஜெர்மனி நாட்டு பொறியாளர் ஜெர்சர் முயற்சியில் 228 டன்னில் 81 டிகிரி அளவில் திறந்து மூடும் வகையில் துாக்கு பாலம் வடிவமைத்து பாலத்தின் நடுவில் பொருத்தப்பட்டது இந்த பாலத்தின் சிறப்பு அம்சமாகும்.
பழைய பாலத்தின் வரலாறு
1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் பாலத்தை புரட்டி போட்டதில் 124 துாண்கள் சேதமடைந்தன. தொழில் நுட்பம் வளர்ச்சி இல்லாத அக்காலக் கட்டத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புகழ்பெற்ற பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் தொழிலாளர்கள் 67 நாட்களில் புதுப்பித்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர்.
2014 ஜன.13ல் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பல் சூறாவளிக் காற்றினால் பாலத்தின் 121வது துாண் மீது மோதி சேதப்படுத்தியது. இதனை 7 நாட்களுக்கு ஜம் பின் சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர்.
“இருப்பினும் பாலம் வலுவிழந்தது. 2019 டிச.,3ல் துாக்கு பால இரும்புத் துாணில் விரிசல் ஏற்பட்டதுடன் சில துாண்கள் பலமிழந்தது தெரியவந்தது.
இதனால் ரயில் போக்குவரத்தை நிறுத்தி துாக்கு பாலத்தை சரி செய்து 85 நாட்களுக்குப் பின் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். 2022 நவ.23ல் மீண்டும் துாக்கு பாலத்தின் துாண்கள் பலமிழந்தன.
இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பஸ்கள், தனியார் வாகனங்களில் பக்தர்கள் ராமேஸ்வரம் சென்று வருகின்றனர்.
புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி
2021 மார்ச் 1 புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2021 நவ.28ல் பூமி பூஜை செய்யப்பட்டு 2022 ஜன.,ல் ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி துவங்கியது. புதிய பாலத்தில் 1500 மீ.,க்கு 100 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 500 மீ.,ல் பணிகள் வேகமடைந்துள்ளன.
இப்பகுதியில் பொருத்துவதற்காக 700 டன்னில் புதிய துாக்கு பாலம் வடிவமைத்துள்ளனர். அதனை நகர்த்தி சென்று பாலத்தின் நடுவில் பொருத்த உள்ளனர். இதற்கு 30 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் கூறினர்.
லிப்ட் முறையிலான இந்த புதிய துாக்கு பாலம் ஆசியாவில் இயக்கப்படும் முதல் லிப்ட் வடிவ துாக்கு பாலம். ஸ்பெயின் நாட்டு தொழில்நுட்பத்தில் இந்திய பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 72.5 மீ., பாலம் திறந்து மூடும் கடல் மட்டத்தில் இருந்து 22 மீ., உயரத்திற்கு மேலே சென்று திறந்து மூடும். இந்த துாக்கு பாலத்தில் இயக்க 650 கே.வி., திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்களை பாலத்தின் நடுவில் பொருத்த உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேல் துருப்பிடிக்காத ரசாயன கலவை பெயின்ட் பூசப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் பாலம்
துாக்கு பாலம் பணி முடிந்தபின் ரயில் சோதனை ஓட்டம் நடத்த ஏதுவாகரயில்வே வாரிய தலைவர் மற்றும் உயர் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.லோக்சபா தேர்தலுக்கு முன் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் முனைப்டுடன் செயல்பட்டு வரும் பிப் 28பிரதமர் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வரும் நிலையில் ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு புதிய வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுமா என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயில் மங்களூர் முதல் ராமேஸ்வரம் வரை கொச்சி ஆலப்புழா கொல்லம் செங்கோட்டை விருதுநகர் வழியாக ராமேஸ்வரம் வரை புதிய தினசரி ரயில் இயக்கவும் , எர்ணாகுளம் முதல் ராமேஸ்வரம் வரை கோட்டயம் புனலூர் ராஜபாளையம் வழியாக தினசரி ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய ரயில்களுக்கு எதிர்பார்ப்பு
வரும் பிப் 26ல் பல புதிய ரயில் திட்டங்களை துவக்கும் பிரதமர் புதிய வழித்தடத்தில் புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பர் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிப்.24ல் பாம்பன் பழைய ரயில் பாலம் 110 வது வயதை கடக்கிறது. ராமேஸ்வரம் தீவின் நினைவுச் சின்னம் என வர்ணிக்கும் வகையில் உள்ள இந்த பாலத்திற்கு பிரியாவிடை கொடுக்கப்படு பிப் 28ல் புதிய பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படும் நிலையில் புதிய ரயில் வரவு இருக்கும் என ரயில் பயணிகள் நம்பிக்கை வைத்துள்ளனர்
மஹாராஷ்டிர மாநிலம் துறவிகளின் பூமியாக இன்றும் கருதப்படுகிறது. துறவிகளில் சந்த் காட்கே (Gadge) மஹாராஜ் ( பாபா) மிகவும் பிரசித்தியானவர். கீர்த்தனைகளைப் பாடுபவராய் அவர் இருந்தாலும் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவே அவர் பார்க்கப்பட்டார். தூய்மையின் தூதுவராக மக்களுக்கு தூய்மையின் மகத்துவத்தை வலியுறுத்துவதில் அவர் பெரும்பங்கு வகித்தார். இன்று பிப்ரவரி 23 – ஆம் நாள் அவருடைய 148-வது ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.
காட்கே பாபா அமராவதி மாவட்டத்தில் உள்ள ஷேண்ட்காவ் என்னும் இடத்தில் ஜிங்ராஜி மற்றும் சகுபாய் தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய இயற்பெயர் தேபு. அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு அவர் தன்னுடைய மாமாவின் வீட்டில் வளர்ந்தார். வறுமையால் வாடினாலும் கல்வியின் மகத்துவத்தை அறிந்தவராய் இருந்தார். பொது சேவையே அவரது குறிக்கோளாய் இருந்தது.
1892 – ஆம் ஆண்டு குந்தாபாய் என்பவருடன் காட்கே பாபா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர்.
தனது 39-வது வயதில் காட்கே மஹாராஜ் துறவறம் பூண்டவாறு தன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் விட்டு விலகினார். நமது தமிழ் மொழியின் நாடியான ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்பதற்கிணங்க காட்கே பாபா அனைவரும் தன் உறவினர்கள், முழு உலகமும் தன் வீடு என்று எண்ணிக்கொண்டு கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டே கிராமம் கிராமமாக சென்றார்.
சமுதாயத்தில் இருந்த அறியாமை, மூடநம்பிக்கை, சில தேவையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை அகற்ற தன் கீர்த்தனைகள் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ‘கோபாலா கோபாலா தேவகி நந்தன கோபாலா’ என்ற பாடலே அவருடைய விருப்பமான பாடலாய் இருந்தது. அவரது நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் காலில் விழ வந்த மக்களிடம் ” என் காலில் விழுந்தென்ன பயன். நீங்கள் நல்ல அறத்தை கற்க வேண்டும்,” என வலியுறுத்தினார். கிராமங்களில் சுத்தத்தையும், சுகாதரத்தையும் விரும்பிய காட்கே மஹாராஜ் தான் செல்லும் இடங்களில் எல்லாம் துடைப்பத்துடன் சென்று அவ்விடங்களை சுத்தம் செய்தார்.
புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் எல்லாம் அவர் உழைத்தும், உதவி கேட்டும் தர்மசாலைகளை காட்கே பாபா கட்டினார். குழந்தைகளுக்காகவும் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் என கட்டினார். கிராம மக்களுக்கு உழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களின் வாழ்வை மேம்படுத்தினார்.
காட்கே பாபாவின் பின்வரும் கருத்துகள் இன்றும் ஏற்புடையதாகவே உள்ளன: தூய்மையே ஆரோக்கியமானது, பசித்தவர்களுக்கு உணவளித்தல், தாகத்திற்கு தண்ணீர், வீடில்லாதோர்களுக்கு தங்குமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கு மருந்து தருதல், விலங்குகள், பறவைகளை பாதுகாத்தல், பறவை, விலங்குகளை பலியிடுவது தவிர்த்தல், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, ஏழைகளுக்கு கல்வி கற்க உதவுதல், மனச்சோர்வடைவர்களுக்கு தைரியம் அளித்தல், கல்வியே சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி, மனிதருக்குள் பாகுபாடு கூடாது, தர்மம் பெற கையை நீட்டக் கூடாது, கொடுக்கவே கையை நீட்ட வேண்டும், திருடுதல் கூடாது, கடன் வாங்கக் கூடாது, போதைக்கு அடிமையாக கூடாது – என்பன சில.
சந்த் காட்கே பாபா அமராவதி அருகில் வல்காவ் என்னும் இடத்தில் டிசம்பர் 20 1956 – ஆண்டு இயற்கை எய்தினார். தான் கல்வி கற்காவிடிலும் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அறியச் செய்த தெபுவின் நினைவை போற்றும் வகையில் அமராவதியில் இருந்து இயங்கும் பல்கலைகழகத்திற்கு சந்த் காட்கே பாபா அமராவதி பல்கலைகழகம் என்று பெயர் சூட்டப்பட்டுளளது.
தூய்மையின் தூதுவரான சந்த் காட்கே பாபாவின் பெயரில் மஹாராஷ்டிர மாநிலத்தில் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளும் கிராம பஞ்சாயத்துகளுக்கு காட்கே பாபா கிராம ஸ்வச்சதா விருதானது கிராம ஸ்வச்சதா மிஷனின் கீழ் வழங்கப்படுகிறது.
நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டும் நம்மால் சமுதாயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதுமே நாம் சந்த் காட்கே பாபாவிற்கு செய்யும் அஞ்சலியாகும்.
மத்திய பாஜக அரசு 2018-ல் கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம், அது தொடர்பான சட்டம், இரண்டையும் ரத்து செய்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். அவை அரசியல் சட்டத்திற்கும் நிர்வாகச் சட்டத்திற்கும் முரண், ஆகையால் செல்லாதவை என்று தீர்ப்பளித்திருக்கிறது.
‘தேர்தல் பத்திரங்கள் திட்டம்’ என்னவென்றால்:
ஒரு நன்கொடையாளர் – தனி மனிதரோ கம்பெனியோ – ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடையாகப் பணம் தர விரும்பினால், அவர் ஒரு விண்ணப்பத்தை நிரப்பி பணத்தைத் தனது வங்கி வழியாக பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். ஸ்டேட் வங்கி அதே மதிப்பிற்கான ‘தேர்தல் பத்திரங்களை’ அவரிடம் வழங்கும்.
ஒருவர் ஸ்டேட் வங்கியில் நன்கொடைப் பணம் செலுத்திய தொகை மற்றும் தேதி, அவர் வாங்கும் தேர்தல் பத்திரத்தில் சொல்லப் பட்டிருக்கும். பத்திரம் வாங்குபவர் பெயரோ, நன்கொடை பெறப்போகும் கட்சியின் பெயரோ, அந்தப் பத்திரத்தில் இருக்காது. ஒரு வகையில் அது ஸ்டேட் வங்கி எழுதிக் கொடுத்த புரோநோட்டு மாதிரி. அதன் ஆயுட்காலம் பதினைந்து நாட்கள் மட்டும்.
நன்கொடையாளர், அவர் விரும்பும் ஒரு கட்சியிடம் அந்தப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும். அந்தக் கட்சி அதை ஸ்டேட் வங்கியிடம் கொடுத்து அதற்கான பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொள்ளும். உச்சவரம்பு இல்லாமல் எவரும் இப்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் தரலாம். ஸ்டேட் வங்கி விற்று வழங்கிய மற்றும் காசாக்கிய தேர்தல் பத்திரங்கள் பற்றி அந்த வங்கி ரகசியம் காக்க வேண்டும்.
தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகப் பெற்ற ஒரு அரசியல் கட்சி, நன்கொடையாளர்களின் பெயர்களை, அவர்கள் ஒவ்வொருவரும் அளித்த தொகையை, விவரமாகப் பிரித்து அரசாங்கத்துக்கோ மற்றவருக்கோ தெரிவிக்க வேண்டாம். பத்திரங்களை நன்கொடையாகக் கொடுத்தவரும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார் என்று விவரமாகப் பிரித்து எவருக்கும் தெரிவிக்கக் கட்டாயம் இல்லை. இதுதான் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் முக்கிய சாராம்சம். உபரி நிபந்தனைகளும் உண்டு.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடைகள் ரொக்கமாக இல்லாமல் கட்சியின் வங்கிக் கணக்கு மூலம் வருகின்றன. அந்த அளவுக்குக் கறுப்புப் பணம் தவிர்க்கப் படுகிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில், ஒரு அரசியல் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார் என்ற விவரம் பணம் கொடுத்தவருக்கும் அதை வாங்கிய அரசியல் கட்சிக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். மற்ற எவருக்கும் தெரியாமல் இருக்கும். இது இந்தத் திட்டத்தின் பெரிய பிரச்சனை என்கிறது சுப்ரீம் கோர்ட்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்குப் பத்து கோடி, நூறு கோடி, அதற்கு மேலும் நன்கொடைகள் தரலாம், மூன்றாம் மனிதர் அதை அறியமுடியாது, என்றாகிவிட்டால் – பணம் வங்கி வழியாகச் செல்கிறது என்றாலும் – ஒரு அரசியல் கட்சியும், அதுவும் பதவியில் இருக்கும் அரசியல் கட்சியும், அதன் நன்கொடையாளரும் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது? இருவரும் தங்களுக்குள் தவறான பிரதிபலன்களை (quid pro quo) ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்படும். இந்த ஆபத்துக்கான வாய்ப்பை சுப்ரீம் கோர்ட் கருத்தில் வைத்தது.
இரண்டாவதாக ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியது சுப்ரீம் கோர்ட். நமது தேர்தல்களில் வேட்பாளர்களை விட அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியம். தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ் ஒரு அரசியல் கட்சி யார் யாரிடமிருந்து எவ்வளவு பணம் நன்கொடையாகப் பெறுகிறது என்ற முக்கியமான விவரத்தை நாட்டின் வாக்காளர்கள் அறியமுடியாது. அதனால் குடிமக்களின் அடிப்படை உரிமையான ‘தகவல் அறியும் உரிமை’ பறிபோகிறது, ஆகவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது, அது தொடர்பான சட்ட திருத்தங்களும் செல்லாது, என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது சுப்ரீம் கோர்ட். இது சரியான தீர்ப்பு.
அரசியல் சட்டப்படி ஒரு திட்டம், அது தொடர்பான சட்டம், ஆகியவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறது, அவ்வளவுதான். மத்திய அரசும் அதை மதிப்பதாகச் சொல்லிவிட்டது. ஆனால் தீர்ப்பு வந்த உடன், எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இந்தத் தீர்ப்பு ஏதோ பாஜக-விற்கு, அந்தக் கட்சியின் நன்நடத்தைக்கு, எதிரானது மாதிரியும், தாங்கள் நேரானவர்கள், சுத்தமானவர்கள் என்கிற தொனியிலும் இந்தத் தீர்ப்பை அமோகமாக வரவேற்று பாஜக-வை இடித்துப் பேசி இருக்கிறார்கள். இது போலித்தனம்.
பாஜக-வைப் பழித்தபடி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் கொண்டாடும் எதிர்க் கட்சித் தலைவர்கள் எப்படியானவர்கள்? இதைக் கவனிப்பது முக்கியம்.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், ஆறு ஆண்டுகளில் எல்லா அரசியல் கட்சிகளும் வங்கி மூலமாகப் பெற்ற நன்கொடைத் தொகை மொத்தம் சுமார் 16,500 கோடி ரூபாய். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் UPA கூட்டணி முதன்முறை மத்தியில் ஆட்சி செய்தபோது ஒரே வருடத்தில், அதாவது 2008-ம் வருடம் நடந்த 2-ஜி லைசென்ஸ் ஊழலில், அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்பது சி.ஏ.ஜி-யின் குறிப்பு. சரியான தொகை எவ்வளவு என்று ஒரு திராவிட மாடல் அரசியல்வாதிக்குத் தெரியும்.
இன்னொரு சாம்பிள். 2004 முதல் 2014 வரை UPA கூட்டணி மத்தியில் இரண்டு முறை ஆட்சி செய்தபோது அரங்கேறிய நிலக்கரி ஊழல்களில் அரசுக்கு நஷ்டம் 1.86 லட்சம் கோடி ரூபாய் என்றது சி.ஏ.ஜி அறிக்கை. தேர்தல் பத்திரங்கள் திட்டம் இல்லாமலே இது போன்ற சாதனைகளைச் செய்த அரசியல் கட்சிகள் இப்போது வந்திருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காரண காரியமாக வரவேற்கின்றன – மத்திய பாஜக அரசின் பத்தாண்டு ஆட்சியின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாமல், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட விரக்தியைத் தாங்க முடியாமல்.
மறுபடியும் எதிர்க்கட்சிகள் எப்போதாவது மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகத் தேர்தல் பத்திரங்கள் திட்டம் இப்போதே ரத்தானது ஒருவிதத்தில் நல்லது. தேர்தல் பத்திரங்கள் இல்லாத போதும் அவற்றைத் தவிர்த்தும் நன்றாக விளையாட்டுக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்தத் திட்டத்தை முனைப்புடன் கையிலெடுத்தால் யாருடன் என்ன பேசி என்ன முடிப்பார்களோ? கண்டுபிடிக்கவும் முடியாதே!
வாக்காளர் நலனுக்காக, ஜனநாயக வெற்றிக்காக என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கும் எதிர்க் கட்சித் தலைவர்களில் பலர், சாதாரண வாக்காளர்களின் தலையில் நடப்பவர்கள். ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடிப்பது, அதற்குத் துணை போவது, அரசு செலவில் இமாலய இலவசங்கள் விநியோகிப்பது, தாங்கள் குவித்த செல்வத்திலிருந்து ஓட்டுக்குப் பணம் தருவது, ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் சீராக முன்னேற ஒன்றும் செய்யாமல் இருப்பது, என்பதாக அப்பாவி வாக்காளர்களை வஞ்சிப்பவர்கள் அந்தத் தலைவர்கள்.
விஞ்ஞான ரீதியாகப் பல்லாயிரம் கோடிகளில் பணம் சேர்த்துவிட்டு, அவற்றை வெளிநாடுகளில் மறைத்து வைக்கும் அரசியல் தலைவர்களை நாம் ஊகிக்கலாம். அவர்கள் வெறும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உபயோகித்துச் சொத்து சேர்க்கவில்லை. ஆகையால் இந்தத் திட்டம் ரத்தானதற்காக இப்போது அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்குக் கை தட்டுவார்கள். ஆனால் தங்கள் வழியில் ரகசிய சம்பாத்தியத்தைத் தொடர்வார்கள்.
ஓட்டுப் போடுகின்ற மக்களின் தகவல் அறியும் உரிமை பறிபோனதால், வாக்காளர்களின் அந்த உரிமையை சுப்ரீம் கோர்ட் சட்ட அளவில் மட்டும் தனது தீர்ப்பினால் காப்பாற்றி இருக்கிறது – இதைத்தான் கோர்ட் செய்யமுடியும். ஆனால் நிஜத்தில் எண்ணற்ற அந்த அப்பாவி மக்களை நமது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கசக்கிப் பிழிந்து ஏமாற்றிக் கொழிக்கிறார்கள் – இதில் கோர்ட் ஒன்றும் செய்வதற்கில்லை.
நமது மக்கள் நிஜத்தில் காப்பாற்றப்பட நாம் என்ன செய்யலாம்? பிரார்த்திக்கலாம். அதுபோக, மத்தியில் பாஜக-வின் நல்லாட்சி தொடர அதிகமானோர் அக்கட்சிக்கு வாக்களிக்கலாம். கோர்ட் உத்தரவுகளைத் தாண்டி, அதுதானே அப்பாவி இந்தியர்களுக்கு நிஜப் பலன்கள் தரும்?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
Blog: https://rvr-india.blogspot.com
இந்தியா இங்கிலாந்து இடையே ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 25 முதல் 28 வரை ஹைதராபாதில் நடந்தது. நான்கு நாட்கள் வர மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் விராட் கோலி குடும்பப் பிரச்சனை காரணமாக ஆடவில்லை. அவர் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆடமாட்டார் எனத் தகவல் வந்தது; பின்னர் இப்போது ஐந்து ஆட்டங்களிலும் ஆடமாட்டார் என அறிவிப்பு வந்திருக்கிறது.
முதல் ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாள் தேநீர் இடைவேளைக்குப் பின்னர், 64.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அஸ்வின், ஜதேஜா இருவரும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 436 ரன்கள் எடுத்தது. யஸஸ்வீ ஜெய்ஸ்வால் 80, கே.எல். ராகுல் 86, ஜதேஜா 87 எடுத்தனர். இரண்டாவது இன்னிங்க்சில் ஓலி போப் 196 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது. ஆனால் நிறைய நேரம் இருந்தும், இந்திய அணி வீரர்கள் நின்று ஆடாத காரணத்தால், நான்காம் நாள் இறுதியில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து. இதனால் இங்கிலாந்து 28 ரன் களில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட்
இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டணத்தில் பிப்ரவை 2 முதல் 5ஆம் தேதிவரை நடந்தது. இந்த ஆட்டத்தில் ராகுலும் ஜதேஜாவும் காயம் காரணமாக ஆடவில்லை. ரஜத் படிதர் விளையாடினார். முதலில் ஆடிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 209 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்சில் 253 ரன் கள் எடுத்தது. பும்ரா 6 விக்கட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் இந்திய அணி 25 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 104 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்சில் 292 ரன் எடுத்து ஆட்டமிழந்த்து. இதனால் இந்திய அணி 06 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது டெஸ்ட்
மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் 15 நாள் இடைவெளிக்குப் பின்னர் குஜராத்தில் ராஜ்கோட் மைதானத்தில் பிப்ரவரி 15 முதல் 18 வரை நடந்தது. இந்தஆட்டத்திலும் ராகுல் ஆட்டவில்லை. அதனால் சர்ஃப்ராஸ் கான் இந்த டெஸ்டில் முதன்முறையாக ஆடினார். இந்தியாவின் உள்ளூர் ஆட்டங்களில் ரன் குவிப்பு செய்துவரும் சர்ஃப்ராஸ் கானுக்கு இது முதல் வாய்ப்பு. அதனை அவர் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். முதல் இன்னிங்க்சில் 62 ரன்னில் இருக்கும்போது ஜதேஜாவினால் ரன் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிக்சில் 68 ரன்னில் இருக்கும் போது ரோஹித் ஷர்மா இன்ங்க்சை முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டார். இதனால் நூறு அடிக்கும் வாய்ப்பினை இழந்தார்.
அபார வெற்றி
இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்க்சில் ரோஹித் ஷர்மா 131, ரவீந்தர் ஜதேஜா 112 ரன் அடித்ததால் இந்திய அணி 445 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் பென் டக்கட் 153 ரன் அடித்ததால் முதல் இன்னிங்க்ச்சில் அந்த அணி 319 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்சில் ஜெய்ஸ்வால் 214 ரன் அடிக்க, ஷுப்மன் கில் 91 ரன் அடிக்க இந்திய அணி 4 விக்கட் இழப்பிற்கு 430 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி 122 ரன்னுக்கு ஆட்டமிழக்கவே இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று ஆட்டங்களிலும் ரவீந்தர் ஜதேஜா நன்றாக பீட்டிங்கும் பவுலிங்கும் செய்கிறார். ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக நன்றாக விளையாடுகிறார். ரோஹித்தும் ஒரு செஞ்சுரி அடித்துவிட்டார். சர்ஃப்ராஸ்கான் நன்றாக விளயாடுகிறார். நமது கடைசி வீரர்கள் பேட்டிங்கில் சற்று நின்று ஆடுகிறார்கள். பும்ரா. ஜதேஜா, அஸ்வின், குல்தீப் ஆகியோர் நன்றாகப் பந்து வீசுகிறார்கள்.
இந்திய அணி 2-1 என்ற வெற்றிக் கணக்கில் முன்னணியில் உள்ளது. நான் காவது டெஸ்ட் பிப்ரவரி 23இல் ராஞ்சியில் தொடங்குகிறது; ஐந்தாவது டெஸ்ட் மார்ச் 7ஆம் தேதி தர்மசலாவில் நடக்கவிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி..” என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. நாளை காலை மீண்டும் சட்டசபை கூடும் என சபாநாயகர் அறிவித்தார்.
பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள்…
இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத் திட்டங்கள் தமிழர்களை தலை நிமிரச் செய்தன. நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டூர் நீர்த்தேக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் பயனடைகின்றன. சர் பி.டி.தியாகராயரால் உருவாக்கப்பட்ட மதிய உணவு திட்டம் பின்னாட்களில் விரிவாக்கப்பட்டது.
100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது. கலைஞர் கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மகத்தான திட்டமாக அமைந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டங்கள் ஆகியவை மகத்தான திட்டங்கள் ஆகும்.
பேரறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான் நிதி நிலை அறிக்கையை தயாரிக்க உதவியது. கருணையும், நிதியும் ஒன்றாக சேரும்போது தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கீழடி உள்ளிட்டவை போன்றே மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வுக்கு அதிகபட்ச தொகை ஒதுக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.
மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இடங்களை கண்டறிய ஆழ்கடல் ஆய்வு செய்யப்படும்.
கீழடியில் ரூ.13 கோடி மதிப்பில் திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்படும். கிராமப் பகுதிகளில் 8 லட்சம் மக்கள் குடிசைகளில் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமப் பகுதிகளில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 2024-25-ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.5 லட்சம் செலவில் கட்டித்தரப்படும்.
முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.500 கோடியில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும். 5 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்ற ‘தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்படும். முக்கியமான சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும்.
சென்னையை அழகுற மாற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப் படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். சென்னை அடையாறு நதியை சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
பூந்தமல்லியில் ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் முதன்மையான நதிகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கோவையில் நதிகளை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன்பெற மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பஸ் பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்ப்புற பசுமை திட்டம் அறிமுகம் செய்யப்படும். 100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது-
கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை விடுவிக்கவில்லை
மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு-
மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,000கோடி கூடுதல் செலவு
வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்
ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு.
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் Wifi சேவை வழங்கப்படும்.
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது
சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.
விடியல் பயணம் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்
மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப்.17 இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக காங்கிரஸ் தவைராக செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சித் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. மேலும், தமிழக சட்டசபை குழுத் தலைவராக ராஜேஷ் குமார் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சில மாதங்களாகவே காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து தகவல்கள் கசிந்து வந்தன. செல்வப்பெருந்தகையுடன், கரூர் எம்.பி ஜோதிமணி, எம்.எல்.ஏ., விஜயதாரணி உள்ளிட்டோரும் தலைவருக்கான போட்டியில் இருந்ததாகவும், ராகுலுக்கு நெருக்கமாக இருப்பவர்க்கே கிடைக்கும் என்பதால், இவர்களில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்றும் செய்திகள் உலா வந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பெற்றுள்ள செல்வபெருந்தகை இதுகுறித்துக் கூறியபோது, என்னை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளது ஆச்சரியம் தந்துள்ளது. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் ஆகியோருக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன். தலைமையின் நம்பிக்கை வீண்போகாமல் பணியாற்றுவேன். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம் என்று கூறினார்.
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 17.02.2024 சனிக்கிழமை இன்று ஏப்ரல் 2022- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் ஒருங்கிணைப்போடு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் தலைமை விருந்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
முக்கியஸ்தர்கள் முறையாக பட்டமளிப்பு விழா மேடைக்கு ஊர்வலமாக சென்றனர். கல்லூரி பிரார்த்தனை பாடல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் பட்டமளிப்பு விழாவை கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி பட்டமளிப்பு விழா உரை ஆற்றினார்.
முறையாக துறைத் தலைவர்கள், அந்தந்த துறையின் பட்டதாரிகளின் பெயர்களை வாசிக்க 285 பட்டதாரிகள் சிறப்பு விருந்தினரிடமிருந்து பட்டங்களை பெற்றுக் கொண்டனர். அடுத்த நிகழ்வாக முதல்வர் வெங்கடேசன் பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியினை பட்டதாரிகளுக்கு வாசிக்க பட்டதாரிகள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். பெற்றோர்கள், தாய்மார்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில், திரளாகப் பங்கேற்றார்கள்.
இந்நிகழ்ச்சி தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது. முக்கியஸ்தர்கள் முறையாக பட்டமளிப்பு விழா முடிவடைந்தும் மேடையிலிருந்து ஊர்வலமாக சென்று விழாவினை முடித்து வைத்தனர்.