December 6, 2025, 4:53 PM
29.4 C
Chennai

இந்திய டெஸ்ட் அணியின் மாபெரும் வெற்றி

ashwin ravichandran 500 - 2025
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முதல் டெஸ்ட் – ஹைதராபாத்

          இந்தியா இங்கிலாந்து இடையே ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 25 முதல் 28 வரை ஹைதராபாதில் நடந்தது. நான்கு நாட்கள் வர மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் விராட் கோலி குடும்பப் பிரச்சனை காரணமாக ஆடவில்லை. அவர் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆடமாட்டார் எனத் தகவல் வந்தது; பின்னர் இப்போது ஐந்து ஆட்டங்களிலும் ஆடமாட்டார் என அறிவிப்பு வந்திருக்கிறது.

          முதல் ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாள் தேநீர் இடைவேளைக்குப் பின்னர், 64.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அஸ்வின், ஜதேஜா இருவரும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 436 ரன்கள் எடுத்தது. யஸஸ்வீ ஜெய்ஸ்வால் 80, கே.எல். ராகுல் 86, ஜதேஜா 87 எடுத்தனர். இரண்டாவது இன்னிங்க்சில் ஓலி போப் 196 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது. ஆனால் நிறைய நேரம் இருந்தும், இந்திய அணி வீரர்கள் நின்று ஆடாத காரணத்தால், நான்காம் நாள் இறுதியில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து. இதனால் இங்கிலாந்து 28 ரன் களில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட்

          இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டணத்தில் பிப்ரவை 2 முதல் 5ஆம் தேதிவரை நடந்தது. இந்த ஆட்டத்தில் ராகுலும் ஜதேஜாவும் காயம் காரணமாக ஆடவில்லை. ரஜத் படிதர் விளையாடினார். முதலில் ஆடிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 209 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்சில் 253 ரன் கள் எடுத்தது. பும்ரா 6 விக்கட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் இந்திய அணி 25 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 104 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்சில் 292 ரன் எடுத்து ஆட்டமிழந்த்து. இதனால் இந்திய அணி 06 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்ட்

          மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் 15 நாள் இடைவெளிக்குப் பின்னர் குஜராத்தில் ராஜ்கோட் மைதானத்தில் பிப்ரவரி 15 முதல் 18 வரை நடந்தது. இந்தஆட்டத்திலும் ராகுல் ஆட்டவில்லை. அதனால் சர்ஃப்ராஸ் கான் இந்த டெஸ்டில் முதன்முறையாக ஆடினார். இந்தியாவின் உள்ளூர் ஆட்டங்களில் ரன் குவிப்பு செய்துவரும் சர்ஃப்ராஸ் கானுக்கு இது முதல் வாய்ப்பு. அதனை அவர் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். முதல் இன்னிங்க்சில் 62 ரன்னில் இருக்கும்போது ஜதேஜாவினால் ரன் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிக்சில் 68 ரன்னில் இருக்கும் போது ரோஹித் ஷர்மா இன்ங்க்சை முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டார். இதனால் நூறு அடிக்கும் வாய்ப்பினை இழந்தார்.

அபார வெற்றி

          இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்க்சில் ரோஹித் ஷர்மா 131, ரவீந்தர் ஜதேஜா 112 ரன் அடித்ததால் இந்திய அணி 445 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் பென் டக்கட் 153 ரன் அடித்ததால் முதல் இன்னிங்க்ச்சில் அந்த அணி 319 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்சில் ஜெய்ஸ்வால் 214 ரன் அடிக்க, ஷுப்மன் கில் 91 ரன் அடிக்க இந்திய அணி 4 விக்கட் இழப்பிற்கு  430 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி 122 ரன்னுக்கு ஆட்டமிழக்கவே இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          மூன்று ஆட்டங்களிலும் ரவீந்தர் ஜதேஜா நன்றாக பீட்டிங்கும் பவுலிங்கும் செய்கிறார். ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக நன்றாக விளையாடுகிறார். ரோஹித்தும் ஒரு செஞ்சுரி அடித்துவிட்டார். சர்ஃப்ராஸ்கான் நன்றாக விளயாடுகிறார். நமது கடைசி வீரர்கள் பேட்டிங்கில் சற்று நின்று ஆடுகிறார்கள். பும்ரா. ஜதேஜா, அஸ்வின், குல்தீப் ஆகியோர் நன்றாகப் பந்து வீசுகிறார்கள்.

          இந்திய அணி 2-1 என்ற வெற்றிக் கணக்கில் முன்னணியில் உள்ளது. நான் காவது டெஸ்ட் பிப்ரவரி 23இல் ராஞ்சியில் தொடங்குகிறது; ஐந்தாவது டெஸ்ட் மார்ச் 7ஆம் தேதி தர்மசலாவில் நடக்கவிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories