டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதி வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5-பெண்கள் உள்பட 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 4 பேர் பேர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 5 விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டி வின்னர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ரமேஷ் (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50), 5 பெண் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்த சிவகாசி,வெம்பகோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத்துறையினர். விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புற்றுநோயை உருவாக்கும் நஞ்சு கலந்திருப்பதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது.
பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால். தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது.
செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு இயக்ககம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தப்பாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக நிகழ்ச்சியின் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையர், மண்டல தலைவர் உள்ளிட்ட பலருக்கு மேடையில் போடப்பட்ட இருக்கைகளில் அவர்களுக்கு இணையாக 39 வது வார்டு கவுன்சிலரான சூரியகலா என்பவருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் வராத நிலையில், அவரது கணவர் பாண்டியன் மேடை ஏறி அந்த இருக்கையில் அமர்ந்தார். அந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் ஆனார் அஸ்வின் ரவிச்சந்திரன். அவரது சாதனையைப் பாராட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில், அந்த அணியின் வீரர் கிராலியை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, தொடர் 1 -1 என சமனில் உள்ளது.
இதை அடுத்து, இந்த இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித், பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா இருவரும் சதம் விளாச, முதல் நாளில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 110, குல்தீப் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் பின் இன்று இரண்டாவது நாளாக ஆட்டம் தொடர்ந்தது. இதில் ஜடேஜா 112 ரன் எடுத்த நிலையிலும், குல்தீப் யாதவ் 4 ரன் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். எனினும் துருவ் ஜூரல், அஸ்வின் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். துருவ் ஜூரல் 46 ரன்னும், அஸ்வின் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, பும்ரா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 445 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் உட் 4, ரேஹன் அஹமது 2, ஆண்டர்சன், ஹார்ட்லி, ஜோ ரூட், தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடக்கிய இங்கிலாந்து அணியில், ஸ்கோர் 89 ரன்னாக இருந்தபோது, அஸ்வின் சுழலில் கிராலி (15) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பெறும் 500வது விக்கெட்.
போப் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. டக்கெட் (133), ஜோ ரூட் (9) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அஸ்வின் 500
டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் என்ற சாதனையை தனது 98வது டெஸ்டில் படைத்துள்ளார் அஸ்வின். இதன் மூலம் குறைந்த டெஸ்டில் 500 விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2வது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (87) உள்ளார்.
குறைந்த பந்துகளில் 500 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலிலும் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 25,528வது பந்தில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின், 25,714வது பந்தில் 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
பிரதமர் மோடி பாராட்டு
இதை அடுத்து அஸ்வினை பாராட்டி, பிரதமர் மோடி தனது ‛‛எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது திறமைக்கும் விடாமுயற்சிக்கும் இது சான்று, அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்கள்.
புகழ்பெற்ற ரயில் வழித்தடத்தில் ஒன்றான கொல்லம்-செங்கோட்டை-ராஜபாளையம் -மதுரை-சென்னை இடையே இனி விரைவில் ‘மின்சார ரயில் சேவை முழுமையாக இயங்கும்.
செங்கோட்டை அருகே கேரளாவில் மலை வழி ரயில் பாதையின் இடமன்-தென்மலை பிரிவில் தென்கண்ணாறு பாலத்தில் கடைசியாக மின்கம்பம் நிறுவப்பட்டு இடமன்-பகவதிபுரம் பகுதியிலும் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து விரைவில் மின்சார ரயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல வருட காத்திருப்புக்குப் பிறகு, திருவிதாங்கூரின் முதல் ரயில் பாதையும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. கொல்லத்தில் இருந்து புனலூர் மற்றும் செங்கோட்டை வரையிலான 761 கிமீ சென்னை வழித்தடத்தில் இனி மின்சார ரயில்கள் இயக்கப்படலாம். 119 ஆண்டு கால வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
மின்மயமாக்கல் நிறைவு
முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எடமன் – பகவதிபுரம் பிரிவு பணிகள் நிறைவடைந்த நிலையில் சென்னை சாலை முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. இப்போது இன்ஜினின் சோதனை ஓட்டம் மற்றும் முதன்மை மின் பொறியாளர் (PCEE) மண் ஆய்வு முடிந்ததும், மின்சார வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும்.
எடமன்-தென்மலை பிரிவில் தென்கண்ணாறு பாலத்தில் கடைசி தூண் நிறுவப்பட்ட நிலையில், தற்போது பாதையின் முக்கிய பணிகள் நிறைவடைந்தன. மேலும் வயரிங் ஏற்பாடு மற்றும் இறுதி ஆய்வும் முடிந்தது
.கொல்லத்தில் இருந்து புனலூர் வரையிலான 45 கி.மீ தூரத்திற்கு 2022-ல் மின்மயமாக்கப்பட்டது. புனலூர்-இடமன் எட்டு கி.மீ., பகவதிபுரம்-செங்கோட்டை ஆறு கி.மீ., பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. எடமன் – பகவதிபுரம் இடையேயான 34 கி.மீ., மின்மயமாக்கல் பல சவால்களுக்குப் பிறகு முடிக்கப்பட்டது. டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், ஒன்றரை மாதங்கள் பணி தாமதமானது.
எடமன்-பகவதிபுரம் பிரிவில் மின்மயமாக்கல் முடிந்ததும் ரயில்வேயால் முழுமையாக மின்மயமாக்கல் பணி முடிக்கப்பட்டது. குன்றுகளும் ஆறுகள் மலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மின்மயமாக்குவது சவாலாக இருந்தது. சாலை வசதி இல்லாத வனப் பகுதிகளுக்குச் சென்று கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
ஆறு சுரங்கங்களில் அடைப்புக்குறிகளும், 16 பாலங்களில் 38 மின்கம்பங்களும் அமைக்கப்பட வேண்டும். பத்து டிகிரி வரையிலான மலைகள் மற்றும் வளைவுகளில் வேலை செய்ய டவர் காரைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. தெற்கு ரயில்வே வரம்பில் சில நிலப்பரப்புகள் இத்தகைய சிரமத்தை அளித்துள்ளன.
பயண நேரம் குறையும்
இந்த மாத இறுதியில் கொல்லம் சென்னை இடையே முழுமையான மின்சார ரயில் இயக்கவும் புதிய ரயில் இயக்கவும் பயண நேரத்தை குறைக்கவும் தென்னக ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் செங்கோட்டை – புனலூர் -கொல்லம்-எரணாகுளம் வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில் இயக்கவும் எர்ணாகுளம் -தாம்பரம், மங்களூர் -ராமேஸ்வரம் இடையே இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் உள்ள அகல ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படுவதில் செங்கோட்டை – புனலூர் வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதையில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக, ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் பொறியாளர்கள் அண்மையில் ஆய்வுசெய்தனர்.
தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கோயம்புத்தூர் – பாலக்காடு, செங்கோட்டை – புனலூர், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடங்கள் உள்ளன. கோயம்புத்தூர் – பாலக்காடு, நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், செங்கோட்டை – புனலூர் வழித்தடத்தில் சென்னை – கொல்லம், மதுரை – குருவாயூர், பாலக்காடு -திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் -வேளாங்கண்னி ஆகிய 4 ரயில்களே இயக்கப்படுகின்றன.
இயற்கை எழில் மிகுந்த பாரம்பரிய பாதை
தென்னிந்தியாவில் இயற்கை எழில் மிகுந்த மலை ரயில் பாதைகளில் செங்கோட்டை – புனலூர் ரயில் பாதை முக்கியமானதாகும். 49 கி.மீ. தொலைவுக்கு உள்ள இந்த ரயில் பாதையில் 6 குகைகள், 50-க்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. இவ்வழியாகச் செல்லும்போது மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள் என கண்களுக்கு இனிமையான அழகான இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும். கழுத்துருட்டி 13 கண் பாலம் உட்பட சிறிய மற்றும் பெரிய அளவிலான 200 பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.
1902-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த ரயில் பாதையில் முதலில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அப்போது பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், 1904-ம் ஆண்டு பயணிகள் ரயில் இயக்குவதற்காக சோதனை செய்தபோது, பாதை அதிக வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருந்ததால் அதிக வேகத்தில் சென்றால் ரயிலை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ரயிலின் முன்னும், பின்னும் இரு இன்ஜின்களை இணைத்து, 14 பெட்டிகளுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள் ரயிலை இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ரயிலின் பின்னால் உள்ள இன்ஜின் மேடான பகுதிகளில் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், தாழ்வான பகுதிகளில் செல்லும்போது வேகத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் 2 இன்ஜின்களுடன் சேர்த்து 14 பெட்டிகளுடன், 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக அகல ரயில் பாதை பணிகள் முடிந்து 2018-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னரும் பழைய முறைப்படியே 14 பெட்டிகளுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
22 பெட்டிகளுடன் சோதனை
இந்த வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகள் இணைத்து அதிவேக ரயில்கள் இயக்க வசதியாக பல இடங்களில் தண்டவாள வளைவுகள் நேர் செய்யப்பட்டு விட்டன. ஏற்ற, இறக்கமாக இருந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டு விட்டன. இவ்வழித்தடத்தில் பகவதிபுரம் – எடமன் இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிந்து உள்ளன.
இந்நிலையில் செங்கோட்டை – புனலூர் இடையே 22 பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு சார்பில் கடந்த மாதம் ஆய்வு செய்யப்பட்டது.
இதற்காக லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக எல்ஹஎச்பி பெட்டிகள் இணைத்து ஆய்வு முடிந்த நிலையில் ஐசிஎப் பெட்டிகள் 24 கொண்டு ஆய்வு பணிகள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின்பு செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில், அதிக வேகத்தில் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது.
புதிய ரயில்கள் எதிர்பார்ப்பு
மேலும் எர்ணாகுளம் -ராமேஸ்வரம் , மங்களூர் -ராமேஸ்வரம் கோட்டயம் -சென்னை இடையே இந்த வழித்தடத்தில் புதிய தினசரி ரயில்கள் இயக்கவும் கன்னியாகுமரி முதல் புனலூர் வரை இயங்கும் மெமு ரயிலை செங்கோட்டை வரையும், திருவனந்தபுரம் -புனலூர் மெமு ரயிலை செங்கோட்டை வழி திருநெல்வேலி வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே நிர்வாகம் பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக கேரளா ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் அதிகாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) .இவர், மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின், மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும், இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருகிருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் பைக்கில் சென்ற சக்திவேலை விரட்டியுள்ளனர்.
சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில், அவரை விரட்டி மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவர் தப்பியோட முயன்ற நிலையிலும் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இதையடுத்து, அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறை பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரையில் அதிகாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சக்திவேலின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப் பட்டுள்ளனர்.
மதுரையில் பாஜக ஆர்ப்பாட்டம்:
மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே பாஜக போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பாஜக ஓ. பி .சி .அணி மாவட்ட செயலாளர் இன்று காலை, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து, மதுரை மாவட்ட பாஜகவினர் நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில், மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிதி உதவி செய்வதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜக பிரமுகர் படுகொலை அடுத்து, சில பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்து கோவிலான சுவாமி நாராயன் கோவிலை திறந்துவைத்தார் பிரதமர் மோடி. மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். கோயிலைத் திறந்து வைத்த பின்னர் சுவாமி நாராயணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது, அபுதாபியில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.. இந்தக் கோயில் ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலி வெள்ளை மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 900 கோடி அளவில், மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, நிலநடுக்கம், அதிக வெப்பத்தால் பாதிக்கப் படாத வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாப்ஸ் அமைப்பு சார்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, பாப்ஸ் அமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்துக் கோயிலான சுவாமி நாராயண் கோயிலைத் திறந்து வைத்து வழிபட்டார். கோயிலைத் திறந்து வைத்த பின்னர் சுவாமி நாராயணனுக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்திய-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனை அடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்துக் கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்.
The @BAPS Hindu Mandir, Abu Dhabi, UAE opens its doors for devotees! Feel very blessed to be a part of this very sacred moment. Here are some glimpses. pic.twitter.com/29IhN4ZocK
இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு பிஏபிஎஸ் (BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா) கோயில் ஒரு நிலையான புகழாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
🇮🇳 PM मोदी ने अबू धाबी में हिंदू मंदिर का किया उद्घाटन। 🚩
இதற்கிடையே, பிஏபிஎஸ்ஸின் இந்துக் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக அபுதாபியில் உலக மத நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனைகள் எதிரொலித்ததாக கருத்துகள் பகிரப்பட்டன.
கடந்த பிப்.11ஆம் தேதியன்று அபுதாபியில் உள்ள ஹிந்துக் கோயிலில் விஸ்வ சம்வாதிதா யாகம் எனும் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான வேத பிரார்த்தனைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.
அபுதாபி ஸ்வாமி நாராயண் இந்துக் கோயிலின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக ஒற்றுமை ‘நல்லிணக்கத் திருவிழா’வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு அமைந்தது. பண்டைய இந்து வேதங்கள் ஒரு யாகத்தை இறைவனிடமிருந்து ஆசீ பெற உதவும் ஒரு சக்திவாய்ந்த வழியாக விவரிக்கின்றன.
இந்த யாகத்தில், அமீரகத்தின் மக்கள், பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்களது அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரின் நல்வாழ்வு, வெற்றிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது இந்தச் சடங்குகளை நடத்துவதற்காக வேத விற்பன்னர்கள் ஏழு பேர், பாரதத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்களுக்கு உதவிகரமாக 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவை நடத்தி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உறுதுணையாக இருந்தனர்.
பூஜ்ய மஹந்த் ஸ்வாமி மகாராஜின் வழிகாட்டுதலின் கீழ் இந்தக் கோயில் திட்டத்தைக் குறித்து, நிகழ்ச்சியை வழிநடத்தும் சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் விளக்கினார், “இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாகம் இந்தியாவுக்கு வெளியே அரிதாகவே நடைபெறுகிறது. பூஜ்ய மஹந்த் ஸ்வாமி மகாராஜ், உலகளாவிய ஒற்றுமை என்ற இந்தக் கோயிலின் அடிப்படையான அம்சத்துக்கு வெளிப்படையான வழியாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
யாகத்தின் மங்கலச் சுடர், நம் இருள் நீங்கி, ஆன்மீக ஞானம் நம்முள் பரவுவதைக் குறிக்கிறது. இயற்கையின் பஞ்ச பூதங்களும் ஒன்றிணைந்து, அதிசயமாக மழை பொழியும் வானத்தின் அரிய பின்னணியில், இது ஓர் அற்புதமான காட்சியாக இருந்தது. ஈரமான வானிலை இருந்தபோதிலும், பங்கேற்பாளர்களின் மகிழ்ச்சியான உற்சாகம் குறையவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லண்டனில் இருந்து வந்திருந்த 70 வயது பக்தர் ஜெயஸ்ரீ இனாம்தார் கூறுகையில், “மழை வரலாற்று நிகழ்வை மறக்க முடியாததாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றியது. என் வாழ்நாளில் மழையின்போது யாகம் நடப்பதை நான் பார்த்ததேயில்லை! இது குறிப்பாக மங்களகரமானதாக உணர்த்தியது என்று தெரிவித்தார்.
பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தா என்பது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த ஒரு சர்வதேச சமூக அடிப்படையிலான இந்து பெல்லோஷிப் ஆகும். இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள், 80,000 தன்னார்வலர்கள் மற்றும் 5,025 மையங்கள் மூலம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை கவனித்துக்கொள்கிறது. பூஜ்ய மஹந்த் சுவாமி மகாராஜின் தலைமையின் கீழ், ஆன்மீக ரீதியாக உயர்ந்த மற்றும் வன்முறை இல்லாத, அமைதியான, இணக்கமான சமூகத்தை உருவாக்க இது பாடுபடுகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை சன்னிதி நடை திறந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(பிப்13) மாலை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஐயனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வந்திருந்தனர்.நாளை புதன்கிழமை மாசி மாதப்பிறப்பு பூஜை வழிபாடுகள் துவங்கி பிப் 18 வரை பூஜைகள் நெய் அபிஷேகம் நடைபெறும்.
சபரிமலையில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன., 21 -ல் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று வேறு பூஜைகள் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை புதன்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் படி பூஜை அத்தாழ பூஜை நடைபெறும்.
எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். பிப்., 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது
தமிழகத்தில் இன்று மாசி ஒன்றாம் தேதி. ஆனால் கேரளாவில் நாளை மாசி ஒன்றாம் தேதி என்பதால் இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு நாளை முதல் மாசி பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருவாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.
ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் என்பதுதான் இன்றைய செய்தி.
இந்த செய்தியின் விவரம்: கேரளா சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ் கூறுகையில், ”கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
இது குறித்து, ஐ.யு.எம்.எல்., – எம்.எல்.ஏ., அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் செல்பி பாயிண்ட் என்ற இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் நேரடியான எதிர்ப்பை இதுபோல் தமிழக அரசு இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும், மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சொல்லப்போனா, அரசியலுக்காக, தமிழர்களுக்கு மத்திய மோடி அரசு கொடுப்பதை, மாநில ஸ்டாலின் அரசு தடுத்தும் மறைத்தும் வருகிறது என்றே சொல்லலான்ம். மத்திய அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது என்று விளம்பரப்படுத்தி அரசியல் செய்து வரும் ஸ்டாலின் அரசு, வெகு காலமாகவே மத்திய மோடி அரசு கொடுப்பதை பட்டவர்த்தனமாக தடுத்தும் மறைத்தும் ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் சாதனைகளைப் போல் விளம்பரப்படுத்தியும் வருகிறது.
அதன் ஓர் அம்சம்தான், தற்போது அரிசி விலை உயர்ந்திருக்கும் இந்நேரத்தில், மத்திய அரசு அளிக்கும் ‘பாரத் அரிசி’யை மக்களின் பார்வையில் இருந்து மறைத்து வருகிறது தமிழக அரசு. இது குறித்த தகவல்களும் மக்களைச் சென்று சேராமல் பார்த்துக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்கிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கேரளத்தில் பெருமளவில் மக்களைச் சென்றடைந்து, பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே நேரம் தமிழகத்தில் இது குறித்த விழிப்புணர்வு ஏதுமில்லை!
ஏற்கெனவே மத்திய அரசு ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு வழங்கும் மானிய விலை அரிசி குறித்த தகவல்களை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு அதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு என்பதெல்லாம் விவரமாக குறிப்பிட்டு ரேஷன் கடைகளில் ரசீதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துண்டு சீட்டில் எழுதி எடை போடுபவர் அப்படியே கிழித்து வெளியில் எறிந்து விடுகிறார். அதன் மூலம் மத்திய அரசு தமிழர்களுக்கு வழங்கும் மானியங்கள், சலுகைகள், இலவசங்கள் குறித்த விழிப்புணர்வு துளியும் சென்று சேராமல் தமிழகத்தின் ஸ்டிக்கர் விடியல் அரசு பார்த்துக் கொள்கிறது.
இது குறித்த புகார்கள் பெருமளவில் சென்று சேரவே, மத்திய அரசு ரேஷன் கடைகளில் பிரதமரின் ‘செல்பி பாயின்ட்’ என்ற அம்சத்தை முன்வைக்க நினைத்தது. அதற்காக தமிழக ரேஷன் கடைகளில் இடம் ஒதுக்குமாறு கூறியும் தமிழக அரசு ஒரேயோர் இடத்தைக் கூட அடையாளம் காட்டவில்லை! இது எதனால் என்பதைப் புரிந்து கொள்வதில் நமக்கு அப்படி ஒன்றும் சிரமமும் இல்லை!
தமிழக ரேஷன் கடைகளில், 96 லட்சம் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா, 5 கிலோ அரிசியும், 18.65 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு தலா, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக, தமிழகத்திற்கு இலவசமாகவே வழங்குகிறது.
அதன்படி மாதம், முன்னுரிமை பிரிவுக்கு, 1.42 லட்சம் டன் அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு, 62,650 டன் அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 கிலோ அரிசி விலை சராசரியாக, 39.20 ரூபாயாக உள்ளது. அரிசி மட்டுமின்றி, இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க, மாதம் 8,500 டன் கோதுமையும்தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. இலவச அரிசித் திட்டம், இம்மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு வழங்கும் இலவச அரிசித் திட்டத்தை மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில், நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளில், பிரதமர் உருவப் படத்துடன் கூடிய, ‘செல்பி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்தான் தமிழகத்திலும் 1,500 ரேஷன் கடைகளில் பிரதமரின் செல்பி பாயின்ட் அமைக்க, அந்தக் கடைகளை அடையாளம் கண்டு தகவல் அளிக்குமாறு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத் துறைக்கு, மத்திய உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியாகவுள்ளதால், அதற்குள் செல்பி பாயின்ட் அமைக்கும் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
எனினும் ஸ்டிக்கர் விடியல் அரசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் படங்களை மாட்டி வைத்து குடும்ப விளம்பரம் செய்து கொண்டு ரேஷன் கடைகளில் அரசியல் நடத்தி வருகிறது. எனவே இதுவரை, ஓர் இடம் கூட மத்திய அரசுத் தரப்புக்கு அடையாளம் காட்டாமல், தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.
பெரும் விளம்பரங்களுடன் ஆர்பாட்டமாகத் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இப்போது பொது மக்களின் கண்ணீரை பெருக்கி விட்டு ஆட்சியாளர்களின் காலை வாரிவிட்டுள்ளது.
1999ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் கால்கோள் விழா நடத்தப்பட்டு பின்னாளில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது கோயம்பேடு பேருந்து நிலையம். அதற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டினார் ஜெயலலிதா. பேருந்து நிலையத்தில் முகப்பிலேயே ஜெயலலிதாவின் பெயர் மிகப்பெரியதாக இடம் பெற்றது.
அதிமுக ஆட்சி காலத்தில் கோயம்பேடுக்கு அடுத்து நகரின் போக்குவரத்து சேவையை கருத்தில் கொண்டு மிகப் பெரிதாக சென்னையில் முகப்பு வாயிலாக கருதப்படும் வண்டலூரை அடுத்த களாம்பாக்கத்தில் ஒரு பேருந்து நிலையத்துக்கு. அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.
இதனால், சென்னைக்கு மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைத்து அவரது தந்தை கருணாநிதியின் பெயரைச் சூட்டினார்.
தொடர்ந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்தே இயங்க ஆரம்பித்தது. இதுதான் தற்போது மக்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஊருக்கு போக கிளம்பும் மக்கள் பஸ் ஸ்டாண்டுக்கு போவதே ஊருக்கு போவது போல் இருக்கே என புலம்பும் நிலைக்கு வந்தனர். இது குறித்த கேலி கிண்டல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பெரிதாக பரவ தொடங்கின.
இப்படி பல அதிருப்திகள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிளாம்பாக்கத்தில் சரிவர பேருந்துகள் இயங்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் சனி ஞாயிறுகளிலும் பேருந்துகள் மிக குறைவாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிலும் இரவு நேரத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல போதிய பஸ் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. அதேபோல் பஸ் ஸ்டாண்ட் அருகில் டீக்கடை, ஹோட்டல் என எந்த அடிப்படை வசதியும் இல்லை என்ற புகார்களும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. மேலும், 8 மணி நேரத்திற்கும் மேலாக பஸ்ஸுக்காக காத்திருக்கிறோம் என பெண்கள் புலம்புவதையும் பார்க்க முடிகிறது.
2000 பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பஸ் தான் வருகிறது என மக்கள் கொதித்துப் போய் பேசும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. இப்படி பிரச்சனை பெரிதானதை அடுத்து தற்போது போலீசார் மக்களை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சரும் இதற்கான விளக்கத்தை கொடுத்து வருகிறார். ஆனாலும் சமாதானம் அடையாத மக்கள் இந்த பஸ் ஸ்டாண்ட் எங்களுக்கு வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள், ஆம்னி பஸ் ஓட்டுநர்களுக்கு குளியல் அறை தங்குமிட வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை என்பதால், பிளாட்பாரத்தில் வைத்தே குளிப்பதால், அங்கே தண்ணீர் ஓடி தேங்கி சுகாதாரக் குறைவு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு எந்த வித வசதியும் இங்கே செய்து தரப்படவில்லை என்று ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Until now I was thinking #Kilambakkam was the new bus terminal.
After watching this video I have my own doubt. It looks like open public bathroom. People are having their bath just outside the bus.
வார இறுதியில் கூட்டத்துக்குத் தக்க பேருந்து இல்லை…
வார இறுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்வோருக்கு போதுமான பேருந்துகள் இல்லாததாலும், கிளாம்பாக்கத்திற்கு இணைப்பு பேருந்துகள் பற்றாக்குறையாலும் இரண்டாவது நாளாக நேற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அவதியடைந்தனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் வர போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாதது, உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தாதது குறித்து, பயணியர் புலம்பி வருகின்றனர்.
வார இறுதியில் தென்மாவட்ட பயணியர் வசதி கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த வெள்ளி அன்று, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, கிளாம்பாக்கத்திற்கு வந்த பயணியர், போதிய பேருந்துகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். இதனால் அதிருப்தியடைந்த 200க்கும் மேற்பட்ட பயணியர், பேருந்து நிலையத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால், திடீரென பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார், பயணியருடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
சொந்த ஊர் செல்ல வந்தோர், போதிய பேருந்துகள் இல்லாததால், பேருந்து நிலைய நடைமேடையில் இரவு முழுதும் உறங்கி, அதிகாலையில் பேருந்து பிடித்து சென்றனர்.
When #Kilambakkam was opened, they said state of the art, world class, has waiting room what not. But reality insufficient buses, people 🛌 😴on floor with 🧳 🛄 as pillows. Name #kalaignar100 but 🚌 ?
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இது குறித்துக் கூறியபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி அரசு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், மதுராந்தகம் அருகே, வெள்ளி அன்று இரவு திடீரென ஏற்பட்ட விபத்தால், 2 கி.மீ., துாரம் வாகன போக்குவரத்து முடங்கியது. கிளாம்பாக்கம் வர வேண்டிய பேருந்துகள், அந்த நெரிசலில் சிக்கி, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 488 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தவிர, தினமும் இயக்கப்படும் 1,161 அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன என்று கூறினார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்தப் பிரச்னை குறித்துக் குறிப்பிட்டபோது, வெள்ளி அன்று, வார இறுதி நாட்கள் என்பதால், இரவு 10:30 மணிக்கு மேல், அதிகமான பயணியர் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அவர்களின் தேவைக்காக, கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. தை அமாவாசையை முன்னிட்டு, மேல்மலையனுார் மற்றும் திருவண்ணாமலைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் பயணியர் வந்ததால், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எங்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருக்கைகளை சேதப்படுத்தினர். அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணிபுரிவதற்கு அச்சமாக உள்ளது… என்று கூறினார்கள்.
எனினும் வெள்ளி அன்று நடந்த சம்பவத்திலும் பாடம் கற்காத அதிகாரிகளால், போதிய பேருந்துகள் கிடைக்காமல் சனி ஞாயிறு அன்றும், பயணியர் பெரிதும் அவதியடைந்தனர். குறிப்பாக, திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம், திருச்சி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், 700க்கும் மேற்பட்ட பயணியர் அவதிஅடைந்தனர். நள்ளிரவு வரை நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருந்தனர். மீண்டும் மறியல் போன்ற போராட்டங்களை தடுக்கும் வகையில், நேற்று 80க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த திமுக ஆட்சியில் இருந்து எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று நடு இரவில் மக்கள் புலம்பல்🥲
முன்பெல்லாம், மாநகர போக்குவரத்து கழகத்தில் முதல் ஷிப்ட் காலை 4:00 மணிக்கும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 2:00 மணிக்கும் துவங்கும். ஆனால், கிளாம்பாக்கத்தில் தற்போது நிலவி வரும் பயணியர் புகாரால், அதிகாலை 3:00 மணி முதலே மாநகர பேருந்துகளின் சேவை துவங்கப்படுகிறது. இதனால், ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது. கிளாம்பாக்கத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கென திறக்கப்பட்ட பிரத்யேக ஓய்வு அறைகள், சில நாட்களாக, முன்னறிவிப்பு இன்றி மூடியுள்ளனர். வேறு வழியின்றி பேருந்துகளின் இருக்கைகளிலேயே, துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்று, போக்குவரத்து ஊழியர்கள் குறை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியை ஏற்றவும், இறக்கவும் ஆம்னி பேருந்துகளுக்கு, கடந்த மாதம் 24ம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், கோயம்பேடு, போரூர், சூரப்பட்டு பகுதிகளில் பயணியரை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு இடைக்கால அனுமதி வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், நேற்று முதல் கோயம்பேடில் இருந்து வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தும் வரை, கோயம்பேடில் இருந்து புறப்பட்டு, போரூர், சூரப்பட்டு வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால், பல ஆயிரக்கணக்கான பயணியர், 1,000த்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் நேற்று பயணம் செய்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கும்போது, முன்பதிவு 60 சதவீதம் தான் இருந்தது. கோயம்பேடில் இருந்து ஆம்னி பேருந்துகளை மீண்டும் இயக்குவதால், முன்பதிவு 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அவதிதான்: எடப்பாடி பழனிசாமி
கிளாம்பாக்கத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கருணாநிதி பேருந்து நிலையம் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, அவசரகதியில் தி.மு.க., அரசு திறந்தது. மேலும், சென்னைவாசிகளை அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதையே பெரும் சிரமமாக கருத வைத்துவிட்டது. இரவு, குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் சென்ற பயணியர், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நடைமேடைகளில் படுத்து உறங்கும் அவல நிலை ஏற்பட்டது. மக்கள், ஓரளவுக்குதான் பொறுமை காப்பர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் மாநகர பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும், உடனடியாக ஏற்படுத்த வேண்டும். – என்று எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க., பொதுச்செயலர்) கோரிக்கை வைத்தார்.
"சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க பணிகளை துவக்கினோம்.. ஆனால் இந்த விடியா திமுக அரசு சரியான திட்டமிடல் இல்லாமல் பேருந்து நிலையத்தை திறந்து மக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது" – @EPSTamilnadu 🔥#Kilambakkam#DMKFailsTNpic.twitter.com/VWOh3SN7V7
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து 40 நாட்களாகியும், பயணியர் எதிர்கொள்ளும் பிரச்னை தினமும் தொடர்கிறது.வெள்ளிக்கிழமை இரவு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல, போதிய பேருந்துகளை இயக்காததால், நள்ளிரவில் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளை சிறைபிடித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்தி தங்கள் நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில், தி.மு.க., அரசு ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுதாக தயாராகும் வரை, கோயம்பேடில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும். மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால் அவர்களின் போராட்டம், சென்னை முழுக்க பெருமளவில் வெடிக்கும் என்று தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.
அதிக பேருந்துகள் இயக்க வேண்டியது தானே இது என்ன உதயநிதி அப்பன் வீட்டு பணமா?