October 13, 2024, 9:35 PM
29 C
Chennai

மதுரையில் பாஜக., நிர்வாகி படுகொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்!

madurai bjp worker sakthivel murder

மதுரையில் அதிகாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) .இவர், மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின், மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும், இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருகிருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் பைக்கில் சென்ற சக்திவேலை விரட்டியுள்ளனர்.

சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில், அவரை விரட்டி மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவர் தப்பியோட முயன்ற நிலையிலும் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

ALSO READ:  திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!

இதையடுத்து, அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறை பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரையில் அதிகாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சக்திவேலின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப் பட்டுள்ளனர்.

ALSO READ:  ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

மதுரையில் பாஜக ஆர்ப்பாட்டம்:

மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே பாஜக போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பாஜக ஓ. பி .சி .அணி மாவட்ட செயலாளர் இன்று காலை, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து, மதுரை மாவட்ட பாஜகவினர் நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில், மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிதி உதவி செய்வதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜக பிரமுகர் படுகொலை அடுத்து, சில பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

வீடியோ செய்தி:

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி

சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

திருத்தப்பட்ட நேரங்களுடன் கூடுதலாக, விர்ச்சுவல் வரிசையில் முன்பதிவு செய்பவர்களுக்க