Home Blog Page 241

அடுக்கடுக்காய் இத்தனை பொய்கள்; ஆளுநர் வாசித்து அவைக் குறிப்பில் ஏற வேண்டுமா?: அம்பலப்படுத்திய அண்ணாமலை!

bjp annamalai - 2026
#image_title

பிப்.12ம் தேதி திங்கள் அன்று தமிழக சட்டமன்றம் கூடியது. ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டிய சட்டமன்றத்தில், ஆளுநர் வாசிப்பதற்காக அரசு உரை தயாரித்துக் கொடுப்பது வழக்கம். அதில், தமிழக அரசின் சாதனைகள், கொள்கைகள், நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள், அறிவிப்புகள் என இருத்தல் மரபு. அதனை ஆளுநர் அரசின் சார்பில் வாசித்தலும் மரபாக இருந்து வருகிறது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், முன்னதாகவே ஆளுநர், அரசுத் துறைக்கு தெரிவித்து, அதன்படி மேற்கொள்ளப்படுதலும் வழக்கமாக இருந்துவருகிறது.

முன்னதாக திமுக., அரசு அமைந்த பின்னர், ஆளுநர் ஜெய் ஹிந்த் சொன்னார் என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த வருடம் ஆளுநர் சில திருத்தங்களைச் சொல்லி, அதை மெற்கொள்ளாததால், ஆளுநர் தான் தயாரித்துக் கொண்டு வந்த சிற்சில திருத்தங்களுடனான உரையையே படித்தார். அதற்கு கண்டனத் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய, ஆளுநர் அவையை விட்டு உடனே வெளியேறினார்.

இந்த வருடம் அதனால் எத்தகைய சர்ச்சை ஏற்படும் என்று எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்த நிலையில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான பல்வேறு விஷயங்கள் இருந்ததால் தாம் இதனை வாசிக்கப் போவதில்லை என்று கூறி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமலே அமர்ந்துவிட்டார் ஆளுநர். முக்கியமாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று குறிப்பிட்டு, அதனை ஆளுநர் படிக்க நிர்பந்தித்தல் என்பதை ஆளுநர் எப்படி ஏற்பார்?

இந்நிலையில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் அடுக்கடுக்காக எத்தனை பொய்கள் நிரம்பியுள்ளன என்பது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துகள்….

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள்

திமுக ஆட்சிக்கு வந்தபின், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. ஆளுநர் உரையை புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது.

2018ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் நான் தொடக்கத்திலே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல் எனவே அரசு எழுதி தந்திருக்க கூடிய Failure பேப்பர்களை கவர்னர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார் எனவே. நாங்கள் அதை கண்டித்து அவரது உரையை புறக்கணித்து, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

2020ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம்

2021ஆம் ஆண்டும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தீர்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர்.

இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும் விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண்.

பொய் 1: நாட்டிலே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது. அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு.

உண்மை நிலவரம்: திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதை பலமுறை தமிழக பாஜக முன்வைத்தும் அதற்கு எந்த தீர்வும் காணாமல், வசூலில் மட்டுமே குறியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் நாங்கள் முன்வைத்த SGST refund குற்றச்சாட்டாக இருக்கட்டும். மின்சார கட்டணம் மற்றும் Demand Charge உயர்த்தியதாக இருக்கட்டும். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் நிலையாக இருக்கட்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் நடவடிக்கைகளால் முதலீடுகள் குறைந்து கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒரு காலணிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அந்தபின் அந்த தொழிற்சாலை பணிகள் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை. இவ்வாறே உள்ளது தமிழக அரசின் செயல்பாடு

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டுவந்துள்ளதாக பெருமைப்படுவதற்கு முன்பு நமது நாட்டில் முன்னணி மாநிலங்கள் இது போன்ற மூதலீட்டாளர் மாநாடுகளில் கொண்டு வந்த முதலீடுகள் எவ்வளவு என்பதாவது திமுகவுக்கு தெரியுமா ?

உத்தரபிரதேசம் 33 லட்சம் கோடி ரூபாய்
குஜராத் -26 லட்சம் கோடி ரூபாய்
கர்நாடகம் 10 லட்சம் கோடி ரூபாய்

இவ்வாறு இருக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை திமுக உணரவேண்டும்.

பொய் 2: சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. இயற்கை பேரிடர்களை திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது பாராட்டுக்கள்.

உண்மை நிலவரம்: சிங்கார சென்னையை sink ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. நேர்மையான ஆட்சியாளராக இருந்திருந்தால் சொன்ன பொய்களுக்கும் செய்த தவறுகளுக்கும் திமுக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே 95% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருந்தனர் பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால் மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர் பாபு அதன் பின் 99 சதவீத பணிகள் நிறைவுபெற்றதாக கூறிய செய்திகளும் உள்ளன

மழைக்கு முன்பு, 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் திரு கே.என். நேரு சென்னை வெள்ளக்காடாக மாறியபின், 42 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவுபெற்றதாக கூறினார் 99 சதவீத பணிகள் நிறைவடைந்தது என்று சொன்ன நீங்கள் கடைசியில் மிகஜாம் புயலின்போது மக்களை தத்தளிக்கவிட்டது தான் மிச்சம்.

இது போதாது என்று தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது இந்தி கூட்டணி கூட்டத்திற்கு புதுதில்லி சென்றவர் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள். இது தான் பேரிடரை திறம்பட கையாண்ட விதமா ? இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் திமுகவினருக்கே உரித்தான குணம்.

பொய் 3: சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உண்மை: 2017-18ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை நமது மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது, மாநிலங்களின் வரிவருவாய் அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும் போது 14 விழுக்காடு வளர்ச்சி காணவில்லையெனில் அந்த பற்றாக்குறையான வரிவருவாயை இழப்பீடு தொகையாக மத்திய ஆண்டுகளுக்கு வழங்கும் என்று தெரிவித்திருந்தது. அரசு 5

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம்

2013-14: 3%
2014-15: 7%
2015-16: 2%
2016-17: 7%

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்திய பின்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம்

2018-19: 14%
2019-20: 10%
2020-21 -12% (கொரோனா காலகட்டம்)
2021-22 16%
2022-23: 24%

2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் GST இழப்பீடு தொகையாக கொடுத்தது மட்டுமல்லாது கொரோனா காலகட்டத்தில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க 14,336 கோடி ரூபாய் கடன் உதவியும் வழங்கியது நமது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு தமிழக மக்களுக்கு தெரளிவுபடுத்தவேண்டும். இல்லையெனில் ஆளுநர் உரையில் இது போன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.

பொய் 4: சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது.

உண்மை: சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தாங்கள் தங்கியிருக்கும் மாளிகையில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் கேட்டால் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உண்மை நிலை புரியும்.

கோவை தற்கொலைப்படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீது எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியதை தவிர என்ன சாதனை செய்தது திமுக கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தின் போது அமைச்சர் உட்பட அனைவரும் திரைக்கு பின்னால் மறைந்துகொண்டு வேடிக்கை மட்டும்தானே பார்த்தீர்கள்

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தமிழகத்தின் விளையாட்டு அமைச்சர் திரு உதயநிதி பேசிய பின்பும் மத நல்லிணக்கத்தை பற்றி பேச திமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

பொய் 5% மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்.

உண்மை அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி வழங்கி விட்டு சுமார் 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியதில் என்ன பெருமை உள்ளது ?

இப்படி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கட்சி மேடைகளில் மட்டும் 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின் அதை ஆளுநர் உரையில் சேர்க்காமல் விட்டது உள்ளபடியே மகிழ்ச்சி.

பொய் 6: புதுமைப் பெண் திட்டம் மூலமாக 273 லட்சம் பெண்கள் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை: தமிழகத்தில், இதற்கு முந்தைய ஆட்சியின் போது நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

முந்தைய திட்டத்தை நிறுத்திவிட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்த என்ன காரணம் என்று 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, புதுமை பெண் திட்டம் மூலமாக வருடத்திற்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று தெரிவித்தார் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவிகளின் எண்ணிக்கை, 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 என்று சமீபத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2 வாரங்களுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இப்படி உண்மைக்கு புறம்பான தகவலை ஆளுநர் உரையில் கொடுத்தது தவறு

அது ஒரு புறம் இருக்க. முந்தைய திட்டத்தை கைவிட தமிழக முதல்வர் சொன்ன உத்தேச பயனாளிகளில் சரிபாதியை கூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்?

பொய் 7 முதல்வரின் காலை உணவு திட்டம். நாட்டின் முதன்மை மாநிலம்

உண்மை பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் போஷன் திட்டத்தில் வழங்க வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் போஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1,146 கோடி ரூபாய்.

இந்தியாவில் பல மாநில அரசுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை தமிழக முதல்வர் புரிந்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவச அரிசியும், ஒரு வேளை உணவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கி வருவது அந்த தொண்டு நிறுவனங்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளதையும் அறிய முடிகிறது.

பொய் 8: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம் 2024 எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

உண்மை கடந்த ஆண்டு பட்டியல் சமுதாய மக்களுக்கு நமது மத்திய அரசு வழங்கிய சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் வீணாக்கியதை தமிழக பாரதிய ஜனதா கட்சி கண்டித்தது. அதன் பின்னர் பட்டியல் சமுதாய மக்களுக்கு SCSP மூலமாக வரும் நிதியை சரியாக செலவிட ஒரு சட்டமுன்வரைவு அறிமுகப்படுத்தப்படும் என்று திமுக அரசு சொல்லி சுமார் ஒரு ஆண்டு கடந்துவிட்டது.

இனியும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை திமுக தற்போது தெரிவித்துள்ள செயல் திட்டம் தடையின்றி செயல்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

பொய் 9. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்

உண்மை கடந்த ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் குழுவை தமிழக அரசு அமைத்தது ஆட்சிமாற்றத்திற்கு பிறகு, அறிக்கை சமர்ப்பிக்க எங்களுக்கு 6 மாதம் கால நீட்டிப்பு வேண்டும் என்று குலசேகரன் கமிஷன் விடுத்த கோரிக்கையை திமுக அரசு நிராகரித்தது இவ்வாறு இருக்கையில் மத்திய அரசிடம் இது தொடர்பாக எதற்கு வலியுறுத்துகிறீர்கள் என்பதே எங்கள் கேள்வி

பொய் 10: தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம்

உண்மை. விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று நமது மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு திமுக அரசு சூட்டிய பெயர் இன்னுயிர் காப்போம்.

மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதும் திமுக ஆளுநர் உரையில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பல முன்னோடி திட்டங்களை இந்த அரசு நடைமுறைபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டபோது, திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கும், தமிழக அரசின் முயற்சியால் 2023ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 243 மீனவர்களில் 242 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக சொன்ன போது மத்தியில் திமுக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதும் தான் நினைவுக்கு வந்தது.

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ஒரே ஒரு குறை தான். கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சாதனை இந்த ஆளுநர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அது இடம் பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம்

இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

stalin met senthil balaji - 2026
#image_title

இலாகா இல்லாத அமைச்சர் பதவியுடன் சிறையில் காலம் கழித்து வரும் செந்தில் பாலாஜி, இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்!

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் வழிகாட்டலில், கடுமையான நெருக்கடியின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 13ல் கைது செய்தது. அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து அவர் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்த போதும், அவரது ஜாமின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடியாயின. இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்ததாகவும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஓர் அமைச்சரை நீக்குவதும் சேர்ப்பதும் நீட்டிக்க வைப்பதும் முதலமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வரும் என்று ஆளும் தரப்பு கூறிவந்தது. இதனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார் செந்தில் பாலாஜி.

ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதன் பின்னணியில் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆகிக் கொண்டே வந்தன. இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடித்து வந்த தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவந்த செந்தில் பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றக் காவலை 19வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை செந்தில் பாலாஜி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்லை: புத்தகத் திருவிழாவா? திமுக., திக., கம்யூனிச பிரச்சாரக் கூட்டமா?

nellai book fair - 2026
#image_title

நெல்லை புத்தகத் திருவிழாவா ? திமுக திக கம்யூனிச பிரச்சாரக் கூட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னணி அமைப்பு, தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் இது குறித்துக் கூறுகையில்,

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

ஆனால் 2024 நெல்லை புத்தகத் திருவிழா திமுக திக மற்றும் கம்யூனிஸ்டுகளின் பிரச்சார மாநாடு போல நடைபெற்று வருவது வேதனைக்குரியது. இதற்கெல்லாம் மேலாக இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரச்சாரங்கள் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.

நேற்று முன்தினம் நெல்லை புத்தகத்திருவிழாவில் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு என்பவர், இந்து மதத்தை தரக்குறைவாகவும் சனாதன தர்மம் குறித்து பொய்யான செய்திகளையும் சொல்லி விமர்சித்து பேசியுள்ளார். இது போல வேற்று மதத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை பேச சந்துரு பேசியிருந்தால் பெரிய பிரளயமே உருவாகியிருக்கும்.

ஒரு மதத்தை அதன் பாரம்பரியத்தை அரசு விழாவில் விமர்சித்துப் பேசுவதை மாவட்ட நிர்வாகம் எப்படி வேடிக்கை பார்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. புத்தகத் திருவிழா என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் விழா.

திமுக., திக., கம்யூனிச பேச்சாளர்கள் பஞ்சம் பிழைக்கும் மேடையாக புத்தகத் திருவிழா மாறியது தமிழறிஞர்கள் மற்றும் பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தமிழும் இந்து சமயமும் ஒன்றோடு ஒன்றி பின்னிப் பிணைந்தது. தமிழால் இந்து மதமும், இந்து மதத்தால் தமிழும் வளர்ந்தது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் பக்தி இலங்கியங்கள் குறித்த எந்த சொற்பொழிவும் நிகழ்ச்சியும் 2024 நெல்லை புத்தக திருவிழாவில் இடம்பெறவில்லை என்பதிலிருந்தே புத்தக திருவிழாவில் ஆளும் அரசியல் ஆதிக்கத்தை உணர முடிகிறது.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சில நாட்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் புத்தகத்தில் திருவிழாவில் நன்றியுரை கூறும் அளவிற்கு புத்தக திருவிழா அரசியலாகி போனது வேதனை அளிக்கிறது.

இனி வரும் காலங்களிலாவது அரசியல் சார்பில்லாத, இந்து வெறுப்புணர்வை தூண்டாத பேச்சாளர்களை வைத்து புத்தகத் திருவிழாவை கண்ணியம் குறையாமல் நடத்திட மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட இந்துக்கள் சார்பில் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது, என்றார் கா.குற்றாலநாதன்.

கத்தாரில் தண்டனையில் இருந்து தப்பி இந்தியா திரும்பிய 8 பேர்; பிரதமர் மோடிக்கு நன்றி!

india and qatar news - 2026
#image_title

கத்தாரில் உளவு பார்த்ததாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேர் விடுதலையாகி இன்று காலை புதுதில்லி வந்தனர். அவர்கள் தங்கள் விடுதலைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

கத்தாரில், தங்கள் நாட்டை உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.

அவர்களை விடுதலை செய்ய, இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக, எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் விடுதலை செய்தது. இதை அடுத்து, புதுதில்லி வந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கும் விடுதலை கொடுத்தது கத்தார் அரசு! இது, இந்திய அரசின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அழுத்தத்தால் கத்தாரில் பணி புரிந்த 8 இந்தியர்களை சிறையிலடைத்தது கத்தார் அரசு. 8 பேரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலில் வெறியாட்டம் போட்டதை கண்டித்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கத்தார் அரசு இந்த 8 பேருக்கும் அக்.26ல் மரண தண்டனை விதித்தது. இதை அடுத்து கத்தார் அரசுடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து போராடி வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பரில் கத்தார் இளவரசரை துபாயில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து எட்டு பேருக்கான மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தாரிலிருந்து வாங்கும் எரிவாயுவை மொசாம்பிக் உள்ளிட்ட இடங்களிலிருந்து வாங்க பாரத அரசு நடவடிக்கை எடுத்தது.. இந்நிலையில், கத்தார் நாடு அந்த எட்டு பேருக்கும் விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல், 8 நாட்களுக்குப் பின் மீட்பு!

saidai duraisamy son vetri - 2026
#image_title

சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு ஹிமாச்சலில் மீட்கப்பட்டது.

கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 6 கிமீ., தொலைவில் வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). பொதுப் பணிகளிலும் சேவைகளிலும் ஆர்வம் காட்டிய இவர், திரைப்பட இயக்குனராகவும் இருந்தார். 2021ல் விதார்த் , ரம்யா நம்பீசன் நடிப்பில் ’என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கினார். தற்போது பெயரிடப்படாத கிரைம் திரில்லர் படத்தை இயக்கும் வேலையில் இருந்தார்.

இதன் பின்னணியில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத் (32) என்பவருடன், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றார். அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைப் பார்வையிட்டு வந்தார். இந்நிலையில் பிப்.4ஆம் தேதி ‘இன்னோவா’ காரில், கோபிநாத், வெற்றி ஆகியோர், ஹிமாச்சல பிரதேசம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் பாய்ந்து கவிழ்ந்தது. பாய்ந்த வேகத்தில் 200 அடி பள்ளத்தில் உருண்டு ஆற்றில் விழுந்து மிதந்தது.

இதை அடுத்து, ஹிமாச்சலப் பிரதேச போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் உயிரிழந்த நிலையில் டிரைவர் தன்ஜின் உடல் மீட்கப்பட்டது. படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய கோபிநாத் மீட்கப்பட்டார்.

எனினும், வெற்றி குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானதாகக் குறிப்பிடப்பட்டு, அவரைத் தேடும் பணியில் பலர் ஈடுபடுத்தப் பட்டனர். தொடர்ந்து மீட்புப் படையினர் வெற்றியைத் தேடி வந்த நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு நதியில் இருந்து இன்று வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. இதன்பின், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் செய்தி, தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்திய அரசியலமைப்பை கேலி செய்த திமுக., மாநில அரசு’; உரையைப்  புறக்கணித்த ஆளுநர்! 

governor speech - 2026
#image_title

பரபரப்பான சூழலில் இன்று காலை  கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், திமுக., அரசு தயாரித்துக் கொடுத்த உரை, இந்திய அரசியலமைப்பைக் கேலி செய்வதாக இருக்கிறது என்று கூறி, அதனை சட்டமன்றத்தில் வாசிப்பதைத் தவிர்த்தார் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி. 

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, பிப்ரவரியில் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு ஆளுனர் ரவி உரையாற்றிய போது, தமிழக அரசால் அச்சிடப்பட்டுக் கொடுத்த உரையில், உண்மைக்கு மாறான பகுதிகள் உள்ளதாகக் கூறி, சில பகுதிகளை விடுத்தும், சிலவற்றை சேர்த்தும் பேசினார் ஆளுநர். ஆனால் அதை எதிர்பார்க்காத ஆளும் தரப்பு, அரசு அச்சிட்டுக் கொடுத்த உரையை மட்டும் சபையில் பதிவு செய்ய, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதற்காக ஒரு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலினே முன்மொழிய, இதனால் கோபமடைந்த ஆளுனர், சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி, போயா என்று சொல்லி கையால் அருவருப்பான வகையில் சைகை செய்தார். இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் பின் ஆளுநருக்கும் அரசுக்குமான மோதலும் தீவிரமடைந்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்வுகளால் இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, ஆளுனர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனினும்,  வழக்கம்போல சட்டசபை கூட்டம், ஆளுனர் உரையுடன் தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு இம்மாதம் 1ஆம் தேதி அறிவித்ததால், அந்த ஐயம் நீங்கியது. 

இதை அடுத்து, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்க திட்டமிடப்பட்டது. இது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நேரம் என்பதால், அரசின் சாதனைகளை விளக்கும் ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, உரை நிகழ்த்த எழுந்த ஆளுநர், தாம் கேட்டுக் கொண்ட படி, உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை செயல்படுத்தாததாலும், உரையில் இந்திய அரசியலமைப்பை கேலி கிண்டல் செய்யும் விதத்தில் வாசகங்கள் இருந்ததாலும் அந்த உரையைப் படிக்க இயலாது என்று, இரு காரணங்களைக் குறிப்பிட்டு, உரையை நிகழ்த்தாமல் புறக்கணித்து அமர்ந்தார்.  தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காமல் சில நிமிடங்களில் முடித்து கொண்டதை அடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கி வாசித்தார். அதுவரை முழு நேரமும் ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார். 

சட்டசபையில் ஆளுனர் ஆர்.என். ரவி ஆற்ற வேண்டிய உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகக்  கூறப்பட்டது.  தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.  ஆளுநர் உரையாற்ற எழுந்த போது, 

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே , சட்டமன்ற உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே , சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் ! (இவ்வாறு தமிழில் பேசிவிட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார்…)  2024ஆம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தயாரித்த உரையில் உண்மைக்குப் புறம்பான  தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கெனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையைத் தொடங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் . அரசு தயாரித்த இந்த உரையை அப்படியே படிப்பது, அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும்!

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. 
வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி

இவ்வாறு ஒரு திருக்குறளையும் கூறிவிட்டு, தனது உரையை முடித்துக் கொண்டு அமர்ந்தார் ஆளுநர். 

இந்நிலையில், தமிழக சட்டசபையில் ஆளுனர் உரையில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு ஆளுனர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்.9ஆம் தேதி ஆளுனரின் உரை ஆவணம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறாக தவறான அம்சங்கள் அடங்கிய பல பத்திகள் இருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் காட்டவும், ஆளுனர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக முதல்வருக்கும், சபாநாயகருக்கும் ஆளுனர் கடிதம் எழுதியிருந்தார்.

ஆளுனரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால், தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஆளுனரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.

இன்று காலை 10 மணிக்கு ஆளுனர் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏ.,க்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738வது குறள் அடங்கிய முதல் பத்தியையும் படித்தார். அதன்பிறகு, அதில் இடம்பெற்ற தவறான கூற்றுகள், உண்மைக்கு மாறான பத்திகள் இடம்பெற்றிருந்ததால் அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு தனது உரையை படிக்க இயலாது என்பதை ஆளுனர் வெளிப்படுத்தினார்.

அதன்பின் சபாநாயகர், உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுனர் அமர்ந்திருந்தார்; சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டிருந்த அட்டவணையை பின்பற்றாமல், ஆளுனருக்கு எதிராக அவதூறை பேச துவங்கினார். நாதுராம் கோட்சே மற்றும் பலவற்றை பின்பற்றுபவர் என்றும் பேசினார்.

சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கௌரவத்தையும், சபாநாயகர் நாற்காலியின் கௌரவத்தையும் குறைத்தார். ஆளுனருக்கு எதிராக வசை பாடிய போது, ஆளுனர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்.. என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’

siran movie launch - 2026
#image_title

ஜெயம் ரவியின் “சைரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம்  “சைரன்”.  

பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது…

இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களுக்கு உங்கள் ஆதரவைத் தந்துள்ளீர்கள் அதேபோல் இந்த சைரனுக்கும் ஆதரவு தாருங்கள். ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் எங்கள் அன்பு ஜெயம் ரவி  இந்தப்படத்திலும் அசத்தியுள்ளார். என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப் படம் அவர் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். ஜெயம் ரவிக்கு இணையாக எதிர்த்து நிற்க, அவரால் முடியுமா என முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது, ஆனால் இந்தப்படத்திற்காக 5 கிலோ எடைகூட்டி அந்த போலீஸ் உடையில் கச்சிதமாக இருந்தார்.  அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க  வருகிறார். அவர் நடிப்பு பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். அழகம் பெருமாள், அஜய்,  துளசி மேடம், சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் ப்யூட்டிஃபுல்லான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த விழா நாயகன் ஜீவி அருமையான நான்கு பாடல்கள் தந்துள்ளார், அவருக்கு நன்றி. கேமராமேன் செல்வகுமார் அவ்வளவு அற்புதமான விஷுவல்கள் தந்துள்ளார். திலீப் மாஸ்டர் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுத்துள்ளார். படத்தில் எல்லோரும் தங்கள் உயிரை தந்து உழைத்துள்ளனர். ரூபன் எங்கள் ஃபேமிலி மாதிரி. எல்லா படத்திலும் இருப்பார். அந்தோணி பாக்யராஜை  ரூபன் தான் அறிமுகப்படுத்தினார். நிறைய வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். எனக்கு முதலில் சொன்னது காமெடி கதை. ரவியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னார். சொன்ன மாதிரி நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசியதாவது…

மாநகரம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையில் வேலை செய்கிறேன். டைரக்டர் அந்தோணி கதை சொல்லும் போதே சுவாரஸ்யமாக இருந்தது. அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் செம ஜாலியாக இருந்தது. ஆனால் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லாமே இருக்கும். ஜெயம் ரவி ரொம்ப எளிமையாகப் பழகினார். எனக்குப் பிடித்த படி எடுத்திருக்கிறேன். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். சுஜாதா மேடம் எனக்கு நிறைய ஆதரவு தந்தார்கள். இந்த வருடத்தில் தமிழில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.

எடிட்டர் ரூபன் பேசியதாவது…

ஒரு படத்திற்கு இயக்குநரின் பார்வைதான் முக்கியம், ஆனால் அவர்களின் பார்வை இங்கு எளிதாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. கதையை நம்பி பல நல்ல இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு நன்றி. என்னை நம்பி கதை கேட்டு, அதை ஒப்புக் கொண்டார். எனக்கு உரிமையான ஃபேமிலியாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை நினைக்கிறேன். அதனால் தான் வாய்ப்பு கேட்க முடிந்தது. என்னை அவ்வளவு நம்புவார்கள். அந்தோணி என் காலேஜ் ஜூனியர் தான். நிறைய பெரிய படங்களில் ரைட்டராக வேலை பார்த்திருக்கிறார். இயக்குநராகும் அவரது கனவு இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. மிக நன்றாக படத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்தக் குழு எனக்கு ஃபேமிலி மாதிரி தான். இப்படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருமே நன்றாக பணியாற்றியுள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது…

ஜெயம் ரவி உடன் மிக அருமையான பயணம். கீர்த்தி, அனுபமா எல்லோருடனும் மிக இனிமையான அனுபவமாக இருந்தது. அந்தோணி ரைட்டராக இருந்த காலத்திலிருந்தே தெரியும். அவரது முதல் படம் வெற்றிப்படமாக வாழ்த்துக்கள். ஜீவிக்கு இந்தப் படம் மிக நல்ல படமாக அமையும். ஜெயம் ரவிக்கு மிகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும். உங்கள் அன்பையும் ஆதரவையும் இப்படத்திற்கு தாருங்கள் நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

இந்த நிறுவனத்தில் 18 வருடங்களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் சுஜாதா அவர்கள் நான் சின்னத்திரையில் இருக்கும் போதே என்னை வாழ்த்தி கொண்டே இருப்பார் . நான் பெரிய ஆளாக வருவேன் எனச் சொல்வார்.  சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரு தம்பி ஜெயம் ரவி. அவரது திறமைக்கு இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது. அவரோடு இன்னும் 100 படங்கள் நடிக்கலாம். அவருடன் நிமிர்ந்து நில் படம் பணியாற்றினேன். அந்தப்படத்தில் அவர் போட்ட உழைப்பு மிகப்பெரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அவர்களுக்குத் தேவையானதைச் சிரித்துக்கொண்டே வாங்கி விடுவார்கள். எடிட்டர் ரூபன் இந்த வருடம் இயக்குநராகிவிடுவார். அழகம் பெருமாள் அண்ணனுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். 108 அலுவலகம் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அதை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது அத்தனை பெரிய அமைப்பு. அந்த உழைப்பாளர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் இருக்கும் நன்றி.

ஜீவி பிரகாஷ்  பேசியதாவது…

அந்தோணி டார்லிங் படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம் அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும். ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள் வந்துள்ளது.  கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியதாவது…

இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. முதலில் ரூபன் என் காலேஜ் சீனியர்.  அவர் சொல்லி அனுப்பி தான் இரும்புத்திரை படத்தில் ரைட்டராக மாறினேன். பின்னர் இயக்குநராக வேண்டி அலைந்து கொண்டிருந்தேன். ரூபன் அண்ணா ஒரு நாள் ரவி சார் எப்படி இருப்பார் என்றார். உடனே அவரிடம் அனுப்பி வைத்தார், எல்லாமே நடந்தது. அவர் தான் சுஜாதா மேடத்திடமும் என்னை அறிமுகப்படுத்தினார். ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு கதை  பிடித்து உடனே ஆரம்பிக்கலாம் என்றார். ரவி சார் என்னை முழுமையாக நம்பினார். நடிக்கும் போது என்ன எடுத்தீர்கள் என்று கூட அவர் கேட்டதில்லை. அவர் வைத்த நம்பிக்கையை உடைத்துவிடக்கூடாது என்பது தான் எனக்கு முக்கியமாக இருந்தது. புது இயக்குநர்கள் பெரிய ஹீரோக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போது தான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும். அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கு முதல் நாளில் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, இந்தக்கதை ஹிட்டுடா என்றார். இந்தக்கதையைத் தாங்கும் ஜெயம் ரவி இருக்கிறார், படம் ஜெயிக்கும் என்றார் நன்றி அண்ணா. ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப்படத்திற்காக 20 ட்யூன் தந்துள்ளார். அவருக்கு நன்றி. செல்வா, வேறு வேறு களங்களில் படம் செய்தவர்.  இந்தப்படத்தை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தந்தார். திலீப் மாஸ்டர் கதைக்குள்ளேயே யோசிப்பார், எனக்காக நிறையச் செய்தார். சுஜாதா மேடம் இந்தக்கதையை முழுசாக கேட்கவில்லை. ரவி சாருக்காக செய்தார். நானே காம்ப்ரமைஸ் செய்தாலும் அவர் செய்யவிட மாட்டார். ரொம்ப ரொம்ப நன்றி மேடம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே தங்கள் படம் போல வேலை செய்தார்கள். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார். அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும். மக்களிடம் கொண்டு போய் இப்படத்தைச் சேர்க்க உங்கள் உதவி முக்கியம். நன்றி.

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீஸுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும். எப்போதும் எனக்கு அவர் ஃபேமிலி மாதிரி தான். இந்தப்படம் வேறு புரடியூசர் போகலாம் என்ற போது, சுஜாதா அம்மா விடவே இல்லை. கண்டிப்பாக நம்ம தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும் , அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி. இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும்.  கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். என்னப்போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே என்பார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார் அருமையாகச் செய்துள்ளார் நன்றி. அழகம் பெருமாள் சார் அடங்கமறு படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்தேன். அவருடனான ஜர்னி இன்னும் தொடர வேண்டும். இயக்குநரும் செல்வாவும் டிவின்ஸ் மாதிரி அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்கள் உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள். இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் அவரை நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம், இந்தப்படம் ரெண்டு ரோல் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள்.  

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மிகப்பி ரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆபாசப் பேச்சாளரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்ட திமுக.,!

dmk1 - 2026

ஆபாச மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் திமுக., கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

திமுக., தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன், பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அறுவறுக்கத்தக்க சொற்களால் தரக்குறைவாக விமர்சித்துப் பேசினார். மேலும், பாஜக., நிர்வாகி, நடிகை குஷ்பு குறித்து ஆபாசமான மொழியில் தகாத வார்த்தைகளில் பேசினார். இந்தப் பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அவர் மீது புகார்கள் பல அளிக்கப்பட்ட போதும், திமுக., அரசின் போலீசார், தங்கள் கட்சி உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்க முனைந்ததைத் தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது சிறையில் இருந்து வெளிவந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு திமுக., தலைமைக்கு கடிதம் அளித்தார். அதில் மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதிக்கும்படி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் திமுக., பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆபாசப் பேச்சாளரின் ஆபாசப் பேச்சுகள் தேர்தல் நேரம் நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் திமுக., மேடைகளில் எதிரொலிக்கும் என சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஹால்தி குங்கும் கொடுக்க… கொண்டாட்டத்தின் சாரம் இதான்!

kondattam jayashree articles - 2026
#image_title

– ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்

நம் தாய்திருநாட்டில் இந்திய காலெண்டர் மாதங்களில் பெரும்பால மாதங்களில் பலவிதான விழாக்களும், கொண்டாட்டங்களும் நடைபெறும்.

நமக்கு தை மிகவும் மகத்துவமான மாதமாய் இருப்பதைப் போலவே மஹாராஷ்டிராவிலும் ‘பௌஷ்’ ( தை) மாதம் பிரசித்தமானது.

சுமங்கலிப் பெண்களை இல்லத்திற்கு அழைத்து மஞ்சள் குங்குமம் ( ஹல்தி – கும்கும்) கொடுத்து ஒரு பரிசும் கொடுப்பார்கள்.

சாதி வேறுபாடு, ஏழை – பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்தக் கொண்டாடத்திற்கு அழைப்பார்கள். அனைவரும் தயங்காமலும் செல்வார்கள். 

சில வருடங்களுக்கு பிறகு எனக்கும் அவர்களின் முறை பழக்கமாகி விட்டது. 

ஹல்தி கும்கும் நடக்கும் அன்று அவர்கள் போடும் ரங்கோலிகள், வீட்டை அலங்கரிக்கும் முறை, தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விதம், பரிசுப் பொருட்கள், எள் – வெல்லத்தினாலான இனிப்பு என பல விதமான விஷயங்களால் இந்த நிகழ்வே சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஹல்தி கும்கும் நிகழ்ச்சியை அனைவரும் ஒரே இடத்தில் கூடியும் செய்வார்கள். 

மஹாராஷ்டிராவில் இப்போது வரை நான் இருந்த இடங்களில் எல்லாம் நானும் அவர்களைப் போலவே அனைவரையும் அழைத்து ஹல்தி கும்கும் கொடுப்பேன். 

இப்போது நான் வசித்துக் கொண்டிருக்கும் நாந்தேட் நகரில் சில தவிர்க்க முடியாத காரணங்களிலால் கடந்த இரண்டு வருடங்களில் என்னால் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த வருடம் இங்கு எங்களுக்கு மூன்றாம் வருடம். என் கணவரின் வேலையில் இடமாற்றம் இருக்கும் என்பதால் அடுத்த வருடம் இங்கே இருப்போமா என்று இப்போது சொல்ல முடியாது.

அதனால், இந்த முறை   செய்து விட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். ஆனால், இத்தனை நாட்களிலும் ஏதோ ஒரு விஷயத்தினால் நாளைக்கு அனைவரையும் கூப்பிடலாம், இரண்டு நாட்களுக்கு பிறகு கூப்பிடலாம் என்று யோசித்து யோசித்தே நாட்கள் சென்றன. நான் கடைசியில் கடைசி தை  வெள்ளிக்கிழமை கூப்பிட யோசித்து வைத்திருந்தேன்.

வருபவர்களுக்கு ஒரு ‘நாஷ்தா’ (Snacks) கொடுக்கலாம் என்றிருந்தேன். அதனால், எங்கள் இல்லத்தில் வேலை செய்யும் பணிப்பெண்ணான ஸ்வாதியிடம் “வெள்ளிக்கிழமை உன் பெண்ணை அனுப்புகிறாயா, வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்க உதவியாய் இருக்கும்,” என்று கேட்டேன். உடனே, கண்டிப்பா அனுப்பறேன், என்றாள் ஸ்வாதி.

வெள்ளிக்கிழமை அமாவாசையும் இருந்ததால் ஹல்தி கும்கும் வைக்க முடியவில்லை. அப்புறம், ஒரு நாள் வைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதை ஸ்வாதிக்கு சொல்ல நினைத்திருந்தேன்.

அதற்குள் வியாழக்கிழமையே  ஸ்வாதி ” நாளைக்கு நாங்கள் வெளியூர் செல்கிறோம்.  நீங்க ஹல்தி – கும்கும் வெச்சா எங்களால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாதே, நீங்களே சமாளித்து விடுவீர்களா” என்றாள். ஓ! என்னைப் பற்றி இவ்வளவு யோசிக்கறாளே, ஸ்வாதிக்கு தான் இன்றைய வருடத்தின் முதல் ஹல்தி – கும்கும் கொடுக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது.

அதுவும் அப்பவே கொடுக்க முடிவு செய்தேன். பத்து நிமிடங்களில் கடகடவென்று தயார் செய்தேன். நானும் தயாரானேன். ஸ்வாதிக்கு ஹல்தி – கும்கும் கொடுத்து கற்பூரவல்லி செடி ஒன்றும் கொடுத்தேன். பின்னர் இல்லம் அருகில் இருந்த இருவரை அழைத்து நிகழ்ச்சியை தொடர்ந்தேன்.

ஸ்வாதி என் மேல் காட்டிய அக்கறையோ, கரிசனமோ தெரியவில்லை. ஸ்வாதி மூலமாக இந்த வருட ஹல்தி – கும்கும் கொண்டாட்டம் எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது. 

கொண்டாட்டத்தின் சாரமும் அதுதானே!!

குருஜியின் பார்வையில்… மதிப்புக்குரிய புருஷோத்தமன் ஸ்ரீராமனும், ‘ராம ராஜ்யமும்’!

ramarajyam guruji - 2026
#image_title

நாகபுரியின் புகழ்பெற்ற யாதவராவ் ஜாம்தாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘வால்மீகியின் ராமனும், அவனது அரசியலும்’ என்ற ஆங்கில நூலுக்கு 1949, டிசம்பர்,2 அன்று, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையின் மொழிபெயர்ப்பு
(ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்: தொகுதி 6)


மதிப்புக்குரிய புருஷோத்தமன் ஸ்ரீ ராமன்!

பாரதியர்களுக்கு ஸ்ரீ ராமர் ஒரு லட்சிய புருஷன் மகோன்னதமான மனிதன் என்பதற்கு முன்னுதாரணம் மனிதன் தனது வலிமையினால் எவ்வளவு மகோன்னதமான நிலையை அடைய முடியும் என்பதை புருஷோத்தமன் ஸ்ரீ ராமனின் பாத்திரப் படைப்பின் மூலம் விளக்கியுள்ளனர்.

ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை வரலாற்றைப் பாடிய கவிஞர் வால்மீகி, ராமருடைய ‘அவதாரத்தில்’ நம்பிக்கை உடையவராக இருந்தும், முயற்சியுடன் உள் ரகசியமயமான அவரை அற்புத, தெய்வீக குணங்கள் நிறைந்த அவதாரமாக சித்தரிக்காமல், மனிதனின் குணங்கள், மனிதனின் உணர்வுகள், மனிதனின் வலிமை படைத்த மானுடனாகவே சித்தரித்துள்ளார்.

ராமாயணம் எனும் பெருங்காப்பியம் எத்தகைய மனிதர்களுக்காக உருவாயிற்றோ, அந்த மனிதர்களின் மன இயல்பை, ஒரு துறவியாகவும் ஞானியாகவும் இருந்த காரணத்தால் வால்மீகி நன்கு உணர்ந்திருந்தார். மிகவும் சிறந்த அவதாரம், நாம உச்சரிப்புக்கு மட்டுமே அல்லாமல் பின்பற்ற முடியாது என்ற மன உணர்வால் மக்கள் பீடிக்கப்பட்டிருந்தனர். இந்த பலவீனத்தின் காரணமாக அவர்கள் கிணற்றுத் தவளைகளாக, செயலற்று அவர்களுக்கு அழிவு ஏற்படுகிறது. அதன் விளைவாக மனிதன் உயர்ந்த நிலையை எட்ட முடிவதில்லை.

இவ்வுலகில் துடிப்புள்ள செயல்பாடுகளின் மூலம் தூய்மையான, செழிப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்து, அவதாரத்தால் வெளிக் கொணரப்பட்ட உண்மையைக் காணும் முயற்சி நசுக்கப்படுகிறது மனம் வலிமை இழக்கின்றது குருட்டு நம்பிக்கை ஏற்பட்டு மனிதன் செயல்புரியாத நிலைமை அடைவதால் சமூகமும் சீரழிகின்றது. பிளவுபடுகின்றது. நாசம் அடைகின்றது.

இன்றும் இந்த பலவீனம் தென்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமபிரான், பகவான் புத்தர் (அனைவரும் அவதார புருஷர்கள்) இவர்கள் மனிதர்களின் முன் முன்னுதாரணமாக இருந்தார்கள் ஆனால் மனிதர்கள் பலவீனத்தின் வசப்பட்டு, கருத்தின்றி அவர்கள் பெயரை மட்டுமே உச்சரித்து, அவர்களது வாழ்க்கையை, தமது வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டனர்.

சிவாஜி, லோகமான்ய திலகர், மகாத்மா காந்தி போன்றவர்களையும் கூட அவதார புருஷர்கள் என்ற வரிசையில் வைத்து, உயிரற்ற வழிபாட்டிற்கு உரியவர்களாக மாற்றும் அளவு ஜனங்களின் பழக்கங்கள் – குணங்கள் விரிவடைந்தன எல்லா விதமான ஆபத்துகளையும் தாமாகவே எதிர்த்து நின்று, தாண்ட இயலாத மலை போன்ற துன்பங்களையும் தாண்டி வந்து வாழ்க்கையின் நிலையான மதிப்பையும், குறிக்கோள்களையும் நிலை நிறுத்திய, அம்மகான்களின் வாழ்க்கையின் குறிக்கோள்களை நாம் நம் பார்வையில் மறைத்துவிட்டோம்.

இறைவன் ராமபிரானின் மனித வடிவம் நமது சமூகத்தின் பரம்பரையான பலவீனத்தை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், வால்மீகி மனித வளர்ச்சியின் உயர்ந்த எல்லை மற்றும் மனிதனுக்குரிய குணங்களின் ஈடு இணையற்ற எடுத்துக்காட்டாக ஸ்ரீ ராமனைச் சித்தரித்தார். மனிதனின் மிகச் சிறந்த குணங்களையுடைய  ஸ்ரீ ராமன் தாய், தந்தையரிடம் பக்தி, சகோதரர்களிடம் பாசம் மனைவியின் பால் அன்பு, அனைவரிடமும் கருணை, தூய்மை ஆகியவற்றால், அனைவருக்கும் தூண்டுகோலாக இருக்கிறார்.

இவற்றையும், மனித வாழ்க்கையில் தினமும் ஏற்படும் பல்வேறு நிகழ்ச்சிகளையும், சிறந்த வழியில் வெளிக் கொணர்ந்து இருக்கிறார். இதனால் மிகச் சாதாரணமான எளிய மனிதனும் கூட, தன் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று அந்த ஒளிமிக்க எடுத்துக் காட்டின்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற முடியும். எத்தனை இன்னல்களை அவர் தாண்டி வந்தார்! தாய் – தந்தையரின் பிரிவை சகித்துக் கொண்டார் துணைவியைப் பிரிந்த துயரத்தையும் சகித்துக் கொண்டார்.

பின்னர் பாவகரமான, அதர்மமான சக்திகளை வெற்றி கண்டார். இவற்றையெல்லாம் படிக்கும்போது நம் உள்ளத்தில் ஆசையின் அலை எழுகிறது நம்பிக்கை என்னும் முளை துளிர்க்கிறது. எல்லாத் துன்பங்களையும் எதிர் கொண்டு, வெற்றி பெற்று இவ்வுலகில் நாமும் நம்மைப் படைத்த இறை நிலையை அடைய முடியும்

உயர்ந்த மனிதன்

ஆனால் மனிதனுக்கும், விசேஷமாக மனிதனின் தலைவனுக்கும் வாழ்க்கையில் மறுபக்கம் ஒன்று உள்ளது சமூகத்தின் ஒரு அங்கத்தினனாக இருக்கிற மனிதன், சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. நாடு, காலம் சூழ்நிலை ஆகியவற்றை ஒட்டி இது வெளிப்படுகிறது. இந்தக் கோணத்தில் தலைவன் உபதேசம் செய்பவனாக, மத, சமூக விஷயங்களில் சீர்திருத்தம் செய்பவனாக அரசியலில் கலங்கரை விளக்கமாக, அல்லது இவை அனைத்தும் ஒன்றுபட்ட உருவமாக வெளிப்படுகிறான்.

வால்மீகியினால் சித்தரிக்கப்பட்ட ஸ்ரீ ராமனின் வாழ்க்கையில் இந்த ‘உருவங்கள் அனைத்தும் காட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட முன்னுரையில் மனிதர்களின் எடுத்துக்காட்டாக இருந்த இந்த மகானின் குணங்கள் அனைத்தும் விளக்குவது சரியாகாது. எல்லாச் சூழ்நிலையிலும், இன்ப துன்பங்களிலும் நம் சமூகம் இந்த மகானின் வாழ்க்கையிலிருந்து புத்துணர்வு பெற்றது வெற்றி பெறுவதற்கு அவரது வாழ்க்கை வழிகாட்டியாக இருந்தது என்று குறிப்பிடுவதே போதுமானது இன்றைய நாளில் மனிதனின் மேல் அரசியலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு போகிறது.

இந்த முன்னேற்றம் சரியான வழியிலா இல்லையா என்பது இப்பொழுது சிந்தனைக்குரிய கேள்வி அல்ல. ஆனால் இன்றைய நிலை இதுதான். அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த யுகத்திலும், ஆங்கில அரசாட்சியில் இருந்து விடுதலை பெற நடத்தும் போராட்டத்திலும்கூட ராமன் நமக்கு ஊக்கம் அளிக்கின்றார். ‘கால்’ என்ற ஒரு மராட்டி பத்திரிகையின் ஆசிரியர் சிறந்த நாட்டுப் பற்றுடையவர், காலஞ்சென்ற ஸ்ரீ சிவராம் மகாதேவ் பராஞ்சபே ஸ்ரீ ராமபிரானை “கொடுங்கோலர்களை அழித்தவர்” என்று குறிப்பிட்டு, ஜனங்களுக்கு அவரது செயல்களை நினைவூட்டினார் அந்நிய அரசுக்கு எதிராக வெற்றிபெறும் தீச்சுடரை ஏற்றினார்.

மகாத்மா காந்தி அவர்கள் ‘ராம ராஜ்யத்தை நினைவுபடுத்தி, மக்கள் தாம் நலமாக வாழ்வும், ‘பொருளாதாரப் பற்றாக்குறையிலிருந்து விடுதலை பெற முயல வேண்டும்’ என்றும் ஊக்கப்படுத்தினார்.

ராமராஜ்யத்தை மீண்டும் உருவாக்குதல்

மேற்குறித்த பின்னணியில் உருவாகியுள்ள இந்த நூலில் எழுத்தாளர் ஸ்ரீ ராமபிரானை ஒரு சிறந்த அரசியல்வாதியாக, ராம ராஜ்யத்தை தோற்றுவித்தவராக, ஜனங்களின் கண்முன்னர் திறமையாகக் கொண்டு வந்து நிறுத்த முயன்றுள்ளார். ராமராஜ்யம் முழுவதும் அமைதி நிலவி இருந்தது. ஜனங்கள் நேர்மை தவறாது அறநெறியில் நின்று கடமைகளை ஆற்றினர். சுகமும் வளமும் நிறைந்த வாழ்வை நடத்தினர் . அவர் சூழ்நிலையை நன்கு மதிப்பிடும் திறமை பெற்றவராக இருந்தார்.

அரசியலில் கூரியபார்வை, அரசியல் திறமை, தனது அனைத்தையும் சமர்ப்பித்து மக்களுக்குச் சேவை செய்யும் விரதம். தீயவர்களை அழித்தல், கொடியவர்களின் கைப்பிடிகளில் இருந்து பாபம் செய்யாத நல்லவர்களுக்கு விடுதலைதந்து அவர்களைப் பாதுகாத்தல்,தர்மத்தை நிலை நாட்டுதல் ஆகியவை அனைத்தும் ராம் ராஜ்ஜியத்தில் இருந்தன. ‘தர்மத்தை நிலைநாட்டுதல்’ என்ற செயலில், சமூகத்தைச் சிறந்த முறையில் ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நிறுவுதல், வேற்றுமைகளில் ஒற்றுமை காணல், ஒருவர்க்கு ஒருவர் விரோதம் காட்டுவதை நீக்குதல் போன்றவை நிறைந்த விசேஷத் தன்மைகளில் வாழ்வில் யதார்த்தமான ஒற்றுமை காணக்கிடைக்கிறது.

இக்கோணங்களிலிருந்து நோக்கியதனால் அந்நாட்களில் இருந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தது. இன்றும்கூட நமக்கு தற்காலத்திய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நம் நாட்டில் மீண்டும் ராமராஜ்ஜியத்தை நிறுவுவதற்கும், அவைகளை ஆழமாகப் படித்து, அதிலிருந்து தகுந்த பாடம் கற்று, அதனை ஏற்று, அதனை வழிமுறையில் கொண்டுவர வேண்டும்.

நல்ல குணம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு

மனிதர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு எந்த குணங்கள் அத்தியாவசியம் என்பதுதான் ஸ்ரீராமருடைய வாழ்க்கையின் சாரம் ராமராஜ்யத்தை மீண்டும் நிறுவ அவைதான் அடிக்கல் முற்றிலும் தூய மனிதனாக வாழும் வாழ்க்கை, சமூகத்தின் இன்ப துன்பத்துடன இரண்டற ஒன்றாகக் கலந்து விடும் தகுதி, அதன் விளைவாக மனக் கட்டுப்பாடுடன் வாழும் வாழ்க்கை, யாரும் வெற்றி கொள்ள முடியாத ராணுவ வீரத்தினால் மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு சக்திகளை அழிக்கும் திறமை, சத்தியத்தின்பால் பற்று, வாக்குத் தவறாமை என்ற உறுதியான தீர்மானம், மக்கள் நலனுக்காக முற்றும் சமர்ப்பணம் செய்தல், அதற்காக எத்தனை தியாகங்கள் செய்ய நேர்ந்தாலும் சரி (உதாரணம் அன்னை சீயை தியாகம் செய்தது) ஆகிய குணங்கள்தாம் அவை. இவை அனைத்திற்கும் மேலாக, முக்கியமானது சமூகத்தின் நெறி, பண்பாட்டில் உறுதியான நம்பிக்கை இவையும் இவை தவிர அனேக உயர்ந்த குணங்கள் இந்த மகான ஸ்ரீ ராமனின் வாழ்க்கையில் வெளிப்பட்டுள்ளன.

அவை அனைத்தையுமே தமக்குள் ஏற்படுத்திக கொள்ள வேண்டியது அவசியம் இன்று நமது சமுதாயத்தைத் துயரம், வறுமையிலிருந்து மீண்டு வரச் செய்து, வளமான வாழ்க்கையின்பால் அழைத்துச் செல்லக் காட்டப் பட்டுள்ளது. வீழ்ச்சியிலிருந்து பெருமையின் சிகரத்திற்கு அழைத்துச் செல்லக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய குணங்கள், பண்புகளினறி இருந்தால், ‘ராமராஜ்யம்’ என்பது கருத்தற்ற ஒரு சொல்லாக, நாவில் இருந்துவிடும். ‘ராமராஜ்யம்’ என்ற கற்பனை, கனவாகும் நனவாகாது வழிகாட்டல்

ஸ்ரீ ராமனின் வாழ்க்கையில், கவனிக்கப்படாத மனிதத் தன்மை என்ற மகத்துவம் அடங்கிய இந்தப் பகுதியைப் பற்றி, மேற்கூறிய புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு முழுவதிலும் ஏமாற்றம், துயரம் ஆகிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. தலைமைப் பீடத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்களோ, அவ்வாறு இல்லை என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். ஒளி மிகுந்த, தகுதிவாய்ந்த வழிகாட்டுதல் கிடைத்து, ஏமாற்றம் என்ற இருளிலிருந்து, நம்பிக்கை என்ற ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒளிதோன்ற வேண்டும் என்ற நம்பிக்கை மக்கள் உள்ளத்தில் தீவிரமாகிக் கொண்டு வருகிறது .

இந்தச் சூழலில் ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை குறித்த மேற்கூறிய விளக்கம் நமது வாழ்க்கையில் வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையின் சின்னமாக உள்ளது