Home Blog Page 242

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

gyayiru pushparatheswarar temple scene - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் சில இடங்களில், குறிப்பிட்ட ஒரு மாதத்தைல் காலையில் சூரிய ஒளி லிங்க மூர்த்தி மீது விழுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆலயங்கள் கிழக்குப் பார்த்த ஆலயங்களாக இருக்கும். அதே போல சில மேற்கு பார்த்த ஆலயங்களில் மாலை நேரத்தில் சூரிய ஓளி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் விழுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஞாயிறு கோயிலில் சூரிய பகவான் இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.

படம்: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயிலின் கோபுரம்

          ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

          இது பஞ்ச பாஸ்கரத் தலங்களில் ஒன்று. திருவாரூர் அருகில் உள்ள தலைஞாயிறு, நீடாமங்கலம் அருகில் உள்ள திருப்பரிதிமங்கலம், ஆடுதுறை அருகில் உள்ள திருமங்கலக்குடி (சூரியனார் கோயில்), நன்னிலம் அருகில் உள்ள திருச்சிறுகுடி, இந்த ஞாயிறு கோயில் ஆகியவை பஞ்ச பாஸ்கரத்தலங்கள்.

          அம்பாள் சொர்ணாம்பிகைக்குத் தனி சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள், விநாயகர், முருகர், காசி விஸ்வநாதேஸ்வரர், துர்கை (சுதை சிற்பம்) ஆகிய தெய்வங்களுக்குத் தனி சன்னதிகள் உள்ளன. சங்கிலி நாச்சியாருக்கு ஒரு தனி சன்னதி இருக்கிறது. கண்வ மகரிஷி இங்கே முக்தி அடைந்தார் என்பதால் அவர் ஒரு சுதை சிற்பமாகக் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயிலின் தலவிருட்சம் தாமரை ஆகும். கோயிலுக்குள் ஒரு சிறிய தாமரைத் தடாகம் உள்ளது. ஒரு பழமையான நாகலிங்க மரமும், ஒரு திருவோட்டு மரமும் உள்ளன.

          இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன. இங்கு வாரந்தோறும் ஸ்ரீ சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது.

ஞாயிறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கும் செல்லத் தவறுவதில்லை. பல்வேறு திருக்கோயில்களில் பிரசாதமாகவே நிறைய சாப்பிட்டுவிட்டதால் எவருக்கும் மதிய உணவு சாப்பிடத் தோன்றவில்லை.

மாணவர்களை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் எங்கள் இல்லத்திற்குத் திரும்பினோம். எங்கள் வடசென்னை சுற்றுலா இனிதாக முடிந்ததற்கு விநாயகருக்கு நன்றி செலுத்தினோம்.

PAYTM- க்கு Good Bye: புதிய பெயரில் களமிறங்கும் பேடிஎம்.

paytm fastag - 2026

பேடிஎம் நிறுவனர் விஜர் சேகர் வர்மா ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிட்சிலாவை வாங்கியுள்ளார் என்றும், பேடிஎம் என்ற பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் – Pai Platforms என மாற்றுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு வாரமாகவே பேடிஎம் மீதான சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகிறது. பேடிஎம் சேவை பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தகவல் வெளியாகி, பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிஅளித்தது. பேடிஎம்மை பயன்படுத்தலாமா? வேண்டாமா?
என்ற குழப்பத்தில் பலர் இருந்து வருகின்றனர்.

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் கீழ் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்தும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை நியமித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கி முடக்கியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, Paytm Payment Bank Limited (PPBL) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, பேடிஎம் மீது அல்ல என்று அவர் கூறியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இது பேடிஎம் செயலியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, ONDC இன் விற்பனையாளர் தளமான Bitsila நிறுவனத்தை பேடிஎம் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால், அதன் பெயரை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகீறது. அதன்படி, பேடிஎம் என்ற பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் என மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு செல்லும் வழியில்… ஒரு ஷிர்தி ஆலயம்!

gyayiru pushparatheswarar temple - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          சிறுவாபுரியில் இருந்து ஞாயிறு சூரியனார் கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. அதில் கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டிய சாலையில் பயணித்தால் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் சாலையின் ஓரத்தில் வயல்களுக்கு இடையே ஒரு சாயிபாபா கோயில் இருக்கிறது. அதுதான் ஆனந்த ஷிர்தி சாயி மந்திர். அந்தக் கோயிலை சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை கட்டி, வழிபாடு நடத்துகிறார். அவர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பொருளாதாரப் பாடம் எடுத்தவர். அவரைச் சந்தித்தால் மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார். எனவே அந்தக் கோயிலுக்குச் சென்றோம்.

          அது ஒரு அருமையான இடம். நாலுபுறமும் வயல்களால் சூழப்பட்டப் பகுதி. எல்லா சாயிபாபா கோயில்களைப் போல இங்கேயும் நாமே சாயி பகவானுக்கு ஆரத்தி காட்டலாம். மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும், நாங்களும் இந்த ஆரத்தியை மனப்பூர்வமாகச் செய்தோம். பின்னர் பிரசாதம் உண்டபின்னர் அங்கிருந்து ஞாயிறு சூரியனார் கோவிலுக்குச் சென்றோம்.

ஞாயிறு கோயில்

          ஞாயிறு கோயில் என்பது புஷ்பரதேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியன் வழிப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலில் சொர்ணம்பிகை உடன் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் வந்து இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

தாமரை மலரில் ஐக்கியமான ஜோதி

          தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சுவர்ச்சுலாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சுவர்ச்சுலா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். நிழலுருவமாக வந்த பெண்ணின் பெயர் சாயா. எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தார்.

          அந்த ஜோதி, ஞாயிறு கிராமத்தில் ஒரு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது

தாமரையை வெட்டி கண்பார்வை இழந்த மன்னன்

          இந்த பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை. ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, ரத்தம் பீறிட்டது. அதோடு மன்னனும் பார்வை இழந்தான். தன் செயலுக்கு வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், ‘புஷ்பரதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

சங்கிலி நாச்சியார்

          சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.

          மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். கோஷ்ட்டத்தில் அதாவது சுதை சிற்பமாக பல்லவ விநாயகர் தட்சணாமூர்த்தி காலபைரவர் கண்வமகரிஷி ஆகியோர் உள்ளனர். பல்லவ விநாயகரை வணங்கினால் பல் வலி தீருமென்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

கட்சி ஆரம்பிக்கிறார் விஜய்! சொல்லும் காரணம் கப்ஸா!

actor vijay - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டார், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரோடு. புதுக் கட்சிக்கான கப்ஸா காரணங்களை முன்வைத்து, அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களுக்குக் கேடானவை என்று சொல்லி, அவரைப் பொறுத்தவரை எந்த வகையில் அவையெல்லாம் தீயவை என்றும் விளக்கி, தனது அறிக்கையில் பேசுகிறார் விஜய். அவரது வார்த்தைகள் இதோ:

“தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.”

இன்னும் தெளிவாகப் புரியவேண்டுமா? விஜய் சொல்வது இதுதான்.

‘இரண்டு விதமான அரசியல் கட்சிகள் நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் கெடுதல் செய்கின்றன. ஊழல் செய்வது மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணமாக இருப்பது, ஒரு வகைக் கட்சி. மக்களிடையே சாதி மத பேதங்கள் செய்து அவர்களைப் பிளவு படுத்துவது, இன்னொரு வகைக் கட்சி.’

சரி, எந்தக் கட்சிகளை மனதில் வைத்து விஜய் இப்படிப் பேசியிருக்க முடியும்?

1967-ல் இருந்து இன்றுவரை மாறி மாறித் தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுக மற்றும் அதிமுக கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளைத்தான் தமிழகத்தில் நிலவும் ஊழலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் பொறுப்பு என்று விஜய் நினைக்க முடியும். அதோடு, பத்து வருடங்கள் முன்பு மத்திய அரசாங்கத்தில் வியாபித்த ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை நினைவு படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் மனதில் வைக்காமலா விஜய் பேசியிருப்பார்? ஆக, இந்த மூன்று பெரிய கட்சிகளை மறைமுகமாகத் தீயவை என்ற ஒரு வகைக்குள் சேர்க்கிறார் விஜய்.

சென்ற பத்து வருடங்களாக மத்தியில் செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, ஊழல் செய்தது அல்லது நிர்வாகச் சீர்கேடுகளுக்கு வித்திட்டது என்று யாரும் பேசமுடியாது. அது விஜய்க்கும் தெரியும். ஆனாலும் பாஜக மத்தியில் ஆட்சி செய்வதை, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருவதை, விஜய் எதிர்க்கிறார். பாஜக-வை எப்படிக் குறிப்பிடுவது என்று யோசித்த அவர், ‘மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் அரசியல் கலாச்சாரம்’ என்ற வார்த்தைகளால் பாஜக-வையும் தீதானது என்று திமுக பேசுவது போல் வர்ணித்து விட்டார் – அதுதான் விஜய் எதிர்க்கும் இன்னொரு வகைக் கட்சி என்பதாக.

‘மத்தியிலும் தமிழ்நாட்டிலும் பல சமீப ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மக்களுக்குப் பெரும் தீங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். நான் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் ஓட்டு வாங்கி, மக்களுக்குக் கேடான அந்த எல்லாக் கட்சிகளையும் தோற்கடித்துப் பதவிக்கு வந்து – குறிப்பாகத் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி – மக்களை ஒற்றுமைப்படுத்தி முன்னேற்ற வேண்டும்’ என்று சொல்ல வருகிறார் விஜய். இது அவருடைய முழு அறிக்கையில் தெரிகிறது. இப்படி அரசியல் உலகில் ஆசை, அப்பாவித்தனம், அசட்டுத்தனம் ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்குகிறார் விஜய்.

தன் சட்டை கசங்காமல், டிசைனாக முடிவெட்டிய தலை கலையாமல், சாதாரண மக்கள் மத்தியில் ஒரு மணி நேரம் தெருவில் நடந்து விஜய் அவர்களோடு இயல்பாகப் பேச முடியுமா? அது முடியாவிட்டால் தனது ரசிகர்களைத் தாண்டி விஜய் பெரிதாக ஓட்டுகள் வாங்க முடியாது – அதுவும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள், அவற்றின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் அவர் தேர்தலில் எதிர்த்து வெல்ல நினைத்தால். முதலில் அப்படி அவர் வீதியில் நடக்கட்டும். பிறகு அவர் மற்றதைக் கவனிக்கலாம். அந்த மற்றதில் ஒன்று: தன் கட்சிப் பெயரில், தன் அறிக்கை வாசகங்களில், தோன்றவேண்டிய க், ச், த் போன்ற மெய்யெழுத்துக்களை உதற வேண்டாம்.

எம்.ஜி.ஆர் எப்படி அரசியலில் வென்றார் என்று கேட்டால், அவர் விஷயம் வேறு. ஒரு தனிமனிதராக, தான் நடித்த திரைப்படங்கள் மூலமாக, அவர் சாதாரண மக்களின் மனதை வென்றவர். அதை ஆதாரமாக வைத்தே அவர் தேர்தல்களில் எளிதாக ஓட்டுகள் வாங்கி ஜெயித்தார். அவரே அவரது அரசியல் வாரிசு மாதிரி முன்நிறுத்தியதால், பின்னர் ஜெயலலிதா அரசியலில் தலை எடுப்பது எளிதாயிற்று. விஜய் விஷயம் வேறு. அவர் தனது படங்கள் மூலம் இளைஞர்களின் உணர்ச்சிப் பெருக்கை ஈர்த்தவர், பலதரப்பட்ட மக்களின் மனதை வென்றவர் அல்ல. ஜெயலலிதா போன்ற இரும்பு மனிதரும் அல்ல விஜய். அதோடு, இன்றைய ஓட்டுக் கணக்குகள் மாறானவை. அவை விஜய் கையாளக் கூடியவை அல்ல.

இன்னொரு விஷயம். மேடைகளில் விஜய் பேசுவதை வீடியோவில் பார்த்தால், அவருக்கும் தலைமைப் பண்புகளுக்கும் வெகு தூரம், அவற்றுக்கான முதிர்ச்சியை அவர் 49 வயதிலும் எட்டவில்லை என்பது அவர் முகத்திலும் சொற்களிலும் தெரியும். அவரது உடல் மொழியும் சொல்லும்.

விஜயகாந்திடம், ரஜினிகாந்திடம் காணப்பட்ட சராசரிக்கு மேலான தலைமைப் பண்புகள் விஜய்யிடம் இல்லை. அந்த மேலான பண்புகள் அபரிதமாக இருந்தால்தான், பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பவர்களை ஒரு தலைவர் தன்னருகே ஈர்க்க முடியும். வல்லுனர்களின் நம்பிக்கையும் துணையும் சேர்ந்தால்தான், ஒரு பிரதமரோ அல்லது முதல் அமைச்சரோ பெரும் சாதனைகள் செய்ய முடியும் – அதுவும் விஜய் மாதிரித் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப் போடும் கனவில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரால். நரேந்திர மோடி அதைப் பெரிய அளவில் நாடெங்கும் நிரூபித்து வருகிறாரே?

ஒரு அரசியல் கட்சியின் ஸ்தாபகராக, தலைவராக, விஜய்யால் என்னதான் செய்ய முடியும்? பத்தோடு பதினொன்றாக அவரும் அவர் கட்சியும் வண்டி ஓட்டலாம். ஊழல் கட்சி என்று அவர் மறைமுகமாகத் திட்டிய ஒரு கட்சியுடன் ‘மக்கள் நன்மைக்காக’ என்று சொல்லிக் கூட்டணி வைக்க ஆசைப்படலாம், கமல் ஹாசன் மாதிரி.

ஒன்றும் ஆகாவிட்டால், அரசியலுக்காக விஜய் விடப் போகிறேன் என்று சொன்ன திரையுலகம் அவருக்கு இருக்கும். ‘மக்கள் விரும்புகிறார்கள். மறுபடி நடிக்க வருகிறேன்’ என்று அப்போது அவர் அறிவித்தால் போயிற்று. சொன்ன வார்த்தைகளை ஒவ்வொன்றாகக் காற்றில் பறக்க விட்டால் என்ன? அதுவே ஒரு சராசரி அரசியல் தலைவருக்கு அழகு என்று ஆகுமே?


Author: R. Veera Raghavan, Advocate, Chennai (veera.rvr@gmail.com)
Blog: https://rvr-india.blogspot.com

நாளை தை அமாவாசை; சிறப்பு தர்ப்பணம் முன்னோர் வழிபாடு!

madurai tharpanam - 2026
#image_title

தை அமாவாசை சிறப்பு தர்ப்பணம்…

மதுரை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தை அமாவாசை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 09.02.24 அன்று காலை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைக்கப் படுகிறது.

ஆண்டுதோறும் தை அம்மாவாசை, ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை ஆகிய நாட்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, மதுரை, திருப்புவனம், திருவேடகம் ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

மதுரை நகரில் அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்திலும் நாளை காலை தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது.

இவை தவிர வைகை ஆற்றங்கரைகளில் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே தர்ப்பணம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தாய், தந்தை இல்லாதவர் அவர்களை நினைத்து அவர்களுக்கு அம்மாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

பெண்கள் சிலர் அவருடைய முன்னோர்களை நினைத்து காய்கறிகளை தானமாக வழங்கி வருகின்றனர். அத்துடன் ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கியும், சிவன் மற்றும் பெருமாளுக்கு தீபங்களை ஏற்றியும், பசு மாடுகளுக்கு அகதிகளை வழங்கியும், பிதுக்களுக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

மதுரை யானை குழாய் அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் நாளை காலை 6:30 மணி முதல் ஏழு முப்பது மணி வரையிலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் காலை ஏழு முப்பது மணி முதல் 8.30 மணி வரையிலும், தர்பணங்கள் நடைபெறும்.

தர்ப்பணத்திற்கு வருபவர்கள், கருப்பு எள்ளு பாக்கெட், பச்சரிசி, காய்கறிகள் ஆகியவை கொண்டு வந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெரிந்து கொள்வோம்: பி.எம். ஸ்ரீ பள்ளிகள்!

pm shri schools - 2026
#image_title

கட்டுரை: கமலா முரளி

உறுதியான வலுவான பாரதத்தை உருவாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் தகுந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் என்பது தற்போதைய இளைய தலைமுறையின் கையில் அல்லவா உள்ளது ! அவர்களுடைய கல்வி மற்றும் திறனை வளர்த்தால் தான் அவர்களை உலகளாவிய வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர் கொள்ள வைக்க முடியும். “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்” திட்டம் இந்திய அளவில் பள்ளிகளின் தரம் உயர்த்தலுக்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆகும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகள் பற்றி அறிந்து கொள்ள… இந்தக் காணொளியைப் பார்க்கவும்…

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன ?

”பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்” அதாவது  PM SHRI Scheme ,  அதாவது Pradhan Mantri Schools for Rising India  என்பது மத்திய அரசின் நிதி ஆதார ஆதரவுடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மத்திய, மாநில , நகராட்சி அல்லது ஊராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பள்ளிகளின் திறன் மற்றும் தரம் மேம்படுத்தும் திட்டமாகும்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடைபெற்று, நாடு தழுவிய முன்னோடிப் பள்ளிகள் குறித்து கருத்துரையாடல் நடைபெற்றது. மத்திய அமைச்சர், தர்மேந்திர பிரதான், இந்த முன்னோடிப் பள்ளிகள் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஆய்வகங்களாகவும், மாணவர்களை எதிர்கால மாற்றங்களுக்குத் தயார் செய்யும் களங்களாகவும் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

அதே ஆண்டு, செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் “ திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

வளரும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகள் திட்டம் ( PM SHRI Schools ) மத்திய அரசின் நிதி ஆதார உதவியுடன், செயல் திட்ட வழிகாட்டுதல்களுடன் 2022-23 கல்வியாண்டு முதல் 2026-27 வரை ஐந்தாண்டுகளில், படிப்படியாக, இந்தியா முழுவதிலும் சுமார் 14,500 பள்ளிகளில்  , சுமார் 27000 கோடி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

நோக்கமும் முக்ய அம்சங்களும்

மகிழ்வான கற்றல் சூழலில் தரமான, மேம்படுத்தப்பட்ட, சமச்சீரான , மாணாக்கர்களை அடுத்த நூற்றாண்டுக்குத் தயார்படுத்தும் கல்வி வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மாணாக்கர்களின் மதி நுட்பத்தை வளர்த்தல், கலை மற்றும் தொழில் திறனை வளர்த்தல், மொழித்திறன், சமூக உளவியல் கூறுகளின் மலர்ச்சி, வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகள், உள்ளூர் கலைஞர்கள் துணையுடன் கலை, கைத்தொழில் திறன் பெறுதல் என பல்வேறு முன்னெடுப்பகளைக் கொண்டது இத்திட்டம்.

புதிய தேசியக் கல்வித் திட்டம் 2020 இப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இளம் பிராயத்தினருக்கான அடித்தரக் கல்வி, பாதுகாப்பான , சுமையில்லா விளையாட்டு / செயல் முறை கற்றல் முறையில் தரப்படும். ஆயத்த நிலை அதாவது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வியில் சில வகுப்பறைப் பாடங்களும், ஒளிப்படபாடங்களும் ( வீடியோ, திரை) இருக்கும். நடுத்தர ( 6 முதல் 8 ம் வகுப்பு ) நேரடி ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பில் கலை மற்றும் அறிவியல் எனக் கடினமான பாடுபாடு இல்லாமல், பலதரப்பட்ட இயற்கையுடன் இயைந்த பாடங்களும் இருக்கும்.

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் அமலாக்கப்படும் பள்ளிகள் இத்தகைய முன்மாதிரியான கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் தர மேம்பாடு :

  • கற்றல் முறையில் தரம், புத்தாக்க முறைகள் ( முழுமையான சமச்சீரான அணுகுமுறை, புதிய கற்றல் முறைகள், புத்தகப்பையிலா நாட்கள், உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பு, திறன் தேர்ச்சி – கற்றல் முறை நம்பகத்தன்மை / வெற்றியை சோதித்தல் , முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்)
  • மாணாக்கர்களின் ஆரோக்கிய குறியீடுகள் / முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்
  • கல்வி உரிமை சட்டப்படியான சலுகைகள் (ஆர்.டி.ஈ)
  • அறிவியல், கணித பாடங்களுக்கான கருவிகள்
  • அடித்தரக் கல்வி (இளஞ்சிறார் ) பாதுகாப்பான கல்விச்சூழல், அடிப்படை எண்ணும் எழுத்தும்
  • மாணவர்கள் விருப்பம் போல பாடங்களைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளும் வசதி
  • உள்ளூர் மொழியில் கல்வி, மொழி இடையூறு தவிர்க்க தொழில் நுட்பக்கருவிகள் தயார் நிலையில் இருத்தல்
  • கணினி வழிக் கல்வி, ஸ்மார்ட் போர்ட், டிஜிட்டல் நூலகம், மேம்படுத்தப்பட்ட அறிவியல் / கணித/ மொழி/ கணினி ஆய்வகங்கள்
  • விளையாட்டுக் கருவிகள்/ விளையாட்டுத் தளங்கள் அமைத்தல்
  • கலை/ உள்ளூர் சிறு தொழில் கற்க வசதியான கூடங்கள் / தேவையான கருவிகள்
  • பள்ளியை பசுமை வளாகமாக மேம்படுத்துதல் : சூரிய சக்தி உற்பத்தி, நெகிழி இல்லா வளாகம் ( பிளாஸ்டிக் தவிர்த்தல் ), கழிவுகள் மறுசுழற்சி, பசுமைத் தோட்டப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு.
  • பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆங்காங்கு செயல்படும் மாநில,  நகராட்சி, ஊராட்சி அமைப்புகள் மற்ரும் தன்னார்வல அமைப்புகள் உதவியுடன் மேம்படுத்துதல் .

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தேர்வு

நாட்டின் அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பள்ளிகள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகள் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முன்னோடி ஆய்வகப் பள்ளிகளாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாகும். அவை மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டிகளாக அமையும்.

பள்ளிகள் தற்போது எந்த அமைப்பில் இருந்தாலும் ( நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மாநில அரசு, மாநகராட்சி, ஊராட்சி என எதுவாகிலும் ) பி.எம்.ஸ்ரீ பள்ளி இணைய தளத்தில் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போதுள்ள வசதிகளுடன், பள்ளிகள் அங்கிகரிக்கப்பட்டு, தர மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், நிதி உதவி போன்றவை பகிரப்படும். மாநில அரசுகள் மற்றும் தன்னார்வல அமைப்புகளின் பங்கெடுப்பும் வரவேற்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் திட்டப்பயன்கள் :

  • புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்
  • மாணவர்கள் வருகை மற்றும் கல்வி /திறன் மேம்பாட்டைக் கண்கணிக்கும் தொடர்ச்சியான ஆவணங்கள்
  • ஒவ்வொரு மாணாக்கரின் கல்வி /திறன் தேர்ச்சியானது மாநில அல்லது தேசிய சராசரி திறன் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருக்க முயற்சித்தல்.
  • அடிப்படைக்கல்வி தவிர ஏதேனும் ஒரு திறன்கல்வியில் தேர்ச்சியுறுதல்
  • கலை/ விளையாட்டு / ஐ.சி.டி வசதி ஒவ்வொரு மாணாக்கருக்கும்  சென்றடைவதை உறுதி செய்தல்
  • பள்ளி ஒரு பசுமை வளாகமாக மாறுதல்
  • ஒவ்வொரு மாணாக்கருக்கும் உளவியல் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகள் / வாய்ப்புகள்
  • நமது நாட்டின் பாரம்பரியம், உன்னதக் கலைகள், வரலாறு பற்றிய கல்வி, நாட்டுப்பற்று கொண்ட குடிமக்களை உருவாக்குதல்
  • நற்பண்புகளை ஊக்குவிக்கும், நற்குடிமக்களை உருவாக்கும் ஆக்கபூர்வ கல்வி.

புத்துணர்வூட்டும் புதிய முயற்சி

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்ட வரைவு, செயல்படுத்தும் முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள், திட்ட முன்னெடுப்பைக் கடுமையாக சோதித்தல்  என மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் சுமார் பதினெட்டு லட்சம் மாணாக்கர்களுக்கு பயனளிக்கும். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது.  பீகார், டெல்லி, கேரளா, ஒரிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் இத்திட்ட செயல்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை என கடந்த டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் இருபத்தைந்து பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

”ஸ்ரீ” என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும். பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் நம் பிள்ளைகளின் கல்விச் செல்வத்தை உறுதி செய்யும் !

கட்டுரையாளர்: கல்வியாளர்

வள்ளுவர் குருகுலம் குழும பள்ளிகளின் ஆண்டு விழா!

valluvar gurukulam - 2026
#வித்யாசங்கர் கிருஷ்ணன், பத்மஶ்ரீ டி.கே.ஶ்ரீனிவாசன், டி.கே ஹரி, திருமதி தேவிகா ஸ்ரீராம், டாக்டர் ஶ்ரீ ராம்.

வள்ளுவர் குருகுலம் குழும பள்ளிகளின் ஆண்டு விழா நேற்று மிகச் சிறப்பாக 5.2.2024 நடைபெற்றது.

இவ்விழாவில் எம். எம் போர்கிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் துணைத்தலைவருமான உயர்திரு வித்யாசங்கர் கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.

விழாவில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள், மேலும் பள்ளியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் 10,11, 12 ஆம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மாணவனாக வந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் பள்ளியின் செயலாளர் பத்மஶ்ரீ விருது பெற்ற டி. கே. சீனிவாசன் மற்றும் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் டி .கே. ஹரி, டாக்டர். ஸ்ரீ ராம் மற்றும் திருமதி தேவிகா ஸ்ரீராம் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா! நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று வீர உரை!

ramakrishna mutt prog tanjore - 2026
#image_title

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா 5.2.24 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இதே தினத்தில் 127 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வந்து அருளுரையும் வீரகர்ஜனையும் புரிந்தார். அந்த அருளையும் வீரத்தையும் மக்கள் மத்தியில் விதைக்க இன்று அவர் அருளிய அதே போர்ட்டர் ஹாலில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகாலாந்து ஆளுநர் மேதகு இல. கணேசன் சிறப்புரை நிகழ்த்தினார். மக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஐயா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


”தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை புனித நகரமாக அறிவித்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்,” என நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பேசினார்.

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 127ம் ஆண்டு கும்பகோணம் விஜய விழா நேற்று நடைபெற்றது. இதில், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று, விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:

சுவாமி விவேகானந்தர் பேசிய இடத்தில் நின்று பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். மனிதனுக்கு என்று இயல்பு உள்ளது. அது இல்லாவிட்டால் அவர்கள் மிருகங்களுக்குச் சமம். அடுத்தவர் கஷ்டத்தைப் பார்த்து, அவருக்கு வேண்டியதைத் தானாக முன் வந்து கொடுப்பது தான் இயல்பாகும். இந்த குணம் இருந்தால் தான் மனிதன்.

இந்த மனிதனை உருவாக்க வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார். இதை போல சுவாமி விவேகானந்தர், பாரத நாடு உலக அரங்கத்தில் உயர வேண்டும் என கனவு கண்டார்; அந்த கனவு இன்னும் பூர்த்தியாகவில்லை.

இதனால் மாணவர்கள் எடுக்கக்கூடிய பொறுப்பு என்னவென்றால், விவேகானந்தர் கண்ட கனவை நினைவாக்கும் வகையில், நம் நாடு மேலோங்கிய தேசமாக வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும். இதை தான் பிரதமர் மோடியும் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி சொன்னது போல, தற்போது அமிர்த காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு வரும் போது, தேசத்திற்கு பொற்காலம். மேலும், உலக அரங்கில் இந்தியா உயர்ந்திருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை.

தமிழகத்தில், கும்பகோணத்திற்கு சிறப்பு என்னவென்றால் ஊரே கோவிலாக உள்ளது. எனவே, தான் கோவில் மாநகரமான இதை, புனித நகரம் என்கிறோம். புராதனமான இந்த நகரத்தை புனித நகரமாக யார் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும், புராதன நகரம் தான். இதை புனித நகரமாக, அரசு அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும். – என்று பேசினார்.

விழாவில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் நாம சங்கீர்த்தனத்துடன் நிறைவு பெற்றது. பிப்ரவரி 5-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் இருந்து ரயில் பயணமாக சென்னைக்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், அவரை மானசீகமாக வழியனுப்பி வைத்த உணர்வைப் பெற்றார்கள்.

இதனிடையே, இன்று முதல் சென்னையில் விவேகானந்தர் தங்கியிருந்த தினங்களைக் கொண்டாடும் விதமாக, விவேகானந்த நவராத்திரி விழா தொடங்கியிருக்கிறது.


Swami Vivekananda’s Kumbakonam Digvijaya Festival – 5.2.24
On this same day 127 years ago, Swami Vivekananda visited Kumbakonam and delivered a wonderful lecture. To instill that grace and valor among the people, a special program was organized at the same Porter Town Hall where Swamiji graced on 5.2.1897. Nagaland Governor His Excellency Sri. Ganesanji delivered the keynote speech.

கூட்டணி 400க்கு மேல்! பாஜக., மட்டும் 370 இடங்களைப் பிடிக்கும்; மூன்றாவது முறையாக ஆட்சி: பிரதமர் மோடி உறுதி!

narandram modi in parliament - 2026
#image_title

நாட்டை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் காங்கிரஸ் கட்சி இனி நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் தான் அமரும் நிலை ஏற்படும் என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் பிரதமர் மோடி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.1ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் பேசினார். அப்போது அவர் பேசியவை….

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய முதல் உரையை என்றும் நினைவில் வைத்திருப்போம். 75வது குடியரசு தினம், புதிய நாடாளுமன்றக் கட்டடம், செங்கோல் என இவை அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தன. நாட்டின் சுயத் தன்மையுடன் செங்கோல் நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியிருக்கீறது.

10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசுத் தலைவர் உரை பிரதிபலிக்கிறது. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை; அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பார்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அவர்களின் விருப்பத்தை மக்கள் தேர்தல் மூலம் நிறைவேற்றுவார்கள்.

மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் பெயரால் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுப்படுத்துகின்றன; அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரசின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், பிறகட்சிகளுக்கும், நாட்டிற்கும் இழப்பு.

கூட்டணிக் கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட தவறிவிட்டது. எதிர்க் கட்சியில் சிலர் போட்டியிடவே தயங்குகின்றனர்.

ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்னைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கம். நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர்; நாட்டுக்கு சிறந்த எதிர்க்கட்சி தேவை என்பதுதான் எப்போதும் என் கருத்து. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம் ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். காங்கிரஸில் ஒரு சிலரின் முக்கியத்துவம் குறையக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முடிவுக் காலம் வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் காங்கிரஸ் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே அமரும் நிலை ஏற்படும். காங்கிரசின் மந்தமான செயல்பாடுகளுக்கு உலகத்தில் வேறு யாரும் போட்டியில்லை.

நாங்கள் பேசுவது எங்களின் சாதனைகள் அல்ல; நாட்டின் சாதனைகள். உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தை பிடித்ததாக 2014ல் தற்போதைய எதிர்க்கட்சி கொண்டாடியது.

ஆனால் தற்போது பொருளாதாரத்தில் 5வது இட்ததிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். 3வது முறையாக எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பது எனது வாக்குறுதி.

உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுகிறது என்பதை ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளோம். 17 கோடி மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். மத்திய பாஜக., அரசு பெரிய குறிக்கோள்களுடன் கடினமாக உழைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற 100 ஆண்டுகள் பிடித்திருக்கும்.

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி வியூகம் சிதறிவிட்டது. இண்டியா கூட்டணி உடைந்து விட்டது எனக் கருதியதால் தான் மம்தா தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். காங்கிரஸ் ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லாதபோது மக்கள் எப்படி நம்புவார்கள்? கடவுள் ராமர் தமது வீட்டில் மீண்டும் வீற்றுள்ளதை தேசமே கொண்டாடுகிறது.

காஷ்மீர் முதல் குமரி வரை பாஜக,, என்ன சாதித்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மகளிர் சக்தியை உணர்ந்து பாஜக., திட்டங்களை வகுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றிபெறும்; அதில் பாஜக., மட்டும் 370 தொகுதிகளை வெல்லும்.

பாஜக., மீண்டும் ஆட்சி அமைத்து ஆயிரம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும். ஏழைகளுக்குத் தேவையான வாய்ப்புகள், சாதனங்களைத் தந்தால் அவர்கள் தங்கள் ஏழ்மையைத் தோற்கடிப்பார்கள்.

நாட்டின் எல்லைப் பகுதி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றுள்ளன. ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி; பாஜக., அரசு வளர்ச்சி ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது.

ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது. தேசிய ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவினர் இருந்தனர்?

அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக்அ., ஆட்சியில் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளனர். பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.

பாஜக., ஆட்சிக் காலத்தில் ரூ. 1லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியது. ஆனால் இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி ரூ.5000 கோடி தான் அமலாக்கத்துறை கைப்பறியது. வறுமையை ஒழிக்க பா.ஜ, அரசு எடுத்து முயற்சியின் பயனாக 25 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். அவரது உரையை அடுத்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் ஒட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியது.

பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து சில துளிகள்….

  • இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அமரும் நிலை ஏற்படும்
  • குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும்போது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
  • ஒரு குடும்பத்தின் அரசியல் காணாமல் போய்விட்டது.
  • குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லை.
  • ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை.
  • காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு
  • இளம் எம்.பிக்களின் சக்தியை காங்கிரஸ் வீணடிக்கிறது.
  • எதிர்க்கட்சிகளுக்கு பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள் என யாரும் சிறுபான்மையினராக தெரியவில்லை
    ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம், ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல்.
  • 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும், இது மோடியின் கியாரண்டி.
  • வந்தே பாரத், புதிய நாடாளுமன்றம், மேக் இன் இந்தியா நாட்டின் சாதனைகள்.
  • அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கமாக இருக்கிறது
  • இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கின்றன.
  • இந்தியாவின் GDP 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது; விரைவில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.
  • உலகின் நலனுக்காக இந்திய பாடுபடுவதை G-20 மாநாடு மூலம் உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
  • பாஜக-வின் 3-வது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும்.
  • பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் தேவைப்படும்.
  • அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸின் நோக்கமாக இருக்கிறது
  • கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது.
  • எப்போது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வும் வருகிறது.
  • முத்ரா திட்டத்தின் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர்.
  • முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிகாலங்களில் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே சென்றன.
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி Emergencyயை அமல்படுத்திய காலத்தில் 30% விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
  • விவசாயிகளுக்கு எந்த உரிமையும் வழங்காமல் காங்கிரஸ் வைத்து இருந்தது.
  • டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நாடாக இடம் பிடித்துள்ளது.
  • இளைஞர்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு போல வேறுயாரும் திட்டங்கள் கொண்டு வந்தது இல்லை.
  • இந்தியாவில் பெண்களுக்கு இடமில்லாத எந்த துறையும் இன்று இல்லை.
  • பெண்களின் சக்தியை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது.
  • முன்பு பெண் குழந்தைகள் பிறப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது; இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
  • அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்து விட்டது-பிரதமர் நரேந்திர மோடி.
  • இந்தியர்களை பற்றி முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கருத்து உயர்வானதாக இருத்ததில்லை.
  • பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்.
  • பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையால் 370 சட்டப்பிரிவை முடிவுக்கு கொண்டு வந்தோம்.
  • இந்திய மக்கள் முன்பை விட பாஜகவிற்கு அதிக ஆதரவு கரம் கொடுக்கிறார்கள்.
  • பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே பள்ளத்தில் இருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினோம்.
  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக செய்த திட்டங்களை மக்கள் உணர்ந்துள்ளனர்
  • 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடுகளும், 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம்.
  • வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும்
  • பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்

லால் கிஷன் அத்வானிக்கு ‘பாரதரத்னா’: பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து!

bharath ratna for advaniji - 2026
#image_title

பாஜக., மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்தும் பாராட்டும்  தெரிவித்து வருகின்றனர்.  பிரிக்கப்படாத அன்றைய இந்தியாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) லாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் லால் கிஷன் அத்வானி. அவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை குறித்த வரலாற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். 

பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் லால் கிஷன் அத்வானி,. தமது 14ஆவது வயதில் ஆர்எஸ்எஸ்., இயக்கத்தில் சேர்ந்து சமூகப் பணியின் தன்னை இணைத்துக் கொண்டார்.  பின்னாளில், ஜன சங்கம் கட்சி உருவான போது, அதில் தன்னை இணைத்துக் கொண்டு, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக மிக இளம் வயதிலேயே துடிப்புடன் செயலாற்றினார். அப்போதே, அத்வானி, வாஜ்பாய் இருவரும் ஜனசங்கத்தின் மிக முக்கியத் தலைவர்களாக அடையாளம் காணப்பட்டார்கள். 

இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தபோது வாஜ்பாயுடன் அத்வானியும் கைதானார். அதன் பின்னர்  நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய  அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 

ஜனசங்கம் கட்சி கலைக்கப்பட்டு, அது பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக 1980இல் உருவான போது, கட்சியின் உருவாக்கத்தில் வாஜ்பாய், அத்வானி இருவரும் முக்கியப் புள்ளிகளாக இருந்தார்கள். அதன் மூலம் தேர்தல் அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டார்கள். அடுத்த சில வருடங்களில்  அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பெரிதான போது, இந்து அமைப்புகள் மட்டுமே கையாண்டு கொண்டிருந்த ராமர் கோயில் பிரச்னையை, பாரதிய ஜனதாக் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டு, அரசியல் ஆதரவு கொடுத்தது. காரணம், ராமர் கோயில் விவகாரத்தை மத ரீதியான அரசியலாக்கி காங்கிரஸும் மற்ற கட்சிகளும் ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தன என்ற நிலை ஏற்பட்டதால் என்று அதற்கு பாஜக., விளக்கம் அளித்தது.  

அதைத் தொடர்ந்து, ராமருக்காக சிலா யாத்திரைகள் நடைபெற்றன. இவற்றில் ரத யாத்திரையை மேற்கொண்டு, ரத யாத்திரை நாயகன் என்ற பெயரையும் பெற்றார் லால்கிஷன் அத்வானி. அதன் மூலம், இவரது பெயர் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவலாகச் சென்று சேர்ந்தது. ராமர் கோயில்  இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறியது. அதன் விளைவாக, நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சில சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக.,வுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள். 

லால்கிஷன் அத்வானி, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராகவும், பின்னாளில் 2002 – 2004 கால கட்டத்தில் துணை பிரதமராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 தேர்தலில்  உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து வாஜ்பாய் ஒதுங்கிக் கொள்ள, அத்வானியே பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு களம் கண்டார். ஆனால் அதில் பாஜக., தேவைப்படும் எண்ணிக்கையில் வெற்றிபெறாமல் போனது. அதன் பின் வயதான காரணத்தாலும், கட்சி விதிகளின் படியும், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அத்வானி. 

பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தன்னால் அடையாளம் காட்டப்பட்ட  இளையவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரை ஆதரித்து விட்டு, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அத்வானி, முக்கியமான கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மட்டும் தலைகாட்டி வந்தார். தற்போது 97 வயதாகும் அத்வானி, தில்லியில் உள்ள தனது வீட்டில்  ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் ப்ராணப்பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு முக்கியஸ்தராக அழைக்கப்பட்டிருந்த போதும்,  முதுமை காரணமாகவும் உடல் தளர்ச்சி காரணமாகவும் அவரால் வெளியில் வர இயலாமல் போனது.  அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை! 

இந்நிலையில் அத்வானியின் சேவையைப் போற்றும் விதமாகவும், அவருக்கு  உரிய மரியாதையை அளிக்கும் வகையிலும், மத்திய அரசு சனிக்கிழமை இன்று, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. 

நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்றிருப்பது பாஜக., மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

பிரதமர் மோடியும் லால் கிஷன் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானியின் சேவையை புகழ்ந்து அவர் தனது சமூக வலைத்தளமான  எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 

“பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மகிழ்ச்சியையும், இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் ஆகும். இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அத்வானி அவர்கள் செய்துள்ள நிகரற்ற பங்களிப்பு மகத்தானது. நாம் வாழும் காலத்தில் வாழும் மிகவும் போற்றலுக்குரிய அற்புதமான மனிதர் அவர்.  தனது வாழ்க்கையை நாட்டு சேவைக்காகவே தொடங்கினார். அடிமட்ட தொண்டர் முதல் துணை பிரதமர் வரை அவர் நாட்டுக்காக பல்வேறு வகைகளில் சேவை செய்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் சிறப்பானவை.

பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட விவாதங்கள் இன்றும் முன் உதாரணமாக திகழ்கின்றன. பா.ஜ.க.வின் தலைவராக நீண்ட ஆண்டுகள் சேவை யாற்றிய சிறப்பு அவருக்கு உண்டு. அவருடன் பழகுவ தற்கும், இணைந்து சேவை யாற்றியதற்கும் கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். தேசிய ஒற்றுமைக்கும், கலாசார மறுமலர்ச்சிக்கும் அத்வானியின் சேவை குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு என்றென் றும் நினைவு கூரத்தக்கது. உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றிய காலங்கள் மறைக்க முடியாதவை! அவரது சேவைக்கு மீண்டும் எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – என்று தெரிவித்தார் பிரதமர் மோடி. 

பாரத ரத்னா விருது பெற்றுள்ள லால் கிஷன் அத்வானி ஏற்கெனவே பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பின் தற்போது எட்டு ஆண்டு இடைவெளியில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, அவருக்கு வழங்கப்படுகிறது. 

இதனிடையே, அத்வானிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்த்துகளை ஏற்று, எல்.கே. அத்வானி வெளியிட்ட அறிக்கையில், “பாரத ரத்னா விருது ஒரு நபராக எனக்குக் கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய பங்களிப்பை பாரத ரத்னா விருது அங்கீகரித்துள்ளதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,  அரசில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது. பாஜக., பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரம்   பல ஆண்டுகளாக, பாரதத்தின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய தருணங்களை அவர் பல வழிகளில் வடிவமைத்துள்ளார். அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.” என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார். 

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவரது மகள் பிரதீபா மகிழ்ச்சி தெரிவித்தார். பாஜக., மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி அத்வானியின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

  • முன்னாள் குடியரசுத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன், விவி கிரி,அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி,
  • முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய்
  • தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர், 
  • அம்பேத்கர், சர்தர் வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆசாத் 
  • தெரசா
  • இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி
  • தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா.
  • தொழிலதிபர் ஜேஆர்டி டாடா
  • இயக்குநர் சத்யஜித்ரே
  • முன்னாள் இடைக்கால பிரதமர் குல்ஜாரிலால் நந்தா
  • விஞ்ஞானி சர் சி.வி.ராமன்
  • கர்நாடக இசைக்கலைஞர் எம்எஸ் சுப்புலட்சுமி
  • முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் சுப்ரமணியம்
  • சமூக சீர்திருத்தவாதி ஜெய்பிரகாஷ் நாராயன்
  • பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்
  • பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர்
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
  • சமூக சீர்திருத்தவாதி வினோபா பாவே
  • சுதந்திர போராட்ட வீரர் பக்வன்தாஸ்
  • மைசூர் திவான் விஸ்வேஸ்வர்யா
  • சுதந்திர போராட்ட வீரர் கோவிந்த் பல்லப் பன்ட்
  • சமூக சீர்திருத்தவாதி டார்சோ கேசவ் கர்வே
  • சமூக சேவகர் பிதன் சந்திரா போஸ்
  • உ.பி., சட்டசபை முன்னாள் சபாநாயகர் புருஷோத்தம் தாஸ்
  • மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங் வாமன் கேன்
  • பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் கபார் கான்
  • சுதந்திர போராட்ட வீராங்கனை அருணா ஆசாப் அலி
  • அசாம் முதல் முதல்வர் கோபிநாத் போர்டோலால்
  • *ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் ரவிசங்கர், பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி
  • கல்வியாளர் சிஎன்ஆர் ராவ்
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் மதன் மோகன் மாலவியா
  • அசாமை சேர்ந்த கவிஞர், பாடகர் பூபென் ஹசாரிக்கா
  • சமூக சீர்திருத்தவாதி நானாஜிதேஷ்முக்
  • பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர்