Home Blog Page 243

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

siruvapuri murugan temple - 2026
#image_title

6. சிறுவாபுரி முருகன் ஆலயம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயிலில் இருந்து மீண்டும் வந்த வழியாகவே சென்னை நோக்கிப் பயணித்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறம் திரும்பி மேலும் 2 கிலோமீட்டர் பயணித்தால் சிறுவாபுரி முருகன் கோயில் வரும். சிறிய கோயில். அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். வீடு வாங்கும் யோகம் பெற, திருமணப் பேறு பெற, குழந்தை பிறக்க என பல வேண்டுதல்களுடன் மக்கள் வருகின்றனர். கோயிலில் ஏராளமானோர் உணவுப் பிரசாதம் விநோயகம் செய்கின்றனர்.

          இந்த இடத்தில் இராமரின் மகன்களான லவனும் குசனும் வாழ்ந்ததாக கோவிலின் வரலாறு கூறுகிறது. ஒருமுறை இராமன் இவ்விடம் கடந்து செல்லும் போது, ​​இராமன் தந்தை என்பதை அறியாமல் அவனுடனேயே போர் புரிந்துள்ளனர். சிறு பிள்ளைகள் இங்கு போர் தொடுத்ததால் இத்தலம் சிறுவர் போர் புரி என அழைக்கப்பட்டது. இந்த இடம் இப்போது சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது, இது சிறுவர்+அம்பு+ஏடு என்பதிலிருந்து மருவி வந்திருக்கலாம் என இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.  ‘ஏடு’ என்ற சொல் அம்பறாத்துணியைக் குறிக்கும்.

          இந்த ஊரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் முருகம்மை என்ற பெண் இருந்தாள். அவள் இங்குள்ள முருகப்பெருமானின் தீவிர பக்தையாக இருந்தாள். அவள் எப்பொழுதும் முருகனை வழிபடுவதை விரும்பாத அவள் கணவன் அதை நிறுத்தும்படி எச்சரித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் அவளது கணவன் கோபத்தில் அந்தப் பெண்ணின் கையை வெட்டிவிட்டான். அப்போதும், முருகப் பெருமானிடம் முருகம்மை கதறி அழுதாள். அவளது பக்தியில் மகிழ்ந்த இறைவன், அவள் கைகளை எந்த காயமும் இல்லாமல் மீண்டும் இணைக்கச் செய்தார்.

          இங்குள்ள முருகப்பெருமான் ஸ்ரீ பாலசுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த அழகிய கோயிலில் ஸ்ரீ அண்ணாமலையார் (சிவன்) மற்றும் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் ஆகியோரும் உள்ளனர். முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தி, ஸ்ரீ வள்ளியுடன் திருமண கோலத்தில் வள்ளி மணாளராக காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகப்பெருமான் வீடு வாங்க விரும்புவோருக்கு அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. வீடு வாங்க விரும்பும் பலர் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.

          முருகனின் பல்வேறு பெயர்களில் வள்ளிக் கணவன் என்ற பெயரே முதன்மையானது. வள்ளி இங்கு இச்சா சக்தியாக ஜொலிக்கிறாள். இக்கோயிலின் தனிச்சிறப்பு மரகத மயில், அதாவது பச்சைக் கல்லால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் வாகனமாகும்.

          கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். முருகப்பெருமான் மீது அர்ச்சனை திருப்புகழ் ஒன்றையும் இயற்றியுள்ளார். இங்கே மரகத விநாயகர், ஆதி முருகன், நாகர், வெங்கட்ராயர், முனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

          கோயிலுக்கு வெளியில் பச்சைக் காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றை வியாபாரிகள் விற்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஞாயிற்று கிழமைகளிலும் கூட்டம் வருகின்றது.

          இந்தக்கோயிலின் தரிசனத்திற்குப் பின்னர் ஞாயிறு கோயிலுக்குப் புறப்பட்டோம்.

ராமர் ஆலய பிராணப் பிரதிஷ்டை; சிறப்பு பூஜைகளுக்கு தடை விதித்த செயல்; அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

supreme court of india - 2026

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட ஜன. 22 அன்று பஜனைகள், நிகழ்ச்சிகளை நடத்த தமிழகத்தில் மொத்தம் 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  நீதிமன்றம் வழக்கை விசாரிப்பதற்கு முன்பு அதாவது ஜனவரி 22 காலை 9.30 மணி வரை நான்கு விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 146 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. 138 விண்ணப்பங்கள் மீது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.   

நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு 248 இடங்களில் நிகழ்ச்சி நடைபெற்றது. 4 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.  தமிழக டி.ஜி.பி. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அயோத்தி ராமர் கோவில் ‘பிரான் பிரதிஷ்டை’ தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான 288 விண்ணப்பங்களில் 4க்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாக தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல்துறைத் தலைவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கூறியுள்ள படி மாநில அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில்  குறிப்பிடப் பட்டுள்ளது. 

“பிராணப் பிரதிஷ்டா” நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனு தொடர்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்காக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது பிராணப் பிரதிஷ்டை தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் தடை இல்லை என்று தமிழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.  

இருப்பினும், தற்போது டிஜிபி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முன், மொத்தம் பெறப்பட்ட 288 விண்ணப்பங்களில், 4 மட்டுமே அனுமதிக்கப்பட்டு, 146 நிராகரிக்கப்பட்டன, 138 சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ளன. பொது இடங்களில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப 22 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது என டிஜிபி தெரிவித்துள்ளார்.

பிரமாணப் பத்திரத்தின்படி, அயோத்தியில் இருந்து கோயில்கள் மற்றும் மாநிலத்தின் பிற உள்ளார்ந்த  இடங்களில் நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பக் கோரி பெறப்பட்ட 15 விண்ணப்பங்களில் 7 நிராகரிக்கப்பட்டன; 8 சரிபார்ப்புக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் பஜனை, அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக 226 விண்ணப்பங்களில் 4 விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன, 94 நிராகரிக்கப்பட்டன. 

பஜனைகள் பாடுவது, ராம நாமம் பாடுவது, அன்னதானம் நடத்துவது ஆகியவை இயல்பாகவே தடை செய்யப்படவில்லை அல்லது தடை செய்யப்படவில்லை என குறிப்பிட்டு,  சென்னை உயர்நீதிமன்றம் இந்து அமைப்புக்கு  இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, 288 விண்ணப்பங்களில் 4 மட்டுமே நிராகரிக்கப்பட்டன, அவற்றில் 248 நடத்தப்பட்டன. 

மனுதாரர் தமிழக அரசை இந்துக்களுக்கு எதிரானது என்று பொய்யாக சித்தரித்துள்ளார். தமிழக அரசை இந்து விரோத அரசாக மனுதாரர் சித்தரித்துள்ளது முற்றிலும் தவறானது,  கண்டனத்துக்குரியது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், இந்த மனு தமிழக முதல்வரை அவதூறாகப் பேச பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எழுப்பப் பட்டுள்ள சில அதிருப்திகள் முதல்வரை இழிவுபடுத்துவதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் வாய்மொழி உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று டிஜிபி பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

“தமிழக முதல்வர், காவல் துறைக்கு இது போன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த ரிட் மனுவை தாக்கல் செய்வதற்கு வசதியாக மட்டுமே மனுதாரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” என காவல்துறை மற்றும் தமிழக காவல்துறை தலைவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில். தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!

actor vijay - 2026
#image_title

தமிழ் நடிகர் விஜய் இன்று தனது புதிய அறிவிப்பாக, அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து, கட்சிப் பெயரையும் வெளியிட்டார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளைப் போன்று, பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். இந்நிலையில் அதிகாரபூர்வமாக, ‘தமிழக வெற்றி கழகம்’ என்று, தனது கட்சியின் பெயரை வெளிட்டார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு பொதுநலப் பணிகள் செய்யப்பட்டது. அண்மையில் கூட, புயல் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில், விஜய் நேரில் சென்று பொதுமக்களுக்கு உதவித்தொகை, நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் படத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு உணவிடும் படங்கள் சமூகத் தளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதவாது:

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப் பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடிகராக இருந்த விஜய் இதன் மூலம் முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது கைவசம் இருக்கும் ஒரு படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் ஆசை என்பது கடந்த 2009ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது எனலாம். அன்னா ஹஸாரே உண்னாவிரதப் பந்தலில் எட்டிப் பார்த்து, அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் ஈடுபாட்டைக் காட்டிய அதே நேரத்தில் விஜய்யும் காட்டினார். ஆனால் அப்போது அவர் கோடிக் கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த பரபரப்பான நடிகராக இருந்தார். பின்னாளில் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் மேடையில் தோன்றியது, கடந்த தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் ஓட்டுப் போட வந்தது, தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசுவது, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து கேலியான கருத்துகளைப் பேசுவது என அரசியல் ஆசை வெளிப்பாடுகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சி தொடங்கப் போவதாக அண்மைக் காலமாக கூறிவந்த நிலையில், அவருக்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று அறிவித்துள்ளார்.

சீமான் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை!

nia officials

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீமான் (நாம் தமிழர் கட்சி) கட்சியினரின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கை நேரில் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று கோவை ஆலாந்துறை ஆர்ஜி நகரில் ரஞ்சித், காலப்பட்டி முருகன், திருச்சி வயலூரில் சாட்டை முருகன், தென்காசி சிவகிரி இசை மதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியின் முருகன் விஷ்ணு உள்ளிட்டோர் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை மேற்கொண்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் தேச விரோத சக்திகளுடன் நிதிப் பரிமாற்றம் மற்றும் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகத் தெரிகிறது

தமிழகத்தில் 6 இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்டிடிஈ இயக்க நபர்களுடன் யார்-யார் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சீமான் கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விடுதலைப்புலிகள் குறித்து பேசுவதும், அவர்களுடனான தொடர்புகள் குறித்து விளக்குவதுமாக இருந்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி நடத்தி, வெறும் யூடியூபில் நிகழ்ச்சிகளைப் பேசிக் கொண்டு மிதமிஞ்சிய செல்வச் செழிப்பில் இவர்கள் இருப்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் அடிப்படையிலேயே சீமான் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி உறுப்பினரான இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தி ,பாலாஜியின் மனைவியிடம் விசாரித்துச் சென்றனர்.

திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் உள்ள சீமான் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை எடுத்துச் சென்றனர். வரும் 7-ம் தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப் பட்டது. சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரைச் சேர்ந்த யுடியூபரான ரஞ்சித்குமார், சீமான் கட்சியின் தொழில்நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கட்சியில் இருந்து விலகி, வீட்டில் இருந்த படியே சில பணிகளில் ஈடுபட்டுள்ளார். இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இவரது வங்கிg கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைs சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.

கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனைச் சேர்ந்த முருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தினர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன், சீமானின் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அப்பகுதியில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார். இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரைவென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு, சீமான் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். அவரது வீட்டிலும் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

சீமான் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனைகளில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை பிற்பகலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை!

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை என்று, தமிழக பாஜக., துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் CAA கால் வைக்க விட மாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக திருப்பதி நாராயணன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இதுகுறித்துத் தெரிவித்ததாவது…

இது போன்று சொல்வதே சட்ட விரோதம். தமிழகத்தில் யாரும் இந்த சட்டதிருத்தத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். அப்படியே யாராவது விண்ணப்பித்தாலும் மத்திய அரசாங்கத்தை தான் அணுக வேண்டுமேயன்றி மாநில அரசுக்கு இதில் எந்த பணியும், தொடர்பும் இல்லை.

அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள் அல்லது கிறிஸ்துவர்கள் டிசம்பர் 2014க்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்து, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதே சட்டத் திருத்தம்.

ஆகவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பங்கும் நிலையில், இதை அறிக்கை வெறும் அரசியல் பேச்சு மட்டுமே என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகிறது. இந்த சட்டமானது இந்திய குடிமக்களுக்கானதே இல்லை என்பதை முதல்வர் அறிவாரா? இதை விமர்சிக்கலாம் அல்லது எதிர்க்கலாம், ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றோ CAA கால் அல்லது கை பதிக்க விட மாட்டோம் என்று சொல்வது வெறும் வெற்று பேச்சே. குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை… என்றார்.

கிளம்பாக்கம் நல்லதே… ஆனால்..?!

kilambakkam bus stand - 2026
#image_title

கிளாம்பாக்கம் – – – ஊரே நெகட்டிவா பேசி காறி/ரித் துப்புவதால்… நாம யுடர்ன் எடுத்து கொஞ்சம் பாசிட்டிவா ஏதாவது சொல்லலாம்னு பாத்தா… பஸ் ஸ்டாண்டின் நவீன வசதிகள், வடிவமைப்பு, இடவசதின்னு சொல்லலாம். ஆனா, மக்களுக்கான போக்குவரத்து வசதின்னு பாக்கும்போது… உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கு.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமா, நெடுஞ்சாலையை விட்டு ரொம்பத் தள்ளி… அமைதியா வாழ வசதியானதுன்னு நவீன ப்ளாட்கள் கட்டி விட்டிருக்கிற தனியார் பில்டர்கள் மாதிரி ஆகிப்போயிருக்கு இப்போ ஊருருக்கு வெளியே அமைக்கப் படுகிற பஸ் ஸ்டாண்ட்கள்லாம்! மதுர, ராசபாளயம், தெங்காசி, திருநவேலின்னு அப்பப்போ பஸ்ல போகும்போது பாத்து நொந்து போனதுண்டு. ஏன்னா… கிட்டத்தட்ட 35 ஆண்டுகளா ஊருரா பஸ்ல சுத்தியிருக்கேன்…சென்னைவாசியாக, பாரிமுனையில் திருவள்ளுவர் பஸ்கள் இயங்கிய போதும் சென்னை -செங்கோட்டை என பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறியிருக்கிறேன். இதில் ஓர் அனுபவத்தை 2002ல் கலைமகளில் ஒரு சிறுகதையாகவும் பதிவு செய்திருக்கிறேன்.

2010ல் தினமணியில் வேலைக்கு சேர்ந்தப்போ, மயிலாப்பூர்ல இருந்து 20 கிமீ தினமும் பைக்ல பறக்க சிரமமா இருந்ததால வில்லிவாக்கம் பெருமாள் கோயில் பக்கம் குடிபோனேன். அப்போதான் உடன் பணி செய்த நண்பர் வற்புறுத்த, பொத்தேரி- காட்டாங்குளத்தூர் பகுதில அப்போ புதுசா போட்ட ஒரு பில்டரின் ப்ராஜக்டல, நாம சிங்கிள் தானேன்னு ஒரு சிங்கிள் பெட்ரூம் ப்ளாட் புக் பண்ணி வெச்சேன்.

இப்போ சொல்ல வந்தது… தினமணியை விட்டு வெளில வந்த 2015ல, மே மாதம் இங்கே பொத்தேரி சொந்த ப்ளாட்டுக்கு குடிபுகுந்தேன். அப்போதிருந்து ஒரு மூன்றரை வருசமா, கிண்டி – பொத்தேரி ரயில் மூலமாகவோ, அல்லது பைக்லயோ தினசரி போய் வந்தேன். அந்நாட்களில் மாலை நேரம் அலுவலகம் முடிந்து திரும்பும் போது… கடுமையான போக்குவரத்து நெரிசல் – ஜிஎஸ்டி., ரோடு நங்கநல்லூர் திருப்பத்துக்கு முன், விமானநிலையம் பகுதி, பல்லாவரம், குரோம்பேட்ட, தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் – ரயில்வே ஸ்டேஷன் க்ராஸிங், இரும்புலியூர் மேம்பாலம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் … தாண்டினதும் அப்பாடான்னு நிம்மதியா இருக்கும். இப்போது … விமான நிலையம் பகுதி, பல்லாவரம், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், இரும்புலியூர், பெருங்களத்தூர் பகுதிகள்லாம் நெரிசலின்றி (ஃப்ரீயாக ஸ்மூத்தாக 🙂 ) மாறிவிட்டது.

2015-16ல்தான், கோயம்பேடு அல்லாமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ஒரு புதிய பஸ் ஸ்டாண்ட் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அமைக்கப்பட வேண்டும் என்று இடம் பார்க்க ஆரம்பித்தார்கள். அது ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி வண்டலூர் என விரிந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்த கூடுவாஞ்சேரி பகுதியில், நந்திரவரம் கோவில் நிலத்தை பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக பார்த்துச் சென்றார்கள். அந்நேரம் கடும் எதிர்ப்பு எழுந்தது

இது தொடர்பாக, August 14, 2016 அன்று பேஸ்புக்கில் எழுதினேன். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்கில் பார்க்கவும்… https://www.facebook.com/photo/?fbid=10207153130171272&set=a.1034491307197

பின்னர் 2017ல், ஊரப்பாக்கம் அருகே ஆளரவமற்று புதர்க்காடாக இருந்த விஜிபியின் இடத்தைச் சுட்டிக் காட்டி, இங்கே தான் அடுத்து தென்மாவட்டங்களுக்கான பஸ் ஸ்டாண்ட் வரப்போகிறது என்றார்கள். அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தன. அதிமுக., ஆட்சியில், (ஜயலலிதா பெயர் தாங்கிய) கோயம்பேடைக் கைவிட மாட்டார்கள் என்பதால், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் திருவள்ளூர், திருப்பதி, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, பெங்களூருக்கான பஸ்கள் இயங்குவதற்கும், ஊரப்பாக்கத்தில் கட்டப்பட போகும் புதிய பஸ் ஸ்டாண்ட் திருச்சி மதுரை கன்னியாகுமரி விழுப்புரம் புதுச்சேரி என தென்பகுதிகளுக்கானது எனவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இருந்தால் போதும் என்ற ஓர் எண்ணமும் அப்போது இருந்தது.

ஆனால் பெருங்களத்தூர் கடந்து சென்னை புறவழிச் சாலை வழியாக போரூர் டோல்கேட் கடந்து கோயம்பேடுக்கு 30 கிலோமீட்டருக்கும் சற்று அதிகம் என்பதால், இந்த இரண்டுக்கும் புறவழிச் சாலை வழியாக நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டால் போதும் என்ற எண்ணத்தையும் கொண்டிருந்தார்கள். அது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் குறைவு தான் என்பதால் மக்களை சமாதானப்படுத்த அந்தக் கருத்தையும் தெரிவித்தார்கள்.

அந்த வகையில் தற்போதைய கிளாம்பாக்கம் அதாவது ஊரப்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்ட் சில நோக்கத்தில் பார்க்கும்போது பயன் தர தக்கது தான். முக்கியமாக பெரும்பாலான தென்பகுதி ஊர்களில் இருந்து வரும் பயணிகள், பெருங்களத்தூருடன் இறங்கி விடுவார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பஸ்ஸும் மிக சொற்ப எண்ணிக்கையிலான பயணிகளுடனேயே கோயம்பேடு சென்று வந்தது. இப்படி அனைத்து பஸ்களும் கோயம்பேடு சென்று வருவதற்கு பதிலாக, கோயம்பேடு செல்ல விரும்பும் பயணிகள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பஸ்களில் சென்று வந்தால், சுமார் 70 கிலோமீட்டர் ஒவ்வொரு பஸ்ஸும் சென்று வரும் தொலைவு குறையும் என்றும் அதன் மூலம் டீசல் பெருமளவு மிச்சமாகும் என்றும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அடுத்து கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்றார்கள்.

ஆனால் இரு வருடங்களுக்கு முன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வரும் நிலையிலேயே இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஊடகங்களில் பேசித்தான் வந்தார்கள். சிலர் ஊரப்பாக்கம் பகுதியில் ஒரு மேம்பாலம் கட்டி விட்டு, யுடர்ன் அடிப்பதற்கு வழி செய்துவிட்டு, அல்லது இருபுறத்திலுமான ட்ராஃபிக் நேராக வழி செய்துவிட்டு, இந்த பேருந்து நிலையம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். இந்த தகவல்கள் எல்லாம் கடந்த இரண்டு வருடங்களில் நாம் செய்திகளாக நிறைய வெளியிட்டு இருக்கிறோம்.

எனவே இப்படி பேருந்து நிலையம் அமைந்தால் பயணிகள் எத்தகைய சிரமத்தை சந்திப்பார்கள் என்பதும் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் இந்த நேரம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் பேருந்து நிலையத்தை திறந்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி அல்ல; சிம்பிள் லாஜிக் தான்! பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் / பயணிகள் நிறைய வந்தால் தான், தனியாருக்குக் கொடுத்த வகைக்கு தொகையை எடுக்க முடியும்! இனி புதிதாக வரும் வியாபாரிகளிடம் கறக்க முடியும்!

இப்போதும் ஊரப்பாக்கம் பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளிவரும் பஸ்கள் சிக்னல் கடந்து யுடர்ன் அடித்து சென்னை நகருக்குள் செல்வதற்கு சிறிய சர்வீஸ் ரோட்டையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அரசு தற்போது கூறுவதன் படி, மூன்று நிமிடங்களுக்கு ஒரு தாம்பரம் பேருந்து / கோயம்பேடு பேருந்து இன்று வைத்துக் கொண்டாலும் இந்த சர்வீஸ் சாலையில் சிக்னல் போடப்படுவதற்கு முன் மூன்று நிமிட இடைவெளியில் குறைந்தது 10 பேருந்துகளாவது வந்தாக வேண்டும். (அனேகமாக இன்னும் சில நாட்களில் இங்கே ஒரு மேம்பாலத்துக்கு டெண்டர் விடப்படக் கூடும்! 🙂 பாலங்கள் கட்டுவதுதான் நமக்கு பொழுதுபோக்காயிற்றே!)

போக்குவரத்து கழக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 2500 பேருந்துகள் மட்டுமே உள்ளது என்றும் கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இருந்தால் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டின் தேவைக்கு பஸ்களை விட முடியும் என்றும் அப்படி என்றால் அதற்கு ஏற்றவாறு டிரைவர் கண்டக்டர்கள் தேவையும் கூடுதலாகும் ஆனால் அதற்கு எந்த ஏற்பாடும் இப்போது இல்லை என்றும் சொன்னார்.

இப்போது கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தாலும் இந்த உடனடி பலனும் விளையாது. அங்கிருந்தும் இறங்கி பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு தொலைவு அதிகம் மெனக்கெடலும் அதிகம்! அந்த அளவுக்கு நம் மக்களுக்கு பழங்காலத்தைப் போன்ற உடல் வலுவும் கிடையாது; பொறுமையும் கிடையாது. நேரமும் கிடையாது அவசரகதியிலேயே இருந்து பழகி விட்டார்கள்.

தற்போது சமூக வலைதள இணையதள செய்திகளின் புண்ணியத்தில் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய பேர் ரயில் பிடித்து தாம்பரம் கிண்டி என செல்கிறார்கள். ஆனால் அதற்கும் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஒரே ஒரு நல்ல விஷயம் – பொத்தேரி ரயில் நிலையத்தில் இருந்து சாலையின் மறு புறம் கடக்க நடைமேம்பாலம் அமைத்திருக்கிறார்கள். அதனால் பயமின்றி சாலையைக் கடக்கலாம்! என்றாலும், தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில் ரயில்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு மணி நேரத்தில் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று ரயில்களே வந்து செல்லும்! ஒவ்வொரு ரயிலுக்கும் இடைவெளி குறைந்தது 20 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக இருக்கும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வந்தாலும் அதே கதிதான்!

ஆனால் முன்பு அரசுத் தரப்பே சொல்லிக் கொண்டிருந்ததைப் போல கோயம்பேடு வடக்குக்கும் கிளாம்பாக்கம் தெற்குக்கும் வைத்துக் கொண்டு இணைப்பு போக்குவரத்தை எளிதாக்கினால் நன்றாகத் தான் இருக்கும். அப்படி இருந்தால் கிளாம்பாக்கம் ரொம்ப நல்லதே! ஆனால் நடப்பியல் நிகழ்வுகள் மக்களுக்கு துன்பியல் முடிவாகவே இருந்து விடுகிறதே! என்ன செய்ய?!

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்

மத்திய இடைக்கால பட்ஜெட் – 2024 தாக்கல்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகள் என்ன?!

nirmala seetharaman budget - 2026
#image_title

மத்திய பட்ஜெட் – 2024:

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் உள்ள சிறப்பம்சங்கள்

  • பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;
  • கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது;
  • 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது;
  • 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது;
  • திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது-
  • மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது;
  • 2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்;
  • 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன;
  • அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
  • ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;
  • முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;
  • கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது
  • நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;
  • வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;
  • நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;
  • ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;
  • கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்-நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்;
  • ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்;
  • மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும்;
  • 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்;
  • 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்.
  • சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் ஆகியவையே பிரதமர் மோடி அரசின் தாரக மந்திரம்;
  • ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்;
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்;
  • 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும்;
  • 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்;
  • மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.
  • வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்;
  • சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்;
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு;
  • கடல் உணவு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது;
  • மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • மோடி பிரதமரான பின்னர் 600 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது;
  • இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் 30.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு. அதில் நிதிப் பற்றாக்குறை 5.8%;
  • நாட்டின் மொத்த கடன் 14லட்சம் கோடியாக உள்ளது;
  • நேரடி வரி வருவாய் வசூல் கடந்த 5 ஆண்டுகளில் 3மடங்காக அதிகரித்துள்ளது;
  • பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ள
  • வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.
  • நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது; தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  • எரிசக்தி, கனிமங்கள் மற்றும் சிமெண்ட் பொருட்களின் போக்குவரத்துக்காக பிரத்யேக ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு முடிவு
  • துறைமுகங்களை இணைக்கவும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் மார்க்கத்தில் மேலும் 2 வழித்தடங்கள் அமைக்கவும் திட்டம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 28 சதவீதமும், வருமான வரி மூலமாக 19 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 18 சதவீதமும், வர்த்தக வரி மூலமாக 17 சதவீதமும், வரி அல்லாத ரசீதுகள் மூலமாக 7 சதவீதமும், தொழிற்சங்க கலால் வரிகள் மூலமாக 5 சதவீதமும், சுங்க வரிகள் மூலமாக 4 சதவீதமும், கடன் அல்லாத மூலதன ரசீதுகள் மூலமாக ஒரு சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.

அதேபோல், வட்டி கட்டுவதற்கு மற்றும் மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக தலா 20 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 16 சதவீதமும், இதர செலவினங்களுக்காக 9 சதவீதமும், நிதி ஆயோக் மற்றும் பிற இடமாற்றங்கள், பாதுகாப்புத்துறை, மத்திய நிதியுதவி திட்டங்களுக்காக தலா 8 சதவீதமும், மானியங்களுக்காக 6 சதவீதமும், ஓய்வூதியத்திற்காக 4 சதவீதமும் செலவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

* இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது.

* பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளும் துடிப்புடன் பங்காற்றி வருகின்றன.

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையும்.

* கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது:

மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

வருமான வரி உச்ச வரம்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகளே தற்போது தொடரும்.

பொருளாதார ரீதியாக மத்திய தரம் என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்ப்பு தனி நபர் வருமானவரியில் சலுகைகள்தான்.

ஆனால், கடந்த முறை கொண்டு வரப்பட்ட “ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்” எனும் இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறப்படும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

‛‛ மத்திய பட்ஜெட்டில் 2024 – 25ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது” என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத்துறையில் அனைத்தையும் பிரதமர் மோடி மாற்றி அமைத்து உள்ளார். தற்போது, ரயில்வேயை நவீனமயமாக்குவதில் முதலீடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கேரளாவுக்கு ரூ,2,744 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.2,681 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2,861 கோடி ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

2024 ஜூன் 16 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் 543 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் வெளியிடப்படும்.

நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது உரையில், 10 ஆண்டு கால பா.ஜ.க. அரசின் பொருளாதார சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

தற்போது அரசின் செலவு – ரூ.44.90 லட்சம் கோடி, வரி வருவாய் மதிப்பீடு – ரூ.27.56 லட்சம் கோடி, நிதி பற்றாக்குறை – 5.8 சதவீதம் என உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

* வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும்.

* வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வழிவகை செய்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

* நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

* பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது

* ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

* அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

* தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நிதியம் அமைக்கப்படும்

* பால் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம் கொண்டு வரப்பட உள்ளது

பாஜக., வெற்றி பெற்றால்… திருவண்ணாமலை, காசியைப் போல் பிரமாண்ட வளர்ச்சி பெறும்!

annamalai in thiruvannamalai - 2026
#image_title

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும் என்றாா் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை..

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக சார்பில் எண் மண் என் மக்கள் என்ற பிரச்சார நடை பயண நிகழ்ச்சி இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.  யாத்திரையின் 2-ஆவது நாளான புதன்கிழமை காலை திருவண்ணாமலை நகர வணிகா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றாா். இதில், பாஜக மாநில துணைத் தலைவா் நரேந்திரன், வேலூா் பெருங்கோட்டப் பொறுப்பாளா் காா்த்தியாயினி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியன், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில நிா்வாகி சங்கா், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை காமராஜர் சிலை எதிரில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்ற நடைப்பயண நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது அவர் பேசியவை…

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வளா்ச்சியில் 11-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2 மடங்கு அதிகரித்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.

உலக வரலாற்றில் தீா்க்க முடியாத பிரச்னைகளை எல்லாம் மத்திய அரசு தீா்த்து வைத்துள்ளது. 1528-ஆம் ஆண்டு முதல் தீா்க்கப்படாமல் இருந்த பிரச்னைக்கு தீா்வு கண்டு பால ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும்.

விவசாய நிலத்தை நாங்கள் தரமாடோம் என கூறிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை செலுத்தி கைது செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளது. மேலும் பல முன்னேற்றங்கள் அடைய வேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் . மலைவாழ் மக்களுக்கு இலவச வீடுகள், விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு திட்டங்களுக்கு பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை இந்தியா முழுவதும் பாரத பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு திட்டங்கள் தான் அவற்றை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு தனது திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைகளை, 10 ஆண்டுகளில் மோடி தீர்த்து வைத்துள்ளார். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, இந்தியாவின் ஓர் அங்கமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி ஒரு பக்கம், கலாசார மீட்டெடுக்கும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும், 2047ம் ஆண்டில், பொருளாதாரத்தில் முதன்மையாக மாற உள்ளது. திமுக.,, அடாவடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. திமுக.,, தலைமை செயற்குழு உறுப்பினர், ஸ்ரீதரன், அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கை நீட்டி அடித்தார். நீதிமன்றம், மூன்று முறை ஜாமின் வழங்காமல் தள்ளுபடி செய்த நிலையில், அவரை ‍இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. பல் பிடுங்கின பாம்பை போல இங்குள்ள எஸ்.பி., உள்ளார். அவருக்கு ஐ.பி.எஸ்., போட தகுதியிருக்கிறதா.?

யோகி முதல்வராக இருக்கும் உத்தரபிரதேசத்தில், போலீசார் மீது கை வைத்தால், அவன் கை இருந்திருக்காது. அதனால் தான் உ.பி., வளர்கிறது. நேர்மைக்கான மரியாதையை, திமுக.,, கொடுக்கவில்லை. 

திருவண்ணாமலையில், பா.ஜ., வென்றால், அருணாசலேஸ்வரர் கோவில் வளர்ச்சிக்கு, 1,000 கோடி ரூபாய் கொண்டு வருகிறோம். வாரணாசி போல மாற்றி தர முடியும். மோடிக்கு வாக்களியுங்கள். ஹிந்து மதத்திற்கு எதிரான ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது. திருமாவளவனின் சனாதன பிரச்னை என்னவென்றால், பிராமணர்கள் மட்டும் தான், கோவில் கருவறைக்குள் போக முடியும். அதனால் தான் எதிர்க்கிறேன் என்றார்.

இன்று பிராமணர் அல்லாத மோடி, அயோத்தி கருவறைக்குள் சென்று பிராண பிரதிஷ்டை செய்த பிறகு, அதே திருமாவளவன், அது எப்படி மோடி போகலாம், அவர் சங்கராச்சாரியரா, அவருக்கு யார் அனுமதி கொடுத்தது, வெளியில் தானே உட்காரணும் என்கிறார். இதுதான், அவங்க பித்தலாட்ட தனம், பிராமணர்களை திட்டி, திட்டி, அவங்க வேலையை செய்ய விடாமல், அவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை வில்லனை போல சித்தரித்து, தமிழக களத்தை மாற்றி விட்டனர்.

ஸ்டாலின் கூறுவார், ‘பா.ஜ., மதவாத கட்சி’ என்று. ஆனால், உதயநிதி மேடையேறி, ‘நான் ஒரு கிறிஸ்துவன், அந்த வழிமுறையை பின்பற்றுகிறேன். என் மனைவி கிறிஸ்துவர்’ என கூறுகிறார். 

அது மதவாதம் இல்லையாம். இது என்ன பித்தலாட்டம். 19 நாடுகள், அமைப்புகள், மோடிக்கு உயரிய விருது கொடுத்தன. அதில், எட்டு இஸ்லாமிய நாடுகள் அடங்கும்.

திருவண்ணாமலை யாத்திரை குறித்து, அண்ணாமலை தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், தமிழகத்தில், மிகவும் பழமையான ரயில்வே சந்திப்பை உடைய, போக்குவரத்தில் மிக முக்கியமான பகுதியான ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் வழங்கிய வரவேற்போடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேடியப்ப சுவாமி, வீர ஆஞ்சநேயர், எல்லோரையும் காக்கும் காட்டேரி அம்மன் என ஆலயங்கள் நிறைந்திருக்கும் ஆன்மீக மண். ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமம் அருகே, 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கிடைத்த, தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்று. ஜோலார்பேட்டை மக்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை பெருநகர மக்கள் தண்ணீர் இன்றி தாகத்தில் தவித்த போது, 400 மில்லியன் லிட்டர் தண்ணீர், ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்த பெரிய மனதிற்குச் சொந்தக்காரர்கள்.

ஒரு காலத்தில் சோலைகள் நிறைந்து இருந்ததால், சோலையார்பேட்டை என அழைக்கபட்டு பின்னர் அதுவே ஜோலார்பேட்டை ஆனது. இன்று சோலைகளும் இல்லை, மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் இல்லை. தமிழக அரசின் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் கொள்கைக் குறிப்பு வெளியிடுவது வழக்கம். கடந்த 2022-23ஆம் ஆண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,581 ஏக்கரில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க திட்டம் உள்ளதாக தெரிவித்தார்கள். இந்த 2023-24ஆம் ஆண்டு கொள்கைக் குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பெயரையே காணவில்லை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இவற்றை உறுதி செய்வது மட்டும் தான் ஒரு அரசின் தலையாய கடமை. தமிழக அரசின் கொள்கைக் குறிப்பு, திருப்பத்தூர் மாவட்டத்தையே ஒதுக்கி வைத்து, இந்த மாவட்ட மக்களுக்கு அநீதி செய்திருக்கிறது.

நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 கோடி நிதியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், 26,885 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு, 1,51,750 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,38,999 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 65,630 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 98,121 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 53,652 விவசாயிகளுக்கு PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 478 கோடி ரூபாய் என இப்பகுதியின் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.

ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம். இவைதான் திமுக அரசின் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். தேசியத் தலைவர்கள் அனைவரையும் ஜாதித் தலைவர்களாக மாற்றியது திமுகதான். தமிழகம் முழுவதும் ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக அமைச்சர்களின் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள். இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஜாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து, இன்று தேர்தலுக்கு முன்பாக ஜாதிக்கலவரத்தை உருவாக்கி வாக்கு வாங்குவது திமுகவின் வழக்கம்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும். தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களில், திமுகவினர் வாங்கிய பொருளுக்குப் பணம் தர மறுப்பதும், கடை உரிமையாளர்களைத் தாக்குவதும் தொடர்கதை. இவற்றை வைத்துத்தான் திமுகவின் இத்தனை ஆண்டுகால அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 2024 ஆம் ஆண்டு நம்முடைய ஆண்டு. நாம் புதிய காலச்சக்கரத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மனிதர் நமது பிரதமர் மோடி அவர்கள். அவரது தலைமையில், பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழக மக்களின் பல தலைமுறை எதிர்பார்ப்பான நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

‘வருடாந்திர பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியது; MSU ஆழமான நிதி நெருக்கடியில்!

nellai manonmaniam university - 2026
#image_title

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மோசமடைந்து அதன் ஆண்டு பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியுள்ளதாக துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சந்திரசேகர், எம்.எஸ்.யு.வின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை பாதிக்கும் அளவுக்கு நிதி நெருக்கடி மோசமடைந்துள்ளது, சம்பள பில்லுக்கு ₹ 2.50 கோடி தேவைப்படுகிறது. இன்னும் 6 மாதங்களுக்கு இதே நிலை நீடித்தால் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் நிலைமை போல இதுவும் மிக மோசமானதாக இருக்கும்.

ஒரு நிதிநெருக்கடி தணிப்பு நடவடிக்கையாக, MSU பல்கலைக்கழகம் தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் லிமிடெட்டில் செய்த டெபாசிட்களில் ஒரு பகுதியை அரசாங்கத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு திரும்பப் பெற வேண்டியிருந்தது.

“மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கு மத்திய உதவி ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. மாநில அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெற MSU மேற்கொண்ட முயற்சிகள் எந்த சாதகமான பலனையும் தரவில்லை. விஷயங்களை மோசமாக்க, MSU எந்த நிறுவன சமூகப் பொறுப்பு உதவியையும் பெறவில்லை. MSU அரசாங்கத்திடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ₹ 60 கோடி பெற வேண்டும் என்றாலும், தணிக்கை ஆட்சேபனைகளைக் காரணம் காட்டி உதவி 2016 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று டாக்டர் சந்திரசேகர் கூறினார்.

கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பல்வேறு பதவிகளுக்கான ‘ஊதிய நிர்ணயம்’ தொடர்பாக எழுந்த தணிக்கை ஆட்சேபனைகளைத் தொடர்ந்து அரசாங்கங்களின் உதவி நிறுத்தப்பட்டாலும், பல ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் நிதி உருவாக்கம் குறைந்துள்ளதாக MSU இன் வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல்கள் மற்றும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆகியவற்றைப் பின்பற்றி வெளிப்படைத்தன்மையுடன் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையை MSU அறிமுகப்படுத்தும் என்று டாக்டர் சந்திரசேகர் கூறினார். நுழைவுத் தேர்வில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் MSU இணையதளத்தில் அவர்களின் தரவரிசை மற்றும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் வெளியிடப்படும். 

ஒவ்வொரு தகுதிவாய்ந்த வேட்பாளருக்கும் இணைந்த கல்லூரிகள் மற்றும் MSU வளாகத்தில் தங்கள் ஆராய்ச்சி வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் ஆராய்ச்சிகளைத் தொடர விருப்பம் வழங்கப்படும். 

முன்னதாக MSU தனது இணையதளத்தில் வெளியிட்ட தகுதியான மாணவர்களின் பட்டியலில் உள்ள தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். “இந்த வெளிப்படையான அமைப்பு, தகுதியான மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளில் சேர்க்கையை உறுதி செய்யும். ஒரு ஆராய்ச்சி வழிகாட்டி விதிமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்வது கண்டறியப்பட்டால், அவரது வழிகாட்டுதல் மூன்று ஆண்டுகள் வரை இடைநிறுத்தப்படும்,” என்று டாக்டர் சந்திரசேகர் கூறினார்.

பவதாரிணி இசையமைத்த கடைசி படம் – ‘புயலில் ஒரு தோணி’!

puyalil oru thoni - 2026
#image_title

இசைஞானி இளையராஜாவின் மகள்  பவதாரிணி அவர்கள் சமீபத்தில் காலமானது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. சமீபத்தில் அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.

அப்படத்தின் இயக்குநர் ஈசன் கூறியது : பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்ய படுத்தினார்.

இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஒரு பாடலை  ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், பின்னனி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.

படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியலவும் நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை.. எங்கள் திரைப்படத்தின் மிக பெரியப் பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைர கல்.. எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்.. என தெரிவித்தார்.